பிராமண வெறுப்புணர்வு (புனைவும் உண்மையும்) Part – 6 – ( தலித்துகளும் பிராமணர்களும் )

Ref :- தலித்துகளும் பிராமணர்களும் ( கே.சி.லட்சுமிநாராயணன் ) & Web Pages

பிறப்பால் ஒருவர் இழிந்தவர் என்று கருதும் நிலை சங்க காலம் தொட்டு அது பொற்காலம் என்று தமிழர்கள் சொல்லிக் கொண்டாலும் சமுதாயத்தில் தீண்டாமை இருந்தது. இதற்குப் பிராமணர்கள்தான் காரணம் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. எல்லா ஜாதியினரும் தீண்டாமையைப் பின்பற்றினார்கள் அதில் பிராமணனும் இருந்தான் என்பதுதான் உண்மை. ஆனால் இந்த தீண்டாமையை முனைந்து சங்ககாலம் முதல் இன்று வரை தொடர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுத்தவர்களில் பிராமணனும் மிகவும் முக்கிய பணிகளைச் செய்துள்ளார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. முதலில் சமயாசாரியர்கள் இந்த எதிர்ப்புக்கு தலைமை தாங்கினார்கள். பின்பு பல சமூக சீர்திருத்த இயக்கங்கள் தோன்றி இதற்காகப் போராடினார்கள். பின்னர் காந்தியின் தலைமையில் முழு வீச்சுடன் விடுதலை போராட்டத்தின் முக்கிய அங்கமாகத் தீண்டாமை ஒழிப்பை ஒரு போர்ப் பிரகடனமாகவே அறிவித்து செயல் படுத்தினார்கள். இந்த மூன்று நிலைகளிலும் பிராமணர்களின் பங்களிப்பை மறைப்பது எளிதன்று சுதந்திரத்திற்குப் பின் சட்டங்கள் கொண்டு அதை அறவே ஒழித்துக் கட்டினார்கள். ஷரத்து 17 படி தீண்டாமை கடைப்பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம். ஆனாலும் இன்று வரை இது முழுமையாக ஒழியவில்லை. இதைவைத்து அரசியல் விளையாட்டுகள் அமோகமாக நடைபெறும் வரை இது நிற்காது.

சாதி கட்டுக்கோப்பாக இருந்த நாளில் அதனால் சமூகத்திற்கு நன்மையே உண்டாயிற்று அவர் அவர் தொழிலை இன்முகத்தோடுதான் செய்து வந்தார்கள். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதங்கள்  கற்பிக்கப்பட வில்லை. காலணி ஆதிகத்தில் தான் இந்த வேற்றுமைகள் தலைதூக்கின. சாதியைவிட்டு விலக்கினால் அதைப் பெரிய அவமானமாகக் கருதினார்கள். யாரையும் யாரும் அடிமைப்படுத்தி கொடுமைகள் செய்யவில்லை. சிலர் செய்யும் தொழிலினால் பிணம் எரித்தல் – மாமிசம் தயாரித்தல் போன்ற அசுத்தமான காரியம் செய்வதினால் அவர்களை விட்டு சற்று விலகி இருந்தார்கள். விலகி இருந்ததினால் அவர்கள் விலக்கி வைக்கப்பட்டவர்கள் என்ற பிரமைதான் பூதாகாரமாகக் காலணி ஆதிக்கத்தில் கிளம்பியது. 1911 ஆண்டு சென்சஸ் கணக்கில் ஹிந்துக்கள் – ஆவி வழிபாட்டாளர்கள் மற்றும் பழம் குடியினர் – ஒடுக்கப்பட்டவர்கள் அல்லது தீண்டாதார் என் வகைப் படுத்தினர். The word ‘UNTOUCHABLE’ was coined by the British Administration.

இப்படிப் பிரித்த ஜனத்தொகையில் மிகுதியாக உள்ளவர்களை ஹிந்துக்கள் அல்ல என்று நிலை நிறுத்தி அவர்களை மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம்தான் இதற்குக் காரணம். இதற்கு முன்பே கிரிமினல் டிரைப்பு சட்டம் 1871 இல் கொண்டு வந்து அன்றைய ஜனத்தொகையில் 35 சதவிகிதத்தினரை குற்றப்பரம்பரை என்று அறிவித்து ஒதுக்கினார்கள். இப்படி கேவலமாக மக்களைப் பிரித்துப் பிரித்து சுரண்டியவனைப் பற்றி பேசமாட்டார்கள். எதை எடுத்தாலும் ஹிந்து மதமும் பிராமணனும்தான் என்று கண்முடித்தனமாகச் சொல்வது நகைப்பிற்குரியதே ?

c

தீண்டாமை கொடுமையிலிருந்து தலித்துகள் முழுமையாக விடுதலை பெறவில்லை. இதற்குக் காரணம் பிற்படுத்தப்பட்டவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று தாங்களாகவே அறிவித்துக்கொண்ட வலுவான சாதிகளை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு முழு உரிமையை அளிக்க மறுக்கிறார்கள். அரசியல் சட்டப்படி தீண்டாமை தண்டனைக்குறியது. என்றாலும் அது தேநீர் விடுதிகள் – சுடுகாடுகள் – ஆலயங்கள் – நடைபாதைகள் – குடியிருப்புகள் – குளங்கள் – கிணறுகள் என்று பல இடங்களில் தீண்டாமை நிலவுகிறது. 2009 இல் அமைக்கப்பட்ட ” நேசனல் தலித் எலக்சன் வாட்ச்” ஆய்வின் படி 50 சதவிகிதற்கு மேல் கிராமங்களில் உள்ள தலித்துகளை சாதி ஹிந்துக்கள்தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். அவர்களை சில இடங்களில் வாக்குச் சாவடிக்குப் போகாமல் தடுப்பதும் அல்லது அவர்கள் சொல்லும் கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தப் படுகிறார்கள் என்பதாகும். இந்த ஆய்வு பிராமண சாதியைக்  குறிப்பிடவில்லை ?

சங்கரர்-(1)    –

b

பிரம்ம ஞானம் பெற்ற ஆதிசங்கரரே ஒரு புலையனை விலகு, விலகு என்று சொல்லி அவன் கேட்ட எதிர்க் கேள்வியால் (இந்தச் சரீரத்தை விலகச் சொல்கிறாயா இல்லை அதன் உள்ள ஆத்மாவை விலகச்சொல்கிறாயா ) என்றதும் ஞான தெளிவு பெற்று தன் தவற்றை உணர்ந்து ”மநீஷா பஞ்சகம்” பாடவில்லையா !! ?  மொத்தம் ஐந்து பாடல்களில் இரண்டு பாடலுக்கான விளக்க உரை –

  1. ஜாக்கிரத் – சொப்பனம் – சுஷுப்தி நிலைகளில் தெளிவாக ஒரு ஞானம் உண்டாகிறதோ – பிரம்மா முதல் எறும்பு வரையிலானவற்றின் உடலில் நெருங்கி உலகத்தின் சாட்சியாக எந்த ஞானம் உள்ளதோ – அதுவேதான் நான் – காணும் பொருள் அல்ல என்று உறுதியான ஞானம் எவனுக்கு உள்ளதோ அவன் சண்டாளராக இருந்தாலென்ன பிராமணராயிருந்தாலென்ன அவனே சிறந்தவன் என்று நான் கருதுகிறேன்.
  2. பிரமமும் நானும் ஒன்றே – இந்த உலகம் முழுவதும் ஞானம் ஒன்றாலே பரந்துள்ளது – முக்குணம் நிரம்பிய மாயையால்தான் இதெல்லாம் என்கற்ப்பனைக்குட்பட்டது. இவ்வாறு நித்தியமான – நிர்மலமான – ஆனந்தமயமான பரம் பொருள் பற்றிய முடிவான ஞானம் எவனுக்கு இருக்கிறதோ அவன் சண்டாளனாயினும் – பிராமணனாயினும் சிறந்தவன் என்று கருதுகிறேன்.

திருஞான சம்பந்தர் – ( 2 )

d

திருஞானசம்பந்தர் தன்னுடன் யாழ் இசைக்கத் திருநீலகண்ட யாழ்ப்பாணரை தன்னுடனே எங்கும் அழைத்துச் செல்வார். அவர் விலகி வைக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். ஒரு நாள் திருநீலநக்கர் என்ற பிராமணர் வீட்டில் தங்க நேர்ந்தது. திருநீலநக்கர் யாழ்ப்பாணர் அவரது மனைவியைத் தான் தினம் செய்யும் ஹோம குண்டம் அருகில் படுத்து உறங்க அனுமதித்தார்..

ராமானுஜர் – ( 3 )

e

ராமானுஜர் சிறுவனாக இருந்த பொழுதே தாழ்த்தப்பட்டவர்கள் மீது இரக்கம் கொண்டிருந்தார். அவரால் சிறுவர்களைக் கோவிலுக்குள் அழைத்துச் செல்ல முடியவில்லை – ஆனால் தினமும் கோவில் பிராசாதத்தை அவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தான் கற்ற ஆழ்வார்கள் பாடலை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். முறையாக வேதம் கற்ற பிராமண பண்டிதரிடம் கல்வி பயிலாமல் கீழ் ஜாதியாகக் கருதப்பட்ட திருக்கசநம்பி என்பவரிடம் மத சம்பந்தமானவற்றையே கற்றார். ராமானுஜருடை மனைவி மிகவும் ஆச்சாரம் பார்ப்பவர். ஒரு நாள் தன் குருவை தன் வீட்டில் உணவு அருந்த அழைத்திருந்தார். அவர் வரும் சமயம் ராமானுஜர் வெளியே சென்றுவிட்டதால் அவர் மனைவி குருவை திண்ணையில் அமர்த்தி உணவு பரிமாறினார்.  அவர் சென்ற பின் திண்ணையைத் தண்ணீர் கொண்டு கழுவினார். இதை உணர்ந்த ராமானுஜர் கோபம் கொண்டு மனைவியைத் துறந்து துறவறம் மேற்கொண்டார்.

அந்த நாளில் தாழ்த்தப் பட்டவர்களை ”தெரு குலம்” என்று அழைப்பார்கள் இதை மாற்றி அவர்களை ”திரு குலம்” என்ற அழைப்பதை வழக்கத்தில் கொண்டு வந்தார். தன் குரு தனக்குச் சொல்லிக் கொடுத்த எட்டு எழுத்து மந்திரமான ”ஓம் நமோ நாராயணா” என்பதை மற்றவர்களுக்குச் சொன்னால் சொல்பவருக்குப் புண்ணியம் கிட்டாது என்று குரு சொன்னதை ஏற்காமல் கோவில் கோபுரத்தின் மீது ஏறி உரக்க ஊர் மக்கள் அனைவர் அறியும் படி சொல்லி அதன் பயனை மற்றவர்களுக்கு அளித்தார்.

டெல்லி பாதுஷா தமிழகத்தின் மீது படையெடுத்த பொழுது ஸ்ரீரங்கம் கோவிலையும் கொள்ளையடித்தான். அங்கிருந்த கிருஷ்ணர் சிலையையும் கொண்டு சென்றான். பாதுஷாவின் மகள் அந்த சிலை மீது தீரா காதல் கொண்டார். இதை அறிந்த ராமானுஜர் டெல்லி சென்று நயமாகப் பாதுஷாவிடம் பேசி அந்த சிலையை மீட்டு வந்தார். அதைப் பாதுகாப்புடன் எடுத்துவர உதவியவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள். ஆனால் இளவரசி சிலை கொடுத்ததை எண்ணி வருந்தினாள். எனவே பாதுஷா இளவரசியை ஒரு சிறு படையுடன் சிலையை திரும்பப்பெற அனுப்பினார். ஆனால் வரும் வழியில் இளவரசி உயிர் நீத்தார். ஆனால் ராமானுஜர் மீட்ட சிலையை ரங்கன் கோவிலில் பிரதிஷ்டை செய்து மானசிகமாகத் துலக்க இளவரசியை ரங்கனுக்கு மணமுடித்த அவள் நினைவாகத் துலுக்க நாச்சியார் என்ற ஒரு சன்னதியைக் கட்டினார். மேலக்கோட்டையில் ”பிபி நாச்சியாருக்கு” ஒரு கோவிலும் உள்ளது. தாழ்த்தப்பட்டவர்களைக் கோவிலுக்கு அழைத்து செல்ல பிரம்பிரயத்தனம் செய்து வாரத்தில் மூன்று நாட்கள் அவர்கள் வந்து வழிபட அனுமதியைப் பெற்றார். இதைப் பல பிராமணர்கள் எதிர்த்தார்கள். இரண்டு முறை அவரை கொலை செய்யவும் துணிந்தார்கள். சைவ வைணவ சண்டை காரணமாக இவர் தனது அந்தி காலத்தைக் கர்நாடக மாநிலத்தில் கழித்தார். தனது 103 வயதில் இறைவனடி சேர்ந்தார். இவரால் பல ஜாதி ஹிந்துக்கள் வைணவத்திற்கு மாறினார்கள்..

ஜெயேந்திரர் – ( 4 )

f

Sri Jayendra Saraswathi Shankaracharya

9

Kanchi Acharya confronts Vatican Cardinal – RR

ஸ்ரீ ஜயேந்திரர் சங்கராச்சாரியார் பரம்பரையில் ஒரு வித்தியாசமானவர். அவர் நேரிடையாகவே குருவின் விருப்பதத்திற்கு மாறாக சமூக சீர்திருத்தத்தில் இறங்கினார். பெரியவர் ஒன்றும் சமூக பார்வை அற்றவர் அல்ல. இந்தியா சுதந்திரம் அடைந்து சட்டங்கள் இயற்றும் போது இவரையும் அணுகி ஹிந்து சட்டங்கள் பற்றிப் பரிந்துரைக்கச் சொன்னார்கள். அவரும் ஒரு பெரிய பட்டியலைத் தயாரித்து அதை அனுப்பாமல் நிறுத்திவிட்டார். அன்று இருந்த அரசியல் சூழலில் அதனால் அவருக்கும் மடத்திற்கும் தேசவிரோதிகளால் கெட்ட பெயர்வரும் என்றா ? ஒருவருக்கும் தெரியாது ? ஆனால் அவர் என்னவற்றைப் பரிந்துரைக்க நினைத்தாரோ அதை செய்திருந்தால் இன்று நாம் மத மாற்றுக் கும்பல்களிலிருந்து தப்பியிருக்கலாம். தெய்வத்தின் குரல் புத்தகத்தில் நீண்ட விவரங்கள் உள்ளன. ஆனால் ஜயேந்திரர் பின்வாங்கவில்லை – ஒரு புறம் கல்விக்கூடங்கள் அமைப்பது – மருத்துவ மனைகள் அமைப்பது – கோவில்களைப் புதுப்பிப்பது  என்று விஸ்தரித்து – தாழ்த்தப்பட்ட மக்கள் நலன்களிலும் அக்கறை கொண்டு தொண்டாற்றினார். குறிப்பாகத் தலித்துகளுடன் ஒரு உண்மையான நட்பை ஏற்படுத்திக்கொண்டார். தலித் குடிசைகளுக்கு விஜம் செய்வதைத் தொடர்ந்து அவர்களது குறைகளைக் கேட்டு அதை நிவர்த்திக்கும் வழிகளையும் அதற்கான பண முதலீட்டையும் செய்து வந்தார். அவர்கள் வழிபாடு செய்வதற்கென்றே தனி அம்மன் கோவில்களை எழுப்பினார். அவர்களுக்கென மாதிரி கிராமங்களை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டார். ” ரூரல் டெவலப்மெண்ட் டிரஸ்ட் ” என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி 40 மாதிரி வீடுகள் – ஒரு மருத்துவமனை – ஒரு பெரிய டாக்டர் – அவருக்கு 6 துணை டாக்டர்கள் எனத் திட்டங்களை அரசு உதவியுடன் செய்தார். எஸ்.சி. வகுப்பான ”கட்டூனயானகன்கள்” என்ற மலை வாழ் பழங்குடியினருக்கும் கோவில் கட்டிக்கொடுத்து – வழிபாட்டு முறைகளையும் போதித்தார்.

தலித்துகளில் முன் நிலையிலிருந்த கலைஞர்களையும் – உயர் கல்வி கற்றவர்களையும் அடிக்கடி மடத்திற்கு அழைத்து அவர்களைக் கௌரவித்தார். நடேசன் என்ற கிராமசபை தலைவர் கூறியது – பலர் எங்களை தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கியபோது ஜெயேந்திரர் எங்களை கண்ணியமாக நடத்தினார் – எங்களுக்கு வழிபாட்டு முறைகளையும் கற்றுத்தந்தார் என்றும் இதே மாதிரியான ஒரு கோவிலை ”ராஜீபுரத்தில்” கட்ட மடம் நிதி உதவி அளித்ததை பெருமையாக சொல்லிக்கொண்டார். ”பூதனூர்” கிராமத்தில் உள்ள 200 தலித் குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள மடம் நிதி உதவிகள் செய்தது. தலித் குடிசைகளில் தங்கி அவர்களை ஆசிர்வதித்தார். திருத்தணி ”ராமன் சேரி” செல்லதுரை – கடலூர் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைவர் வை.பாலசுந்தரம் போன்றவர்கள் ஜெயேந்திரர் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் செய்த தொண்டை வெகுவாக பாராட்டியுள்ளார்கள். மேலும் திருத்தணியில் அம்பேத்கர் மஹாசபா என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். தமிழகம் மட்டும் இல்லாமல் மும்பையில் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் வசிக்கும் ”தாராவி” குடிசைகளுக்கு வலிய சென்று அவர்கள் குறைகளைக் கேட்டு அதை நிவர்த்திக்கப் பல முயற்ச்சிகளை மேற்கொண்டார்.

மேலும் ஜெயேந்திரர் ராமர் கோவில் கட்ட இஸ்லாமியத் தலைவர்களுடன் ஒரு நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு ஒப்புதல் தரும் தறுவாயில் காங்கிரஸ் காலிகள் உள்ளே நுழைந்து அதைக் கெடுத்தார்கள். 2009 இல் மும்பையில் வாடிகனிலிருந்து வந்த கருப்பு அங்கி லூயிஸ் என்ற பாதரியுடன் (கருப்பு அங்கி பாதரிகள் வாடிகனின் இலுமநாட்டி என்ற சதி கும்பலில் உலக கிருஸ்துவ அரசு அமைக்க சத்திய பிரமாணம் எடுத்தவர்கள் ) மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை உறுதிசெய்யவும் அதைச் சீராக இயங்கவைக்கவும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் ஜெயேந்திரர் கலந்து கொண்டு பேசியவை – நீங்கள் சமீபத்தில் ஜெரூசலம் சென்று அங்கு யூதர்களுடன் நடந்த கூட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய படி வாடிகனிலிருந்து இனி இஸ்ரேலில் கிருஸ்துவர்கள் எந்த யூதனையும் மதம் மாற்றம் செய்யமாட்டார்கள் என் உறுதிமொழி அளித்தீர்கள். அதே மாதிரியான உறுதிமொழியை ஹிந்துக்களுக்கும் வழங்கவேண்டும்.  இல்லாவிடில் இதுவே தங்களைச் சந்தித்துப் பேசும் கடைசி நிகழ்வாகும் என்று காட்டமாகக் கூறினார். யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் ( USCIRF ) இந்தியாவில் மத சுதந்திரத்தைப் பற்றிப் பேச எந்த முகாந்திரமும் இல்லை என்றும் வாதாடினார்.

இதனால் மதமாற்றும் கும்பல் எரிச்சல் அடைந்தது. அன்றைய முதல்வர் ஜெ.ஜெ. இவரை குருவாக மதித்து மத மாற்றுத்தடை சட்டத்தைக் கொண்டுவந்தார். எண்ணிக்கையில் அதிகம் இருக்கும் தலித்துகளை மதமாற்றம் செய்யமுடியாமல் தவித்தார்கள். இந்த செய்தி வாதிகன் வரையில் சென்றது. அன்றைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் சென்னை வந்தபோது அதைப்பற்றி விவாதித்தார். அதற்கு ஜெ.ஜெ.எங்களது உள்நாட்டு விஷயங்களி்ல் தலையிட அன்னியர் யாருக்கும் தகுதியில்லை  என்று வீர வசனமும் பேசினார். மேலும் ராமர் கோவில் அயோத்தியில் கட்டாமல் பாக்கிஸ்தானிலா கட்ட முடியும் என்றார். பொது சிவில் சட்டம் அவசியம் வேண்டும் என்றார். கோவில்களில் பலியிடும் பழக்கத்திற்குத் தடை விதித்தார். அரசு ஊழியர்களை ஒழுங்குபடுத்தத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இப்படி ஹிந்துக்களுக்கு பாதுகாவலராக இருந்தவர் தொடர்ந்து வந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அதனால் அந்தர் கர்ணம் அடித்துத் தான் செய்த நல்ல சட்டங்களைத் திரும்பப் பெற்றார். ஹிந்துக்களின் நலன்களிலிருந்து விலகி சிறுபான்மையினர் பக்கம் சாய்ந்தார்.  அவரது விபரீத புத்தியால் பிஜேபி உறவைத் துண்டித்தார். தனது கருப்புப் பணத்திற்கு உறைவிடம் தர மறுத்த மடத்துடன் கசப்புணர்வு கொண்டார். மேலும் வாடிகன் மூலம் தாடகை சோனியாவால் ஜெ.ஜெ. யின் அதிக சொத்து குவித்த வழக்கைக் கையில் எடுப்பதாகச் சொல்லி மிரட்டப்பட்டார். மடத்திற்கு எப்படியாவது கெட்ட பெயர் உண்டாக வேண்டும் என்றும் கட்டளையிட்டார். பின்புதான் சசிகலா கோஷ்டியால் சதிவலை பின்னப்பட்டு சங்கர் ராமன் கொலைப் பழி மடத்தின் மேல் சுமத்தி ஜெயேந்திரரை Hyderabad இல்  YSR Reddy” கிருஸ்துவசார்பு முதல்வர் துணை கொண்டு கைது செய்தார்கள். சோடிக்கப்பட்ட வழக்கானதால் பல பொய்மூட்டைகளை கீழ்த்தரமாக அவிழ்துவிட்டு ஹிந்துக்களுக்குக் குறிப்பாகப்  பிராமணர்களுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தினார். ”வினாசகாலே விபரீதபுத்தி” என்பது ஜெ.ஜெவுக்கு. நன்றாக பொருந்தும்.. YSR Reddy” ஒரு எலிகாப்டர் விபத்தில் பிரேத பாகங்களை கண்டெடுக்க முடியாமல் இறந்தான். ஜெ.ஜெயும் பல நாட்கள் படுக்கையில் மரண வேதனையுடன் கால்கள் துண்டிக்கப்பட்டு மரணம் அடைந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் செத்த பின் கைதி எண் பெற்ற பெருமை ஜெ.ஜெ. ஒருவரை மட்டுமே சாரும்.

ஜெயேந்திரர் தலித் துறவியான மாதா அமிர்தானந்தமயியை சென்று நேரில் சந்தித்தார். பல முறை துறவிகளை ஒன்று கூட்டி மாநாடுகளை நடத்தி ஹிந்துக்கள் ஒற்றுமைக்குப் பாடுபட்டார்.. ஒரே ஹிந்து தேசமாயிருந்த நேபாள மன்னர் குடும்பத்தாரிடம் நல்ல உறவை வைத்திருந்தார். மூன்று முறை காட்மாண்டுவிற்கு சென்றுள்ளார். சைனாவிலிருந்தும் இவருக்கு அழைப்பு வந்தது.

ஜெயேந்திரர் கைதானதை எதிர்த்து முதல் முதலில் குரல் எழுப்பியவர்கள் தலித்துகளை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள ஹிந்து முன்னனியர்கள்தான்.  இவர்கள் சென்னையிலும் – காஞ்சியிலும் போலீசுடன் கைகலப்பில் ஈடுபட்டு எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். நாகபட்டினத்தின் பொறையாறு கிராமத்திலுள்ள 600 தலித் குடும்பங்கள் இதை வன்மையாகக் கண்டித்தார்கள். ஜெயேந்திரர் பிறந்த ஊரான ”இருள்நீக்கி” கிராமத்தில் உள்ள 150 தலித் குடும்பத்தினர்கள் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து மறியல் செய்தனர். இங்கேயும் ஒரு மாதிரி கிராமம் அமைக்க மடம் நிதி அளித்துள்ளது. இவ்வாறான தொண்டுகளை இன்றும் சங்கர மடம் தொடர்ந்து செய்து வருகிறது.

தயானந்தர் – ராமகிருஷணர் – ராஜா ராம் மோகன் ராய் ( 5 – 6 – 7 )

h

மேலே உள்ள பெரியவர்களின் பொதுவான கொள்கைகள் –

  1. சாதி வேறுபாடுகளை அறவே ஒழித்தல்
  2. தெய்வம் ஒன்று என்ற உண்மையை மக்கள் உயருமாறு செய்தல்.
  3. ஹிந்து சமயத்தினரிடையே காணப்படும் குலகோத்திரங்களைத் தொலைத்து சமத்துவம் நிலவச் செய்தல்
  4. ஹிந்து மத வேத – ஆகம – சாஸ்திர போன்ற நூல்களை நாமே படித்து உணர்ந்து கொள்ளாமல் அந்தணர் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றலை ஒழித்தல்.
  5. பெண் அடிமைத் தனத்தை ஒழித்து ஆணுக்குப் பெண் சரிநிகர் என்ற நிலையை எட்டுதல்
  6. சர்வ சமயங்கள் இடையிலும் சமரசம் ஏற்படுத்தல்.

பாரதியார் – ( 8 )

J

பாரதி ஜாதி பித்து உள்ளவர்களை மிகவும் கடுமையாகச் சாடியுள்ளார் என்பது அவரது பல பாடல்கள் மூலம் நாம் அறியலாம். அவை காலத்தால் அழிக்க முடியாதவையாக இன்றும் உள்ளது. இங்கே சில பாடல் வரிகளைக் காணலாம் –

  1. வந்தே மாதிரம் என்று தொடங்கும் பாடலில் ”ஜாதி மதங்களைப் பாரோம் – உயர் ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின், வேதியராயினும் ஒன்றே-அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே”
  2. போகின்ற பாரதத்தை சபித்து வருகின்ற பாரதத்தை வாழ்த்தும் பாடலில் ”சாதிகள் நூறு சொல்லுவாய் போ போ போ” என்று போகின்ற பாரதத்தை கண்டித்தும் ”ஒற்றுமைக்குள் உய்யவே நாடெல்லாம் ஒரு பெரும்செயல் செய்வாய் வா வா வா ” என்று வருகின்ற பாரதத்தை வாழ்த்தியும் பாடியுள்ளார்
  3. பாப்பா பாட்டில் ” சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம் ! நீதி, உயர்ந்த மதி, கல்வி, அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் ”
  4. இந்தியா எத்தகைய விடுதலையைப் பெறவேண்டும் ? அவரின் இலட்சியக்கனவு –

விடுதலை ! விடுதலை ! விடுதலை !

பறையருக்கும் இங்கு தீயர்

புலையருக்கும் விடுதலை !

பரவரோடு குறவருக்கும்

மறவருக்கும் விடுதலை !

திறமை கொண்ட தீமையற்ற

தொழில் புரிந்து யாவரும்

தேர்ந்த கல்வி ஞானம் எய்தி

வாழ்வம் இந்த நாட்டிலே    (விடுதலை)

 ஏழையென்றும் அடிமை என்றும்

எவனும் இல்லை சாதியில்,

இழிவு கொண்ட மனிதர் என்பர்

இந்தியாவில் இல்லையே !

வாழி கல்வி,  செல்வம் எய்தி

மனமகிழ்ந்து கூடியே

மனிதர் யாரும் ஒருநிகர்

சமானமாக வாழ்வமே !      (விடுதலை)

(தீயர் – கேரளத்தில் உள்ள ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரர்கள்)

  1. “வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே” என்ற பாடலின் சில வரிகள்

சாதிப் பிரிவுகள் சொல்லி – அதில்

தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்

நீதிப் பிரிவுகள் செய்வார் – அங்கு

நித்தமும் சண்டைகள் செய்வார்

சாதிக் கொடுமைகள் வேண்டாம் – அன்பு

தன்னில் செழித்திடும் வையம்

ஆதரவு உற்று இங்கு வாழ்வோம் – தொழில்

ஆயிரம் மாணபுறச் செய்வோம்

……………………………………………………………………………..

……………………………………………………………………………..

வெள்ளை நிறத்தொரு பூனைஎங்கள்

வீட்டில் வளருது கண்டீர்

பிள்ளைகள் பெற்றது அப்பூனைஅவை

பேருக்கு ஒருநிறம் மாகும்

சாம்பல் நிறம் ஒரு குட்டிகருஞ்

சாந்து நிறம் ஒரு குட்டி;

பாம்பு நிறம் ஒரு குட்டி-வெள்ளைப்

பாலின் நிறம் ஒரு குட்டி.

எந்த நிறம் இருந்தாலும்-அவை

யாவும் ஒரே தரமன்றோ ?

இந்த நிறம் சிறது என்றும்-இஃது

ஏற்றம் என்றும் சொல்லலாமோ?

வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால்-அதில்

மானுடர் வேற்றுமை இல்லை;

எண்ணங்கள், செய்கைகள் எல்லாம்-இங்கு

யாவர்க்கும் ஒன்றெனில் காணீர்!

நிகரென்று கொட்டு முரசே ! -இந்த

நீணிலம் வாழ்பவர் எல்லாம்;

தகரென்று கொட்டு முரசே! – பொய்ம்மைச்

சாதி வகுப்பினை எல்லாம்.

இந்திய விடுதலைப் போராட்டத்தை எதிர்த்த ஜஸ்டிஸ் கட்சியினரும் – ஈ.வெ.ரா வட்டாரத்தினரும் பாரதியாரைப் ”பார்பனர்” என்று ஏசிக்கொண்டிருந்தார்கள்.  கனக சுப்புரத்தினம் – பாரதிதாசன் என்று புனைபெயரை வைத்துக்கொண்டதை அவர்கள் பல மேடைகளில் கண்டித்துப் பேசினார்கள். ”சாதிக்கொள்கையைக் குழி தோண்டிப் புதைத்திடுக” என்று முழக்கமிட்ட பாரதியாரின் பாடல்களுக்கு அன்றைய சென்னை மாகாண ஜஸ்டிஸ் கட்சியின் அரசு தடை விதித்தது. 1937 இராஜாஜி ஆட்சியில்தான் தடை நீக்கப்பட்டது.

ரா.கனகலிங்கம் என்ற தாழ்த்தப்பட்டவருக்கு தன் இல்லத்தில் ஒரு விழா எடுத்து அவருக்குப் பூணூல் அணிவித்து – யாரும் கேட்டால் நான் இன்றுமுதல் பிராமணன் என்றும் சொல்ல சொன்னார்.  இந்த விழாவில் வ.வே.சு. ஐயர் – சினுவாச்சாரியார் – நாகசாமியார்-குவளைக்கண்ணன் – கோவிந்தராஜுலு நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர். ஒரு சமயம் பாரதியார் தன்வீட்டில் ஹரிஜனங்களான ஐவரை அழைத்து வந்து செல்லம்மாளை விருந்து படைக்கச் சொன்னார் – அவர்கள் உண்டதும் இந்த இலைகளை செல்லம்மாள் தானே எடுத்து சுத்தம் செய்தார்.

ரா.கனகலிங்கம் ”என் குருநாதர்” என்ற நூலை எழுதியுள்ளார்.  அதில் தான் பாரதியுடன் கொண்டிருந்த உறவைப் பற்றி விளக்கிக் கூறியுள்ளார். அதிலிருந்து – ஒரு நாள் கனகலிங்கம் பாரதியாரை ”ப்ரொக்ரெசிவ் யூனியன் கிரிகெட் கிளப்” என்ற அமைப்பு நடத்திய கூட்டத்தில் ”சாதி வித்தியாசம்” என்ற தலைப்பைப் பற்றி பேசச்சொன்னார். அந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் பு.சி,நாராயணசாமி என்ற தலித் ஆகும். மற்றொரு சமயம் புதுச்சேரியில் கலவரத்தில் சாகசம் செய்யும் ஆசாமி ”தம்பலா” என்ற தோட்டியின்  வீட்டிற்குச் சென்று வாசல் திண்ணையில் பாரதி அமர்ந்து கொண்டார். கனகலிங்கம் பலமுறை தடுத்தும் பாரதி கேட்கவில்லை. தம்பலா சிறு நேரத்திற்கு பின் தன் வீட்டிற்கு  வந்தபோது பாரதியார் திண்மையில் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அவரை பணிவோடு வணங்கி நலம் விசாரித்தான். அவனுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு பாரதி கிளம்பினார். பின்பு கனகலிங்கத்திடம் கெட்ட பழக்கம் உள்ளவர்களானாலும் அவர்களோடு நல்லவர்கள் பழகி புத்திமதி கூறினால் நிச்சயம் அவர்கள் திருந்துவார்கள். அவர்களை அடியோடு ஒதுக்கக்கூடாது என்றார்.

பாரதியாரின் “தேடி உனைச் சரணடைந்தேன் தேசமுத்துமமாரி” பாடல் புதுவையில் உள்ள உப்பளம் தேச முத்துமாரியம்மன் மீது பாடப்பட்டது. இது ஹரிஜனங்களால் நடத்தப்படும் கோவில்.  அங்கிருந்த பூசாரி நாகலிங்கம் வள்ளுவ பண்டாரம் குலத்தைச் சார்ந்தவர். அவருக்கும் பாரதி பூணூல் அணிவித்தார். அவர் விரும்பியபடி முதலில் உப்பளம் தேசமுத்து மாரி என்றுதான் பாட்டை எழுதினார்.  பின்பு வந்த பதிப்புகளில் இந்த உப்பளம் நீக்கப்பட்டதை கனகலிங்கம் வருத்தத்துடன் தெரிவித்தார். பாரதி மத வித்தியாசம் பாராமல் ஈஸ்டர் பண்டிகையின் போது குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்குவார். ஒரு இஸ்லாமியனைப் போல வேஷம் போட்டு அவர்களது தேநீர் விடுதியில் அமர்ந்து ஊர் பார்க்க டீ அருந்துவார். தன் வீட்டிற்கு அழைத்துவரும் பிரெஞ்சுக்கார நண்பர்களை டி கோப்பையை எச்சில் செய்து குடிக்கச் சொல்வார். ஒரு தரம் கனகலிங்கம் பாரதியிடம் நீங்கள் ஏன் தேசீய கீதங்களைக் கும்மி – காவடி சிந்து-நொண்டிச்சிந்து வகையிலேயே மெட்டு போடுகிறீர்கள் என்ற கேள்விக்கு என் பாடலை மூட்டை தூக்குபவன் முதல் பாகவதர் வரை எளிதில் பாட வேண்டும் என்பார்.

சில நாட்களுக்குப் பின் கனகலிங்கம் வேலை நிமித்தமாக மெசபடோமியா சென்றுவிட்டார். சில வருடங்களுக்குப் பின் அவர் புதுவைத் திரும்புகையில் பாரதி சென்னைக்குச் சென்றுவிட்டார்.  அவரை காண கனகலிங்கம் சென்னையைச் சுற்றி அலைந்தார். ஒரு நாள் ஒரு மாலை வேளையில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அன்றைய கூட்டத்தின் தலைப்பு பிற்படுத்தப்பட்டவர்களைத் திராவிடர் என்றா அல்லது ஆதி திராவிடர் என்றா அழைப்பது பற்றியதாகும். பின்பு எப்படியோ பாரதியைத் தேடிக் கண்டுபிடித்து அவரிடம் தான் கலந்து கொண்ட கூட்டத்தின் தலைப்பைப் பற்றி தாங்கள் கருத்துச் சொல்ல வேண்டும் என்றார். அதற்கு பாரதி டேய் நான் ஜாதியே இல்லை என்கின்றேன் நீ என்னை உன் குலத்திற்கு ஆதி திராவிடர் – அநாதி திராவிடர் என்று பெயர் வைக்கலாமா என்று ஏன் விவகாரத்தை என்னிடம் கொண்டு வந்தாய் என எதுவும் சொல்ல மறுத்துவிட்டார். பாரதி சிறுவனாக இருந்த பொழுது காந்திமதி நாதன் என்ற மூத்த புலவரது செருக்கை அடக்க தன் எதிர் கவிதையில் அவரது மூக்கை உடைத்த கதை அனைவருக்கும் தெரியும்.  இருந்தாலும் பாரதி  அவரிடம் வெறுப்பு கொள்ளவில்லை.  அதன் விளைவே ”பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே” என்ற பாடல். இப்படி பலவாறு பாரதியைப் பற்றிப் பல செய்திகளை கனகலிங்கத்தின் ”என் குருநாதர்” புத்தகத்தில் காணலாம்.

ராஜாஜி – ( 9 )

k

மூதறிஞர் திரு. ராஜகோபாலா சாரியார் (1878 – 1972)  – பன்முகத் தன்மை கொண்ட சமூகப் போராளி என்றாலும் மிகையாகாது. தீண்டாமை ஒழிப்பு – மதுவிலக்கு – கதர் இயக்கம் – உப்பு சத்தியாகிரகம் – ஆலயப்பிரவேசம் – சுதந்திர போர் – உயர் பதவிகள் பலவற்றை அலங்கரித்தவர் – பல முறை சிறை சென்றுள்ளார் – திறமையாக வக்கீல் – எழுத்தாளர் இன்னும் பல. காந்தியே ஹரிஜன சேவை எப்படிச் செய்யவேண்டும் என ராஜாஜியிடம் கற்க வேண்டும் என்பார்

பட்டப்படிப்பை முடித்த கையோடு வக்கீல் தொழிலுடன் ”தீண்டப்படாதார் இயக்கத்தை” ஆரம்பித்தார். இதற்குப் பலத்த எதிர்ப்புகள் இருந்தன – அவரையும் அவருடன் இருந்த பிராமணர்களை ஜாதி விலக்கி வைத்தார்கள். அவர்கள் வீட்டுக் கல்யாணம் – கருமாதி காரியங்களுக்கு வைதீகர்கள் செல்ல மறுத்தனர். இவற்றையெல்லாம் துச்சமாய் எண்ணி தம் பணியைத் தொடர்ந்தார். சேலம் மாநகராட்சி பள்ளியில் இரண்டு தீண்டப்படாத சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்களைப் பல எதிர்ப்புகளுக்கு இடையே வலுக்கட்டாயமாகச் சேர்த்து அவர்களது கட்டணத்தையும் செலுத்தினார். அவ்விருவரும் பின் நாளில் படித்த அரசு உத்தியோகங்களுக்குச் சென்றார்கள். சேலம் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளியின் தலைமை பொறுப்பில் ஒரு ஐரோப்பியர் இருந்தார். அவர் தீண்டப்படாதவர்களைப் பள்ளியில் சேர்க மறுத்துவிட்டார். ராஜாஜி சட்டங்களைக் காட்டி வழக்கு தொடர்வதாக மிரட்டினார். பின்பு அரைமனதுடன் அவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டார்கள். சுவாமி சகஜானந்தர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.  அவர் சமஸ்க்கிருதத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர்.  சிதம்பரத்தில் தாழ்த்தப் பட்டவர்களுக்காகப் பள்ளி – தங்கு விடுதிகளை நடத்திவந்தார்.  அவர் ஒரு சமயம் சேலம் நகருக்கு விஜயம் செய்தார். அவரை வரவேற்று அவரை ஆதரித்து கூட்டத்தில் பேசினார். அவருக்குத் தகுந்த பரிசுப் பொருள்களை வழங்கி தன் சக பிராமண தோழர்களுடன் சேர்ந்து அவருடன் தன் வீட்டில் விருந்து உண்டார்.

அவர் சேலம் நகர மாநகராட்சி தலைவராகப் பணி செய்தபோது சேலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகக் காலையிலும் மாலையிலும் மாநகராட்சி ஊழியர்கள் ஊர் பொது குழாய்களை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குத் திறந்து பின் மூடவேண்டும். ராஜாஜி இந்த பணியைச் செய்ய தம் ஊழியர்களில் உள்ள தீண்டப்படாதவர்களை உயர் ஜாதி குடியிருப்பிற்கும் – உயர் ஜாதி ஊழியர்களை தீண்டப்படாதார் குடியிருப்பிற்கும் அனுப்பி அந்த வேலையைச் செய்தார். தன் வீட்டு வேலைகளுக்கு ஒரு ஹரிஜனையே வேலையில் அமர்த்தினார்.

1925 இல் புதுப்பாளையம் கிராமத்தில் ”காந்தி ஆஸ்சிரமம்” ஒன்றை அமைத்தார். ரத்தினசபாபதி கவுண்டர் இதற்கு 4 ஏக்கர் நிலத்தை வழங்கினார். தனது மகள் – மகனைக் காந்தி ஆஸ்சிரமத்திலேயே தங்க வைத்தார். காந்தி அஸ்சிரமத்தில் தீண்டப்படாதவர்களைச் சேர்த்துக் கொண்டார் மற்றும் அதன் தலைமை பொறுப்பைத் தாழ்த்தப்பட்ட ஒருவரிடம் ஒப்படைத்தார். இதைப் பலர் எதிர்த்தார்கள். ஆஸ்ரமத்திற்கு பால் வினியோகம் செய்ய மறுத்தார்கள்.  பழனி என்ற பால்காரர் மட்டும் எதிர்ப்பை மீறி பால் வினியோகம் செய்தார்.  அங்குத் தினமும் சமபந்தி போஜனம்தான். கதர் இயக்க பிரசாரத்திற்காக வட இந்தியாவிலிருந்த வரும் தலைவர்களுடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயனம் செய்தார். ஆஸ்ரமத்தில் சகன் என்ற இஸ்லாமியரைச் சேர்த்துக்கொண்டார். அவரது கல்வி – திருமணம்த்திற்கும் உதவிகள் செய்தார். திருசெங்கோடுவில் பல தீண்டப்படாதவர் குடும்பங்களுக்கு நிதி உதவி அளித்தார். அமிர்தலிங்கம் என்ற காது கேளாத ஊமை பையனை அதற்குரிய பள்ளியில் சேர்த்து உதவி புரிந்தார்.

1937 இல் ராஜாஜி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் வி.ஐ.முனுசாமி பிள்ளை என்ற ஒதுக்கப்பட்ட பிரவைச் சேர்ந்தவரை அமைச்சர் ஆக்கினார். 16 ஆண்டு ஜஸ்டிஸ் ஆட்சியில் ஒரு சமயத்திலும் இவ்வாறு செய்ததில்லை.  மது ஒழிப்பை சட்டப்படிச் செய்தார்.  தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு முதல் முதலில் விடுதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆலயநுழைவை சட்டமாக்கினார். (Temple Entry Legislation) அவரே முனுசாமி பிள்ளையுடன் பழனி – கன்யாகுமரி கோவில்களுக்கு ஹரிஜனங்களோடு சென்றார்.  திருப்பதி – திருச்சானூர் கோவிலில் ஹரிஜனங்களை அனுமதிக்க மறுத்தனர். அவர்கள் மீது வழக்குத்தொடுத்து அவரே வக்கீலாக வாதாடி வழக்கை வென்றார். வைகம் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார். சமூக சீர்திருத்த நோக்கோடு பல கதைகள் எழுதியுள்ளார். இதன் தொகுப்பு ( Stories for the innocent ) இதில் தீண்டாமை பற்றி ஐந்து கதைகள் உள்ளன.  1968 இல் ”சாதி பேதத்தைத் தகர்த்தவர் ராஜாஜி” என்ற நூலை ரெ.தே.பெ.சுப்பரமணியம் என்பவர் தொகுத்துள்ளார். அவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் ” லோக்சேவக் ” இதழில் கட்டுரைகள் எழுதிவந்தார். இதன் தொகுப்பே மேலே உள்ள புத்தகம். ஜஸ்டிஸ் ராஜாஜி – காமராஜரை எதிர்த்தவர்கள். ஆனால் அதன் உறுப்பினர் பி.டி.ராஜன் மேலே உள்ள நூலுக்கு மதிப்புரை வழங்கினார்.

சி.பி.ராமசாமி ஐயர் – ( 10 )

l

மூத்த வழக்கறிஞர் – அட்வகேட் ஜெனரல் சென்னை ராஜதானி – சட்ட கௌன்சிலில் உறுப்பினர் – திவான் தீருவான்கூர் – இந்தியத் தேசிய காங்கிரஸ் சென்னை மாகாண தலைவர் – திருவாங்கூர் – அண்ணா – காசி பல்கலைக்கழகங்களி்ல் துணை வேந்தர் – மெம்பர் ஆப் நேசனல் இண்டகிரேசன் கமிசன் – 1936 இல் இவர் திருவாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்தபொழுது மன்னரையும் அவரது தாயாரையும் அணுகி தலித்துகளைக் கோவிலுக்குள் தடையின்றி சென்று வரச் சட்டம் ஏற்ற ஒப்புதல் பெற்றார். – அதன்படி கேரளாவில் உள்ள பல கோவில்களில் தலித்துகள் தங்குதடையின்றி சென்றுவந்தார்கள். தலித்துகள் ஆலயநுழைவை தொடங்கிவைத்தவர் என்ற முதன்மை பெயரையும் பெற்றார் இதனால்  இவர் தன் சமூகத்தில் அல்லாமல் சில ஜாதி ஹிந்துக்களால் ஒதுக்கப்பட்டார். இவரது உருவபொம்மையை எரித்தார்கள் – கொலை முயற்சியிலும் இறங்கினார்கள். காந்தியார் இதை நம்பமறுத்து தானே நேரில் வந்து பார்த்தபின்தான் அவருக்கு நல்லாசிகள் வழங்கினார்.

பெண்களுக்கு சம உரிமை கொடுக்கவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார் – டாக்டர் முத்து லஷ்மி கொண்டு வந்த தேவதாசி ஒழிப்பு மசோதாவுக்கு ஆதரவு அளித்தார் – தொழில் வளம் பெருக்குவதும் – தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றுவதும் முக்கிய குறிகோளாக் கொண்டிருந்தார். மேட்டூர் அணை – பைகாரா – பவானி திட்டம் – துறைமுகங்கள் விஸ்தரிப்பு- உர தொழிற்சாலைகள்  என்று பலவற்றில் தன் முத்திரை பதித்தார் – சாலை போக்குவரத்தை அரசுடைமை ஆக்கினார். நதி நீர் இணைப்பு அவசியம் என்று காவேரி – கங்கா – பிரம்மபுத்திரா இவற்றை இணைப்ப

தற்கான வரை படமும் – திட்டத்தின் பிளான் முதலியன நேரு கேட்டுக்கொண்டதன் பேரில் அனுப்பி வைத்தார்.

பி.எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் ( ஹரிஜன ஐயங்கார் ) – ( 11 )

காந்தியின் வேண்டுகோளின்படி ஒவ்வொரு மேல் ஜாதி ஹிந்துக்களும் ஒரு தலித் பிள்ளையைத் தத்தெடுத்து வளர்த்து சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோட்பாட்டை ஏற்று நடந்தவர் ஐயங்கார். அவர் தத்து எடுத்து வளர்த்த சிறுவன் பெயர் கூ.சம்பந்தம். அவன் பின்நாளில் கசட் ராங்கில் உள்ள பெரிய அரசு பதவிகளில் அமர்ந்தான். தன் வளர்ப்பு தந்தையின் நினைவாக எழுதிய புத்தகம் ”அரிஜன ஐயங்கார் ” அதன் உள் தலைப்பு ”காந்தியம் வெல்லும்”. அதில் பல பிராமணர்கள் எவ்வாறெல்லாம் காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி தீண்டாமை ஒழிப்பு – ஆலயப்பிரவேசம் – மது ஒழிப்பு – சதந்திரப் போராட்டங்களில் பங்கெடுத்து சிறை வாசம் அனுபவித்தல் என்று அயராது உழைத்து அதனால் தங்கள் சொந்த வீடுகளை அடமானம் வைத்தார்கள் – குடும்பத்தைப் பிரிந்து வாழ்கையைத் தொலைத்தார்கள் – சேர்த்த சொத்தை இழந்தார்கள் – சாகும் தறுவாயில் உதவ யாரும் இன்றி மாண்டார்கள் என்பது நிதர்சனம். சில குடும்ப உறுப்பினர்களும் இந்த வேள்வியில் பங்கு கொண்டு துயர்ப்பட்டார்கள்.

ஐயங்கார் மானாமதுரை முன்சீப் கோர்டில் வக்கீலாக பணிசெய்தார். அவ்வூரில் ”ஹரிஜன சேவா சங்கத்தை” நிறுவினார். தான் தத்து எடுத்த பிள்ளையை ஒக்கூரைச் சேர்ந்த வெள்ளையன் செட்டியார் நடத்தி வந்த பள்ளியில் சேர்ப்பதற்குச் சென்றார். அப்பள்ளியில் பெரும் பாலன ஆசிரியர்கள் பிராமணர்கள் – அவர்கள் சம்பந்தத்தைப் பள்ளியில் சேர்க்க மறுத்தார்கள். ஐயங்கார் அவர்களிடம் தான் இதை அரசுக்குத் தெரிவித்து அரசு தங்கள் பள்ளிக்கு அளிக்கும் மானியத்தை நிறுத்துவேன் எனக் கோபமாகக் கூறவே அவனைப் பள்ளியில் 5 ஆம் வகுப்பில் சேர்த்துக் கொண்டார்கள். அங்கு வேலை செய்த தமிழ் ஆசிரியர் சம்பந்தத்திற்கு வகுப்பு கடைசி பெஞ்சில் இடம் கொடுத்த அவனை அடிக்கடி திட்டிக் கொண்டிருந்தார். இதை கேள்விப்பட்ட ஐயங்கார் செட்டியாரைச் சந்தித்து பழைய பாணியிலேயே மிரட்டி அதைச் சரி செய்தார். மேலும் முதல் மார்க் யார் பெறுகிறாரோ அவரே முதல் இருக்கையில் அமரவேண்டும். அதைச் சம்பந்தம் சாதித்தார். மேலும் ஐயங்கார் சம்பந்தத்தைப் பள்ளிக்கு சென்று வரும் பொழுதெல்லாம்  உயர் ஜாதியினர் குடியிருப்பு வழியாகத்தான் வரவேண்டும் என்று கட்டளையிட்டார். இதனால் அவரை எதிர்க முடியாமல் சிலரது வெறுப்பைச் சம்பாதித்தார். 1941 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்வில் சம்பந்தம் தமிழில் மாநில அளவில் முதல் மதிணெ் பெற்று தன்னை திட்டிய ஆசிரியருக்கு புகழைச் சேர்த்தான்.

சம்பந்தத்திற்கு வேஷ்டி கட்டுதல் – தீருநீரு பூசுதல் எப்படி என்று ஆரம்பத்திலேயே சொல்லிக் கொடுத்து அவனை ஒர் சைவனாகவே மாற்றினார். ஐயங்காரின் மனைவி இந்த நடவடிக்கைகளில் ஆரம்பத்தில் விருப்பம் கொள்ளவில்லை ஆனால் அவர் படிப்படியாக மனம் மாறினார். ஆனால் ஐயங்காரின் மகன் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினான். ஆனால் ஐயங்கார் மனம் தளரவில்லை. ஐயங்கார் சம்பந்தத்திற்கு தேசவிடுதலை – கதர் இயக்கம் – தேசிய பாடல்கள் குறிப்பாக பாரதி பாடல்கள் பற்றிச் சொல்லிக் கொடுத்து வந்தார். ஊர் மக்கள் அவனை ஐயங்கார் பையன் என்றே அழைத்தார்கள். ஹரிஜன சேவா சங்கம் சார்பாக மதுரைக்குச் செல்லும் போதெல்லாம் சம்பந்தத்தைக் கூட்டிச் செல்வார். சேரிகளுக்கு பிரசாரத்திற்குச் செல்லும் பொழுதெல்லாம் சம்பந்தத்தையும் கூட்டிச் செல்வார். அவனுடைய தலித் நண்பனாக அழகனும் அவர்களுடன் செல்வான். நண்பர்கள் இருவரும் கூட்டங்களில் பாரதியார் பாடல்களை உரக்கப் பாடுவார்கள்.

பாரதியாரின் சகோதரர் சம்பந்தம் படித்த பள்ளியில் ஆசிரியராக இருந்தார்.  அவரும் பையனைப் படிப்பு – பாட்டு – விளையாட்டு போன்றவற்றில் ஊக்கமளித்து வந்தார். இதனால் மாநில அளவிலான பாரதி கட்டுரைப் போட்டியில் பையன் முதல் பரிசுப் பெற்றான். அதைப்போல் 1964 ஆம் வருடம் கல்கி நினைவு பாரதி போட்டியில் இரண்டாவது பரிசைப் பெற்றான்.

திருவாங்கூரில் சி.பி.ராமசாமி ஐயர் ஹரிஜனங்களுக்கு ஆலயங்களைத் திறந்துவிட்டதை அறிந்து அதை நேரில் சென்று காண மதுரையிலிருந்து ஒரு குழு பஸ்சில் புறப்பட்டது. ஐயங்காரும் அவர்களுடன் செல்ல தீர்மானித்து சம்பந்தத்தையும் தன்னுடன் அழைத்துச் சென்றார்.  ஆனால் பையனுக்கு இடம் இல்லை என்றார்கள். உடனே நான் வரவில்லை அவனை அழைத்துச் செல்லுங்கள் என்றார். ஐயங்காருக்கு சம்பந்தத்துடன் அழகனையும் அழைத்துச் சென்றால் ஆலய சன்னதிகளில் அழகன் தேவாரப் பாடல்களைப் பாடுவான் என்ற அவா. தற்செயலாக அங்கு காரில் வந்த வைத்தியநாத ஐயர் ஐயங்காரையும் அழகனையும் தன்னுடன் காரில் வருமாறு அழைத்தார். யாத்திரிகர்கள் மூலஸ்தானம் வரை சென்று தரிசிக்க சி.பி.ஆர். ஏற்பாடுகள் செய்திருந்தார்..

ஐயங்கார் சம்பந்தத்திற்கு சில உறுதிமொழிகளை வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டும் என்றார் – அவை மது அருந்தக்கூடாது – மதம் மாறக்கூடாது – எப்போதும் கதர் அணியவேண்டும் – லஞ்சம் வாங்கக்கூடாது – மக்களுக்குப் பயன்படும் செயல்களை நாட்டுப் பற்றுடன் கவனம் செலுத்தி செய்யவேண்டும். சம்பந்தத்தை ராஜாஜி உதவியுடன் திருச்சி தேசிய கல்லூரியில்ச் சேர்த்தார். அவன் தங்க தக்கர் பாபா விடுதியிலும் இடம்பிடித்துக் கொடுத்தார். ஐயங்காரின் மனைவி ருக்மணி அம்மாள் மனநிலை முழுவதுமாக மாறிவிட்டது. சம்பந்தத்தை அவர் சமையல் அறை வரை வரவும் ஆட்சேபிக்கவில்லை.  அவரும் ஐயங்காருடன் பிரசாரத்திற்குச் செல்லலானார்.  இதனால் அக்கிரகாரத்தின் மன நிலையே மாறிவிட்டிருந்தது. இதைப்பார்த்துப் பல ஜாதி ஹிந்துகளும் மனம் திருந்தினார்கள்.. முனுசீப் கோர்டில் வேலை செய்துவந்த நாராயணசாமி நாயுடு ஐயங்காரைப் போல ஒரு தலித் மாணவனை தத்தெடுத்து வளர்களானார்.

சம்பந்தத்தின் திருமணத்தை ஊரே வியக்கும் வண்ணம் தடபுடலாக நடத்தினார். தம்பதியினரை மாலையுடன் குதிரைமேல் ஏற்றி ஊரை வலம் வந்தார். ஊர் பெரியவர்கள் அனைவரையும் இதில் பங்கெடுக்க வைத்தார். ஹரிஜனங்கள் ஹோட்டல்களுக்கு தடையின்றி சென்றுவர ஏற்பாடுகள் செய்தார். பள்ளிப் படிப்பில் சில தலித் மாணவர்கள் பரிச்சைகளில் தேர்வாகாமல் இருந்தார்கள். அவர்களச் சென்னைக்கு அனுப்பி தொழில் கல்வி படிக்க வைத்தார்.  1951-52 மானாமதுரை சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பின் போட்டியிட்டு வென்றார். சட்டமன்றத்தில் தலித்துகளுக்கு கோவில் அறக் காவலர் பதவிகளை கொடுக்க வேண்டும் எனவும் அவர்களை அர்ச்சகர் பொறுப்பை அளிக்க வேண்டும் என 60 ஆண்டுகளுக்கு முன் வாதாடினார். சுடுகாடுகளில் தலித் பிணங்களைப் புதைக்கவும் அவர்கள் பிணத்தை உயர்ஜாதி ஹிந்துக்கள் தெருவழியாக எடுத்து செல்ல தடையிருந்ததைப் பற்றியும் சட்டமன்றத்தில் ஒரு தீர்வு கேட்டு வாதாடினார். பதவிக்காலம் முடிந்ததும் தனக்கு அளித்த காரை விற்று ஹரிஜன நிதிக்கு உதவினார்.

சம்பந்தம் பட்டம் பெற்று அரசு கசட் ராங் பதவியில் அமர்ந்தார். அவர் எழுதிய ஒரு நூலுக்கு மத்திய அரசு பரிசளித்தது. அவர் எழுதிய அரிசன ஐயங்கார் புத்தகத்தில் பி.எஸ.கிருஷ்ணசாமி ஐயங்கார் ருக்மணி அம்மாள் தம்பதியினருக்கு சமர்ப்பணம் என்றும் அவர்களது போட்டோவுடன் வெளிவந்தது. இத்தகவல்களை அனைத்தும் அந்த புத்தகத்தில் உள்ளது.

ஐயங்கார் தன் 90 ஆவது வயதில் மானாமதுரையில் ஒரு தொழிற்கூடம் அமைக்க வேண்டும் என விரும்பி சம்பந்தத்தின் உதவியுடன் அதையும் சாதித்தார். மேலும் அவர் தலித் பெண்களுக்கு ஒரு குடிசை தொழிற்கூடம் அமைத்துத் தரவேண்டும் என் அவா கொண்டிருந்தார். இதை அறிந்த சம்பந்தமும் அவர்கள் சகோதரர்கள் நால்வரும் தங்களது சொந்த வீட்டையே ஒரு பெண்கள் தொழிற்கூடமாக மாற்றி வளர்ப்புத் தந்தையின் ஆசையை நிறைவேற்றினார்கள்.

தொடரும்

பின்னூட்டமொன்றை இடுக