பிராமண வெறுப்புணர்வு (புனைவும் உண்மையும்) Part – 3

1

குருநானக் 14 ஆம் நூற்றாண்டின் இறுதியில் லாகூரில் பிறந்தார். அப்பொழுது வட இந்தியா முழுவதும் கலவரம் நிறைந்த பூமியாக இருந்தது. 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய பக்தி இயக்கம் 15 ஆம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் உச்சத்திலிருந்தது. குருநானக் சீடர்கள் மொத்தம் 10 பேர். அதில் இருவர் துலுக்கர்களால் கொலை செய்யப்பட்டார்கள். சீக்கிய மதம் ஒரே ஒரு கடவுள்தான் அவர் எல்லா மதத்தினருக்கும் பொதுவானவர்.  நல்லொழுக்கம் – தேசபக்தியே வாழ்க்கை என்ற கொள்கை கொண்டது.. ஹிந்து- முஸ்லீம் ஒற்றுமையை வித்திட்டவர். இவரது மத கொள்கை நூலுக்குப் பெயர் ஆதிகிரந்தா. இந்த தொகுப்பை எழுதியவர்கள் எல்லா மத, ஜாதிகளைச் சார்ந்தவர்கள். மொத்தம் 36 தொகுப்புகளை கொண்ட இந்த நூலின் 16 பகுதிகள் ஜயதேவர் ராம் ஆனந் போன்ற பல பிராமணர்களால் எழுதப்பட்டது. பாய்சிங்க புரோகித் என்ற பிராமணர் குரு அர்கோபிந் மகளான பீபீவீரோவை துலுக்கர்களிடமிருந்து காப்பாற்றினார்.  பாய்  சதிதாஸ்பாய் மதிதாஸ் என்ற இருபிராமணர்கள் குருதேவ்பஹதூர் உடன் போர்க்களத்தில் உயிர்த்தியாகம் செய்தார்கள். பண்டிட் கிருபாராம் என்ற பிராமணர் குரு கோவிந்சிங்கிற்கு வேதம் மற்றும் புராணங்களைப் போதித்தார்.

பல பிராமணர்கள் மஹாராஜா ரன்சித்சிங்கிற்கு போர்க்களங்களில் உடன் இருந்து உயிர்த்தியாகம் செய்துள்ளனர். குரு கோவிந் சிங்கல்சா” (Khalsa )என்ற உயர் படைப்  பிரிவை உருவாக்கினார். இதில் பல ஒழுக்ககட்டுபாட்டு விதிகளை ஏற்படுத்தினார். தங்கள் மதத்திற்காகவும் தங்கள் தாய் நாட்டிற்காகவும் உயிரைவிடவும் தயாராக உள்ள நபர்களை தேர்ந்தெடுத்தார். இவர்கள் தலை முடியை வெட்டக்கூடாது – டர்பன் அணியவேண்டும் – குத்துவாள் இருக்கவேண்டும் – மரசீப்பு – இரும்பு வளையம் இருக்க வேண்டும் – உடை நடைமுறையைப் பின்பற்றவேண்டும். இவர் ஏற்படுத்திய சபைக்கு ”அகல் தக்” (Akal Takht  ) என்றும் அதன் தலைவர்கள் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் – அவர்களுக்குப் பெயர் ”ஜதீதார்ஸ் (Jathdars  ). பாய் குருதாஸ் என்ற பிராமணர்தான் இதன் முதல் தலைவர் அவரே ஆதிகிரந்தத்தின் முதல் தொகுப்பை எழுதியவர்.

இப்படி பிராமணர்கள் பலர் சீக்கியர்களுக்கும், சீக்கிய மதத்திற்கும் செய்த தொண்டினை இன்று வெகுவாக மறந்துவிட்டார்கள். அதுவும் நவீன சீக்கியர்கள் (Neo Sikhs ) குரு கோவிந்தசிங்கின் மகன்களை கங்குகவுல் என்ற பிராமணர் துலுக்கர்களிடம் காட்டிக்கொடுத்தார் என்ற ஒரு கட்டுக்கதையை அதுவும் பல சீக்கிய அறிஞர்களால் ஆதாரம் அற்றது என்று மறுத்தும் பிராமணர்கள் மீது பழி சுமத்தியதால் பல பிராமணர்கள் சீக்கிய மதத்திலிருந்து தாய்மதம் மாறினார்கள்.

2

காஷ்மீர் பண்டிட்டுகள்         அகதிகள் முகாம்

காஷ்மீரம் நீண்ட சரித்திர தொடர்ச்சி உடைய பாரத தேசம்.  புராண காலம் தொட்டு அது ஹிந்துக்களின் புனிதத் தலமாகவும் – பல சமஸ்க்கிருத வல்லுநர்களைத் தோற்றுவித்த மாநிலம். ராமனின் புதல்வர்கள் ஆண்ட இடம்.  அதன் எல்லைகள் தற்போதைய எல்லையைப் போல் இரண்டுமடங்கு பெரியது.  இன்று பல பகுதிகள் ஆப்கானிஸ்தானிலும் – சைனாவிலும் – பாக்கிஸ்தானிலும் பிரிந்து விட்டது. இதன் ஆதிக்குடிகள் மலைவாழ் மக்களும் சரஸ்வத பண்டிட்டுகளும்மே ஆகும். இது முதல் முதலில் ஒரு பிரம்மாண்டமான ஏரியாக இருந்ததை காஸ்யப முனிவர் இறை அருளால் வற்றவைத்து ஒரு எழில்மிகு பள்ளத்தாக்காக மாற்றினார். இவர் வாழ்ந்த இடம் என்பதால் காஷ்மீரம் என்று பெயர் பெற்றது என்றும். சமஸக்கிருத மொழியில் கா – என்றால் நீர் என்றும் ஷிமிரா – என்றால் உலர்ந்த என்றும் அர்த்தம் அதனால் இதற்கு காஷ்மீரம் என்ற பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள்.  பண்டிதர்கள்தான் பள்ளத்தாக்கை விளை நிலமாக மாற்றினார்கள். 13 ஆம் நூற்றாண்டு வரை காஷ்மீரத்தைத் தொடர்ந்து ஹிந்து மனனர்களும் அசோகர் – கனிஷ்கர் போன்ற பல பொளதர்களும் ஆட்சி செலுத்தினர். கனிஷ்கர் காலத்தில் ஹூயென் சாங் என்ற சீன யாத்திரிகர் வந்தார். இவர் காலத்தில் தான் முதல் முதலில் உலக புத்த மாநாடு கூட்டப்பட்டது. காஷ்மீரத்தில் முதல் முதல் சைவம் தோன்றியது. வசு குப்பதரின்சிவசூத்திரங்கள்” பிரசித்தி பெற்றது. அபிநவகுப்தர் சைவத்தை மேலும் விரிவு படுத்தினார். ராஜ ராம தேவரால் மார்தாண்டன் சூரிய கோவில் நிறுவப்பட்டது. லலித் ஆதித்தியா என்ற ஹிந்து அரசன் காலத்தில் மார்தாண்டா சிவன் கோவில் விரிவுபடுத்தப்பட்டது. இவர்காலத்தில் தான் ”கலஹன்” என்ற சமிஸ்க்கிருத வல்லுநர் ராஜதரங்கிணி என்ற சரித்திர நூலை இயற்றினார். சோமதேவர் என்பவர் ”கதசரிடசாகரா” என்ற நூலை இயற்றினார்.

3

மார்தாண்டன் சூரிய கோவில் – சுல்தான் சிகந்தரால் இடித்து தள்ளப்பட்டது.

மத்திய கிழக்கு துலக்க நாடுகளிலிருந்து ”சூபி மிஷினரிகள்” 13 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் நல்லவர்கள் போல் காஷ்மீரத்தில் நுழைந்தார்கள். ”ஷெயிக் நூருதின் நுரான்” சைவ நெறியையும் – இஸ்லாமியக் கோட்பாடுகளையும் இணைத்து பிரசாரங்கள் மேற்கொண்டார். காஷ்மீரிகள் இவரை ”நூந்த் ரிஷி” என்று அழைத்தார்கள். இவர்களுடன் பல பழங்குடி ஆண்களும் இந்த பள்ளத்தாக்கில் குடியேறினார்கள். மிசினரிகளால் மதமாற்றம் தொடங்கப்பட்டது. அப்பொழுது காஷ்மீரை சுகதேவா என்ற ஹிந்து மன்னன் ஆட்சி செய்து வந்தான். அதே சமயம் லடாக்கில் புத்த அரசு ஆட்சியிலிருந்தது. அரசனின் மருமகன் ரின்சான் தகராறு காரணமாக நாடுகடத்தப்பட்டு அவன் காஷ்மீர் அரசனிடம் சரண் அடைந்தான்.

சுஹதேவா செய்த தவறு லாடாகிலிருந்து துரத்தப்பட்ட ரின்சான் மற்றும் ஸ்வாட் மத்திய கிழக்கிலிருந்து வந்த சமீர் சுல்தானுக்கும் அமைச்சர் பதவிகளை அளித்தான். அப்பொழுது மங்கோலியாவிலிருந்து 70 ஆயிரம் காட்டுமிராண்டி படைகளுடன் ”துல்கூவின்” என்பவன் காஷ்மீரத்தைத் தாக்கினான். அவர்களை வெல்ல முடியாமல் சுஹதேவா திபெத்திற்கு ஓடிவிட்டார். துல்கூவின் பனியில் சிக்கி மாயமானான். அவனது படை வீரர்கள் பலர் திரும்பி சென்றனர் பலர் அங்கேயே தங்கிவிட்டனர். பின் அமைச்சராக இருந்த ராமச்சந்திரா அரச பதவியைப் பிடித்தான். ஆனால் ரின்சானின் சதியால் ராமசந்திராவும் கொல்லப்பட்டார். ராமசந்திராவின் மகள் கோட்டா ராணி தன் தந்தையைக் கொன்றவனையே அரசியல் காரணங்களுக்காக மணக்கிறான். அவனுக்கு ஒரு மகனும் பிறக்கிறான். தான் ஹிந்து மதத்திற்கு மாற தாயாராக இருப்பதாகவும் ஆனால் அதை தேவசாமி என்ற  பிராமண பண்டிதரும் அவரது சைவ குருவும் மறுத்தார்கள் அதனால் இ்ஸ்லாத்திற்கு மாறி சத்ருதீன்ஷா என்று பெயரை மாற்றிக் கொண்டான் என்று சரித்திரம் எழுதி வைத்துள்ளார்கள். உண்மையில் அவன் சூபி வழிவந்த புல்புல்ஷா என்பவரால் ஈர்க்கப்பட்டு அவனும் அவனது படையிலிருந்த வீரர்களும் இஸ்லாத்திற்கு மாறினார்கள். மேலும் அவன் மத மாற்றத்தை ஊக்குவித்தான். பின்பு குருவின் நினைவாக ”லங்கர் கானா” என்ற தர்ம சத்திரத்தைக் கட்டினான். புத்த கோவிலை இடித்து ”பட் மஸ்ஜித்” என்ற மசூதியைக் கட்டினான். முடிவில் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்படுகிறான்

4

ரி்ன்சா என்ற சத்ருதீன்ஷா

பின்பு கோட்டா ராணி உதயண்ண தேவா என்ற ஹிந்துவை மணக்கிறாள்.  அவனுக்கும் ஒரு ஆண்மகன் பிறக்கிறான். கோட்டா ராணியின் ஆட்சியில் ஜீலம் நதி குறுக்கே ”குட்கோல்” அணை கட்டப்பட்டது வெள்ளச் சேதத்தைத் தவிர்கவும், நீர் பாசனத்தைப் பெருக்கவும் பயனை அளித்தது. இவர் ஆட்சியின் போதும் ”அலாசா” என்றவன் தலைமையில் மற்றொரு மங்கோலியப் படை காஷமீரைத் தாக்கியது. கோட்டாராணி ஷாமீர் துணை கொண்டு தீவிரமாகப் போராடி மங்கோலியர்களை விரட்டினார். ஆனால் அவள் கணவர் உதயண்ண  தேவா பயத்தால் நாட்டைவிட்டு ஓடிவிட்டார். ஷாமீர் வெகுநாட்களாக அரசாட்சியை கைப்பற்றும் எண்ணத்தோடு தனது படைப்பிரிவில் அதிக எண்ணிக்கையில் துலக்கர்களைச் சேர்துவந்தான். இதை அறிந்த ராணி ”பட்டா பிக்க்ஷனா” என்ற பிராமணனை முதல் மந்திரியாக நியமிந்தாள். சினம் கொண்ட ஷமீர் சந்தர்பத்தை எதிர் நோக்கி பட்டா பிக்ஷனாவை சூழ்சிசெய்து தன் படுகை அறையில் கொன்று விடுகிறான். பின்பு உதயண்ணன் நாடு திரும்பியதும் அவனையே மறுபடியும் முதல் மந்திரியாக நியமித்தாள். பொறுமையிழந்த ஷமீர் தன் துலக்கபடை உதவியுடன் கோட்டா ராணியைச் சிறை காவலில் வைத்தான். மேலும் தன்னுடன் ஒருநாள் படுக்கையைப் பகிர்ந்து கொண்டால் அவளை மன்னித்து நாடு கடத்துவதாக வாக்களித்தான். அதற்கு ஒப்புக் கொள்வது போல் வாக்களித்த ராணி மறு நாள் சபையில் எல்லோர் முன்னிலையிலும் தன்னுடைய கர்பப்பையை கிழித்து அவன் மீது வீசி மாண்டுபோனார்.

5

கோட்டா ராணி

6

டித்தா ராணி

லோஹரா வம்சத்தைச் சேர்ந்த ”டித்தா” ராணி 958 ஆம் ஆண்டு முதல் 1003 ஆண்டுவரை சீரான ஆட்சியை நடத்தினாள். பல ஆண் வாரிசுகளை புரம் தள்ளி தன்னை எப்பொழுதும் சிரத்தன்மையுடன் நிலை நிறுத்திக் கொண்டார். இவள் சற்று கால் ஊனம் உடையவள். அவளை பணிப்பெண்கள் முதுகில் சுமந்து செல்வார்கள். அதனால் இவளது தந்தை தனது உறவினர்களைப் பதவியில் அமர்த்தினார். அவர்களை எதிர்த்து தன்னை முதன்மைப் படுத்திக்கொண்டார்.. இவரது அரசவையில் பெரும்பாலானவர்கள் பெண் ஆதிக்கம் என்று சொல்லி எதிர்த்ததை வெகு திறமையாகச் சமாளித்தார். தன் பரம்பரை ஆண் வாரிசுகளில் சிலரை தந்திரமாகக்  கொலையும் செய்தார். கேஸ்மகுப்தா என்பவனை மணந்து கொண்டார். அவன் சில வருடங்களுக்குள் நோய்வாய் பட்டு உயிர் இழந்தான். இவர்கள் உருவத்தில் காப்பர் நாணயங்கள் முதல் முதலில் வெளிவந்தது. இவள் நிறைய ஹிந்து கோவில்களைக் கட்டினாள். இளம் வயதில் கணவனை இழந்ததால் அவள் ”துங்கா” என்ற தன்னை விட வயதில் குறைந்த  ஆடு – மாடு மேய்ப்பவனைக் கல்யாணம் செய்து ஒரு புரட்சி செய்தார்.  இதனால் பல எதிர்புகளைச் சந்திக்க நேர்ந்தது. இவள் பிராமணர்களுக்கு நிறைய நிலங்களையும் – செல்வங்களையும் தானம் செய்தார். தனது 79 ஆம் வயதில் உயிர்நீத்தார்.

1339 ஆம் ஆண்டில், ஷா மிர் காஷ்மீரின் முதல் முஸ்லீம் ஆட்சியாளரானார், ஷா மிர் வம்சத்தைத் தொடங்கினார் .  1586 முதல் 1751 வரை ஆட்சி செய்த முகலாயப் பேரரசு மற்றும் 1747 முதல் 1819 வரை ஆட்சி செய்த ஆப்கானிஸ்தான் துரானி பேரரசு உள்ளிட்ட முஸ்லிம் மன்னர்கள் காஷ்மீரை ஆண்டனர். பின் ரஞ்சித் சிங்கின் கீழ் சீக்கியர்கள் காஷ்மீரை ஆண்டனர்..  பி்ன்பு 1846  முதல் ஆங்கில-சீக்கியப் போர் , மற்றும்  பிரிட்டிஷ் கீழ் அமிர்தசரஸ் உடன்படிக்கை , டோக்கிரா வம்சம்  குலாப் சிங், காஷ்மீரின் புதிய ஆட்சியாளரானார். பிரிட்டிஷ் மகுடத்தின்  கீழ் அவரது சந்ததியினரின் ஆட்சி. கடைசி மன்னர்  ஹரி சிங்  1925 – 1947 வரை.

துலுக்க சூபிகளால் தொடங்கப்பட்ட மத மாற்றம் ஷாமீர் சுல்தான் காலத்தில் தீவிரமடைந்தது. கைலாசநாதர் கோவில் சேதப்படுத்தப்பட்டது. மத மாற மறுத்து 30 ஆயிரம் பண்டிட்டுகள் நாட்டை விட்டு வெளியேறினர். இதே கொடுங்கோல் ஆட்சி ஷியா பிரிவை சேர்ந்த யூசூப் ஷாசக் காலத்திலும் தொடர்ந்தது. அப்பொழுதும் மதம் மாற மறுத்து பல ஆயிரம் பண்டிட்டுகள் தங்கள் சொத்துகளைத் துரந்து நாட்டை விட்டு வெளியேறினர். பின்பு அக்பரின் கீழ் சில காலம் அமைதியாக இருந்தது. பின்பு வந்த துலுக்கர்களான ஜகாங்கீர் ஷார்ஜகான் ஔரங்கசீப் ஆட்சி காலங்களில் மறுபடியும் பல கொடுமைகள் ஹிந்து பண்டிட்டுகள் மீது கட்டவிழ்க்கப்பட்டது.  அடக்குமுறை – அந்நியாய வரி – நிலங்களைப் பறித்தல் -வாள் முனையில்  மதமாற்றம் – கோவில்கள் இடிப்பு போன்ற பல சித்திரவதைகளை பண்டிட்டுகள் அனுபவித்தனர்.

ஆப்கானியர் ஆட்சியில் இந்த கொடுமைகள் மேலும்  பல்வேறு விதத்தில் நடந்தது. – ”கனிகூட் ” என்ற இடத்தில் ஹிந்து பெண்களை வன்புணர்ச்சி செய்தனர் – வீடுகளைக் கொளுத்தினர் – பண்டிட்டுகளின் கடைகள் சூறையாடப்பட்டது.. லங்கரி குல்ஷா படைகள் பசுக்களை உயிரோடு கொளுத்தினர்.

காஷ்மீரத்து கவர்னரான ஹஜ்கரீம் டாட்கான் பண்டிட்டுகளின் இரண்டு கைகளையும் பின்புறமாக கட்டி கோணிப் பையில் அடைத்து டலால் ஏரியில் தூக்கி எறிவதை ஒரு பொழுதுபோக்காகத் தினமும் செய்தான். ஆப்கானின் துரானி இனத்தைச் சேர்ந்த பாக்கீருல்லா அவனது முதல் அமைச்சர் பாசல் கான் பல ஹிந்து பண்டிட்டுகளைக் கொலை செய்தான். அவனது சபேதாராக இருந்த கைலாஷ் டார் என்ற பண்டிட்டை பட்டப்பகலில் நீதி மன்றத்திலேயே தலையை வெட்டி ஜிலம் நதியில் மிதக்கவிட்டான். ஷியா துலக்கன் முசாராணா ஸ்ரீநகர் ”இட்கா” மைதானத்தில் 4000 பண்டிட்டுகளை விருத்தசேதனம் (சுன்னத்) செய்து மதம் மாற்றினான்.  மறுபடியும் பல ஆயிரம் பண்டிட்டுகள் நாட்டைவிட்டு வெளியேறினர். அரச மொழியாக இருந்த சமஸ்க்கிருதம் பாரசீக மொழியாக மாற்றப்பட்டது. காஷ்மீரத்தில் பண்டிட்டுகள் எண்ணிக்கை 30 சதவிகிதமாக குறைந்து போனது.

7

மஹாராஜா ரன்ஜித்சிங்

பின்பு வந்த சீக்கியர் ஆட்சியிலும் – டோகரா ஹிந்து (ரஜபுத – இஸ்லாமிய கலப்புடைய சரஸ்வத் பிராமணர்கள்) மன்னர்கள் ஆட்சியில் பண்டிட்டுகள் பாதுகாப்புடன் வாழமுடிந்தது. சீக்கிய அரசன் ரன்ஜித் சிங் துலகர்களுக்கு பலத்த பதில் அடி கொடுத்தான். ஆப்கானிய காட்டுமிராண்டிகளை ஓட ஓட விரட்டினார். பல மசூதிகளை இடித்து குருத்துவாராவை கட்டினார். ஸ்ரீநகர் ஜமியா மஸ்ஜித் 21 வருடம் மூடப்பட்டிருந்தது. இது மூன்று முறை இடிக்கப்பட்டு மறுபடியும் கட்டப்பட்டது. ஷா-இ-ஹம்தான் மசூதி இடிக்கப்பட்டது. மாட்டு இறைச்சி உண்ண தடை விதித்தார். நமாஸ் ஓத தடை விதிக்கப்பட்டது. துலுகனின் குர்ரானை அவர்கள் வீட்டு வாசலிலேயே புதைக்க செய்தார். இஸ்லாத்திற்கு மாறிய பலர் தாய் மதம் திரும்ப வழிசெய்தார்.

இப்படி நிம்மதியாக இருந்த எஞ்சிய பண்டிட்டுகளின் வாழ்கையில் மறுபடியும் சூறாவளி வீச தொடங்கியது. காஷ்மீரை ஆண்ட கடைசி ஹிந்து அரசன் ஹரிசிங் பிரிவினையின் போது பலத்த இஸ்லாமிய எதிர்ப்புகளை மீறி இந்தியாவுடன் இணையச் சம்மதித்தார். அரை துலக்கன் நேருவுக்கு ஷேக் அப்துல்லா தம்பிமுறை உறவு – அதனால் அவனை காஷ்மீரத்து முதன் மந்திரியாக நியமித்தார். அப்துல்லா தீவிரவாத குழுக்களின் முதல் தலைவன் 1946 ஆண்டு (Quit Kashmir) ”காஷ்மீரைவிட்டு வெளியேறு” என்ற போராட்டத்தை நடத்தி 3 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றான். ஆனால் சுதந்திரம் அடைந்ததும் அவனை விடுதலை செய்தார்கள்.  சுமார் 2500 கிராமங்களின் ஹிந்து பெயர்களை மாற்றி இஸ்லாமியப் பெயர்களை சூட்டினான். ( Mukbir ) காஷ்மீர் ஹிந்துக்களை ”முக்பீர்” இந்திய ஆட்காட்டிகள் என வர்ணித்தான். 1947-53 பின்பு 1975-82 சுமார் 15 ஆண்டுகள் தீவிரவாதத்திற்குத் தீனி போட்டு வளர்த்தான்.  1954 ஆர்டிகிள் 370 சரத்துத் தனி அந்தஸ்தைக் கொடுத்தது. 1987 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் லிபரேசன் பிரண்டு ” ( JKLF  ). துவங்கப்பட்டது. இதில் முக்கியமாக ஆட்டம் போட்டவன் ”யாசின் மாலிக்”  ( pro-Pakistan guerilla groups such as the Hizb-ul-Mujahideen,  Inter-Services Intelligence – (ISI – Pakistan’s Inter-Services Intelligence ) .இப்படிப் பல தீவிரவாத குழுக்கள் கொடூரமாகச் செயல்பட்டு எஞ்சி இருந்த காஷ்மீர பண்டிட்டுகளை பல கொடுமைகளைச் செய்து கொன்று குவித்தனர். கீழே உள்ள படங்களைக் கொண்டு அவர்களின் வெறிச் செயல்களைப் பற்றி அறியலாம்.

8

Dead bodies of pandits massacred at Wandamana 1998

9

10

11

12

13

14

15

16

மதம் மாறு – செத்து மடி – நாட்டைவிட்டு வெளியேறு 1947 இல் ஒலித்து 1990 வரை தொடர்ந்து சொற்பமாக இருந்த பண்டிதர்களைச் சுதந்திர காற்றைச் சுவாசிக்க விடாமல் பரலோகம் அனுப்பியதற்காக அனைத்து அரசியல் தலைவர்களும் வெட்கப்படவேண்டும்.

17

பம்பாய் கலவரம்

18

சித்பவன பிராமணன்

1948 ஆம் ஆண்டு நாதுராம் கோட்சே காந்தி படுகொலைக்குப் பின் முதன் முதலில் அரசாங்க உதவியுடன் காங்கிரஸ் ஊழியர்கள்-மராட்டியர்கள்-சைனர்கள்-லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக இணைந்து சித்பவன பிராமணர்களின் வீடுகளையும், தொழிற்சாலைகளையும் தாக்கினர். மஹாராஷ்ரா பகுதியிலிருந்த சித்பவன பிராமணர்கள் நிர்வாக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வலுவானவர்களாக இருந்தது பலருக்குப் பொறாமையை ஏற்படுத்தியது. இவர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகவும், காங்கிரசின் மதச்சார்பற்ற ஹிந்து தேசியத்திற்கு எதிரான கொள்கைகளை எதிர்த்தவர்கள்.. மாஹாதேவ் ராணடே, கோபால கிருஷ்ண கோக்லே, லோக்மான்ய திலக், வீர சாவர்க்கர் போன்ற சித்பவன பிராமணர்கள் சுதந்திரப் போராட்டத்தில் தன்னலமற்ற பங்களிப்பைத் தந்தவர்கள். மராட்டியப் பேரரசை விஸ்தரித்துக் கோலோச்சியவர்களான பேஷ்வாக்களும் சித்பவன பிராமணர்கள். கோட்சேயும் சித்பவன பிராமணன்.. இவர்கள் காந்தியின் இஸ்லாமிய பாசத்தை வெறுத்தவர்கள். காந்தி இறந்த 2 மணிநேரத்திற்குள் காங்கிரஸ் ஆதரவுடன் 300 மாவட்டங்களில் கலவரத்தை உண்டாக்கி சித்பவன பிராமணர்களின் வீடுகள் கடைகள் தாக்கப்பட்டுக் கொளுத்தப்பட்டன. பெண்களைப் பலாத்காரம் செய்யப்பட்டனர். 5000 திற்கு அதிகமான பிராமணர்கள் உயிர் இழந்தனர். வீர சேவாக்கரின் சொத்துக்கள் நாசம் செய்யப்பட்டது. அவரது தம்பி வீர நாராயண சேவாக்கர் கல்லால் அடித்தே கொல்லப்பட்டார்.

19

கோட்சேயின் சகோதரர்கள் வன்மையாக தாக்கப்பட்டனர். பல சித்பவன பிராமணர்கள் உயிருக்கு அஞ்சி தங்கள் வீடுகளையும் நிலபுலங்களையும் விட்டுவிட்டுப் பிற மாநிலங்களில் சரணஅடைந்தனர்.  இந்த கலவரம் பற்றிய விவரங்கள் உள்ளூர் பத்திரிகையில் வெளிவராமல் செய்தது காங்கிரஸ் அரசு. பிரிடிஷ்சாரால் உருவாக்கப்பட்ட பிராமண எதிர்பைத் தொடர்ந்து காங்கிரசும் பின்பற்றியதே இந்த கலவரத்திற்குக் காரணமாகும்.

தொடரும்…….

பின்னூட்டமொன்றை இடுக