பிராமண வெறுப்புணர்வு (புனைவும் உண்மையும்) Part – 2

a

மஹாவீரர்

b

 புத்தர்

ஆரம்ப நாட்களில் வேத மதம்தான் உலகெங்கும் பரவியிருந்தது. இயற்கை வழிபாடுதான் அதன் பிரதான கொள்கையாக இருந்தது. ஆரம்ப நாட்களில் உருவ வழிபாடுகள் கிடையாது. பின் மக்கள் பெருக்கத்தாலும் புதிய கண்டங்களை அறியப்பட்டதாலும் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பல மாற்றங்கள் இயற்கை வழிபாட்டில் கலந்தன. பாரதத்திலும் வேத மதத்திலிருந்து பல கிளைகள் பல்கி பெருகின.

ஜைனம், புத்தம் இரண்டும் ஹிந்து கலாச்சாரத்தின் பின்னணியைக் கொண்டிருந்தனர். இவை இரண்டும் சமகாலத்தில் தோன்றின (5 லிருந்து 6 நூற்றாண்டு BCE) மேலும் சந்நியாச இலட்சியங்கள் மற்றும் உபநிடதங்களின் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டனர், குறிப்பாக சாங்கியா-யோகா, கடவுளின் புறக்கணிப்பு அல்லது ஒரு நாத்திக அணுகுமுறை, அவநம்பிக்கை அல்லது மனித வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கிறது, ஆன்மா மற்றும் கர்மா  சமண  மற்றும் புத்தம். இவற்றுக்கு பொதுவானது. மறுபிறவி கொள்கையை ஏற்றவர்கள். இருவரின் தத்துவங்களின் மூலமும் ஒன்றுதான், ஆனால் இருவரும் அதில் சில மாற்றங்களைச் செய்தார்கள்.

இருவருமே ஷத்திரிய அரச குலத்தை சேர்ந்தவர்கள். அப்பொழுது ஹிந்து மதத்தில் மேலோங்கி இருந்த கடுமையான யாகங்கள் – மிருக பலி – வைதீக அனுஷ்டானங்கள் – சம்பிரதாயங்கள் – மனு தர்மம் இவைகளை பின்பற்றி நடப்பதில் மக்களின் விருப்பம் குறையத் தொடங்கியது. வணிக பெருக்கத்தால் வைசியர்களின் வாழ்க்கை முறை மாறலாயிற்று. இவை ஹிந்து மதத்திற்கும் பிராமண மேல் ஆதிக்கத்திற்கு எதிராகக் கிளம்பிய மதங்கள் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் ஆரம்ப நாட்களில் அதில் சேர்ந்தவர்களி்ல் பிராமணர்களின் எண்ணிக்கை அதிகம். மாஹாவீரர் கௌதம புத்தர் இவர்களுக்கு முன் பல ஜைன தீர்தங்கர்களும் புத்த துறவிகளும் இருந்ததாகச் சொல்கிறார்கள். மாஹாவீரர் 24 வது தீர்தங்கர் ஆவார். மனுதர்மத்தை இருவரும் எதிர்க்கவில்லை..

இருவரும் தங்கள் மதத்தை மக்களின் பொதுவான மொழியில் பிரசங்கித்தனர் மற்றும் சமஸ்கிருதத்தை தங்கள் ஆரம்பக்கால மத நூல்களின் மொழியாக நிராகரித்தனர். ஆரம்பக்கால புத்த நூல்கள் பாலி மொழியிலும், சமண நூல்கள் பிராகிருதத்திலும் எழுதப்பட்டன. புத்த மதத்திலிருந்து 3 கிளைகள் தோன்றின அவை தேராவதா – மஹாயானா – வஜ்ராயனா. இதைப் போல் சமணத்திலும் 2 பிரிவுகள் உண்டு அவை சுவேதாம்பரா – திகம்பரா. இருவருமே சங்கங்களை உருவாக்கினார்கள். இருவருமே பெண்களைத் துறவறம் பேண அனுமதித்தது. திகம்பரர்கள் நிர்வாண கோலத்தில் தான் திரிவார்கள். சமணர்களின் வேதநூல் ஆஹமா என்றும் பௌத்தர்களின் வேதநூல் திரிபிடாகா (சுத்தா – வினையா – அபிந்தனா).

“துலுக்க படையெடுப்பாளர்கள் நாலந்தா, விக்ரம்ஷிலா, ஜகதலா, ஒடந்தபுரி ஆகிய புத்த பல்கலைக்கழகங்களை தரைமட்டமாக்கினார்கள். துலுக்க படைத் தளபதிகள் ஆயிரக்கணக்கான புத்த பிக்குகளைக் கொன்று குவித்தனர். பயத்தினால் பல்லாயிரக்கணக்கான புத்த பிக்குகள் நேபாளம் – திபெத் – மற்ற கிழக்காசிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். இவை. அனைத்து விவரங்களும் முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.  வின்சென்ட் ஸ்மித் என்ற ஆங்கில பேராசிரியர் இவற்றைப் பற்றி விரிவாக விளக்கியதோடு அல்லாமல் (  by killing the Buddhist priesthood,- மொட்டைத் தலையைக் கண்டால் வெட்டு , Islam killed Buddhism. This was the greatest disaster that befell the religion of the Buddha in India….”) என்று முடிக்கிறார். இதையே தான் அம்பேத்கர் – விவேகானந்தர் – டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சொல்லியுள்ளார்கள்.

அம்பேத்கர் (B. R. Ambedkar, “The decline and fall of Buddhism,” Dr. Babasaheb Ambedkar: Writings and Speeches, Vol. III ) புத்த மதம் இந்தியாவிலிருந்து துரத்தப்பட்டதா ? இல்லை ! இது ஒரு வடிகட்டிய சுயநலவாதிகளால் கூறப்பட்ட முழுப் பொய் என்கின்றார். மேலும் அவர் புத்தம் ஹிந்துக்களாலோ அல்லது பிராமணர்களாலோ அழிவைச் சந்திக்கவில்லை. எளிய மக்கள் வாழ்கையில் அனுபவிக்கும் ஆடல் – பாடல் – மது – நாடகம் போன்ற பலவற்றிற்குத் தடைவிதித்துத் தானே தனக்கான அழிவின் விதையை விதைத்தது. உண்மை என்னவென்றால் புத்தத்தில் முதல் முதலில் அறிவொளி பெற்றவர்கள் வரிசையில் பிராமணர்கள்தான் முன்னிலையில் இருந்தார்கள். (மஹா முக்கலண்னா – சாரிபட்டா – மஹா காஸ்யபா – அசிதா – கௌண்டின்யா போன்ற பலர்).

வடக்கே ஆண்ட ஹிந்து மன்னர்கள் வம்சமான மௌரிய பேரரசும் (சந்திர குப்த மௌரியா – அசோகா) குப்த பேரரசும் -புத்த விகாரங்களையும் – புத்த மடங்களையும் அதிக எண்ணிக்கையில் கட்டினார்கள்.  புஷ்ய பூதி பேரரசும் புத்த மதத்தை ஆதரித்தனர். புஷ்ய வம்சத்து அரசனான ஹர்ஷா – லலிதாதித்யா காஷ்மீரத்தில் புத்த விகாரங்களை கட்டினார். மஹாயானா பிரிவை ஏற்படுத்தியவர் நாகார்ஜுனா என்ற பிராமணன். . According to Caroline Augusta Foley Rhys Davids (1857 – 1942) among the 246 poet-authors mentioned in the Thera Gatha, 113 were Brahmins, 70 Kshatriyas. .

(Swami Vivekananda said: “Thus, inspite of preaching mercy to animals, inspite of the sublime ethical religion, inspite of the discussions about the existence or non-existence of a permanent soul, the whole building of Buddhism tumbled down piece-meal and the ruin was simply hideous. The most hideous ceremonies, the most obscene books that human hands ever wrote or the human brain ever conceived, have all been the creation of the degraded Buddhism. The Tartars and the Baluchis and all the hideous races of mankind that came to India , became Buddhists and assimilated with us, brought their national customs and the whole of our national life became a huge page of the most horrible, bestial customs. Sankara came and showed that the real essence of Buddhism and that of Vedanta are not very different but that the disciples did not understand the master and have degraded themselves, denied the existence of soul and one God and have become atheists. That was what Sankara showed and all the Buddhists began to come back to their old religion”.)

விவேகானந்தர் – புத்தம் விலங்குகளிடம் கருணை காட்ட வேண்டும் என்னும் உயர்ந்த விழுமியங்களை உடைய அறநெறிகளை போதித்த போதிலும் ஆன்ம விசாரணை பற்றிய சிந்தனைகளை ஆழமாகத் தூண்டிவிட்டபோதிலும் அது இடம் தெரியாமல் போயிற்று. காரணம் அருவருப்பான விழாக்களும், தாந்திரீக வழிகளை தீவிரமாகக் கடைப்பிடித்து, மனித சிந்தனையில் எண்ணத் தோன்றமுடியாத காமகளியாட்டங்களை பற்றிய நாகூசும் புத்தகங்கள் வெளிவந்தன. பல அன்னிய வந்தேறிகளான டார்டர்கள், பலூச்சுகளின் நாகரீகம் அற்ற பழக்க வழக்கங்கள் நமது பண்பாட்டுடன் கலந்து அவர்களை புத்தத்தில் சேர்த்ததால் அசிங்கமான மிருகத்தனமான நடைமுறைகள் இவற்றையெல்லாம் அன்றைய சமூகம் ஏற்பது கடினமாயின. பின்பு வந்த சங்கரர் புத்தமத கொள்கைகளுக்கும், வேதாந்த கொள்கைகளுக்கும் வித்தியாசம் அதிகம் ஏதும் இல்லை.  புத்தரின் உயர்ந்த லஷ்சியத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஆன்மா, கடவுள் என்பதை முற்றிலுமாக பழித்து அவர்களாகவே தாழ்வு நிலையை எய்தினர்.

ஆனால் இவற்றையெல்லாம் மறைத்து பொய் சொல்லுவதையே ஒரு வாடிக்கையாகக்  கொண்ட இடதுசாரி சரித்திர ஆசிரியர்கள் புத்தத்தை அழித்தது ஹிந்து மதமும்,  பிராமணர்களும் தான் என்று எழுதிவைத்துள்ளனர். புத்த விஹாரங்களை இடித்து ஹிந்துக்கள் கோவில் கட்டினார்கள் என்றும் எழுதினார்கள்.

c

சங்கரர் – ராமானுஜர் – மத்வர் இவர்கள் மூவரும் ஹிந்துமதத்தின் தூண்கள் எனக் கொள்ளலாம். இவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் அவதரித்தவர்கள். இவர்கள் முறையே அத்வைதம் – விசிஷ்டாத்வைதம் – தைத்வ சித்தாந்தங்களை போதித்தார்கள். இவர்கள் நியதி, சங்கரர் கூற்றுப்படி (ஜீவாத்மா – பரமாத்மா இரண்டும் ஒன்றுதான்) ராமானுஜர் (பரமாத்மா சித்தானது அதன் ஒரு பகுதிதான் ஜீவாத்மா அது அசத்தானது அதைநீங்கிதான் பரமாத்மாவுடன் கலக்க முடியும்) மத்வர் (ஜீவாத்மா – பரமாத்மா தனித் தனியான தன்மையுடையது அது பரமாத்மாவுடன் சேரலாமே அன்றி கலக்க முடியாது)

சங்கரரின் பிறந்தகாலம்  ( 7 ஆம் நூற்றாண்டு BCE ) ஆனால் இடதுசாரி ஆசிரியர்களும் அடிப்படை தீவிர கிருஸ்துவ ஆசிரியர்களும் வேண்டுமென்றே தவறாக பல இடங்களில் சங்கரரின் காலத்தை கிருஸ்து பிறந்ததற்குப் பின் எடுத்துச்சென்றுதான் குறிப்பிடுகிறார்கள். ( அதாவது 7 ஆம் நூற்றாண்டு CE ) காலணி ஆதிக்க காலத்திலிருந்தே வெள்ளை கிருஸ்துவர்கள், கிருஸ்துவம் அல்லாத நாடுகளின் சரித்திரத்தில் மூக்கை நுழைத்து தாங்கள்தான் நாகரிகத்தின் முன்னோடிகள் என்பதை நிலை நிறுத்த முரணான சரித்திரத்தை எழுதிவைப்பது இன்று வரை  முற்றுப்புள்ளி இல்லாமல் தொடர்கிறது. இவர்களுக்குத் துணை போவது எட்டப்பர்களான மதம் மாறியவர்களும், இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் ஆவார்கள்..

சங்கரர் காலத்தில் பாரதம் நிலையான அரசுகள் இல்லாததாலும் காபாலிகம் (பில்லி – சூனியம் – மந்திரதந்திரம் – தாந்திரிகம் – பரதேசி வாழ்க்கை – அகோரிகள்)  மிமாசம் (வைதிகம்தான் முதலும் முடிவுமானது கடவுள் ஆராதனை தேவையற்றது) இத்துடன் சமணமும், புத்தமும் வந்தது. ஒருவர் காவி உடுத்தி மொட்டைப் போட சொன்னார், ஒருவர் கோமணத்துடன் திரியச் சொன்னார். நாட்டில் இதனால் ஷத்திரிய வலிமை குறையத்தொடங்கியது கூடவே அன்னிய படையெடுப்பாளர்கள் வரத்தொடங்கினார்கள். சங்கரர் அப்பொழுது நாட்டிலிருந்த 72 விதமான மதங்களை ஒருங்கிணைத்து 6 மதபிரிவுகளாக ஆக்கினார். இதை அவர் 35 வயதிற்குள் இரண்டு முறை பாரத தேசம் முழுவதும் கால்நடை பயணம் மேற்கொண்டு ஒரு சாதனை படைத்தார். அவர் ஏற்படுத்திய மத வழிபாடுகள் முறையே சைவம் – வைஷ்ணவம் – கணாதிபத்தியம் – சாத்தகம் – சௌரம் – கௌமாரம் ஆகும்.

குப்த பேரரசு வைசியர்கள் ஆவார்கள். அவர்கள் ஹிந்து மதத்தை ஆதரித்த போதிலும் புத்த மதத்தை நிராகரிக்கவில்லை. அவர்கள் காலம் பொற்காலம் எனச் சொல்லப்படுகிறது..  பல கலைகள் முன்னேற்றம் அடைந்தது. காளிதாசர் (காஷ்மீரத்து பண்டிட்) – சமஸ்க்கிருத காப்பியங்களைப் படைத்தவர். ஆர்யபட்டா (கேரளத்து நம்பூதிரி) பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் முன்னோடி – விஷ்னுசர்மா – (வைஷ்ணவ பிராமணர்) பஞ்சதந்திர கதைகள் இயற்றியவர். பாஸ்கரா – வராகிமித்திரா இன்னம் பல விஞ்ஞானிகளும் பிராமணர்கள். ஆயுர்வேத மருத்துவரான ”சுஸ்ருதர்” காசி பிராமணர். காமசூத்திர நூலை இயற்றிய ”வாத்சாயனர்”  இவரும் ஒரு பிராமணர். இந்த உண்மைகளும் திரிக்கப்பட்டு மறைக்கப்படுகின்றன.

d

சங்கரர் – சாணிக்யர் – சமர்த்த ராமதாஸ் – வித்யாரண்யர் இவர்கள் தான் ஹிந்து மதத்திற்கும், ஹிந்து தேசம் வீழ்ச்சியிலிருந்து விடுபடுவதற்கும் முக்கிய காரணகர்தாக்கள் ஆவார்கள். சங்கரர் ஹிந்து மதத்தை ஒரு நிலைப்படுத்தினார். சாணிக்கியர் தன்னை அவமதித்த சூத்திர நந்த வம்சத்தை பழி தீர்க்க காட்டில் மயில் இறகு எடுத்து விற்பனை செய்யும் சந்திர குப்தன் என்ற சூத்திரனை போர்ப் பயிற்சி அளித்து காட்டில் படை திரட்டி நந்த வம்சத்தை ஒழித்து மௌரிய பேரரசை நிலை நாட்டினார். இதன் எல்லைகள் பாரதம் எங்கும் பரவியிருந்தது. அசோகரும் மௌரிய வம்சத்தை சேர்ந்தவர். கலிங்க போருக்கு பின் அவர் புத்த மதத்தைத் தழுவினார் ஆனால் ஹிந்து மதத்தை நிராகரிக்கவில்லை. சாணிக்யர் எழுதிய கௌடிலிக அர்தசாஸ்திரம் இன்று வரை அரசியல், பொருளாதார ஆதார புத்தகமாக விளங்குகிறது. சமர்த்த ராமதாஸ் முயற்சியால் மராட்டியச் சாம்ராஜ்யம் உருவாகி வீர சிவாஜி முதல் பல மராட்டிய மன்னர்கள் துலுக்கர்களை ஓட ஓட விரட்டி அடித்தனர். வித்தியாரண்யரால் தெற்கே விஜயநகர பேரரசு உருவாகியது.  இவர்கள் மூவருமே சூத்திர பேரரசுகளைத்தான் உருவாக்கினார்கள். ஆனால் பழி பிராமணன் சூத்திரர்களை ஒடுக்கியதாகத்தான் எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஏன் .?

குப்த பேரரசுகள் நலிவுற்ற பின் மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து பெரும் திரளாகப் போர் குணம் கொண்ட ஹுணர்கள் மற்றும் பல பழங்குடியினர் நமது நாட்டில் நுழைந்தார்கள் என்றும் அவர்கள் ஆட்சியில் நாட்டில் பல கலவரங்கள் நடந்ததாகவும். பிராமணர்கள் அவர்களை நல் வழிப்படுத்தி சுத்த சித்திகள் செய்தபின் அவர்களை ரஜபுத்திரர்களாக மாற்றினார்கள் என்றும் அவர்களை மூன்று வகை குலங்களாகப் பிரித்தார்கள் என்று (சூரிய குலம் – சந்திர குலம் – அக்னி குலம் ) ஒரு சில சரித்திர ஆசிரியர்களும்  அவர்கள் வெளிநாட்டினர் அல்ல இந்தியப் பழங்குடியினர் மற்றும் நில உடைமையாளர்கள் என்கிறார்கள். எப்படி பார்த்தாலும் பிராமணர்கள் தான் ரஜபுத்திரர்களை உருவாக்கினார்கள் என்பதை வெளிநாட்டுச் சரித்திர ஆசிரியர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். இதையே அம்பேத்கர் பிராமணர்கள் புத்தம் பரவுவதைத் தடுக்க இப்படிச் செய்தார்கள் என்கிறார் ? ரஜபுத்திரர்களால் இஸ்லாமிய ஆதிக்க எல்லைகள் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது என்பதுதான் உண்மை.

e

ரஜபுத்திரர் அக்னி குல கோவில் அப்பூ மலை

f

சமர்த்த ராமதாஸின் சிவாஜி தொடர்பை தற்போது புனை கதையாக மாற்றிவருகிறார்கள். பிராமணர்கள் சிவாஜிக்கு அவர் ஷத்திரியர் அல்லாததால் முடிசூட்டு விழா நடத்த மறுத்தார்கள் என்றும் பின்பு ஒரு காசி பிராமணன் நிறையச் சன்மானங்கள் பெற்றுப் பல சுத்த சித்திகளைச் செய்து பூணூல் அணிவித்து ஷத்திரியனானக உயர்த்தி பின் பட்டாபிஷேகம் செய்து வைத்ததாகவே எழுதி வருகிறார்கள். மராட்டியரான துகாராம்தான் சிவாஜியின் குரு என்று விக்கிபிடியாவும் சொல்லுகிறது. .ராமதாஸ் தங்குவதற்குச் சிவாஜி ஒரு கோட்டையைக் கொடுத்தான் (சஜன்காட் – கீழே உள்ள படத்தில் காணலாம்.)  ( sajjangad fort )

g

பழைய எட்டு பெரிய நாகரிகங்களில் சிந்து சமவெளி நாகரிகம்தான் இந்தியாவில் இருக்கின்றது. மற்றவற்றைத் துலுக்கனும், கிருஸ்துவனும் சேர்ந்து அழித்து விட்டார்கள். காலணி ஆதிக்கம் ஒழிந்து ஒரு நூற்றாண்டிற்குள் உலகமயம் என்ற போர்வையில் வெள்ளையர் கிருஸ்துவம் மறைமுகமாக கிருஸ்துவம் அல்லாத நாடுகளை பின்னுக்கு தள்ளும் முயற்சிகளைப் பல ரூபத்தில் செய்துவருகிறார்கள்.

அசோகருக்குப் பின் மௌரியப் பேரரசு நெளிவுற்றது. இதன் கடைசி அரசனான பிரஹாதரனை அவனது சேனாதிபதியாக இருந்த புஷ்யமித்திரா என்ற பிராமணன் கொலை செய்து ஆட்சியைக் கைப்பற்றினான் என்கிறார்கள்.  அவன் உருவாக்கியதுதான் சுகுணா டைநாஸ்டி. அவன் ஹிந்து மதத்தை ஆதரித்தான் என்றும் அவனது ஆட்சியில் பல புத்த பிக்குகள் தலைக்கு விலை நிர்ணயம் செய்து கொலை செய்யப்பட்டார்கள் என்றும் சரித்திரம் எழுதிவைத்துள்ளார்கள். ஆனால் உண்மையில் புஷ்யமித்திரா பிராமணன்தானா என்பதே சந்தேகத்திற்குறியது. அவனை அனாரியன் என்றுதான் சொல்கிறார்கள். அசோகவதனா என்ற புத்த நூல் இவனை அசோகரின் வாரிசு என்றும் மயூரா பரம்பரையில் வந்தவன் என்றும் சொல்கிறது. உண்மையில் அவன் பல புத்த விஹாரங்களையும் ஸ்தூபிகளையும் கட்டியவன்.  கீழே உள்ள படத்தில் அவனை பிராமண கொலை வெறியனைப்போல் சித்தரித்து அவன் புத்தத்தை அழித்தவனாகத் தான் சரித்திரத்தை எழுதி வைத்துள்ளார்கள். விக்கியல் அவனது படத்திற்கும் சரித்திர புத்தகத்தில் அவனது படத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. படங்களை கீழே காணலாம்.

h

சரித்திரத்தில் பிராமணர்கள் அரச பரம்பரை வம்சம் என்று ஒன்று இருந்ததா என்பதே கேள்விக்குறியது ? உண்மையில் பிராமண கலப்பினால் உண்டான வம்ச பரம்பரைகள் இருந்ததற்கு சான்றுகள் பல உள்ளன. அதை வைத்து பிராமணர்கள் அரசாண்டார்கள் என்பது சரியாகாது. ஆனால் விக்கியில் 18 பிராமண அரசபரம்பரை பாரதத்தை ஆண்டதாகப் பட்டியல் கொடுக்கிறார்கள். ஆனால் இப்படியான ஷத்திரியர் – வைசியர் – சூத்திரர் என்ற அரசபரம்பரை பட்டியல் காணப்படவில்லை காரணம் கெட்ட நிகழ்வுகளின் பழியைப் பிராமணன் மேல் சுமத்துவதும் ஹிந்து மதத்தைப் பழிப்பதும் சுலபம் என்ற உள் நோக்கம்தான். இன்று வரை இந்த சரித்திரபுரட்டு நடந்துகொண்டுதான் இருக்கிறது. பாரதத்தின் பழைய ( Ancient ) மத்தியகால ( Medieval  ) & ( Modern ) நவீனக் கால சரித்திரத்தை ஆதாரங்கள் இல்லாமல் குழப்பியுள்ளார்கள். பழைய சரித்திரத்திற்கான ஆதாரங்கள் நம்நாட்டைவிட வெளிநாட்டின் யாத்திரிகர்களின் வருகையால் அவர்கள் மொழியில் எழுதிய குறிப்புகளிலிருந்துதான் உண்மை நிலவரம் அறியமுடியும் ) (மெகஸ்தனீஸ் – பாகியான் – யுவாங்சுவாங் – மற்றும் பலர் ).மத்திய மற்றும் நவீன சரித்திறத்திற்கான ஆதாரங்கள், துலுக்கர்களின் அட்டூழியங்கள் பற்றித் துலுக்க சரித்திர ஆசிரியர்கள் எழுதியதும், வெள்ளையர் பற்றி அவர்களே எழுதிய சரித்திர உண்மைகள் இருந்தும் அவற்றை எல்லாம் மறைத்துத்தான் சரித்திர புத்தகங்களைத் துளிகூட வெட்கம் இல்லாமல் அடிமை புத்தியால் ஆக்கிரமிப்பாளர்களை பற்றிப் புகழ்ந்தும் எழுதிக் குழப்பியுள்ளார்கள்.

வித்யாரண்யர் அரிகரா – புக்கா என்ற இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்களை ஹிந்து மதத்திற்குத் திரும்பச் செய்து பின்புதான் விஜயநகர பேரரசை ஏற்படுத்தினார். இப்பேரரசின் கோட்பாடுகளில் ஒன்று ”PROTECTORS OF BRAHMIN’S AND COW’S” என்பதாகும். இதைப் போல் சிவாஜியின் கோட்பாடும் (GAUBRAHMANA PRATIPLAK) என்பதாகும். சிவாஜியின் ஆசிரியர் ”தாதோஜி கோன்தேவ்” என்ற பிராமணர். மராட்டிய பேரரசின் படைத் தளபதிகள் எல்லாம் சித்பவன பிராமணர்களான பேஷ்வாக்கள் ஆவார்கள். பல சூத்திர அரசு பரம்பரைகளின் மந்திரிகளாகவும் –  படைத் தளபதிகளாகவும் – குருமார்களாகவும் பிராமணர்கள் இருந்தார்கள். (கடம்பாஸ் – சாலுக்கியாஸ் – காகதியாஸ் – கோண்ட்ஸ் – சாட்ஸ் – பில்ஸ் மற்றும் பல). தெற்கே ஏற்பட்ட ரெட்டி அரச பரம்பரை தங்களது சூத்திர வர்ணத்தைப் பெருமையாகச் சொல்லிக்கொண்டது. (இறைவனின் தாமரை கமல பாதத்திலிருந்து தோன்றியவர்கள் என்பதால்) (REDDY DYNASTY PROUD OF THEIR SHUDRA CAST – EMERGED FROM THE LOTUS FEET OF THE LORD).

1

நானா பட்நாவிஸ்

2

மஞ்சள் நிறத்தில் இருப்பது மராட்டிய எல்லைகள்

நானா பட்னாவிஸ் என்ற சித்பவன பிராமணர் மராட்டியப் பேரரசின் பேஷ்வாக்களில் திறமை மிக்க அமைச்சராக 20 வருடம் பணியாற்றினார். புத்திசாதுர்யம் – திறமைகள் வாய்ந்த ஒற்றர்படை – பல போர்யுக்திகள் – கலைகளில் ஆர்வம் – திறமையான அரசு நிர்வாகம் போன்ற குணங்களால் இவரை மராட்டிய சாணிக்யர் என்று அழைப்பார்கள். இவர் இரண்டு ஆங்கில போர்களில் வெற்றி கண்டார். இவரை ஜேம்ஸ் டஃப் என்ற ஐரோயியர் ”மராட்டிய மச்சியாவெல்லி” என்று கிண்டலாக அழைத்தார். மச்சியாவெல்லி என்றால் அதர்மமான நரித் தந்திரம் அல்லது நம்பிக்கை துரோகம். இதற்கும் சாணிக்கிய தந்திரத்திற்கும் வேற்றுமை உள்ளது. ஆங்கிலேயர்கள் மராட்டியருடன் இரண்டு ஒப்பந்தங்கள் செய்து கொண்டு அவற்றை மீறிய நம்பிக்கைத் துரோகிகள். மராட்டியர்களிடமிருந்துதான் பாரதம் ஆங்கிலேயர் வசம் சென்றது முகலாயர்களிமிருந்து அல்ல. நானா பட்னாவிஸ் முகலாயர்களுக்கும் -ஆங்கிலேயர்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்து வந்தார்.

மராட்டிய எல்லைகள் பாரத தேசம் முழுவதும் பரவியிருந்தது. சுயநல மராட்டியச் சர்தார்கள் தங்கள் சொந்த நலனைத் தேடிக்கொண்டிருக்கையில் இவர் மராட்டிய பேரரசை உயர்த்திப் பிடிப்பதில் உறுதியாக இருந்தார். அப்பொழுது இவருடன் மற்ற பகுதிகளில் மசாத்ஜி ஷிண்டே – அஹில்பயாபாய் ஹோல்கர் – சவாய் மதவ்ராவ்  போன்றவர்கள் இருந்தார்கள்.  மராட்டியப் பேரரசின் சிற்றரசர்களாக பரோடாவில் கெய்க்குவாட் வம்சத்தவரும் – மால்வா மற்றும் இந்தூரில் ஓல்கா வம்சத்தவரும் – குவாலியரில் சிந்தி வம்சத்தவரும் – நாக்பூரை போன்சலே வம்சத்தவரும் – தார் மற்றும் தேவாஸ்சை பாவார் வம்சத்தவரும் – தஞ்சாவூரை மராட்டிய வம்சத்தவரும் ஆளுகை செய்ய வழிவகுத்தார். பாரதியர்கள் அனைவரும் பேஷ்வாக்களுக்கு சாமிகள் ஜாதி வேறுபாடுகள் என்பது அடியோடு கிடையாது. ஆனால் தற்போது சரித்திரத்தை அவர் அவர் மனம் போன போக்கில் மாற்றி பேஷ்வாக்களை பிராமணர்கள் என்பதால் குற்றவாளியாக  சித்தரிக்கும் கொடுமை சமீப காலமாக நடந்து வருகிறது. காரணம் மகாராஷ்டிராவில் தேவிந்திர பட்னாவிஸ் நேர்மையான ஆட்சிசெய்து கொண்டிருந்தது தேசத் துரோகிகளுக்குப்  பிடிக்கவில்லை ?

நானா பட்னாவிஸ் பல கலைகளில் ஆர்வம் உள்ளவர். மகாராஷ்டிராவிலிருந்து வாரனாசிவரை பல கோயில்கள் – குளங்களைக் கட்டினார். கிருஷ்ணா நதிக்கரையில் ஒரு கலை மிகு கட்டிடத்தைக் கட்டினார். இது இப்பொழுது யாத்திரிகர் ஸ்தலமாக உள்ளது. (நானா வாடா – என்பது முற்றங்கள் – தாழ்வாரங்களுடன் கூடிய பல அடுக்கு கட்டிடம்) மேனாவலியில் உள்ள காட் ஒரு யாத்திரிக ஸ்தலம் ஆகும். வடக்கில் கர்மனாசா நதியின் குறுக்கே அணைகட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டது.. சித்திரத்தில் ஆர்வம் உடையதால் பல சின்ன சின்ன சித்திரங்களின் தொகுப்பும் ஒரு கலை பள்ளியும் புனேவில் உள்ளது.

3

கிருஷ்னா நதிகரையில் உள்ள வாடா என்ற எழில்மிகு கட்டிடம்

4

மூன்றாம் பானிபட் போரில் இவர் 12 பேர் கொண்ட ரகசிய படைப் பிரிவில் பங்கேற்றார். ஆனால் அகமதுஷா துரானியை வெற்றி கொள்ள முடியவில்லை. அங்கிருந்து தப்பி சென்றார். தோல்விக்குக் காரணம் துரானிய அரசனான அகமதுஷாவுடன் உள்ளூர் துலுக்க சிற்றரசர்கள்  இணைந்ததும் மராத்தியர்களுக்குச் சீக்கியர்களும் – ரஜபுத்திரர்களும் உதவாததுதான் காரணம். இதனால் பஞ்சாம் – டெல்லி – ஜம்மு காஷ்மீர் போன்ற பல பகுதிகள் மராட்டிய சாம்ராஜ்யத்திலிருந்து பிரிந்தது.

ஷிண்டே – ஹோல்கர் – மதவராவ் – நானா பட்னாவிஸ் எல்லோரும் சமகாலத்வர் இவர்கள் குறுகிய ஆண்டுக் கால அளவில் (1794-1800) இயற்கை மரணம் அடைந்தார்கள். நாட்டில் அப்பொழுது வறட்சி நிலவியிருந்தது. 27 ஆண்டுகளாக முகலாயர்களை அடக்கிய சிவாஜியின் தந்திரங்களைப் பின்பற்றி ஆட்சி செய்யத் தகுதியானவர்கள் இல்லாததால் 2வது மராத்தா போரில் ஆங்கிலேயர்கள் வென்றார்கள்.

6

பாலாஜி விஸ்வநாத பேஷ்வா

7

விஸ்வநாதனின் மகன் பாஜி ராவ்

பாலாஜிவிஸ்வநாத பேஷ்வா அவரது மகன் பாஜி ராவ் இருவரும் மராட்டிய பேரரசின் அமைசர்களா பணியி்ல் இருந்தவர்கள். இவர்கள் கொங்கணி பிராமண பட். இவர்கள் இருவரும் ஈடுபட்ட 42 போர்களில் ஒன்றில்கூட தோல்வியைத் தழுவவில்லை. அவர்களது ஆட்சியில் மராட்டிய பேரரசு பாரதத்தின் பெரும் பகுதியைக் கைப்பற்றியது. கொலைகாரர்களான அக்பரையும் – பாபரையும் நல்லவர்களாகச் சித்தரித்து சரித்திரத்தை எழுதுகிறோம். ஆனால் பேஷ்வாக்களின் பங்களிப்பை பிராமணன் என்பதால் புறக்கணிக்கிறோம்.

2

 Baji Rao II Beshwa priminister of Maratha

1818 ஆம் ஆண்டு மூன்றாவது ஆங்கில – மராதா போரில் பாஜி ராவ் -2 தோல்வி அடைந்தார். இந்த போரில் ஆங்கில படையில் மகர்களும் மற்ற பல ஜாதியைச் சேர்ந்த ஹிந்துக்களும் படை வீரர்களாக இருந்தார்கள். இந்த போரில் ஆங்கில படையில் இறந்த ஹிந்து வீரர்கள் நினைவாக பூனாவில் உள்ள கோரேகானில் ஒரு நினைவு ஸ்தூபியை ஆங்கில அரசு நிறுவியது. அதில் இறந்த படை வீரர்கள் பெயர்கள் மட்டும் எழுதப்பட்டிருந்தது. இங்கே ஒருமுறை அம்பேத்கர் சென்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அன்று முதல் வருடம் தோறும் மகர்கள் அந்த நாளில் ஒரு விழா கொண்டாடுவது என்று ஆரம்பித்தார்கள். இது ஆரம்பத்தில் சிறு சிறு மராட்டியர்கள் எதிர்ப்புக்களுடன் தொடர்ந்த விழா என்பது பெரிதுபடுத்தப்பட்டு பூதாகாரமாக உருப்பெற்றது. சித்பவன பிராமண பேஷ்வாக்கள் கீழ் ஜாதியினரை கொடுமைப்படுத்தியவர்கள் மகர்களை தங்கள் படையில் சேர்க மறுத்தனர் என்ற காரணங்களினால் பேஷ்வாக்களின் தோல்வி மகர்களின் வெற்றியாகக் கருதப்பட்டது. சொந்த நாட்டில் உள்ளவனை எதிர்த்து தங்கள் உரிமைகளைப் பெறுவதை விட அன்னியனுக்கு அடிமைப்படுவதை பெருமையாக எண்ணும் எண்ணம் பல இந்தியர்கள் மனதில் இன்றும் இருப்பது பாரதியர்களின் சாபக் கேடு ?.

மகர்கள் சொல்லும் ஆங்கில படையில் ரிஜிமெண்ட் என்பது 1941 இல் தான் ஏற்பட்டது. 1818 ஆம் ஆண்டு ஆங்கில படையில் பல ஜாதியை சேர்ந்தவர்கள் இருந்தார்கள் என்றால் இதை எப்படி மகர்கள் ரிஜிமெண்ட் வெற்றியாகக் கருதமுடியும். மற்றும் சிவாஜி தொடங்கி  பேஷ்வாக்கள் வரை யாரும் ஜாதி பேதம் பேசி ஆட்சி செய்ததில்லை. மராத்தி மொழியில் வந்த ஒரு வாசகம் இதற்குத் தகுந்த சான்றாகும் –

One of the Sardars of the Peshwas, Nana Purandare writes [rough translation from the Marathi original],

In the house of the Peshwas, there are small and big (people) , good and bad (people) but there is not at all any pride about caste. All are children of the Peshwa. We (all) servants know that Deshastha, Kokanastha, Karhade, Prabhu, Shenvi, Marathas- all are of the Swami. Swami is the mother and father (मायबाप) of all these (people). Everyone must serve the state. There should be no pride about caste discrimination (जातिभेद).

One can now clearly judge what the prevalent thinking at least in terms of government service and the Peshwas’ outlook regarding it was.

பேஷ்வாக்களின் சர்தார்களில் ஒருவரான நானா புரந்தரே எழுதுகிறார் [மராத்தி மூலத்திலிருந்து தோராயமான மொழிபெயர்ப்பு], பேஷ்வாக்களின் வீட்டில், சிறிய மற்றும் பெரிய (மக்கள்), நல்ல மற்றும் கெட்ட (மக்கள்) உள்ளனர், ஆனால் சாதி பற்றி எந்த பெருமையும் இல்லை. அனைவரும் பேஷ்வாவின் குழந்தைகள். தேசஸ்தா, கோகனாஸ்தா, கர்ஹடே, பிரபு, ஷென்வி, மராட்டியர்கள்- அனைவரும் சுவாமியைச் சேர்ந்தவர்கள் என்பதை நாம் (அனைவருக்கும்) ஊழியர்கள் என்று அறிவோம். இவையெல்லாவற்றிற்கும் (மக்கள்) தாய் மற்றும் தந்தை (मायबाप) சுவாமி. அனைவரும் அரசுக்குச் சேவை செய்ய வேண்டும். சாதி பாகுபாடு (जातिभेद) பற்றி பெருமை இருக்கக்கூடாது. குறைந்தபட்சம் அரசாங்க சேவையைப் பொறுத்தவரையில் நிலவும் சிந்தனை மற்றும் அதைப் பற்றிய பேஷ்வாக்களின் பார்வை என்ன என்பதை இப்போது தெளிவாகத் தீர்மானிக்க முடியும்.

j

கோரேகான் நினைவு ஸ்துபி – பூனா

இப்படி அர்த்தமற்ற ஒருவிழா வருடம்தோறும் கொண்டாடுவது 2018 ஆம் ஆண்டு ஒரு பெரிய கலவரமாக உருவெடுத்த பல உயிர்ச்சேதங்களும் – சுமார் 8 கோடி மதிப்பிலான பொருள் சேதங்களும் ஏற்பட்டு – விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு – சொல்லும் ஆதாரங்கள் அற்ற காரணங்களை மறுத்து விழா கொண்டாட்டங்கள் அர்த்தமற்றது என்று நிரூபணமாயிற்று.

(தொடரும்)

பின்னூட்டமொன்றை இடுக