வெள்ளாளர்களால் எழுதப்பட்ட இலங்கையின் இருண்ட அத்தியாயம்

(H.L.D.மஹிந்தபாலா )

13 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிலிருந்து வந்த வெள்ளாள குடியேற்றவாசிகள் அடங்கிய தமிழ் தலைமைகளால் மற்ற தமிழர்களின் மேல் அடக்குமுறை, ஒடுக்குமுறை, துன்புறுத்தல், அவமானம் மற்றும் கொலை ஆகியவை இலங்கை வரலாற்றில் அரங்கேறிய இணையற்ற மிகப்பெரிய குற்றம். 1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர்களிடம் தவறாக அந்த அதிகாரத்தை ஒப்படைக்கும் வரை தமிழர்களைத் துன்புறுத்துவது மற்றும் கொல்வது போன்ற ஏகபோக உரிமை வெள்ளாளர்களின் கைகளில் மட்டுமே இருந்தது.  வெள்ளாளத் தலைமை தங்களது சொந்த ரத்தங்களின் வாழ்வாதரத்தைக் குலைத்து ஒரு இருண்ட அத்தியாயத்தை எழுதியவர்கள் – பெரும்பாலும் மலபாரிலிருந்து இங்கே அடிமைகளாகப் புலம் பெயர்ந்தவர்கள் ஆவர் – அவர்களை மனித இனத்திலேயே சேராத ஒரு ஜந்துவாக எண்ணினார்கள்.

வட்டுக்கோட்டை (படகோட்டி) தீர்மானத்தின்படி இளைஞர்கள் கையில் துப்பாக்கி ஏந்த வேண்டும், விடுதலை கிடைக்கும்வரை அதை கீழே போடக்கூடாது. வெள்ளாள முதியவர்கள் இவர்கள் முதுகில் ஏறி சவாரி செய்யவேண்டும் என்பதே. வெள்ளாளர்கள் துணையின்றி புலிகள் முன்னேறியிருக்க முடியாது. 70 களில் ஆல்பிரட் துரையப்பன் படுகொலைக்கு வெள்ளாளர்கள்தான் முட்டுக்கொடுத்தார்கள்.  வெள்ளாளர்கள் புலிகளுக்கு பண உதவி, உலக அரங்கில் பிரசாரம், மேற்கத்தியர்கள் துணையுடன் விஸ்வரூபம் எடுத்தது.  உள்ளூரில் வெள்ளாளர்கள் துணையுடன் புலிகள் கொலை, கொள்ளை, தண்டனை வழங்குதல் போன்ற அதிகாரங்களை தங்கள் கையில் எடுத்தனர். தங்களது சொந்தங்களையே கொன்றனர். ஆனால் பழியை சிங்களவர்கள் மேல் சுமத்தி உலக அரங்கில் நியாயம் கேட்டனர்.  (நாசிக்கள் யூதர்களிடம் நீதி வழங்க கோரியதுபோல்)

கீழான ஜாதிகளை அடக்கவும் ஒடுக்கவும் வெள்ளாளர்களால் எழுதப்பட்ட ஏகபோக உரிமைகளை 1704 ஆம் ஆண்டு டச்சுக்காரர்களால் சட்டமாக்கப்பட்டது. டச்சு கவர்னர் சைமன்ஸ் (Simons ) இவற்றைத்  தொகுத்து சட்டமாக ஆக்க கிளார்க் ஐசக்ஸுக்கு (Clark Isaakz ) உத்தரவிட்டார்.

கிளார்க் அன்று முன்னிலையிலிருந்த 12 வெள்ளாள முதலிகளின் அறிவுறுத்தலின் படியும், ஆலோசனைகள் படியும் இந்த குறியீட்டு உரிமைகள் சட்டமாக எழுதப்பட்டது. 1708 இல் தேசவழமை சட்டங்கள் கவர்னரால் பிரகடன படுத்தப்பட்டது இதுவே வெள்ளாளர்களின் ஏகபோக உரிமை மற்றும் மேலாதிக்க அடையாளமாகவும் நிறுவப்பட்டது. அன்று முதல் வெள்ளாளர்கள் தங்களது எஜமானர்களான வெள்ளையர்களின் விசுவாசத்திற்கு பாத்திரமாகி யாழ்ப்பாண (Jaffna) மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஆண்டார்கள். தேசவழமை தீண்டாமை பற்றிய அசல் சட்டங்கள் பல இன்று வரும் பிரதிகளில் காண்பது அரிது.

பின்பு டச்சுகாரர்கள் கையிலிருந்து அதிகாரம் பிரித்தானியக் காலணிக்குச் சென்றது ஆனால் அவர்கள் வெள்ளாளர்களின் அதிகாரத்தில் தலையிடவில்லை. இதனால் தங்களை எதிர்த்துக் கேள்வி கேட்ட எவரும் இல்லாததால் கீழ் ஜாதியினரின் எதிர்ப்பு குரல்களை அதிகாரத்தினால் அடக்கினர்.  1806 இல் டச்சுகாரர்கள் அமுல் செய்த வெள்ளாள சட்டங்களை பிரித்தானியரும் அப்படியே ஏற்றுக்கொண்டு கீழ் ஜாதிகள், மேல் ஜாதிகளால் பரம்பரையாக ஆணையிடப்பட்ட சட்டங்களை மீறமுடியாது என்றார்கள்.

மாகாண நீதிமன்றம் மீண்டும் இந்த சட்டத்தை 1820 இல் உறுதிசெய்து வழிவழியான வந்த நடைமுறைகளை மாற்றம் செய்ய வற்புறுத்த முடியாது என்றும் கூறியது. ( வெள்ளாளர் குண்டர் – கற்பழிப்பு மற்றும் வன்முறை ) இந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலும் நீடித்தது. ( p. 119 – The Bible Trembled, The Hindu-Christian Controversies of Nineteenth-Century Ceylon, R. E. Young and Bishop S. Jebanesan, Vienna, 1995.) 1708 ஆண்டு அமூல் செய்யப்பட்ட தேசவழமை சட்டத்தை மற்ற எந்த ஜாதிகளாலும் எதிர்த்து பேச முடியவில்லை. இதற்கு முன்பே வெள்ளாளர்கள் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய எல்லா சமூக அரசியல் செல்வாக்கை தங்களிடம் வைத்திருந்தார்கள்.

அவர்கள் மேன்மையான எண்ணிக்கையில் அதிகம் இருந்தார்கள், அவர்களிடம் செல்வம் கொழிக்கும் பெரும் பகுதி நிலங்கள் இருந்தன, கோவில்களின் மேலாண்மை அவர்களுக்குத் தார்மீக மத அதிகாரத்தை அளித்தது,  காலணிகளின் நிர்வாகத்திற்கு தரகர்களாகவே செயல்பட்டு அதிகாரத்தை தங்களிடம் வைத்திருந்தார்கள், பாரம்பரிய சமூக அமைப்பில் மிக உயர்ந்த நிலை, இது அவர்களை ஆளும் சாதி அமைப்பின் படிநிலையின் உச்சத்தில் வைத்தது.

Ref : https://www.lawnet.gov.lk/ (Law net – Ministry of Justice) All questions that relate to those rights and privileges which subsist in the said province between the higher castes, particularly the Vellales, on the one hand, and the lower castes, particularly the Covias, Nalluas, and Palluas, on the other, shall be decided according to the said customs and the ancient usages of the province

அவர்களின் இறுகிய அடித்தளங்களால் காலணிகளின் இரண்டாம் நிலை அதிகாரம் செய்பவர்களாக இருந்தார்கள். எள் என்றால் எண்ணைய்யாய் வந்து முதலாளி-தொழிலாளி விசுவாசத்தைக் காட்டிக்கொண்டு அதே நேரம் தங்கள் அதிகாரம் மையம் சேதபடாமல் பார்த்துக் கொண்டார்கள். உதாரணமாக அடிமைத்தனம் சாசனம்  20/1884 இல் சட்டம் மூலம் தடுக்கப்பட்டும்  தேசவழமை சட்டம் அடிமைத்தனத்தை அனுமதிக்க அவர்களுக்கு உரிமை வழங்கியது. (P.3 – TESAWALAMAI , T. Sri Ramanathan, 1963 Nadaraja Press). சிங்களர்களிடமும் இந்த ஜாதி படிநிலைகள் இருந்தன. Dr.H.W.தம்மையா (Thambiah) மற்றும் பல அறிஞர்கள் வெள்ளாளர்களின் தேசவழமை சட்டத்தை பார்க்கையில் சிங்களவர்களின் ஜாதி வேறுபாடுகள் குறைவு வெள்ளாளர்களைப் போல் யாழ்ப்பாண மக்களை பூட்ஸ் காலின் கீழ் மிதிக்கின்ற கட்டுப்பாடு அல்ல என்கிறார்கள்.

தீபகற்ப சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளடக்கிய வெள்ளாள ஆதிக்கம் ஒரு சர்வாதிகாரமாக இருந்தது. யாழ்ப்பாணத்தின் பழக்கவழக்கங்கள், சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் இவை எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் (அதாவது கர்ப்பப்பை முதல் கருவறை வரை ) என்ற அதிகாரம் வெள்ளான் கையில் இருந்தது. அவர்கள் உருவாக்கிய கலாச்சாரம் ஒரு பாசிச கலாச்சாரம். ஹிந்து வர்ண அமைப்பிலிருந்து ஜாதியத்திற்கும் பின்பு வகுப்புவாத பாசிசத்திற்கும் பின்பு பிரபாகரனிசத்திற்கும் மாறியது.  இவை எல்லாம் ஒரே நேர் கோட்டில் ஒரு கட்டதிலிருந்து இன்னொரு கட்டத்திற்குக் கொண்டு  செல்லப்பட்டது. 

நிலப்பிரபுத்துவ காலத்தில் வெள்ளாள மேல் ஆதிக்கத்தை நிலைநாட்டிய இந்திய ஜாதி சித்தாந்தம் 19 ஆம் நூற்றாண்டில் மங்க துவங்கியது. வெள்ளாளர்கள் தங்களது அதிகாரம் தங்களைவிட்டு நழுவுவதை உணர்ந்தார்கள்.  பழைய ஆதிக்க ஆளும் வர்க்கத்தைப் போல் தங்களது செல்வாக்கை, அதிகாரத்தை இழக்க விரும்பவில்லை.  அதே சமயம் ஜாதி ஒழிப்பு சித்தாந்தங்களினால் அவர்கள் உச்சத்தை நிலை நிறுத்தமுடியவில்லை. எனவே ஜாதி சித்தாந்தத்திலிருந்து இனவாத சித்தாந்தத்திற்கு மாறினார்கள். அது அவர்களுக்கு 20 ஆம் நூற்றாண்டில் ஒரு சிர தன்மையை அளித்தது.

என்றாலும் வெள்ளாள ஜாதி வெறி வெள்ளாள வர்க்கத்தின் கீழ் முற்றிலும் மறைந்துவிடவில்லை.  ஜாதி வாதத்தின் நீடித்த தடையங்கள் புதிய வர்க்கத்தைத் தொடர்ந்து பாதித்தன. வெள்ளாள வர்க்கத்தின் ஒற்றை இன தீவிரவாதம் அவர்களின் ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும் காப்பாற்றுவதற்கான கடைசி கருத்தியல் அடைக்கலம் ஆகும். தமிழ்த் தேசியம் என்பது சுருக்கமாகச் சொன்னால், ஜாதி வெறி இல்லாத உலகில் உயிர்வாழப் போராடும் வெள்ளாள வர்க்கத்தின் ஒற்றை இன தீவிரவாதத்திற்கான  சொற்பொழிவு  அல்லது  பரப்புரை.

( In the fin de siecle years )  கிறிஸ்து பிறப்பதற்கு முன் வரை வெள்ளாளர்களை மலபாரிகள் என்றே எண்ணினார்கள் ( அதாவது புலம் பெயர்ந்து வந்த மலபாரிகள்) – தமிழர்கள் என்று அல்ல  ( Clark Isaakz ‘used the word ‘Malabar’ as synonymous with Tamil’ (Ibid – p.8 ).  19 ஆம் நூற்றாண்டில் பல மலபாரிகள் டர்பன் கட்டிய தமிழ் மேனாமினிக்கி பிரப்புக்களானார்கள். மிஸ்.ராதிகாகுமாரசாமி சட்ட சங்கத்தில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவின் போது நகைச்சுவையாகத் தனது முன்னோர்களின் ஒருவரான ஸ்ரீ.முத்துகுமாராசாமி செயின்ட் ஜேம்ஸ் நீதி மன்றத்தில்  ஒரு யாழ்ப்பாண ராஜாவைப்போல் டர்பன் கட்டிய பிரபு போல் காட்சி அளித்தைச் சொன்னார்.   

50 சதவிகித அதிகாரம்

19 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக வெள்ளாளர்களின் இளம் ரத்தங்கள் யாழ்ப்பாணத்தின் டர்பன் கட்டிய பிரபுக்களுக்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்கினார்கள். ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற புதுமுகங்களால் கைப்பற்றப்பட்ட வெள்ளாள தலைமைக்கு ஒற்றை இன அரசியலைத் தவிர வேறு எந்த முற்போக்கான சமூகநலத் திட்டமும் இல்லை. அவர்களின் கூக்குரல் மத்தியில் சமநிலை இல்லாமல் தங்களுக்கு 50 விழுக்காடு அதிகாரங்கள் வேண்டும் என்பதையே கடைசிவரை குறிக்கோளாகக் கொண்டிருந்தார்கள். வெள்ளாள தலைமை அதிகாரத்தில் பாதி பங்கு என்பதை தவிர வேறு எந்த முற்போக்கான சமூகநல திட்டங்களும் யாழ்ப்பாணம் தமிழர்களுக்காக அவர்கள் அறிவிக்கவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் தங்களுக்குக் கல்வியில் முன் உரிமை அளிக்க வேண்டும், பள்ளிகளின் மற்ற மாணவர்களுடன் சமமாக அமரவேண்டும், தங்கள் ஜாதியில் இறந்தவர்களை வெள்ளாளர்களின் வன்முறை தாக்குதல் இல்லாமல் புதைப்பதற்குத் தாரை, தம்பட்டை அடித்து பிணங்களை பொது வழியிலேயே எடுத்துச் செல்லவேண்டும், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வேண்டும், கோவில்களுக்குத் தடை இல்லாமல் கடவுளை வழிபட வேண்டும் , பகல் நேரங்களில் எல்லா இடங்களுக்கும் தடை இல்லாமல் வெள்ளாளர்களால் கொலை செய்யப்படாமல் சென்றுவர வேண்டும் என்பதே ஆகும்.

இந்த பிரச்சனைகள் எதையுமே வெள்ளாளர்கள் பொருட்படுத்தவேயில்லை. அவர்களது மேலாண்மை வெள்ளாளர் , வெள்ளாளர் அல்லாத தமிழர்கள் பிரச்சனைகளை  தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்ளும் திறமையும் , சாமர்த்தியமும் இருந்தது. தாழ்த்தப்பட்ட தமிழர்களின் பிரச்சனைகள் அவர்கள் தங்கள் அரசியல் கணக்கிலேயே சேர்க்கவில்லை, அதேசமயம் மற்ற தமிழர்களுக்கு தங்கள் பிரச்சனைகளை அரசியலில் முன் நிறுத்தும் அதிகாரமும் இல்லை

காலணித்துவ அதிகாரம்

வெள்ளாளர்கள் காலணித்துவ அதிகாரங்களையும், நிலப்பிரபுத்துவ சலுகைகளையும் தக்கவைத்துக்கொள்ள, முடிந்தால் பெரும்பான்மை சிங்களவர்களுக்கு இணையான அதிகாரங்களைக் கைப்பற்ற வேண்டும். அதை அடைய அதிகப்படியான அரசியல் செல்வாக்கும், நிர்வாக அதிகாரங்களையும் பெறவேண்டும்.

20 ஆம் நூற்றாண்டில் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள அதிகப்படியான உரிமைகளை தங்களுக்கு வேண்டும் என்றும், சிங்கள பௌத்தர்களைத் தமிழ் இனத்தின் கொடூரமான விரோதிகள் போல் சித்தரித்துக் கீழ்ப்பட்ட தமிழர்களின் எதிர்ப்பின் அழுத்தங்களைக் குறைக்க முற்பட்டார்கள்.

முதலில் தாழ்த்தப்பட்ட தமிழர்களைச் சிங்களவர்களின் கொடுமைகளுக்கு ஆளான சிறுபான்மையினராகச் சித்தரித்தார்கள்.  ஆனால் அதற்கான எந்த தடையமும் விளக்கங்களும் இல்லை. ஆங்கில மோஸ்தர் வெள்ளாளர்கள் கையில் அளவுக்கு அதிகமாக அதிகாரங்கள் முதலிலேயே இருந்து வந்தன. தங்கள் காலாவதியான நிலப்பிரபுத்துவ அதிகாரங்களை கீழ்தட்டு மக்களின் மேல் திணித்து கட்டுக்குள் வைத்திருந்தார்கள். மேலும் பிரிட்டிஷ் ஆட்சி அஸ்தமித்ததும் இவர்களிடம் மேலும் பல அதிகாரங்களை விட்டுச் சென்றனர்.

கொழும்பில் சூரியன் பிரகாசிக்கும் பொழுது தந்தை யாழ்ப்பாணத்தில் அறுவடை செய்தார் என்ற ஒரு பழமொழி உண்டு. என்றாலும் பிரிட்டிஷ் ஆதரவை இழந்ததினால் தங்கள் அதிகார மையங்கள் ஆட்டம் கண்டுவிடும், சலுகைகள் பிடுங்கப்படும் என்ற பயம்தான் அவர்களை நியாயமான எந்த ஆதாரங்களும் இல்லாமல் சிங்களவர்களைத் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் விரோதிகளாகச் சித்தரித்து குரல் எழுப்ப ஆரம்பித்தார்கள்.

வெள்ளாள வர்க்க ஆதிக்கத்தின் அதிகாரம், சிங்களர்களைத் தாக்கவும், வர்க்கப் போராட்டத்தை வகுப்புவாத போராட்டமாக மாற்றவும், அவர்கள் கையில் இருந்த ஒரே ஆயுதம், சிங்களவர்களை மட்டம் தட்டி, அவர்களைப் பேய், பிசாசுகள் போல் சித்தரித்து, சிறுபான்மை தமிழர்களை விழுங்கக் காத்துக் கொண்டிருப்பவர்களாகச் காட்டுவதுதான்..

வெள்ளாளர்களுக்கு சிங்களவர்களை எதிர்க்க வெளியிலிருந்த எல்லா தமிழர்களை ஒன்று திரட்டி வர்க்கப் போராட்டத்தை சிறுபான்மையினரை அழிக்கும் வகுப்புவாத போராட்டமாக மடை மாற்ற எளிதில் முடிந்தது. உள்ளேயே இருக்கும் அடிமைத்தனத்தை மறைத்து வெளியிலிருந்து வரும் ஆபத்தைப் பெரிதாக்குவது எளிதாக இருந்தது.

ஆங்கில மோஸ்தர் உயர் அடுக்கு சைவ வெள்ளாளர்கள், யாழ்ப்பாணத்தின் வர்க்க அரசியலின் மையாப் புள்ளியாக இருந்தும், மொழி அடிப்படையிலும், புவியியல் ரீதியிலும் இவர்களுக்கு முன்பே புலம் பெயர்ந்து வந்த மட்ட கிளப்பு தமிழர்களை ஒதுக்கி வைத்தனர்.

தேசவழமை சட்டம் மட்ட கிளப்பு  முக்குரவ தமிழர்களுக்குப் பொருந்தாது. அவர்களை எப்பொழுதுமே தாழ்வானவர்களானவே எண்ணினார்கள்.. S.J.V. செல்வநாயகம் மட்ட கிளப்பு தமிழர்களை அரைக்கால் சட்டை என்று இழிவாகப் பேசிவந்தார். ( p.32 – S. J. V. Chelvanayakam and the Crisis of Sri Lankan Tamil Nationalism, 1947 – 1977, A Political Biography, C. Hurst and Co., UK ) ஒரு முறை என்னுடைய நண்பர் S. ராமசந்திரன் என்னிடம் தன்னை ”பிடரல் பார்டியின்” தலைவராக நியமித்தது ஒரு வெளி வேஷம் என்றும் அவர்களுக்கு மட்ட கிளப்பு தமிழர்கள் மேல் எந்த அக்கரையும் இல்லை என்றார்., 

வேறுபாடுகள்

அவர்களுக்கு இடையேயான வேறுபாடுகள் வட்டுக்கோட்டைச் சண்டையின் முடிவிலும் தொடர்ந்தது. முரளிதரன் கிழக்கின் தளபதியான கருணா அம்மனுக்கும் இடையே உண்டான பிளவுதான் வடக்கில் புலிகளை வீழ்தியது.

ஆளும் வர்க்கம் தங்களது மிகைப்படுத்திய கீழான சித்தாந்தங்களை மறைத்து தங்களது பரந்த கொள்கைகளை வரையறுக்கும் திட்டங்கள் மார்க்சியத்தில் உள்ளது போல் நன்கு தந்திரமாக வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் தங்களது கீழ் ஜாதி அடக்கு, ஒடுக்கு முறைகளை மறைக்க தமி்ழ் ஆதரவு அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் (என்.ஜி.ஓ) உதவி ஒரு முகமூடியைப் போல் தேவைப்பட்டது. இது அவர்களை தமி்ழ்க் கலாச்சாரத்தை தூக்கிப்பிடிக்கும் ஒரு கிருஸ்துவ தேவதை போல் காட்சிப் படுத்த முடிந்தது. இதனால் சுமந்திரன்களும், விக்னேஸ்வர்களும், சம்பந்தர்களும் தமிழ் சரித்திரத்தை நிலைநாட்டிய  பெரும் தலைவர்கள் போலத் தோற்றத்தை அளிக்க முடிந்தது. 

வெள்ளாளர்கள் தங்களது சொந்த கீழ்மட்ட தமிழர்களை அடித்துத் துன்புறுத்துவது, மனிதநேயமற்ற முறையில் நடத்துவது போன்றவற்றைக் கண் இருந்தும் அதைத் தட்டி கேட்க விருப்பமில்லாதவர்களாக  இருந்தார்கள். அவர்களை வெறுத்து புறம் தள்ளினார்கள். அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய ஒரு சுய கௌரவத்தையும், மாண்பையும் மறுத்தனர்.

பிடரல் கட்சி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழர் தலைவராக R.சம்பந்தன் வளர்ந்து வருகையில் மாவாடிபுரம் கோவில் நுழைவு போராட்டத்தை தாழ்த்தப்பட்டவர்கள் நடத்தினார்கள்.  அவர்களை வெள்ளாளர்கள் மண் நிரப்பிய பாட்டில்கள் கொண்டு தாக்கினார்கள்.

ஆனால் தமிழ் தலைவர் R.சம்பந்தன் பல நாடுகளுக்கு சென்று வெள்ளாளர்களின் தீண்டாமை பற்றி பேசாமல் சிங்கள அரசு தாழ்த்தப்பட்டவர்களின் ஜனநாயக உரிமைகளை பரிப்பதாகவும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதில்லை என்று முதலைக் கண்ணீர் வடித்தார். வெள்ளாளர்கள் சிங்கள அரசு தமிழர்களுக்கு அதிகாரத்தில், உத்தியோகத்தில் சம உரிமைகள் அளிக்காமல் பாகுபாடு காட்டுகிறார்கள் என்று புலம்பினார்கள். (இங்கே சம உரிமை  என்பது ஆங்கிலம் படித்த சைவ வெள்ளாளர்கள் மட்டும்தான் இது மற்ற தமிழர்களுக்காக அல்ல) இது சரி என்று ஒப்புக்கொண்டாலும் இதே சைவ வெள்ளாளர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை கோவில்களில் கடவுளை வணங்க அனுமதி மறுப்பது, சர்சுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பின்புறம் தனி இடம் ஒதுக்குவது போன்ற கீழ்தரமான செயல்கள் செய்கிறார்கள்.

வெள்ளாளர்களின் பாசிச வரலாற்றில் சக தாழ்த்தப்பட்ட தமிழர்களை ஒரு போதும் சுதந்திரமாகச் சுவாசிக்க விடவில்லை என்பதுதான் எதார்த்தம். அவர்களது சுய கௌரவத்தை மதிக்காமல் ஏன் அவர்களை ஒரு மனித இனமாகவே கருதியதில்லை. கடவுளால் பிராகாசிக்கின்ற சூரிய ஒளியில்கூட வெள்ளாளர் எதிரில் தாழ்த்தப்பட்டவர்கள் தென்பட்டால் வெள்ளாளர்கள் கண் அசுத்தமாகிவிடும் என்று பகலில் சுதந்திரமாக நடமாடத் தடை செய்யப்பட்டிருந்தார்கள்.

பொதுக் கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுக்கத் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது. பேருந்துகளில் அவர்கள் தரையில் அமர்ந்துதான் பயணிக்க வேண்டும். வெள்ளாளர்களுடன் கீ்ழ்ஜாதி தமிழர்கள் சேர்ந்து உண்ணமுடியாது, டீ கடைக்கு உள்ளே செல்லக்கூடாது, டீ அவர்களுக்கு துருபிடித்த தகர டின்னிலோ அல்லது சோடா பாட்டிலிலோதான் ஊற்றிக் கொடுப்பார்கள்.  ஹோட்டல்களில் வெளியே ஒரு பழைய கோணியில் அமரந்துதான் உணவு உண்ண வேண்டும்.  இத்தகைய தீண்டாமை 1960 ஆம் ஆண்டு வரை நீடித்தது. (உதாரணம் – சுபாஷ் கேஃப்) 1930/40 களில் கீ்ழ்ஜாதி பெண்கள் ஜாக்கெட் போட தடை விதிக்கப்பட்டிருந்தது.

தாழ்த்தப்பட்ட தமிழ் பெண்களைக் கூட்டமாக சேர்ந்து கற்பழிப்பது, இறந்தவர்களைப் புதைக்க  எடுத்துச் செல்லும் ஊர்வலத்தில் தாரை, தம்பட்டை அடிக்க தடை செய்வது போன்ற பல வெள்ளாள ஒடுக்கு முறைகள் மிகவும் கொடுமையானது. 1950 இல் ஒரு தாழ்த்தப்பட்ட ஒருவர் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றறார். ஆனால் பஞ்சாயத்து கூட்டங்களில் அவரை கடைசியில் தரையில்தான் அமரச்செய்தார்கள் (Kopey Village Council). LTTE இதைப்பற்றி  எந்த அக்கரையும் கொள்ளவில்லை.  ஏழ்மையின் காரணமாக பல தாழ்த்தப்பட்ட தமிழர்கள் புலிபடையில் சேர்ந்தனர். ஆனால் இந்த பழியை சாமர்தியமாகச் சிங்கள பௌத்தர்கள் மேல் சுமத்தி தங்களை உத்தமர்கள் போல் காட்டிக்கொள்வது வெகு நாட்களாகத் தொடர்ந்து நடந்துவருகிறது. இதையே சுழற்சி முறையில் திரும்பத் திரும்ப சொல்லி அதனால் அரசியலில் ஆதாயத்தைத் தேடினர்.

எனவே இந்த பழிசுமத்தும் பொய்யைப் பற்றி நாமும் திரும்பத் திரும்ப சொல்லித் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் நல்ல காலம் விடுதலைக்குப்  பின்தான் ( பிப்ரவரி 1948 ) என்பதை நினைவூட்டுவோம்.

டச்சு. பிரிட்டிஷ் காலணிகள் மேல் ஜாதியினர், கீழ் ஜாதிகளை அடக்கி, ஒடுக்கிச் செய்யும் கொடுமைகளிலிருந்து விடுவிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வெள்ளாளர்களை எதிர்த்த முதல் ஆள் (கரும் பூதம்).  S. W. R. D பண்டாரநாயகா. 400 வருடங்களாக அடிமைபட்டுக் கிடந்த யாழ்ப்பாணம் தமிழ் தாழ்த்தப்பட்ட மக்கள் நிமிர்ந்து மூச்சு விட இவர் கொண்டுவந்த (   Prevention of Social Disabilities Act ) சமூக ஏற்ற தாழ்வை மாற்றும் சட்டம் சற்று பெருமூச்சையும், ஆறுதலையும் அளித்தது.

சிங்கள அரசு என்று அழைக்கப்படுவது 72 ஆண்டுகள் மட்டுமே. அதன் பலவீனங்கள் அதன் சாதனைகளை நிராகரிக்க முடியாது.  இரண்டு அரசியல் கலாச்சாரங்களில் தமிழர் மற்றும் சிங்களவர் எப்படி இருந்தார்கள் என்பதை மதிப்பிட இரு மாநிலங்களுக்குமான ஒப்பீடு அவசியமானதாகும். தமிழர்களின் மோசமாக நிலைமைகளுக்கு அதன் தலைவர்களே காரணமாகும். இதை நான் மிகைப்படுத்திக் கூறுவதாகச் சிலர் எண்ணலாம் ஆனால் பல முறை சிங்களவர்கள் தாழ்த்தப்பட்ட தமிழ்ச் சமூகத்தவரை விடுவிக்க முயற்சிகள் எடுத்தனர். உதாரணமாக 1704 முதல் அடிமைபட்டு கிடந்த தாழ்த்தப்பட்ட தமிழ்ச் சமூகத்தினர் 1956 பண்டாரநாயகா கொண்டுவந்த ”சமூககுறைபாடுகள் தடுப்பு சட்டம்” தாழ்த்தப்பட்ட தமிழர்களைப் பாசிச வெள்ளாளர்கள் பிடியிலிருந்து சற்று தளர்த்தியது அல்லது மீட்டெடுத்தது

இரண்டாவதாகப் பிரதம மந்திரி மஹேந்திர ராஜபக்ஷி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷி தமிழ்களான சம்பந்தன், விக்னேஸ்வரன் மற்றும் சுமந்திரன் ஆகியோரை விடுவித்து அவர்களது உரிமை திரும்பபெற வழிசெய்து அவர்கள் சுதந்திரமாகப் பேசவும், திரும்பிப் பார்க்காமல் நடக்கவும் மரியாதையுடன் நடத்தப்படவும் வழிவகை செய்தனர்.

தமிழ் மாநிலம் கொடுக்க மறுத்த பாதுகாப்பைச் சிங்கள அரசு செய்தது. சிங்கள அரசு அவர்களை புது மனிதர்களாக மாற்றி ஒரு ரோபோவைப் போல் (தலையாட்டி பொம்மை) புதுக்குடியிருப்பு டவுன் (முல்லைத் தீவு) சர்வாதிகாரங்களுக்கு (அதாவது கம்போடியாவின் கம்யூனிச போல் பாட் கொடுங்கோலனைப்போல்) கீழ்ப் படியாமல் சுதந்திரமாகச் சிந்திக்க வழி வகுத்தது.

பச்சை முஸ்லீம் – ஆரஞ்சு தமிழ் ஹிந்து – சிறுபான்மையினர்கள்

கடந்த 72 ஆண்டுகளில் தான் தமிழர்களின் மரியாதை சர்வதேச அளவில் உயர்த்தப்பட்டது. யூ.என். இல் 193 கொடிகள் பறக்கின்றன.  அவற்றில் ஒரே ஒரு சிங்கக் கொடி மாத்திரம் தமிழர்களின் அங்கீகாரத்தையும் மரியாதையையும்,கௌரவத்தையும் பறைசாற்றுகிறது. தமிழர்களின் சொந்த நிலமான இந்தியாவில்கூட இப்படி தமிழனுக்காகத் தனி மரியாதை செய்யவில்லை. எங்களது ஜனாதிபதியோ மற்ற உயர் அரசு அதிகாரிகளோ இந்த கொடிக்கு வணக்கம் செய்கிறார்கள் என்றால் அவர்கள் வணக்கங்கள் பெரும்பான்மை சிங்களவர்களுக்கு மட்டும் இல்லாமல் ஹிந்து தமிழர் மற்றும் இஸ்லாமியருக்கும் சேர்த்துச் செய்யும் மரியாதை

வேறு எந்தநாட்டு நாணயமும் இந்திய நாணயத்தையும் சேர்த்து இலங்கை நாணயத்தைப்போல் தமிழ் மொழிக்கென்று ஒரு உலக அளவிலான மதிப்பை அளிக்கவில்லை. இலங்கையை தவிர  வேறு எந்தநாட்டு விமான நிலையத்திலும் தமிழில் அறிவிப்பை வாசிப்பதில்லை.

அமைதிக்கான குறிப்புகள்

ஆஸ்திரேலியாவின் அடிலைட்டு மைதானத்திலிருந்து அரஜுன்ரணதுங்கா தனது சிங்கள அணியில் விளையாடிய ஒரு தமிழரின் உரிமைக்காக (ஆஸ்திரேலிய அணியின் அபாண்டமாக குற்றச்சாட்டு) மொத்த குழுவையும் களத்திலிருந்து விலக்கிக்கொண்டார். இந்த ஒற்றுமையை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

என்னுடைய தமிழர் மீதான ஒத்துப்போதல், சகஜமாகப் பழகுவது, நான் பள்ளி நாட்களில் பல தமிழ் நண்பர்களுடன் கொண்ட அன்பு என்பது, நான் என் உறவினர்களுடன் பழகுவது, சக நன்பர்களுடன் பழகுவது போல்தான். பல கசப்பான சம்பவங்கள், வெறுப்பு ,போட்டி, பொறாமை இவற்றை மறந்து துதுகேமுனு, எலாரா படைவீரர்களிடம் காணப்பட்ட வெளிப்படையான அன்புதான் நட்பிற்குக் காரணம். நிச்சயம் தமிழர்களுக்கு விடுதலைக்குப் பின் 72 ஆண்டுகளாகப்  பல நூற்றாண்டுகள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற நல்ல காலம்தான் நடக்கிறது

நாம் நம் கண்முன்னே நடந்த உள் நாட்டுக் கலகங்களை பார்த்திருக்கிறோம். அரசியல் கலக்காமல் முழுமனதுடன் நாம் சிந்தித்தோம் என்றால் இரு தரப்பிலும் பல தவறுகள் நடந்திருக்கின்றன ஒருவருக்கு ஒருவர் மன்னிக்கமுடியாத குற்றங்களைச் செய்தோம்.  யுத்தம் தனது வடுக்களைப் போராளிகளுக்கு மட்டுமல்லாமல் அப்பாவி பொது மக்களிடமும் விட்டு சென்றிருக்கிறது. அமைதிக்கான பல சந்தர்ப்பங்களை வேண்டுமென்றே ஒதுக்கினோம். அவற்றை எல்லாம் திரும்பப் பார்த்தால் நாம் நல்லவர்களாக,  ஒற்றுமையாக வாழவிடாது.  அவற்றையெல்லாம் மறந்து, நட்பை வளர்ப்பதுதான் நாட்டிற்கும், வீட்டிற்கும் நல்லது.

நான் நல்லது நடக்காது என்ற அவநம்பிக்கை கொள்ளாமல் நல்லதே நடக்கும் என்ற நம்பி்க்கையில் நம்பிக்கை கொண்டவன்.

பின்னூட்டமொன்றை இடுக