டாக்டர் அம்பேத்கர் மற்றும் பிராமணர்கள்

நீதிபதி ஆர்..ஜாகிர்தார் (ஓய்வு)

 

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் மகனும், பாபாசாகேப்பினை பின்பற்றுபவர்கள் என்று அழைக்கப்படுபவர்களும் டாக்டர் சவிதா மாய் எவ்வாறு நடத்தினார்கள் என்பது பற்றிய ரக்ஷித் சோனவானேவின் கணக்கு மிகவும் சோகமான வாசிப்பை அளிக்கிறது (இந்தியன் எக்ஸ்பிரஸ், வெள்ளிக்கிழமை, 30 மே, 2003). பாபாசாகேப்பின் பிராமண மனைவி அவரது மங்கலான வாழ்க்கையிலும், ஆரோக்கியத்திலும் அவரைக் கவனித்த பக்தி முற்றிலும் கவனிக்கப்படாமல் போனது..  மோசமான விஷயம் என்னவென்றால், பாபாசாகேப் அவரைப் பராமரித்த விதம்  பற்றிய பாராட்டு கூட அவரைப் பின்பற்றுபவர்களால் அழிக்கப்படப்பட்டது. { * இரண்டாவது மனைவி பெயர் சாராதா கபீர் என்று சிலர் சொல்கிறார்கள். சோலோ பாயிசன் கொடுத்து அமபேத்கர் உயிர்யிழந்ததாகவும் ஒரு சிலரால் சொல்லப்படுகிறது }.

பாபாசாகேப்பின் “ தி புத்தர் மற்றும் அவரது தர்மம் “ மரணத்திற்குப் பின் கௌவரமாக  வெளியிடப்பட்டபோது, ​​அது பாபாசாகேப் எழுதிய முன்னுரை இல்லாமல் வெளியிடப்பட்டது. மார்ச் 15, 1956 இல் எழுதப்பட்ட முன்னுரையில், அவர் தனது மனைவியிடமிருந்து பெற்ற உதவியைப் பற்றிய மனதை தொடுகின்ற குறிப்புக்களை எழுதியிருந்தார். அவரது  மரணத்திற்குப் பிறகு, அவரது விதவை மனைவி  அவரைப் பின்பற்றுபவர்களுக்கு ஆளுமை இல்லாதவராக மாறிவிட்டார். அதனுடன், பாபாசாகேப் தனது மனைவியிடம் தனது நல்ல உணர்வுகளை வெளிப்படுத்தியதை வேண்டும்மென்றே மறைத்து முன்னுரையை வெளியிட்டார்கள்.

3

இந்த உண்மை 1980 ல் அம்பேத்கர் எழுதிய அரிய முன்னுரைகளின் தொகுப்பு என்ற நூலில் உள்ள முன்னுரைகள் அனைத்தையும் புத்த இலக்கியவாதியான டாக்டர் பகவான்தாஸ் என்ற பஞ்சாபி வெளியீட்டின் குறிப்புகளிலிருந்து தெரியவந்தது.. இந்த முன்னுரையில் பாபாசாகேப் புத்தகத்தின் தோற்றம் , தான் படித்த புத்தகம் எழுதப்பட்ட சூழ்நிலைகள் தனது ஆரம்பக்கால மத வெளிப்பாடுகள் பற்றிய ஒரு கணக்கைக் கொடுத்திருந்தார்.  இந்த விஷயங்களை திரு ஆர்.இ.போலே என்பவர் (அப்போதைய மக்கள் கல்விச் சங்கத்தின் தலைவராக இருந்தவர்) தனது முன்னுரையில் (நவம்பர் 19, 1957 தேதியிட்டது) புத்தருக்கும் அவரது தர்மமும் என்ற புத்தகத்தில் முதன்முதலில் வெளியிடப்பட்டது. ஆனால் பாபாசாகேப் அவரது மனைவி சவிதாவைப் பற்றிய குறிப்புகள் தவிர்க்கப்பட்டன. பாபாசாகேப்பின் முன்னுரையைத் தனது சொந்த புத்தகத்தின் பதிப்பில் சேர்க்காதது உண்மையில் அவரது நினைவை அவமதிப்பதாகும். பாபாசாகேப்பின் கதையின் மோசமான சுருக்கம் அவர் எழுதிய அசல் முன்னுரைக்கு மாற்றாக எப்படி இருக்கும்?

பின்பு வந்த பதிப்பிலும்  நீதிபதி ஆர்.ஆர்.போலே (அவர் இந்த நேரத்தில் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தார்) எழுதிய முன்னுரையில் (1974)  கூட மை அம்பேத்கர் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லப்படவில்லை. (மூலம் ” அம்பேத்கர் மற்றும் புத்திசம்” சங்கரக்ஷிதா: விண்ட்ஹார்ஸ் பப்ளிகேஷன்ஸ், 1986). பாபாசாகேப்பின் சீடர்களின் இந்த அணுகுமுறை பிராமணர்கள் மீதான பாபாசாகேப்பின் சொந்த அணுகுமுறைக்கு முற்றிலும் மாறுபட்டது. பாபாசாகேப்பின் பிராமணீய விரோதம் அவரை பிராமணர்களை வெறுக்க வழிவகுக்கவில்லை. காலவரிசைப்படி நான் கொடுக்கும் பல உண்மைகளிலிருந்து இதைக் காணலாம்.

பாபாசாகேப்பின் குடும்பப் பெயருடன் ஆரம்பிக்கலாம். அம்பேத்கரின் குடும்பப் பெயர் சாக்பால், ஆனால் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவடே கிராமத்தில் வாழ்ந்த அவர் குடும்பம் அம்பவடேகர் என்ற குடும்பப் பெயரைப் பெற்றது. தனது ஒரு சின்ன சுயசரிதைக் குறிப்பில், பாபாசாகேப் தான் படித்த பள்ளியில் அம்பேத்கர் என்ற பிராமண ஆசிரியரைப் பற்றியும் – அவர் தனது உணவில் ஒரு பங்கை தனக்கு அன்பாக அளிப்பார் என்பதையும் நினைவு கூர்ந்துள்ளார்.  மேலும் அவர் தனது அம்பவடேகர் பெயரின் உச்சரிப்பு கடினமாக உள்ளது என்று அதை அம்பேத்கர் என்று சுருக்கி பின்னர் பள்ளி பதிவில் சேர்த்தார். { * ஒரு சிலர் அம்பேத்கர் என்று பிராமணர்கள் யாரும் பெயர் வைத்துக் கொள்வதில்லை என்கிறார்கள். ஆனால் கர் என்ற முடிவில் பெயர் வைத்துக்கொள்பவர் பிராமணர்கள்தான் – டென்டுல்கர் – காவாஸ்கதர் – சாவர்கர். அம்பேத்கரின் ஆசிரியர் பெயர் கிருஷ்ண கேசவ அம்பேத்கர் என்றும் மாஹாதேவ் அம்பேத்கர் என்றும் சொல்கிறார்கள்.  அவரும் அந்த ஊரைச்  சேர்ந்தவர் என்றால் கடினமான ஊர் பெயரை அம்பேத்கர் என்று மாற்றியிருக்கலாம். அம்பேத்கர் கர் என்பது பிராமணர்களை குறிக்கும் என்று தெரிந்தும் அவர் பிராமணர்களை வெறுப்பவர் என்றால் ஏன் அதை ஏற்கவேண்டும் }

பின்னர் பாபாசாகேப் உயர்நிலைப் பள்ளியின் இரண்டாம் வகுப்பில் (தற்போதைய ஆறாம் வகுப்பு) இருந்தபோது, ​​அவருக்கு பெண்ட்சே என்ற ஒரு பிராமண ஆசிரியர் இருந்தார், அவரை பாபாசாகேப் ஒரு பாசமுள்ள நபர் என்று நினைவு கூர்ந்தார். ஒரு மழை நாளில், பாபாசாகேப் முற்றிலுமாக நனைந்து பள்ளிக்குச் சென்றபோது, ​​பெண்ட்சே அவரை தனது சொந்த மகனுடன் அவரது வீட்டிற்கு அனுப்பினார், அங்கு ஒரு சூடான நீர் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டது.

பம்பாயின் எல்பின்ஸ்டோன் உயர்நிலைப் பள்ளியில், பாபாசாகேப்பை கணித ஆசிரியர் கரும்பலகையில் எழுதும்படி கேட்கப்பட்டார், வகுப்பில் சில மாணவர்கள் ஆட்சேபித்தனர், ஏனெனில் கரும்பலகையின் பின்னால் வைத்திருந்த அவர்களின் டிஃபின் பெட்டிகள் தீட்டுப்படுத்தப்படும் என்பதால். கணித ஆசிரியர் அந்த மாணவர்களிடம் பாபாசாகேப் கரும்பலகையில் எழுதுவார் என்றும் அவர்கள் விருப்பப் பட்டால் டிஃபின் பெட்டிகளை அகற்றிக்கொள்ளலாம் என்றும் கூறினார். கணித ஆசிரியர் ஜோஷி என்ற பிராமணர். (இந்த சுயசரிதை விவரம் பால்சந்திர ஃபட்கேவின் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் – 1985, ஸ்ரீ வித்யா பிரகாஷன் அச்சகம், புனே – பதிவில் உள்ளது). பள்ளியில் இருந்தபோது பாபாசாகேப் சார்னி சாலை தோட்டத்திற்கு (இப்போது எஸ்.கே. பாட்டீல் உதயன் கார்டன்) படிப்பதற்காகச் செல்வார்.

அதே தோட்டத்திற்கு அடிக்கடி வரும் வில்சன் உயர்நிலைப்பள்ளியின் பிராமண தலைமை ஆசிரியர் கிருஷ்ணாஜி அர்ஜுன் கெலுஸ்கர், மிக சிரத்தையுடன் படிப்பதி்ல் கவனம் செலுத்தும் அம்பேத்கரை தினம் பார்த்து வந்தார்.. கெலுஸ்கர் பாபாசாகேப்புடன் இனிமையான பேச்சுக்களை நடத்தினார், இந்த பேச்சுக்கள் அவரை சிந்திக்க வைத்தன என்று கூறுகிறார். 1907 இல் பாபாசாகேப், மஹார் சமூகத்தின் முதல் மெட்ரிகுலேட் என்பதால், கெலுஸ்கர் ஒரு பேச்சாளராக இருந்த ஒரு பொதுக் கூட்டத்தில் அம்பேத்கர் அழைக்கப்பட்டு அவரை கௌரவப்படுத்தினார்.. கெலுஸ்கர் பாபாசாகேப்பிற்கு தான் மராத்தி மொழியில் புத்தர் பற்றி எழுதிய புத்தகத்தைப்  பரிசாக வழங்கினார்.

அம்பேத்கர் மெட்ரிக் வரை படித்த ஒரு ஆர்வமுள்ள வாசகர் என்பதால் அந்த அறிவொளி பெற்ற ஒருவரது கதையை உடனே ஆர்வத்துடன் படித்து முடித்தார். கெலுஸ்கர் அம்பேத்கர் மனதில் ஒளிவுமறைவு இல்லாமல் புத்த மதமாற்றத்தின் விதையை முதல் முதலில் விதைத்தார் என்பது மிகையாகாது.  தீண்டத்தகாத சிறுவன் மீது கெலுஸ்கர் தொடர்ந்து ஆர்வம் காட்டினார், மேலும் பாபாசாகேப்பின் உயர் கல்விக்காக பரோடா மகாராஜாவிடமிருந்து நிதி உதவி பெறுவதில் முக்கிய பங்கு வகித்தார்.

{ *1930 முதல் 1932 வரை மறுபடியும் 1937 முதல் 1942 வரை பண்டிட் நாகப்ப சாஸ்திரி என்ற பிராமணரிடம் 7 வருடம் அம்பேத்கர் சமஸ்க்கிருதம் கற்றார். சிலர் ஜெர்மன் பல்கலைகழகத்தில் சமஸ்க்கிருதம் கற்றதாக சொல்கிறார்கள். சிலர் அவருக்கு சமஸ்க்கிருதமே தெரியாது என்றும் சொல்கிறார்கள். ஆனால் அம்பேத்கர் சமஸ்க்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். கே.எம்.முன்ஷி – மதன்மோகன் மாளவியா – சாவர்கர் – ஸ்ரீமதி கிஷ்மாராவ் –  முதலிய பிராமணர்கள் அம்பேத்கருடன் நல்ல உறவை வைத்திருந்தார்கள். }

4

சாவ்தார் ஏரி தீண்டத்தகாதவர்களால் “மாசுபட்டுவிட்டது” அதை புனிதப் படுத்த வேண்டும் என்ற ஜாதி ஹிந்துக்களின் கோரிக்கையை எதிர்த்து நன்கு அறியப்பட்ட மகாத் சத்தியாக்கிரகத்தில் , மகாத்தின் முன்னணி பிராமண குடிமகனான பாபுராவ் ஜோஷி ஒரு தீவிர தலித் ஆதரவாளர் அவர் ஜாதி ஹிந்துக்களின் கோரிக்கையை நிகாரகரித்து திடீர் என்று ஏரியில் குதித்து, மாசு கோட்பாட்டைச் சவால் செய்தார். { * இந்த போராட்டத்திற்கு ஏ.வி.சித்ரே – சுரேந்திரநாத் (மாநகராட்சி தலைவர் – மராத்தி சந்திரசேனியா (இவர்கள் பூணூல் அணியவும் வேதம் படிக்கவும் வேதசடங்குகள் செய்வதற்கும் உரிமை உள்ளவர்கள்) – கங்காதர் நீலகாந் சஹஸ்ரபுத்தே – (சித்பவன பிராமிண்) – போன்ற பல பிராமணர்கள் ஆதரவு அளித்தார்கள் }

                                         8

5

சங்கரட்சிதா (முன்னர் குறிப்பிட்ட புத்தகத்தில்) மகாத் மாநாட்டுடன் தொடர்புடைய ஒரு சம்பவத்தை விவரித்துள்ளார். மகாராஷ்டிராவின் இரண்டு முக்கிய பிராமணரல்லாத தலைவர்கள் சில நிபந்தனைகளை ஏற்றால் பாபாசாகேப்பை ஆதரிப்பதாகச் சொன்னார்கள். அதாவது எந்தவொரு பிராமணர்களும், தீண்டத்தகாதவர்களுக்கு ஆதரவாகவோ அனுதாபமும் முற்போக்கு எண்ணமுடைய  தாராள மனப்பான்மை கொண்ட பிராமணர்கள் கூட பிரச்சாரத்தில் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது என்றார்கள். ஆனால் அதை அம்பேத்கர் அடியோடு மறுத்தார் மேலும் அவர் பிராமணர்கள் எல்லோரும் தீண்டத்தகாதவர்களின் எதிரிகள் என்ற கருத்து தவறானது என்று அறிவித்து  வாய்ப்பை நிராகரித்தார். ஆட்சேபிக்கத்தக்கது என்னவென்றால்,  பிறப்பினால் ஒரு சில ஜாதிகள் உயர்ந்தது மற்றவை தாழ்வானது என்ற அடிப்படை கோட்பாட்டு சிந்தனையைத்தான் எதிர்க வேண்டும். இந்த சிந்தனையைத் துறந்த எந்த பிராமிணனையும் வரவேற்கலாம். ( Babasaheb said that a Brahmin free from the spirit of Brahminism was welcome. Not birth, but worth – that was what counted.). இது அடிப்படை புத்த கோட்பாடாகும்.

ஆனால் இந்த கோட்பாட்டை ஆரம்ப நாட்களில் முழுவதுமாக ஏற்கத் தயங்கினார். இதை ஒரு நிகழ்வை வைத்துப் புரிந்து கொள்ளலாம். மஹாபோதி சோசைடியின் உலகம் முழுவதும் வாசகர்களைக் கொண்ட ஒரு பத்திரிகையை ஒரு பெங்காலி பிராமணர் நடத்தி வந்தார். அந்த பத்திரிகை அம்பேத்கரை ஒரு கட்டுரை எழுதச் சொல்லிக் கேட்டதை முதலில் அது பிராமணர் நடத்தும் பத்திரிகை என்று  எழுத மறுத்துவிட்டார். பின்பு மனம் மாறி 6500 வார்த்தைகளைக் கொண்ட ஒரு கட்டுரையை எழுதினார். அதன் தலைப்பு  “The Buddha and the Future of His Religion  ” இந்தக் கட்டுரை ஏப்ரல் – மே 1950 இல் மஹாபோதியின் அதிகாரப்பூர்வ அங்கமான அந்த பத்திரிகையின்  சிறப்பிதழாக வெளிவந்தது.

{ *In the constituent assembly on November 25, 1949 , Ambethkar said “ The credit given to me does not reallly belong to me, it belongs to B.N.Rau” – A Bengali Brahmin} சட்ட வரைவு கமிட்டியில் அம்பேத்கர்கு உதவியவர்களில் ஐந்து பேர் பிராமணர்கள். }

9

பாபாசாகேப் ஹிந்து கோட் மசோதாவை தாக்கல் செய்தபோது பலத்த எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது அதை ஆதரித்து நீண்டதொரு உரையை நிகழ்த்தியவர்கள் இரண்டு பிராமணர்கள். ஒருவர் கயஸ்தா பிராமண சங்கத்தின் தலைவர் பெயர் ஹிருதயநாத் குன்ஸ்ரு மற்றொருவர் என்.வி.கட்கில். இந்த கட்கில் ஒரு சமயம் பூனாவில் உள்ள ஒரு கோவிலில் தீண்டத்தகாதவர்களுடன் பலவந்தமாக நுழைய முயன்ற பொழுது பலத்த காயம் அடைந்தார் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அதே சமயம் பெங்காலி பிராமணரான டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜி இந்த மசோதா ஹிந்து சமுதாயத்தை அழிக்கும் என்று கண்டனம் செய்தார் என்பதையும் குறிப்பிடவேண்டும்.

ஒரு விதியாக, உயர்நீதிமன்றத்தின் பதவியில் இருக்கும் நீதிபதி சட்டமன்றத்தில் நிலுவையில் உள்ள மசோதா குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது.  இந்த விதியை ஒதுக்கி வைத்துவிட்டு, நீதிபதி பி.பி. கஜேந்திரகட்கர் (மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ) இந்து கோட் மசோதாவை ஆதரிக்கும் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.  நீதிபதி பி.பி. கஜேந்திரகட்கரின் மூத்த சகோதரர்.  பேராசிரியர் அஸ்வதாமாச்சார்யா பாலாச்சார்யா கஜேந்திரகட்கர், பம்பாயின் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் தனது பதவியில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்று, பாபாசாகேப் வேண்டுகோளுக்கு இணங்கி பம்பாயின் சித்தார்த் கல்லூரியின் முதல் அதிபராகும் வாய்ப்பை ஏற்றுக் கொண்டார் – மக்கள் கல்வி சங்கத்தால் நிறுவப்பட்ட முதல் கல்லூரி.  தற்செயலாக , பாபாசாகேப் மற்றும் பேராசிரியர் கஜேந்திரகட்கர் ஆகியோர் கல்லூரியில் வகுப்பு தோழர்களாக இருந்தனர், இருவரும் பி.ஏ தேர்வில் அதே ஆண்டில் அதாவது 1912 இல் தேர்ச்சி பெற்றனர்.

{* ” பீமாயணா ” என்ற தலைப்பில் அம்பேத்கரது வாழ்க்கை வரலாற்றை அவரது தந்தையின் விருப்பப்படி பூனாவைச் சேர்ந்த பிராபாகர் ஜோஷி (வேத பண்டித பிராமணர்) சமஸ்க்கிருத மொழியில் தனது 84வது வயதில் எழுதி முடித்தார். }

{ 1 1929ம் ஆண்டு ரத்தினகிரி மாவட்ட பஹிஷ்கிருத் சமாஜ் கூட்டம் அம்பேத்கர் தலைமையில் நடைபெற்றது. அதில் தீண்டத்தகாதவர்களுக்குப் பூணூல் அணிவிக்கும் சடங்கு நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. அந்த சமயம் அம்பேத்கர் உடலளவிலும் ஆன்மீக நோக்கிலும் பூணூல் அணிவதன் சிறப்பை விளக்கினார். இதன் மூலம் வேதங்களை ஓதுகின்ற உரிமையை மீண்டும் பெற்றுவிட்டதாகத் தீண்டத்தகாத சமூகத்தினரைப் பாராட்டினார். அவருடைய பிராமண நண்பரான தேவராவ் நாயக் 6471 பேர்களுக்குப் பூணூல் அணிவித்துக் காயத்திரி மந்திரம் உபதேசித்தார். }

உயர் சாதிகள் என்று அழைக்கப்படுபவர்களில் பிறந்த சுதந்திர சிந்தனையாளர்கள் அந்த சாதிகளில் பிறந்ததைப் பற்றிப் பெருமைப்படுவதில்லை, அதற்காக அவர்கள் வெட்கப்படுவதும் இல்லை. இப்படிப்பட்டவர்கள் அவர்களாக தங்கள் பிறப்பை நிர்ணயம் செய்வதில்.  சுதந்திர சிந்தனையாளர்களாகத் தெளிவு பெற்றவர்கள் பாபாசாகேப்பின் எழுத்துக்களில் தர்க்க வாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இன்று பாபாசாகேப்பினை பின்பற்றுபவர்கள் என்று அழைக்கப்படுபவர்களில் சிலர் மகாராஷ்டிரா அரசு பாபாசாகேப்பின் புத்தகங்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று பலத்த குரல் எழுப்புகிறார்கள். பாபாசாகேப் கல்லறையில் உயிர்ப்பு தன்மையோடு இருந்தால் இந்த கோரிக்கைகளை நிச்சயம் எதிர்பார்.

10

குறிப்பு – Dr. Ambedkar and Brahmins (Thought & Action) Justice R.A.Jahagirdar (Retd)

தமிழாக்கம் – வேதம் கோபால். { } இந்த அடைப்புக்குள் இருக்கும் செய்திகள் கட்டுரை ஆசிரியரது அல்ல. அதன் ஆதாரம் (*) வலை தளம் மற்றும் (1) ம.வெங்கடேசன் (தமிழ் ஹிந்து)

 

பின்னூட்டமொன்றை இடுக