நமது பாரத பாரம்பரிய எழில் மிகு கோவில்களின் பரிதாப நிலை – Part – 2

2007 ஆம் ஆண்டுதொட்டு (ASI+Regional Endowment Board ) நமது பாரம்பரிய சின்னங்களை புதுபிப்பதாக சொல்லிக்கொண்டு கலை நயத்துடன் இருந்தவற்றை பொலிவிழக்க செய்துவிடுகின்றனர். இது எப்படி இருக்கின்றது என்றால் நன்கு அலங்கரிக்கப்பட்ட லஷ்மிகரமான மண பெண்ணிற்கு அமங்கலமான விதவை வேஷம் போடுவது போல் தான்.

2-1       2-2

எழில்மிகு காளஹஸ்தி ராஜகோபுரம்/சரியும்முன் ஏற்பட்ட  பிளவுகள்

இந்தியாவின் ஹிந்து பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பு இல்லாமல் அழிந்து வருவதைப் பார்தது மக்கள் கதி கலங்கியுள்ளார்கள்.  ராஜகோபுரம் என்பது ஒரு கோவிலின் நுழைவாயில் ஆகும். மே 26 இல் 2010ஆம் வருடம் ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோபுரம் சுமார் மாலை 8.30 மணிக்கு சரிந்து தரை மட்டமாகியது. இது 135 மீட்டர் உயரத்துடன் 500 வருடங்களாக மிக கம்பிரமாக காட்சி அளித்து வந்த புகழ் வாய்ந்த கோபுரம் ஆகும்.  ஆனால் இந்த ஸ்தலத்தின் பிராதன கடவுளான சிவன் பிராகாரம் சேதம் அடையவில்லை.  அங்கே உயிர் சேதமும் எதுவும் இல்லை.         

2-3

கோபுர சரிவினால் ஏற்பட்ட கட்டிட குவியல்

இதனால் அங்கு உள்ளுர் ஜனங்களும், புனிதயாத்திரை செய்ய வந்த பக்தர்களும் கலவரம் அடைந்தார்கள். மேலும் அவர்கள் இதற்கு உயர் அதிகாரிகள், தேவஸ்தான உறுப்பினர்களின் மெத்தன போக்கே  சரிவிற்கு காரணம் என்று சாடியுள்ளார்கள். சரியும்  நான்கு நாட்களுக்கு முன்தான் கோபுரத்தில் ஏற்ப்பட்ட விரிசல்கள் அகண்டு கொண்டு வந்தது. ஆனால் லேசான விரிசல் சில மாதங்களுக்கு முன்பே தெரிய ஆரம்பித்தது. அறிந்த விவரம்படி கோபுரத்திற்கு வெகு அருகாமையில் 500 முதல் 600 ஆடி ஆழத்திற்கு போர் குழாய்க் கிணறு போடுவதற்காக ராஷ்ஷச இயந்திரங்களை கொண்டு பல நாட்களாக தோண்டிக்  கொண்டிருந்தார்கள்.  இதனால் ஏற்பட்ட  அதிர்வுகளே கோபுரம் சரிந்து தரை மட்டமானதற்கு காரணம் என்று பலர் கூறுகிறார்கள். பொறுப்பு இல்லாமல் இவ்வாறெல்லாம் செய்வதற்கு காரணம்  ஹிந்து  விரோத மதமாற்றத்தை தூண்டும் தீய சக்திகளுக்கு (YSR) விலைபோன ஆந்திர அரசாங்கமே ஆகும்.

இந்த ராஜகோபுரம் பத்து ஆண்டுகளுக்கு முன்னிலிருந்து பலவீனத்தால் அடிகடி சிலகற்களும், களிமண் கட்டிகளும் விழுவது தொடர்ந்து வந்துள்ளது. இப்படி விழுந்து வருவதால் சில வருடங்களுக்கு முன் அங்கு வந்த ஒரு யாத்திரிகர் தலையில் கற்கள் விழுந்து அங்கேயே அவர் இறந்துபோனார். இது பற்றி உள்ளுர்வாசிகள் அடிக்கடி தேவஸ்தானத்திற்கு புகார் செய்து வந்தனர்.  ஆனால் ஹிந்து விரோத சக்திகள் இதன் தீவிரத்தை அலட்சியம் செய்ததோடு கண்துடைபாக மேலோட்டமாக சில பூசு வேலைகளை மட்டும் செய்து வந்தார்கள்.

இந்த ராஜகோபுரம் ஏழுமாடி அடுக்குடன்  1516 ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயா என்ற மன்னரால் கட்டப்பட்டது. அவர் 1509 முதல் 1529 வரை விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை வெகுசிறப்பாக ஆண்டுவந்தார்.  இங்கு பிரதான கோவிலின் வலப்புரத்தில் ராஜகோபுரம் அமைந்திருப்பது ஒரு விஷேஷமாகும்.        
2-4

கிருஷ்னதேவராயாவின் நினைவு சின்னம்

விஜயநகர சாம்ராஜ்யம் நிறுவி 500 ஆண்டுகள் பூர்தியானதை நினைவுகூறும் வகையில் ஆந்திர அரசாங்கம் காளஹஸ்தி கோவிலின் முன்புரம் 2009 இல் கிருஷ்ணதேவராயருக்கு ஒரு பெரிய சிலையை நிறுவியது. சிலையின் பின்னால் சரிந்து தரைமட்டமான கோபுரத்தின் கற்குவியலை மேல் படத்தில் காணலாம்.

சமீபத்தில் சரித்திர புகழ்வாய்ந்த இந்த மண்னரது இரும்பு உலோக சிலை ஒன்று காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் படத்தை கீழே காணலாம்.     

2-5

இடது கோடியில் கிருஷ்ணதேவராயரின் சிலை

திரு ஆர்.நாகசாமி தமிழ்நாடு புதைபொருள் ஆராய்ச்சி கழகம் அவர்களால் புரன்தேவி சன்னதிக்கு செல்லும் படிகட்டுகளுக்கு இடையில் இந்த இரும்பு சிலை கண்டெடுக்கப்பட்டது. சிலையின் மற்ற இருவரும் கிருஷ்ன தேவராயாவின்   துணைவியார்கள். இந்த ராஜவின் சிலை கைகூப்பி நின்றுகொண்டு இடது கையில் வாள் கொடாரியுடன் தலையில் கூம்பூ வடிவில் வைரகற்கள் பதித்த நீண்ட கீரிடத்துடன் காட்சி அளிக்கிறது. டாக்டர் நாகசாமி இந்த மிக அழகான உலோகசிலை கிருஷ்ன தேவராயாவின் காலத்தில் சிலைவடிப்பு கலையில் அன்று அடைந்த முன்னேற்றத்தை பரைசாற்றுகிறது என்கிறார். மேலும் திரு நீலகண்ட சாஸ்திரி கிருஷ்ணதேவராயா ஒரு சிறந்த போர் வீரராகவும், ஒரு சிறந்த ராஜாங்கத்தை நடத்தக் கூடியவராகவும், பல கலைகளையும் போற்றி வளர்த்தவராகவும் விளங்கினார் என கூறுகிறார்..  மேலும் அவர் இவரது அரசவைக்கு பல வெளிநாட்டு விருந்தினர் வந்ததாகவும் அவர்கள் விஜயநகரத்தின் செல்வ செழிப்பையும், கொண்டாடப்படும் பண்டிகைகள் பற்றியும், போர் படைகளின் அணிவகுப்பை பற்றியும் புகழ்ந்து எழுதி இருப்பது படிப்பதற்கு ஆவலை தூண்டும் என்கிறார்.  .

ஸ்ரீகாளஹஸ்தி ஐந்து பஞ்சபூத சிவ ஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கே சிவன் வாயு உருவில் வணங்கப்படுகிறது. இது பாரதத்தில் உள்ள ஒரே ஒரு வாயு கோவிலாகும்.  இந்த சன்னிதானத்தை ராஜேந்திர சோழன் 12 ஆம் நூற்றாண்டில் கட்டினார்.   

2-6

Sri Kalahasdeeswaran & Gnaga/Sri Kalahasteeswara & Gnanaprasunambika   

இதை தென்னகத்தின் கைலாசம் என்றும் தஷ்ஷின கைலாசம் என்றும் கூறுவர். சைவ புலவர்கள் முதலாம் நூற்றாண்டிலிருந்தே இந்த ஸ்தலத்திற்கு வந்து சிவன் மீது பல பக்தி பாடல்கள் பாடியுள்ளார்கள். இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால் அருகில் இருந்த ஒரு சிறிய மலையையே குடைந்து வடிவமைத்ததாகும்.        

2-7

Multi-pillared Magnificence of the prakaram of Kalahasti Temple

இந்த கோவிலில்தான் 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார் வழிபட்ட புனிதமான ஸ்தலம் ஆகும். வேடனான கண்ணப்பன் ஒருநாள் சிவலிங்கத்தின் கண்களிலிருந்து ரத்தம் வழிவதை கண்டு அதிர்ந்துபோய் அம்பால் தன் கண்ணையே பிடுங்கி சிவலிங்கத்திற்கு பொருத்த ஆயத்தமானார். சிவன் அவர்முன் தோன்றி அவரது பக்தியின் ஆழத்தை மெச்சி அவருக்கு மோஷ்ஷத்தை அளித்தார்       

2-8

STORY OF KANNAPAN

முப்பது ஆண்டுகளுக்கு முன்வரை யாத்தீரிகர்கள் கோவில் அருகாமையில் உள்ள சுவரணமுகி ஆற்றில் புனித நீராடிவிட்டுத்தான் கோவிலுக்கு செல்வார்கள். இப்படி புகழ்பெற்ற கோபுரம் பொறுபில்லாத காலிகளால் தரைமட்டமாகியது.

அப்பொழுது இருந்த ஆந்தராவின் முதன் மந்திரி திரு.ரோசையா அவர்கள் கோபுரம் வீழ்ந்ததற்கு வருத்தம் தெரிவித்ததோடு அல்லாமல் பொறுப் பற்றவர்கள் மீது விசாரணை நடத்தவும் உத்திரவு இட்டார்.. மேலும் விழுந்த கோபுரத்தை மறுபடியும் விஞ்ஞான பூர்வமாக கட்டவதற்க்கும் (Govt) துணையுடன் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று உத்திரவாதம் கொடுத்து அதற்காக ஒரு கமிடியையும் உருவாக்கினார். இந்த பணி முடிவடைந்து 2017 இல் புது கோபுரம் திறக்கப்பட்டது. 45 கோடி செலவு செய்தும் பழைய பொலிவு இன்று இல்லை. இந்த கோவிலுக்கு பல வெளிநாட்டினர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.  யாத்திரிகர்கள் இந்த புண்ணிய ஷேத்திரத்திற்கு மிகுதியாக வருவதால் கோவிலின் ஆண்டு வருமானம் இரண்டு கோடிக்கு மேல் ஆகும்.

கோவிலின் நுழைவாயில் அருகாமையில் தரைமட்டத்திற்கு அடியில் கற்பாறையை தோண்டி விநாயகருக்கு ஒரு கற்பகிரகம் ஒன்பது அடி ஆழத்தில் கட்டப்பட்டுள்ளது ஒரு அதிசயமாகும். இந்த புண்ணிய ஸ்தலம் ராகு, கேது தோஷங்களை நிவற்திக்கும்  ஒரு ஷேத்திரமாகும்.

பஞ்சபூதங்களின் வாயு ஷேத்திரமான காளஹஸ்தி போல் தண்ணீருக்கு திருவானைகாவலிலும், நெருப்புக்கு திருவண்ணாமலையிலும், பூமிக்கு காஞ்சிபுரத்திலும், ஆகாயத்திற்கு சிதம்பரத்திலும் சிவ ஸ்தலங்கள் உள்ளன. இப்படி பல பெருமைகளை பெற்ற இந்த புகழ் மிக்க கோபுரம் விழுந்தது பொறுபற்ற ஆந்திர அரசின் என்டோமென்ட் போர்டில் உள்ள கடவுள் நம்பிக்கை இல்லாத அன்னிய மதத்தை ஆதரிக்கும் பணியாளர்கள்தான் ஆவார்கள்

10ஆம் நூற்றாண்டில் உலக புகழ்வாய்ந்த பிரகதீஸ்வரர் ஆலயத்தை ராஜராஜ சோழன் உருவமைத்தான். இந்த ஆலயத்தில் (ASI) புரன்நுதாரணம் செய்வதாக சொல்லி நடத்திய அட்டூழியங்களை சற்று பார்போம்.   

2-9

BRIHADEESWARA TEMPLE UNDER ASI DESTRUCTION IN August 2008

2-10

WANTON DESTRUCTION OF PRECIOUS ARTEFACTS OF BRIHADEESWARA TEMPLE BY THE ( ASI )

பல புராதன கலை பொக்க்ஷியங்களுக்கு பாதுகாப்பு செய்வதாக சொல்லிக் கொண்டு பழமையான சரித்திர நிகழ்வுகளை சொல்லுகின்ற கல்லில் செதுக்கிய பல குறிப்பேடுகளையும், கம்பிரமான தூண்களையும், மண்டபங்களையும், கற்ப கிரகங்களையும், விலை மதிப்பிட முடியாத வண்ண ஓவியங்களையும் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரமுடியாத வகையில் புரன்நுதாரனம் என்ற பெயரில் இந்தியாவின் கலை களங்சியங்களை அழித்து வருகிறார்கள். இந்த கோவில் இன்றய சிற்ப வல்லுர்களே எப்படி சாத்தியம் என்று திகைக்கும் வண்ணம் அற்புதமாக வடிவமைகப்பட்டதாகும். ஒரு முழுமையாக வரைந்த படத்தை பல துண்டுகளாக பிரித்து பிறகு அதை ஒன்று சேர்கும் விளையாட்டை போல் கற்களால் செதுக்கிய படிமங்களை இணைத்திருப்பது ஒரு பெரும் அதிசயமே ! ஒவ்வொரு படிமங்களும் எடைபோடப்பட்டு ஏதோ ஒரு கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் அதேசமயம் ஆகம விதிகளுக்கும், சிற்பக்கலை சாஸ்திர விதிகளையும் மீறாமல் மிகவும் நேர்தியாக அமைப்பட்டது எப்படி சாத்தியமாயிற்று என்று பலர் வியக்கின்றார்கள். அவர்கள் ஜியோமிதி விதிகள் படியும், கோணங்களின் கணித விதிகள்படியும் ஆராய்ந்து கட்டுமானங்களை எழுப்பியுள்ளது எப்படி என்று இன்றைய பொறியாள வல்லுனர்களே விடை தெரியாமல் விழிக்கின்றார்கள்.

சரித்திர சான்றுகள் படி முதலாவது ராராசோழன் ராஜ கோபுரம் முழுவதும் தங்கமுலாம் பூச்சு கொடுத்திருந்தான்.  அலாவுதின் கில்ஜியின் படை தளபதியான மாலீகாப்பூர் 1312-13 ஆம் ஆண்டு தென்னகத்தின் மீது படை எடுத்து வந்தபோது பிரகதீஸ்வரர் ஆலயத்தின் அர்தமண்டபத்தின் இரண்டு தளங்களை சேதப் படுத்தியதோடு மேலும் பல கோவில் கட்டுமாங்கயையும் அழித்தான். அதன் பின் பல நூற்றாண்டுகள் அந்த கோவில் மூடியே வைக்கப் பட்டிருந்தது. பின்பு வந்த அரசர்களால் 16-17 நூற்றாண்டுகளில் இடிபாடுகளை விலக்கி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 18ஆம் நூற்றாண்டு இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலும் இக்கோவில் பிரிட்டிருக்கும், பிரென்ஞ்சுகளுக்கும் ஒரு பாதுகாப்பு கோட்டை அரணாக பயன்பட்டது.

2008 சிற்பகலை என்னவென்றே தெரியாத வேலை ஆட்களை கொண்டு கட்டுமானங்களை பிரித்துப் போட்டதோடு அல்லாமல் அதை புதுபித்து எப்படி கட்டுமானம் செய்வது என்று தெரியாமல் உள்ள அழகையும் கெடுத்து வைத்துள்ளார்கள். இதனால் ஏற்படுத்திய கழிவுகளை மேலே உள்ள இரண்டு படங்களில் காணலாம். இது பார்பதற்கு ஒரு பெரிய போர் நடந்து முடிந்த இடம்போல்தான் தோற்றமளித்தது. எங்கு பார்தாலும் உடைத்து எடுக்கப்பட்ட தூண்களின் துண்டு பாகங்கள் மலை குவியலை போல் காட்சியளித்தது. பல நூற்றாண்டுகள் பலத்த மழையாலும், வெள்ள பெருக்காலும், நில அதிர்வுகளாலும் தாக்கபடாத இந்த கலை பொக்க்ஷியம், அற்பதனமான மத காழ்பினால் கலாசார சீர் அழிவை வேண்டுமென்றே (ஏ.எஸ்.ஐ.  இல்) உள்ளவர்கள் கெடுத்து விட்டிருக்கிறார்கள்.  மிகவும் நேர்தியுடன் வடி அமைக்கப்பட்ட தாமரை வடிவிலான குமுதபடைஎன்ற கல் பிம்பங்களை உருதெரியாமல் மின்சார கட்டிங் மிஷினால் பொலிவு செய்கிறோம் என்று சின்னாபின்னமாக மாற்றியிருப்பதை கீழே உள்ள படத்தில் காணலாம். இதைப் பார்கையில் கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

இப்படி ராஜராஜனால் கட்டப்பட்ட தமிழர்களின் கலை நயத்தையும், சிற்பங்கள் செதுக்குவதில் பெற்றிருந்த நுண் அறிவாற்றலையும், சித்திரம் வரைவதில் முன்னோடியாக இருந்ததையும் கண்டு  உலக கலை களஞ்சியங்களை வரிசையில் பாரம்பரிய சின்னமாக யூநென்ஸ்கோ (UNESCO) நிறுவனம் இக்கோவிலுக்கு அங்கிகாரம் அளித்துள்ளது. இதற்கே இந்த (ஏ.எஸ்.ஐ) யால் இவ்வளவு சேதாரங்கள் ஏற்படுத்த முடியும் என்றால் இந்தியாவில் இதன் கட்டுபாட்டில் உள்ள கோவில்களின் நிலையை என்னவாயிருக்கும் என்று யோசித்து பாருங்கள்.         

2-11

Obliteration of the lotus motifs by the ASI

14 ஆம் நூற்றாண்டில் படையெடுத்த முஸ்லீம் தளபதிகூட இந்த அளவிற்கு சேதாரங்கள் ஏற்படுத்தியதாக சான்றே இல்லை. தொடர்ந்து பல வருடங்களாக இந்த நாசவேலையை மும்முரமாக நடந்தேறி வருகிறது. பல சோழர்காலத்து சரித்திர நிகழ்வுகள், கட்டுமான பணிகள் எவ்வாறு யாரால் எப்படிப்பட்ட தொழில் நுணுக்கங்களை கடைபிடித்து கட்டப்பட்டது, எந்தெந்த கட்டுமான பொருட்கள் எந்த சதவிகிசாரத்தில் சேர்கப்பட்டு உபயோகித்தார்கள் போன்ற கிடைப்பதற்கறிய செய்திகளை கல் பிரகாரங்கில் செதுக்கியிருந்ததை எல்லாம் உருதெரியாமல் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதில் வடக்கேயான பிரஹாரம், உபபீடம், ஆஸ்தான மண்டபம், விமானங்களின் உள்பாகங்களும் அடங்கும்.

இதைப் போல் திருநெல்வேலியில் அம்பாசமுதிரத்தில் உள்ள மன்னார் கோவிலின் ண்ண வியங்கள் சிதைக்பட்டுள்ன. இது மிகவும் பழைமைவாய்ந்த 11 ஆம் நூற்றான்டின் புராதன சின்னமாக விளங்கியது. இது சேர மண்ன் ராஜசிம்மனால் கட்டப்பட்டது. பின்பு சோழமண்ன் ராஜேந்திரனால் மேன்மைப் படுத்தப்பட்டது.  இங்கே 13 ஆம் நூற்றாண்டில் தனிமைவாய்த ஒரு கற்பகிரஹம் உருவாக்கப்பட்டது. வைஷ்ணவ பெரியாரான குலசேகர ஆழ்வார் தனது கடைசிகாலத்தை இங்குதான் கழித்தார். இங்கே நிறைய சேர, சோழ கல்வெட்டுகள் இருந்து. இங்கே மொத்தம் மூன்று  கற்பகிரஹங்கள் உள்ளது.   

2-12  2-13

Mannar Kovil Temple in Tirunelveli District in Tamil Nadu State (Effacement of the Murals in the name of Conservation)

மேலே உள்ள புகைபடம் நேர்தியாக வரையப்பட்ட முரல் சித்திரத்தின் சின்னாபின்னம் படுத்தப்பட்ட காட்சியை தெரிவிக்கிறது. பல இடங்களில் மொத்தமாக அழித்து விட்டு சுத்தமாக வெள்ளை அடித்துள்ளார்கள். உத்திரத்திலுள்ள பகவான் நரசிம்மரது வரை படைத்தை அசிங்கப் படுத்தியுள்ளதை கீழே உள்ள படத்தில் காணலாம்.   

2-14

Mural painting of Lord Narasimha effaced and defaced

வரைகலை சரித்திர வளர்சியில் பயிற்சி பெற்றவரான கே.டி.காந்திராஜன் கூற்றுபடி முரல் சித்திரகலை ஒவியங்களான மன்னார்கோவில், திருபுடைமருதூர், கல்லகுடி போன்ற திருல்வேலி மாவட்டத்தில் காணப் படுபவை தமிழகத்திற்கும், கேரளகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததை பரைசாற்றும் ஒரு ஆதாரம் ஆகும் என்கிறார். சுதந்திரம் பெற்று கடந்த 60 வருடங்களில் 1000 திற்கும் மேற்ப் பட்ட முன் மாதிரியான முரல் வகை வண்ண ஓவியங்கள் இன்று வெள்ளை அடிக்கப் பட்டுள்ளதை மன வருத்தத்துடன் தெரிவிக்கிறார். இதில் முக்கியமான சில

  1. மீனாக்க்ஷி கோவில் – மதுரை
  2. அருணாசலேஸ்வர் கோவில் – திருவண்ணாமலை
  3. விஷ்ணு கோவில் – திருச்சியில் உள்ள திருவெள்ளாரை
  4. சிவன் கோவில் – கும்பகோணத்தில் உள்ள பட்டிஸ்வரம்
  5. சிவன் கோவில் – காஞ்சிபுரத்தில் உள்ள திருபுலிவனம்
  6. சிவன் கோவில் – வேதாரண்யம்
  7. லஷ்மி நரசிம்மர் கோவில் – காஞ்சிபுரத்தில் உள்ள செவல்லிமேடு
  8. சஞ்சீவி ராயர் கோவில் – காஞ்சிபுரத்தில் உள்ள ஐயங்கார்குளம்

மேலே சொன்னவை எல்லாம் தமிழக ஹிந்து அற நலதுறையின் கைங்கர்யம் ஆகும். இப்படிப்பட்ட உருதெரியாமல் சுத்தப்படுத்தும் வேலை தமிழகத்தில் மட்டும் அல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் ஒரு உள்நோக்கு திட்டதுடன் நடந்தி வருகிறார்கள். இது சோனியாவின் வருகைக்கு பின் வேகம் அதிகமாகி வந்தது. இது ஒரு கிருஸ்துவ காட்டுமிராண்டி நடவடிக்கையே ஆகும். இதை எதிர்த்து குரல் கொடுக்க அன்று காங்கிரஸில் ஒரு ஹிந்து கூட இல்லை ? எப்படி இருப்பார்கள் ? காமாந்திர வக்கிரக புத்தி படைத்தை எப்.எம்.ஊசைன் போன்றவர்களுக்கு பாராட்டும், பட்டமும் கொடுக்கும் கூட்டமாயிற்றே?

 சமீபத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஒரு அழகிய சபா கல் மண்டபத் தூண்களை ஒரு பெரிய வேலையாட்கள் கொண்ட கூட்டத்தைக் கொண்டு போக்கரான் மூலம் இடித்து தரைமட்டமாக செய்து உள்ளார்கள். ஏன் ? எதற்காக ? யார் உத்தரவின் பேரில் இடித்து தள்ளினார்கள் ? என்ற கேள்விகளுக்கு இன்றுவரை பதில் இல்லை. இது 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலாகும்.  இது சோழ மன்னர்களால் 1053 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வைஷ்ணவ புண்ணிய ஸ்தலம் ஆகும். இது பெருமாள் கோவில்களான விஷ்னுகாஞ்சி என்று அழைப்பட் கோவில்களில் ஒன்றாகும்.  இங்கேதான் ராமானுஜர் தம் வாழ்நாளில் பலகாலம் கழித்தார் 

2-15

Varadharaja Perumal Temple at Kancheepuram

கோவில் 23 ஏக்கர் நிலபரப்பில் அமைந்த ஒரு விஸ்தாரமான விஷ்ணு ஸ்தலம் வரதராஜபெருமாள் ஆகும். இந்த தலத்தின் பழைமையான ஆதார செய்தி பூதத்த ஆழ்வார் பாசுரங்களில் காணப்படுகிறது.  11 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த கோவில் விரிவாக்கப்பட்டு வந்துள்ளது. குலோத்துங்க சோழன்-1 காலத்தில் மூலவரைச் சுற்றி பிரகாரங்களை எழுப்பினான். பின்பு படிபடியாக மேலும் சில பிராகாரங்கள், கோபுரங்கள் கட்டப்பட்டன. தற்போது உள்ள மூலஸ்தானம் 1505-30 ஆண்டுகளில் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்தேவராயரால் கட்டப்பட்டது என்று டாக்டர் நாகசாமி விளக்குகிறார். அதன் விமானம் 1525 ஆம் ஆண்டு தங்கமுலாம் பூசப்பட்டது. பின்பு வந்த அச்சுத தேவராயா 1535 இல் மேற்கு வாசலை ஒட்டி பெரிய கல்யாண மண்டபத்தை கட்டினார். இந்த நூறுகால் மண்டபத்தின் தூண்களில் குதிரை சவாரி செய்பவர், நடனம் ஆடுபவர், பாட்டுபாடுபவர் மேலும் பல கடவுள் உருவமும் மிகவும் நேர்தியாக செதுக்கபட்டுள்ளது.     

 

2-16    2-17

Nootru Kaal Mandapam built by Vijayanagar Emperor Achyuthadevaraya in Varadharaja Perumal Temple (God only knows when this will receive the sentence of sudden death!)

இதை தவிர கிரானைட் கல்லை கொண்டு வேறு ஒரு பலகால்கள் கொண்ட மண்டபத்தையும் இவர் நிறுவியிருந்தார். இங்கேதான் கோவில் உற்சவத்தின் போது கடவுள் அலங்காரங்களுடன் காட்சி தருவார்.  பின்பு இது பசுக்கள் காக்கும் கோசாலையாக சிலகாலம் பயன்பட்டுவந்தது. இதை பிரிடிஷ்சார் ஆண்டகாலத்திலும் யாரும் கை வைக்கவில்லை. ஆனால் இன்று இந்த காங்கிரஸ், திமுக அரசும் கைகோர்த்துக் கொண்டு இதை தரைமட்டமாக ஆக்கியுள்ளார்கள்.  இந்த கோர காட்சியை கீழே உள்ள படத்தில் காணலாம்   

2-18

The Mandapa of the Sri Varadaraja Perumal Temple being demolished

ஆர்கலாஜிகல் டிபார்ட்மெண்டை சேர்ந்த அதன் ய்வு பெற்ற டைரக்டர் டாக்டர் ஆர்.நாகசாமி எந்த இடிபாடுகளும் இல்லாத நேர்தியான இருந்த இந்த மண்டபம் சுலபமா எளிதல் சுத்தம் செய்து புதுப்பித்திருக்கலாம். ஆனால் யார் பேச்சை கேட்டு இவ்வாறு மொத்தமாக இடித்துள்ளார்கள் என்று தெரியவில்லை என்கிறார். இதை தவிர பல இடங்களில் இருந்த சுவர் வண்ண சித்திரத்தின் மேல் முழுமையாக வெள்ளை அடித்துள்ளார்கள். இது தி.மு.க. அறநல துறை செய்துள்ள தர்ம கைங்கர்யம் ஆகும். இப்படி வெள்ளை அடிக்கப்பட்ட இடங்களில் பிற்காலத்தில் கிருஸ்துவ ”லாஸ்ட் சப்பர்” ”ஜிசஸ் மேரி” படங்கள் வரையப் பட்டாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை..

இப்படி திட்டம் தீட்டி நமது மாநில அரசு சிதைத்தொழித்த பாரம்பரியமான மற்றொரு கோவில் காஞ்சிபுர மாவட்டத்தில் உள்ள திருபுலிவனம் கிராமத்தில் இருக்கின்ற 975 ஆண்டுகள் பழமைவாய்ந்த சோழர் காலத்து ஓவியங்களும், சிற்பங்களும் ஆகும். இது 1200 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. திரு.டி.எஸ்.சுப்ரமணியன் 2008 இல் ( HR & CE ) யால் இங்கே நடந்த அட்டூழியங்களைப் பற்றி விரிவாக அரசுக்கு சொல்லியுள்ளார். கொடுமை என்னவென்றால் இந்த கோவிலில் தான் ஆகஸ்ட் மாதம் 2007 இல் ஒரு கருத்தரங்கு (தொல் பொருள் ஆய்வாளர்கள், கல்வெட்டுஆய்வாளர்கள், வரைபட வல்லுனர்கள் கொண்ட குழு) எப்படி எழில் மிகு ஓவீயங்களையும், கல்லில் செதிக்கியுள்ள கிடைப்பதற்கு அறிதான தகவல்களையும் பாதுகாப்பது என்று கருத்துகள் சொல்லி அதற்கான திட்டங்களை அரசிற்கு சிபாரிசு செய்தார்கள்.

இங்கே இருந்த இரண்டு 16 கால்கள் கொண்டு மண்டபங்களை இடித்து தள்ளியுள்ளார்கள். இதில் ஒரு மண்டபம் மடபள்ளியாக இயங்கி வந்தது. இது 3 வது குலோதுங்க சோழன் காலத்தை சேர்ந்தது. மற்றொன்று அலங்கார மண்டபமாக இருந்தது. இது 16 ஆம் நூற்றாண்டில் வுிஜயநகர மன்னரால் கட்டப்பட்டது.  

2-19

(EFFACED LEGACY: (Clockwise from top left): The prakara wall of the Vyagrapurisvara temple at Tiruppulivanam sans its frescoes that were sandblasted recently; one of the Chola frescoes as it existed, in a file image provided by the Archaeological Survey of India; pillars with sculptures at the temple, also sandblasted and disfigured. )

வியாகரபுரிஸ்வரர் கோவிலில் சாண்டு பிளேஸ்டிங் செய்யப்பட்ட பிராகாரம் –(சாண்டு பிளேஸ்டிங் செய்யக்கூடாது என்ற கோர்ட் உத்திரவை மீறி) சிதைத்தொழித்த ஓவியங்கள் மேல் படத்தில் காணலாம்.   இதை விடியோ படம் எடுக்க சென்ற திரு.சுப்ரமணியனிடம் அறநலத்துறையினர் கீழ்தரமான வாக்குவாதம் செய்துள்ளார்கள்.  அன்றுதான் ஒரு போக்கிரான் இயந்திரத்தைக் கொண்டு இடிபாடுகளை அப்புறபடுத்திக் கொண்டிருந்தனர். இது போதாது என்று அங்கே உள்ள 100 கால் மண்டபத்தையும் இடித்து புதிதாக கட்ட திட்டம் போட்டனர். அதன் இன்றய நிலை தெரியவில்லை ? இப்படிப் பட்ட சோழர் காலத்து ஓவியங்கள் தற்போது புதுகோட்டை விஜயாலய சோளீஸ்வரர் கோவில் மற்றும் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும்தான் உள்ளது. இவற்றை எப்பொழுது புதுப்பிப்பதாக சொல்லி அழிப்பார்கள் என்பது தெரியவில்லை.

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சுவர்களில் இருந்த பல நடனமுத்திரை சித்திரங்கள் அதைபற்றிய விளக்கங்களையும் மொத்தமாக அழித்துவிட்டு வெள்ளை அடித்துள்ளார்கள்.   

2-20   2-21

திருவொற்றியூர். வடிவுடையம்மன் கோவிலில், திருப்பணிஎன்ற பெயரில், கல்வெட்டுக்கள் அப்புறப்படுத்தப் பட்டுள்ளன. சில கல்வெட்டுக்கள் உடைக்கப்பட்டுள்ளன. மேலும், தரையில், ‘டைல்ஸ்’ கற்கள் அமைக்கும் பணியும் நடந்தது. வழிபாட்டுக்குரிய லிங்கங்கள், பிரிக்கப்பட்டு ஆங்காங்கே சாதாரண கற்கள் போல போடப்படது. 

2-22

construction debris dumped on the premises of Vadivudai Amman Kovil – Trivottiyour

தியாகராஜ சுவாமி கோவில் ஒரு பாடல் பெற்ற தலம். இங்கே தான் தமிழகத்திலேயே அதிகமான கல்வெட்டு குறிப்புகள் உள்ளன. 1300 ஆண்டுகள் பழைமையான கோவில். இங்கே உள்ள அருனகிரிநாதர் முருகன் சன்னதியின் முன் வல்லளார் பாடி வழிபட்ட இடம். இப்பொழுது அந்த விக்கிரங்கள் அங்கு இல்லை ?

11 ஏகதச சிவ லிங்கங்கள் உடைக்கப்பட்டு குப்பை குவியலாக ஆக்கியுள்ளார்கள். திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேவார மூவர் பாடல் பெற்ற தலங்களில் முக்கியமானது.  1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்த கோவில் சோழர்கள் உள்ளிட்ட பல்வேறு கால கட்டங்களை சேர்ந்த மன்னர்களின் கல்வெட்டுக்கள் உள்ளன. கடந்த காலங்களில் நடந்த திருப்பணிகளின் போது சில கல்வெட்டுகள் கோவிலில் ஆங்காங்கே தரையில் பதிக்கப்பட்டிருந்தன.  இந்த நிலையில் இந்து சமய அறநிலைய துறை சார்பில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணி நடந்து வந்தது. அதற்காக தரையில் பதிக்கப்பட்ட கல்வெட்டுகளை அகற்றி வீசி குப்பை கூளமாக குவித்தனர். இவ்வாறு சென்னை பார்தசாரதி கோவில் தரையையும் எடுத்து வழிக்கி விழும் கிரானைட் டைல்களை போட்டுள்ளார்கள்.

டாக்டர்.திரு.நாகசாமி இந்த ஆலய அழிப்புகளை எதிர்த்து பல காலம் போராடிக் கொண்டிருக்கிறார். இது குறித்து  திரு.ரமேஷ் கூறியது (ஆலய வழிபடுவோர் சங்க தலைவர்) கோவிலின் பிரதான சின்னங்களை அப்புறப்படுத்த அறநிலை துறைக்கு அதிகாரம் கிடையாது. இது தமிழர்களின் கலை பொக்க்ஷியங்களை அவர்கள் கண்முன்னே அழிப்பதற்கு சமம். பல கல்வெட்டுகள் அப்புறப்படுத்தும் போது உடைந்து விட்டது. கோடி ரூபாய் கொடுத்தாலும் இதை மறுபடியும் உருவாக்க முடியாது. தரையில் கிரானட் டைல்ஸ்களை பதிக்ககூடாது என்பதையும் செவி சாய்கவில்லை.  ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்ட கோவில் சிலைகளை அப்புறப்டுத்துவதும் சிவலிங்கங்களை உடைப்பதும் ஹிந்துகளின் கலை களஞ்சியங்களை ஒரு திட்டத்துடன் மாற்று மத தூண்டுதலினால்தான் செய்கிறார்கள்.  

 

2-23

இடித்து தள்ள முடிவு செய்த நாஹானந்தா சிவன் கோவில் மானம்பாடி கிராமம்

இக் கோவில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோவில் திருவிடைமருதூர் தாலுக்காவில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக பாழ் அடைந்துவிட்டது என சொல்லி இடிப்பதற்கான திட்டத்தை பல எதிர்புகளாலும் யூநெஸ்கோ தலையீட்டாலும் அறமற்றதுறை சாலையின் பாதையை மாற்றி அமைப்பதாக சொன்னது. ஆனால் தற்போதய நிலை தெரியவில்லை.

தொடரும்………

 

 

 

 

 

 

 

One thought on “நமது பாரத பாரம்பரிய எழில் மிகு கோவில்களின் பரிதாப நிலை – Part – 2”

  1. பிங்குபாக்: Articles – Hindu Unity

பின்னூட்டமொன்றை இடுக