பிராமண வெறுப்புணர்வு (புனைவும் உண்மையும்) Part – 4

(  பிராமணர்கள் மற்ற ஜாதியினருக்கு கல்வி போதிக்கவில்லை என்ற அண்டப் புளுகு )

( பல கட்டுரைகளில் வந்த பாரதிய பாரம்பரிய கல்வி பற்றிய விமர்சன தொகுப்பு

1

[” பார்ப்பன தமிழும் வேளான் கரந்தமும் விழ விழலே ” (ரெவரண்ட் ஜெ.பி.ராட்லர் – தமிழ் இங்கலிஷ் அகராதி) என்றொரு பழமொழி வழக்கில் உள்ளது. தொல்காப்பியன் என்ற பிராமணன் செய்த தமிழ் இலக்கணமும் அமரசிம்பன் என்ற சூத்திரன் செய்த நாமலிங்கானுசாசனம் என்கிற சமஸ்கிருத நிகண்டும் இல்லை என்றால் தமிழ் மொழியும் சமஸ்க்கிருதமும் விழலுக்கிறைத்த நீராகப் போயிருக்கும் ]

Collector of Bellary, A.D Campbell submitted in the year 1825.

” There is no doubt that in former times, especially under the Hindoo Governments very large grants, both in money, and in land, were issued for the support of learning. Considerable Yeomiahs, or grants of money, now paid to Bramins from my treasury, and many of the numerous and valuable Shotrium villages, now in the enjoyment of Bramins in this district, who receive one-fourth, one-third, one-half, two-thirds, and sometimes the whole, of their annual revenue, may, I think, be traced to this source. Though it did not consist with the dignity of learning to receive from her votaries hire; it has always in India been deemed the duty of Government to evince to her the highest respect, and to grant to her those emoluments which she could not, consistently with her character receive from other sources; the grants issued by former governments, on such occasions, contained, therefore, no unbecoming stipulations on conditions. They all purport to flow from the free bounty of the ruling power, merely to aid the maintenance of some holy or learned man, or to secure his prayers for the state. But they were almost universally granted to learned or religious persons, who maintained a school for one or more of the sciences, and taught therein gratuitously; and though not expressed in the deed itself, the duty of continuing such gratuitous instruction was certainly implied in all such grants.

 பெல்லாரி கலெக்டர், எ.டி. காம்ப்பெல் 1825 ஆம் ஆண்டில் சமர்ப்பித்த அறிக்கை.

முந்தைய காலங்களில் , குறிப்பாக இந்து அரசாங்கங்களின் கீழ், பணத்தினாலும், நிலத்தின் மூலமும் கல்வி கற்பதற்காக மிகப் பெரிய மானியங்கள் வழங்கப்பட்டன  என்பதில் சந்தேகமில்லை . கணிசமான  மானியம் பழைய வழக்கம் போல்  எனது கருவூலத்தில் இருந்து பிராமணர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. மற்றும் பல  மதிப்புமிக்க ஷோஷ்டிரிய கிராமங்கள், இப்போது இந்த மாவட்டத்தில் பிராமணர்களின் கட்டுப்பாட்டில், நான்கில் ஒரு பங்கு, மூன்றில் ஒரு பங்கு,  அரை பங்கு என்று வினியோகம் செய்ப்பட்டுள்ளதைக் கொண்டு இந்த வழக்கத்தின் மூலத்தைக் கண்டறியலாம்.  அவர்கள் மற்றவர்களுக்கு  கற்றுக்கொடுப்பதற்கான  சன்மானமாக இதைக் கருதவில்லை..  இந்தியாவில் எப்போதுமே அவர்களுக்கு மிக உயர்ந்த மரியாதை அளிப்பது அரசாங்கத்தின் கடமையாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது, மேலும் அவர்களது ஆன்மீக சேவைக்காகவும்,  ராஜாங்கங்களின் ஷேமநலனுக்காக செய்படும் பூஜை, தர்ம அனுஷ்டானங்களுக்காகவும் மானியங்களை வழங்குவது அவை கிட்டத்தட்ட உலகளவில் கற்ற அல்லது மத நபர்களுக்கு வழங்கப்பட்ட ஒன்று போல்தான். ஒரு பள்ளியைப் பராமரித்து அதில் இலவசமாகக் கல்வி பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் கற்ப்பிப்பது. விஞ்ஞானம் மற்ற துறை பாடங்களை கற்ப்பிப்பதைத் தொடர்வதற்கான கடமை நிச்சயமாக அத்தகைய அனைத்து மானியங்களிலும் குறிக்கப்படுகிறது.

இதே நிலைமையை மற்ற மாநில கலெக்டர்களின் அறிக்கைகளிலும் காணலாம்.

the Principal Collector of Malabar in 1823

shows that the teachers had never insisted on a regular and exorbitant fee but only received some presents at the end of the studies. The present also varied depending on the capacity of the student. “The private teacher who gives lessons in Theology, Law, etc., does not receive any monthly or annual allowance but a present or compensation when the pupils leave him according to the circumstances and means of each.” 

முதன்மை மலபார் கலெக்டரின் 1823 அறிக்கையில்

குருகுல பள்ளி ஆசிரியர்கள் தவணை முறையிலோ அல்லது ஒரு பெரும் சன்மான தொகையையோ யாரிடமும் என்றும் கேட்டுப் பெற்றதில்லை.  மாறாகப் படிப்பை முடித்ததும் அவர்களாகத் தரும் சன்மானங்கள் பரிசுப் பொருள்களைத்தான் ஏற்றுக்கொண்டனர். இறையியல்,  சட்டம் போன்ற கல்வி கற்று முடித்தபின் வருடத்தின் கடைசியில் அவர்களாகத் தரும் பொருள்களைப் பெற்றுக்கொண்டனர்

19 ஆம் நூற்றாண்டு முதல் காலாண்டு வரை கற்பித்தலை ஒரு சேவை நோக்குடன் தொழிலாகப்  பிராமணர்கள் கொண்டிருந்தனர்.. ஆனால் ஆங்கிலேயர்கள் ஆட்சியைப் பிடித்தபின் விஷயங்கள் மோசமடையத் தொடங்கின. இலவசமாக இருந்த இந்த பாரம்பரிய கல்வி முறை அரிக்கப்பட்டது, ஏனெனில் பொது மக்களும், தொழிலாளர் வர்க்கமும் பிரிட்டிஷ் கொள்கைகளால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.  பிரிட்டிஷ் கொள்கைகள் காரணமாக அவர்கள் வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வேறு இடங்களுக்குக் குடியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  இதனால் அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு இடையூறு ஏற்பட்டது. பாரம்பரிய பள்ளிகளில் சரிவு மற்றும் மாணவர் சேர்க்கை இதன் காரணமாகக் குறைந்து கொண்டு வந்தது. சுய ஒப்புதல் வாக்குமூலத்தில், பெல்லாரி  கலெக்டர் இதைப் பின்வரும் வரிகளில் கூறியுள்ளார்.

1825 Collector of Bellary has said this in the following lines.

“I am sorry to state that this is ascribable to the gradual but general impoverishment of the country. The means of the manufacturing classes have been, of late years greatly dimin­ished, by the introduction of our own European manufactures, in lieu of the Indian cotton fabrics. The removal of many of our troops, from our own territories, to the distant frontiers of our newly subsidized allies, has also, of late years, affected the demand for grain, the transfer of the capital of the country, from the Native Governments, and their Officers, who liberally expended it in India, to Europeans, restricted by law from em­ploying it even temporarily in India, and daily draining it from the land, has likewise tended to this effect which has not been alleviated by a less rigid enforcement of the revenue due to the state. The greater part of the middling and lower classes of the people are now unable to defray the expenses incident upon the education of their offspring, while their necessities require the assistance of their children as soon as their tender limbs are capable of the smallest labour. 

பெல்லாரி கலெக்டர், கி.பி. காம்ப்பெல் 1825 ஆம் ஆண்டில் சமர்ப்பித்த அறிகையில் இவ்வாறு கூறியுள்ளார்

இது நாட்டின் படிப்படியான ஆனால் பொதுவான வறுமைக்குக் காரணம் என்று நான் வருந்துகிறேன்.  கைத்தொழில் வகுப்புகளின் உற்பத்தி – வழிமுறைகள், படிப்படியாக  வெகுவாகக் குறைந்துவிட்டன,  நமது சொந்த ஐரோப்பியத் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், இந்தியப் பருத்தி துணிகளின் உற்பத்தி நலிந்துள்ளது..  இங்கிருந்து மற்ற காலனி நாடுகளின்  தொலை தூர எல்லைகளுக்குப் பல துருப்புக்கள் அகற்றப்படுவதும்;, தானியத்திற்கான தேவை, நாட்டின் தலைநகரை , அதிகாரிகளை மாற்றுவது இவை எல்லாம் பூர்வீக அரசாங்கங்களைப் பாதித்துள்ளது., இந்தியாவில், ஐரோப்பியர்களுக்குத் தாராளமாகச் செலவு செய்த அவர்களின் அதிகாரிகள்,  தற்காலிகமாக அதைப் பயன்படுத்துவதிலிருந்து சட்டத்தால் தடைசெய்யப்பட்டு, தினமும் நிலத்திலிருந்து உணவுப் பொருள்கள் சுரண்டி வெளியேற்றப்படுவதும், அரசாங்கத்தின்  வருவாயை வெகுவாக குறைத்துள்ளது. இதனால் நடுத்தர மற்றும் கீழ் வகுப்பினரின் பெரும்பகுதி வருமானம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.  அவர்களது சந்ததியினரின் கல்வியின் பொருட்டு செலவு செய்ய முடியவில்லை. சிறுவர்களுக்குக் கல்வி அளிக்காமல் விட்டுவிட்டால் முதுமையில் அவர்களிடமிருந்து உதவிகளை எதிர்பார்க்க முடியாது என்ற கவலையில் உள்ளார்கள்.

இது மிகவும் மதிப்புமிக்க அறிக்கையாகும், இது பிரிட்டிஷ் கொள்கைகளின் காரணமாக உற்பத்தி வர்க்கம் அவர்களின் வாழ்வாதாரத்தை இழந்தது என்று கூறுகிறது. இதனால் அவர்களால் தங்கள் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்ப முடியவில்லை. இதன் அதிர்ச்சியான பகுதி என்னவென்றால், குடும்பத்திற்கான வருமானத்தை அதிகரிக்கக் குழந்தைகள் வேலைக் அனுப்பும் நிர்ப்பந்தத்தில் தள்ளப்பட்டார்கள்.பொதுவான மக்களின் வாழ்வாதார வழிமுறைகளையும், அவர்களின் குழந்தைகளின் கல்வியையும் அழித்தனர். பிரிட்டிஷ் ஆட்சியின் முதல் சில தசாப்தங்களுக்குள், நம் சமூகத்தில் உள்ள அனைத்தும் தலைகீழாக மாற்றப்பட்டன.  இந்த பின்னணியில் பிராமணர்கள் செய்த பாவம் என்ன? ஏழை தொழிலாள வர்க்கத்தின் குழந்தைகளுக்குக் கல்வியை மறுத்தவர் யார்? சிறுவயதிலிருந்தே குழந்தைகள் தங்கள் குலத்தொழிலில் முன்னேற்றம் காணவைத்தது எது ?

பிராமணர்கள் பெற்ற தானங்களை என்ன செய்தார்கள் என்று ஒருவர் கேட்கலாம். அவர்கள் ஏன் தங்கள் குருகுலத்தில் குழந்தைகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கவில்லை? கற்பிப்பதற்கான ஊதியத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பது உண்மை என்றால், இந்த தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கான பாரம்பரிய போதனையை அவர்கள் தொடர்ந்திருக்க முடியாதா? உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய இந்த கேள்விகளுக்கான பதிலை அதிர்ஷ்டவசமாக இந்த பெல்லாரி கலெக்டர் பதிவு செய்துள்ளார்.

இந்த நாட்டை கொள்ளையடிக்கும் குறிக்கோளுடன் ஆங்கிலேயர்கள் வந்தார்கள். பிராமணர்களிடம் இருந்த நிலங்களை அபகரிக்க ஒரு சூழ்ச்சி செய்தார்கள். பாரம்பரியக் கல்வியை மாற்றுவதன் மூலம் அவர்கள் அறிமுகப்படுத்திய புதிய வகை கல்விக்காக (SCHOOL FUND  ) (‘ பள்ளி நிதி ) என்ற பெயரில் மானியமாகத் தந்த நிலங்களில் கை வைத்தார்கள்.. பழைய காலங்களில் மன்னர்கள் மற்றும் கிராமக் குழுக்களால் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர் (பிராமணர்) இறந்தால், புதிய செலவுகளைச் சுமக்க “பள்ளி நிதிக்காக”  அந்த நிலங்களைப்  பறிமுதல் செய்தார்கள். பெல்லாரி  கலெக்டர் முதலில் கொடுத்த செயல் அறிக்கையின் படி மெட்ராஸ் கலெக்டர் எல்.ஜி.கே முர்ரே 1825 இல் சமர்ப்பித்த அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது.

The late Collector of Bellary having stated in his report that none of the institutions for education at present existing in that district derive support from the state added ‘there is no doubt that in former times especially under the Hindoo Government very large grants both in money and in land were issued for the support of learning’, and further stated his opinion that many of the Yeomiahs and Shrotriums now held by Brahmins in the district may be traced to these  source.

No conditions he observed ‘are stated in the grants issued by the former governments; they all purport to flow from the free bounty of the ruling power merely to aid the maintenance of some holy or learned man. But they were almost universally granted to learned or religious persons, who maintained schools for one or more of the Sciences and taught therein gratuitously; and though not expressed in the deed itself the duty of continuing such gratuitous instruction was certainly implied in all such grants.’ It does not appear upon what grounds Mr Campbell founded his opinion so confidently that the implied condition of the grants referred to was the continuance of gratuitous instruction; but it seems not to be the result of particular investigation. Mr Campbell further suggested with the view of covering the expense of a general arrangement proposed by him in this report for the improvement of education that it might be provided that ‘on the demise—of any persons now holding Yeomiahs or alienated lands a new enquiry be instituted and that though the same may have been continued for more than one genera­tion by the British Government it may be resumed and carried to a new fund to be termed, “the school fund”, unless it is clearly stated in the body of the original grant to be hereditary, or the intention of the ruling power at the time to make such grant hereditary be clearly proved to the satisfaction of government.’ The Board have little doubt that the resumption of lands now alienated, in the manner suggested by Mr Campbell would produce ample funds for the purpose contemplated but they conceive that the two objects in view, namely, the recovery of alienated lands, and the establishment of a fund for the support of schools should be kept entirely distinct and separate. The establishment of schools in every part of the country under any general plan should be regulated”  

 மேலே உள்ள அறிக்கையின் சுருக்கம் –

“மறைந்த பெல்லாரி  கலெக்டர் தனது அறிக்கையில் தற்போது அந்த மாவட்டத்தில் கல்வி கற்கும் எந்தவொரு நிறுவனமும் மாநிலத்தின் ஆதரவைப் பெறவில்லை என்றும். ‘ முந்தைய காலங்களில் குறிப்பாக இந்து அரசாங்கத்தின் கீழ் மிகப் பெரிய மானியங்கள் பணமாகவும் – நிலங்களாகவும் வழங்கப்பட்டது உண்மைதான். ஆனால் தற்போது பிராமணர்களிடம் உள்ள யோமியாக்கள் – ஸோஷ்டிரியங்கள் எழுத்து மூலம் எந்த ஒரு நிபந்தனைகள் இல்லாமல் தானமாக பொது தொண்டான கோவில் காரியங்கள் பள்ளி செலவினங்களுக்காக வழிவழியாக அரசர்களாலும் தொண்டு நிறுவனங்களாலும் அளிக்கபட்டுவந்தன. இப்படி மதம், கல்வி பொருட்டு தானம் தருவது உலக வழக்கம் தான். நிபந்தனைகள் அற்ற இந்த முறையை எந்த அளவிற்கு வரும் காலங்களில் பின்பற்றுவார்கள் என்று தெரியாததாலும் புதிய கல்வித் திட்டத்தின் செலவை ஈடு செய்யவும் வாரிசு அற்ற பிராமணர்களின் நிலங்களைப் பறிமுதல் செய்யவும் மேலும் பரம்பரை பாத்தியதை உண்டு என்ற ஆவணங்கள் இல்லாதவற்றை பிராமணன் ஒருவன் இறந்தால் அந்த மானியங்களை மகனுக்கு பாத்தியதை இல்லாமல் செய்து ” பள்ளி நிதி” திரட்டவேண்டும்..இப்படி திரட்டிய நில மானியம் மற்றும் அரசு அளிக்கும் கல்வி மானியம் இவற்றின் கணக்கைத் தனித் தனியாக எழுதவேண்டும் என்று பரிந்துரைத்தார்.

பெல்லாரி கலெக்டர் பிராமணர்களின் அபகரிக்கப்பட்ட நிலங்களிலிருந்து உருவாக்கப்படும் பணத்துடன் பள்ளி நிதியை உருவாக்கப் பரிந்துரைத்தார். ஆனால் மெட்ராஸ் கலெக்டர் ஒரு படி மேலே சென்றார். பிராமணர்களிடமிருந்து நிலங்களை கையகப்படுத்த அவர் உடனடியாக ஒப்புக் கொண்டாலும், அவர் அவற்றைப் பள்ளி நிதியிலிருந்து விலக்கிக் கொண்டார். இவ்வாறு அடி மட்டத்தில் கல்வியின் சுய வாழ்விற்காக மன்னர்கள் மற்றும் பரோபகாரிகள் யுகங்களாக வழங்கியவை ஆங்கிலேயர்களால் அந்த நோக்கத்திலிருந்து திசை திருப்பப்பட்டன.

இந்த சூழலில் ஒரு வெளிப்படையான உண்மை என்னவென்றால், திராவிட இயக்கத்தை உருவாக்கிய வணிக வர்க்கத்திற்குச் சொந்தமான நிலங்கள் தி்ட்டத்தில் இல்லை. அவர்களின் நிலங்கள் “பள்ளி நிதிக்காக” பறிக்கப்படவில்லை. பட்ட விருத்தி (கோயில்களின் பராமரிப்பு) மற்றும் கல்விக்காக அவர்கள் பெற்ற பிராமணர்களுக்குச் சொந்தமான நிலங்கள் மட்டுமே பறிக்கப்பட்டன. இது கோயில்களின் பராமரிப்பையும், கிராம மட்டத்தில் கல்வியையும் ஒரே நேரத்தில் அழித்தது. பிரிட்டிஷ் நடவடிக்கையால் தனது நிலங்களை அல்லது உடைமைகளை இழந்த எந்தவொரு திராவிடத் தலைவரையும் நாம் தேடினால், அப்படி எதுவும் காண முடியாது வணிக / நில உரிமையாளர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான தொடர்பு பிரிட்டிஷுடனும் தொடர்ந்தது, இந்த திராவிடத் தலைவர்கள் ஆங்கிலேயர்களுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி அதன் நலன்களைப் பாதுகாத்தனர்.

இப்படி ஆங்கிலேயர்களால் ஒரே சமயத்தில் தொழில் உற்பத்தியை தடுக்கப்பட்டு குருகுல கல்வியும் தொடர்வது தடுக்கப் படவேண்டும் என்ற நோக்கத்துடன் பள்ளி நிதி என்று சொல்லி பிராமணர்கள் கல்வியைத் தொடரவிடாமல் அவர்களது நிலங்களை பறித்துக்கொண்டார்கள். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சிறுவர்களைக் கூலி வேலைக்கு அனுப்பும் நிலைமை உருவானது. ( CHILD LABOUR ) குழந்தை தொழிலாளர்களை ஊக்குவித்தவர்கள் என்ற பழி தங்கள்மேல் சுமத்தப்படும் என்ற அச்சத்தில் மதம் பரப்பும் நோக்கத்தோடு சி.எஸ்.ஐ (தென் இந்திய கிருஸ்துவ சபை) மூலம் சில சிறுவர் பள்ளிகள் இயங்கின. புதிய கல்விமுறை எந்த பள்ளிக்கூடமானாலும் இலவச கல்வி அளிக்கப்படவில்லை. இது கி.பி 1825 க்குப் பிறகு நடந்தது.

இவ்வாறு நம் நாட்டின் தொடர்ச்சியான கல்வி சூழ்நிலை கலைக்கப்பட்டு பின்னர் ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்டது.  கல்வியை அளிப்பவர் ஒரு பக்கமும் கல்வியை பெற்றுக்கொள்பவர்கள் ஒரு பக்கமும் (பிராமணர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் குழந்தைகள்) அவர்களைப் புத்திசாலித்தனமாக அழித்தனர். இறுதியில் இரு தரப்பினரும் நிலமற்றவர்களாகவும் பணமில்லாதவர்களாகவும் இருந்தனர். பிராமணர்கள் ஏழைகளுக்கு இலவச கல்வியை வழங்கினர் என்பதற்குப் பிரிட்டிஷ் பதிவுகளிலிருந்து  காட்ட ஏராளமான சான்றுகள் உள்ளன. அவர்கள் மாணவர்களிடமிருந்து பணம் கோரவில்லை, ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்டவற்றில் திருப்தி அடைந்தனர். தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரிட்டிஷ் கலெக்டர்களின் அறிக்கைகள் ஒரே படத்தை வரைகின்றன. பல ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது அந்த நேரத்தில் பாரம்பரிய பள்ளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக இருந்தது என்று அவர்கள் கூறியுள்ளனர், அதே நேரத்தில் கல்வி செலவு மிகவும் குறைவாக இருந்தது – ஐரோப்பிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று.

பாரம்பரிய பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு அடிப்படை கல்விகள் மட்டுமல்லாமல், வேலைகளுக்குத் தேவையான பிற திறன்களும் கற்பிக்கப்பட்டன.  இது வட ஆற்காடு ஆட்சியாளரின் அறிக்கையிலிருந்து தெரியவந்துள்ள.  மாணவர்கள், காமர்ஸ் கற்று அந்த கணக்கை அறிக்கைகளைத் தயாரிப்பதில் திறன்கள், பொது அலுவல்களான கர்ணம் – தலையாரி- இவர்களுக்குத் தேவையான கணக்கு மற்றும் பொதுக் கல்வி – வியாபார நுணுக்கத்  திறன்கள் கற்பிக்கப்பட்டன. இந்த கல்வி அவர்கள் ஒரு புது வாழ்க்கை தொடங்க வசதியாக இருந்தது. முக்கியமாக எல்லோருக்கும் கடவுள் பக்தி – ஒழுக்கம் கற்பிக்கப்பட்டது. இவை பிராமணர்களால் வழங்கப்பட்டதே  அல்லாமல்  எடுக்கப்படவில்லை

பிரிட்டிஷ் மேலாதிக்க சுனாமியில், பிராமணர்களும் வாழ்வாதாரத்தையும் பாரம்பரிய கடமைகளையும் இழந்தனர். ஒரு புதிய சூழ்நிலையில் அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் விடப்பட்டனர். நீங்கள் கவனித்தால், வர்ண அமைப்பின் தீவிர முனைகளை உருவாக்கும் பிராமணர்கள் மற்றும் சூத்திரர்கள் மட்டுமே பாதிப்படைந்தனர். (ஏழைகள் மற்றும் நிலமற்றவர்கள்) . பிரிட்டிஷ் தாக்குதலில் நில உரிமையாளர்களும் வணிகர்களும் தப்பினர்.

20வது நூற்றாண்டு தொடக்கம் வரை பிராமணர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்த முடியவில்லை. ஆனால் அவர்கள் தங்களுக்கு வாழ்வதற்கான ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கத் தொடங்கியபோது, ​​திராவிட இயக்கம் அவர்களைத் துண்டிக்கத் தொடங்கியது. வேலைகளில் பிராமண ஆதிக்கம் குறித்து திராவிடர்கள் காட்டும் தரவு, சில தசாப்தங்களாக இல்லை. அவர் மேற்கோள் காட்டிய சுரண்டல் கல்வி மற்றும் வேலைகளில் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் பிராமணர்கள் உண்மையில் கைப்பற்றியதாகக் கூற போதுமான எண்ணிக்கையைக் காட்டவில்லை. ஒரு தலைமுறை தொந்தரவு செய்யப்பட்ட பிராமணர்கள் வேலைகளில் குடியேறுவதற்கு முன்பே, திராவிட இயக்கம் பிராமண மேலாதிக்கம் உயர் பதவிகளை ஆக்கிரமிப்பு என்ற பொய்களைப் பரப்பத் தொடங்கியது. 20 ஆம் நூற்றாண்டு தொடக்கம் வரை கிராமங்களில் ஜாதி கட்டமைப்பு கட்டுக்கோப்பாகவே இயங்கிற்று.

அவர் அவர் பங்கை சுய தொழில்மூலம் நிறைவேற்று வதில் எந்த ஏற்ற தாழ்வும் காட்டப்படிவில்லை. ஆனால் இதற்கு பிரிட்டிஷ் அரசு உயர்வு தாழ்வு கற்பித்து 1881 சென்சஸ் கணக்கில் மதராஸ் பிரெஸிடென்சியில் 3000 ஜாதிகள் இருப்பதாக மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தி ஏற்ற தாழ்வு கற்பித்தார்கள்…கிராமங்களை மய்யமாகக் கொண்ட இந்தியப் பொருளாதாரம் பிரிட்டிஷ் நலன்களை பாதிக்கிறது என்று 1901 ஆம் ஆண்டு ஒரு அறிக்கை வெளிவந்தது. இந்த கிராம ஜாதி கட்டுக்கோப்பை உடைக்க கோவில்களைச் சுற்றிப் பின்னிப் பிணைந்துள்ள வாழ்க்கை முறையை மாற்ற முதலில் பிராமணனை அவர்களிடமிருந்து பிரிக்கவேண்டும் – ஜாதி வேற்றுமையை அதிகமாக்கி கிராமம் சார்ந்த பொருளாதாரத்தைக் கெடுக்கவேண்டும் என்று சதிவலை பின்னினார்கள்.

முதல் முதலில் வேதங்களைக் குறிவைத்து ஆரிய படையெடுப்பு என்ற ஒரு வெற்று சிந்தாந்தத்தைச் சொல்லி ஆரிய-திராவிட கோட்பாட்டீற்கு வலுசேர்த்தார்கள். பின்பு பிராமணர்கள்தான் மனு தர்மத்தை சமூகத்தில் திணித்தார்கள் என்று பொய்யுரை செய்தார்கள். அதுவரையில் பலபேருக்கு ஏன் பல பிராமணர்களுக்கும் கூட மனு தர்மம் என்றால் என்ன என்பது தெரியாது. தமிழ் மக்களுக்குத் தெரிந்ததெல்லாம் மனுநீதி சோழன் தன்  மகன் ஒரு கன்றைக் கொன்றதற்காகத் தனது தேரையே அவன் மீது ஏற்றிக் கொன்றான் என்பதுதான்.

இப்படியான பிரிவினை திட்டத்தை நிறைவேற்றுவதை அடிமை புத்தி கொண்ட ஜாதி ஹிந்துக்கள் நிறைந்த திராவிட இயக்கம் தன் தலையான கொள்கையாக ஏற்றுக்கொண்டு பரப்புரை செய்து பிரிவினையைத் தூண்டிவிட்டது.  இது தொடர்ந்து 100 ஆண்டுகாலாமாக வளர்ந்து வந்துள்ளது.

திராவிட இயக்கங்கள் சொல்லும் மற்றொரு பொய் உரை என்னவென்றால். உழைப்பே இல்லாத பிராமணனுக்கு மன்னர்கள் அளவுக்கு மீறிய நில தானங்களை செய்துள்ளார்கள் என்பதுதான். நில தானம் என்பது சுயதொழிலில் திறமையானவர்கள் – இசை – பாடல் – வல்லுநர்கள் – மருத்துவர்கள் – நாடோடி பாட்டுப் பாடுபவர்கள் – கழகூத்தாடிகள் என்ற சுமார் 50 வகைக்கு மேல் பல நில தானங்கள் மன்னர்களால் வழங்கப்பட்டு வந்தன. சில உதாரணங்கள் –

உடுக்கைக் காணி – மேளம் வாசிப்பவருக்கு கொடுக்கும் நில தானம்.

வீணைக் காணி – வீணை வாசிப்பவருக்கு கொடுக்கும் நில தானம்

முரலியக் காணி – நடனம் ஆடுபவருக்கும் – அதை சொல்லித்தரும் குருவுக்கும் கொடுப்பது

வைத்திய போகம் – மருத்துவர்களுக்கு கொடுக்கும் நில தானம்

குலால விருத்தி – மண்பாண்டங்கள் செய்பவருக்கு கொடுக்கும் நில தானம்

பிரம்மதேயம் – வேத விர்பண்ணர்களுக்கு கொடுக்கும் நில தானம்.

நில மானியம் வழங்கப்பட்டவர்கள் பிராமணர்கள் மட்டுமல்ல. பலருக்கு அவர்களின் திறமைக்கான பரிசாக அல்லது அவர்களின் செயல்பாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக நிலங்கள் வழங்கப்பட்டன. இவை தவிர, கோயில் பயன்பாட்டிற்கான நிதி திரட்டுவதற்காக கோயிலுக்கு பொது மக்களால் ஏராளமான நில மானியங்கள் வழங்கப்பட்டன. இந்த மானியங்கள் அனைத்தும் பிராமணர்களின் மேற்பார்வையில் இல்லை. ஒவ்வொரு கோவிலிலும் இந்த மானியங்களையும் பிற நன்கொடைகளையும் நிர்வகிக்க ஒரு குழு இருந்தது. இந்த அமைப்பு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தது, இதனால் பலர் நிலங்களையும் பிற பொருட்களையும் நன்கொடையாக வழங்க முன்வந்தனர்.  இந்த குழுவின் முக்கிய பதவிகளை வகித்தவர்களளை மக்கள் ( அடைப்பு முதலிகள் ) – (மன்றாடியார்) – (வாரியத்தார்) – ( மஹேஸ்வரர்) என அழைத்தார்கள்

ஆய்வில் , ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் ஒரு கோயில் இருந்தது என்பதும், கோயிலின் பெயரிலோ அல்லது பல வழிகளில் கோவிலுக்கு சேவை செய்தவர்களின் பெயரிலோ அதன் பயன்பாட்டின் கீழ் ஏராளமான நிலங்கள் இருந்தன என்பது தெரிகிறது.

பிரிட்டிஷ் வருகைக்குமுன் சுமார் 1000 வருடங்களாக கல்வி மற்றும் நிலபுலங்களின் கட்டுபாடுகள் நாடெங்கும் நடைமுறையில் இருந்தது. மேலும் 1871 ஆம் ஆண்டு சென்செஸ் படி சுமார் 52 சதவிகித மக்கள் நிலத்தின் சொந்தகாரர்களாகவோ அல்லது குத்தகை தாரராகவோ இருந்திருக்கிறார்கள் என்பதும் பதிவாகியுள்ளது. ஆனால் இது 1881 ஆண்டு சென்செஸ் போது தலைகீழாக பதிவு செய்யப்பட்டது. அதாவது பிராமிணர்கள் மற்றும் ஏழை குத்தகை விவசாய நிலங்கள் கணக்கில் சேர்கப்படவில்லை. (பக்கம் 34 சென்செஸ் 1881)

The report also speaks of the disgust that the British had for Brahmin-feeding. Feeding a guest (athithi) was a daily routine for the Hindus. Feeding Brahmins also was considered as a noble act. There are many inscriptions on feeding Brahmins even by kings. But the British could not stomach the respect given to Brahmins by all sections of the society. The influence of the Brahmins in all the affairs of the people is something the British wanted to thwart because the Brahmin posed an obstacle in their missionary and political goals.  The Brahmin must be stopped and discredited somehow. This is reflected in the report.

பிராமணர்களுக்கு உணவளிப்பதில் ஆங்கிலேயர்கள் கொண்டிருந்த வெறுப்பையும் இந்த அறிக்கை பேசுகிறது. ஒரு விருந்தினருக்கு (அதிதி) உணவளிப்பது இந்துக்களின் அன்றாட வழக்கமாக இருந்தது. பிராமணர்களுக்கு உணவளிப்பதும் ஒரு உன்னத செயலாகக் கருதப்பட்டது. அரசர்களால் கூட  பிராமணர்களுக்கு உணவளிப்பது பற்றி பல கல்வெட்டுகள் உள்ளன .  சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பிராமணர்களுக்கு அளித்த மரியாதையை ஆங்கிலேயர்களால் ஜீரணிக்க முடியவில்லை. மக்களின் அனைத்து விவகாரங்களிலும் பிராமணர்களின் செல்வாக்கை ஆங்கிலேயர்கள் முறியடிக்க விரும்பிய ஒன்று, ஏனெனில் பிராமணர்கள் தங்கள் மிஷனரி மற்றும் அரசியல் குறிக்கோள்களில் ஒரு தடையாக இருந்தனர்.   பிராமணரை எப்படியாவது குறைத்து மதிப்பிட வேண்டும் என்பது அவர்கள் அறிக்கையில் பிரதிபலிக்கிறது.

2

1776ஆம் ஆண்டு. ரோமிலிருந்து பாலினோ தா பர்தால்மோ  (Paolino da San Bartolomeo)  என்னும் போதகர் மலபார்  வந்திறங்கினார்.  1789 வரையில் இந்தியாவில் தங்கிய அவர், இந்திய மொழிகள் குறிப்பாகச் சமஸ்க்கிருதம் மீது அலாதி ஆர்வம் கொண்டவராக இருந்தார். அலெக்சாண்டர் காலகட்டத்திலேயே மேன்மை எட்டியிருந்த இந்திய கைவினைத் தொழிலாளர்களின் நகல் தயாரிக்கும் புகழைக் கேள்வியுற்று, போர்ச்சுகலில் தயாரான வேலைப்பாடு மிகுந்த விளக்கினை இந்தியக் கைவினைக் கலைஞர் ஒருவரிடம் ஒப்படைத்தார். சில நாட்களில் எது அசல், எது நகல் எனக் கண்டுபிடிக்க இயலாதவாறு தத்ரூபமாக உருவாக்கப்பட்டு வந்த விளக்கைக் கண்டு வியப்படைந்தார். இம்மாதிரியான கலைகள் அந்நிய ஆட்சியாளர்களால் பராமரிக்கப்படாமல் வீழ்ச்சியடைகிறது என்றும், பிற இந்திய அறிவியல் சாதனைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்றும் தனது இந்தியச் சிறுவர்களின் கல்வி குறித்து எழுதிய கட்டுரை ஒன்றில் பதிவிட்டார்.

3

 (Paolino da San Bartolomeo)

4

Dharmpal

வெள்ளையனே வெளியேறு என முழக்கமிட்டவரும் காந்தியவாதியுமான தரம்பால் 1983 இல் வெளிவந்த தனது அழகிய மரம் (The Beautiful Tree) நூலின் ஆவணங்களில் ஒன்றாக பர்தால்மோவின் கட்டுரையை இணைக்கிறார்.  இந்நூலின் மூலம் 18-19 ஆம் நூற்றாண்டுகளில் பிரிட்டிஷாரால் பரவலாக்கப்பட்ட ஒரு தவறான கருத்தினை மறுதலிக்கிறார். நவீன கல்வியை அறிமுகம் செய்த பிரிட்டிஷார் இந்தியச் சமூகத்தின் கல்வியையும் ஞானத்தையும் மீட்கவில்லை. மாறாக நிர்வாகத் தேவை, வர்த்தகம், மதம் போன்ற சில சுயநல காரணங்களால்  கலாச்சாரம், பாரம்பரியம் குறித்து எந்த புரிதலும் பெருமிதமும் இல்லாத தலைமுறைகளை உருவாக்க வித்திட்டனர் என்ற வாதத்தை முன்வைக்கிறார்.

பாரம்பரிய கல்வி முறை அழிந்ததும் கூடவே இந்தியக் கைவினைக் கலைகளும், அறிவியல் சாதனைகளும் புறக்கணிப்புக்குள்ளாயின. விவசாயக் கருவிகள், கப்பல் கட்டுமானம் போன்ற குறிப்பிட்ட தொழில்நுட்பங்கள் தவிர்த்து கைவினைத் தொழில்கள், தொழில்நுட்பங்கள் பற்றிய செய்திகள் தரம்பால் ஆய்வு செய்தனவற்றுள் அவ்வளவாகத் தென்படுவதில்லை. இதற்குக் காரணமாக அவர் கருதுவது அவற்றை எழுதிய பிரிட்டிஷ் அரசாங்க நிர்வாகிகள், பயணிகள், மதப் பிரச்சாரகர்கள், ஆய்வறிஞர்கள் ஆகியோருக்கு இக்கலைகள் குறித்தும், இவை தலைமுறைகளாகக் கைமாற்றப்படும் முறை குறித்தும் பெரிய அக்கறை இருக்கவில்லை என்பதே. மற்றொரு காரணம் இந்தியாவில் கைவினைத் தொழில் என்பது பெரிதும் பெற்றோரிடமிருந்து பெறப்பட்டது, அந்தந்த ஜாதிகளுக்கு உட்பட்டது. அக் 20, 1931 மகாத்மா காந்தி லண்டன் ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டர்நேஷனல் அஃபயர்ஸில் ஆற்றிய நீண்ட உரையில் கடந்த 50 – 100 வருடங்களில் இந்தியப் பாரம்பரிய கல்வி அழித்தது பிரிட்டிஷ்தான் என்பதை  நிலை நாட்டினார்.

பிரிட்டிஷ் நிர்வாகிகள் இந்தியாவுக்கு வந்த போது, இங்கு நிலவிய அமைப்புகளைப் புரிந்துகொண்டு அதை வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக அவற்றை அப்புறப்படுத்தத் தொடங்கினார்கள். மண்ணைத் தோண்டி வேரை எடுத்து ஆராய்ந்தார்கள். அதன் பிறகு அந்த வேரை அப்படியே மட்கி வாடும்படி விட்டு விட்டார்கள். அந்த அழகிய மரம் அழிந்து விட்டது

அந்த ‘அழகிய மரம்’ மட்கி அழியும் முன் நிலவிய கல்விச் சூழலை விளக்க, தரம்பால் அக்காலகட்டத்தில் வெளிவந்த ஏழு ஆவணங்களை நூலின் பின்னிணைப்புகளாக இணைக்கிறார். அந்த ஆவணங்களின் மூலம் 18 ஆம் நூற்றாண்டு இந்தியக் கல்வி முறை எவ்வாறு இருந்தது என்றும் அன்றைய பிரிட்டிஷ் பொதுக்கல்வி முறையை விட எப்படி மேம்பட்டு இருந்தது எனவும் தெளிவாக நிறுவுகிறார்.

தரம்பால், பிற ஆய்வாளர்கள் அதுவரை பெரிதும் கவனிக்காத ஆவணம் என மதராஸ் மாகாணத்து கவர்னர் தாமஸ் மன்ரோ 1822 இல் வெளியிட்ட  அவைக்குறிப்பையும், அதனைத் தொடர்ந்து அனுப்பப்பட்ட ஆய்வறிக்கைகளையும் குறிப்பிடுகிறார். இந்தியர்களிடையே நிலவும் அறியாமை குறித்தும் அவர்களுக்குக் கல்வி வழங்குவது குறித்தும் முடிவெடுக்க, தனது மாகாணத்தின் கீழ் வரும் பல்வேறு மாவட்டங்களின் கலெக்டர்களை இந்தியப் பாரம்பரியக் கல்வி தொடர்பாக விரிவான தகவல்களைச் சேகரிக்க மன்ரோ உத்தரவிட்டார். அவர்களின் எதிர்வினைகளோ தரவுகளே இல்லாமல் யூகத்தின் பெயரில் (கனரா கலெக்ட்டர்) அனுப்பட்டவையிலிருந்து தீவிர களப்பணியால் சேகரிக்கப்பட்டவை (மதராஸ், பெல்லாரி கலெக்டர்கள்) வரை பலதரப்பட்ட நிலைகளில் வெளிவந்தன. பள்ளி, கல்லூரிகளின் எண்ணிக்கை, அதில் பயில்வோரின் பால், ஜாதி அடிப்படையிலான எண்ணிக்கை, வகுப்பு அட்டவணை, பயிற்றுவிக்கப்படும் மொழிகள், பயன்படுத்தப்பட்ட பாடப் புத்தகங்கள் எனத் தகவல்கள் கூடவும் குறையவும் அவர்களால் மன்ரோவிற்கு அனுப்பப்பட்டன. 

மேல் மற்றும் இடைநிலை ஜாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கல்வி கிடைக்கப்பெற்றது என்று இன்றும் நம்பப்படுகிறது. ஆனால் நிலவரம் நேர்மாறாக இருந்துள்ளது.  பிற ஜாதி மாணவர்கள், சூத்திர மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பள்ளிக் கல்வி பெற்றுள்ளனர். தமிழ் பேசப்படும் மதராஸ் திருநெல்வேலி, மலையாளம் பேசப்படும் மலபார், கன்னடம் பேசப்படும் பெல்லாரி, ஒரிய மொழி பேசப்படும் கஞ்சம், தெலுங்கு பேசப்படும் கடப்பா விசாகப்பட்டனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவர்களில் 40 முதல் 84 சதவீதம் வரையில் சூத்திர, பிற சாதியினரே இருந்துள்ளனர்.

5

கல்வி பெற்ற பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட மிகவும் குறைவாகவே இருந்துள்ளது. பெண்களில் நடனப் பெண்கள் அல்லது கோவில்களில் தேவதாசிகளாக இருந்த பெண்கள் அதிகம் கல்வி பெற்றதாகத் திருநெல்வேலி, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளின் கலெக்டர்கள்  தெரிவித்திருந்தனர்.

6

மேலும் இத்தரவுகளில் மாணவர்கள் எத்தனை ஆண்டுகள் கல்வி பெற்றனர் அவர்களுக்கு எவ்வாறான சலுகைகள் அளிக்கப்பட்டன போன்றவற்றிற்கான விளக்கங்களும் இடம்பெறுகின்றன. ஏழை பிராமண மாணவர்களின் கல்விக்கு அவர்கள் சமூகத்தினர் அளித்த உதவிகள் தொடர்பாகக் கடப்பா கலெக்டர் அளிக்கும் தகவல்கள் குறிப்பிடத்தக்கவை. பத்திலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்த இடங்களுக்குக் கல்வியின் பொருட்டு வந்து தங்கிய ஏழை சிறுவர்களின் தினசரித் தேவைகளை அவர்களின் ஆசிரியர்களும், கிராமத்தினரில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கவனித்தனர். இத்தனைக்கும் ஆசிரியர்கள் வறுமையில் உழல்பவர்களாகவே இருந்தனர். கிராமத்தினரும் மாணாக்கரிடம் எதையும் எதிர்பார்த்து உதவிகள் செய்யவில்லை. எளிய முறையில் வழங்கப்பட்ட இத்தானங்களைக் கண்ட பிரிட்டிஷரான கடப்பா கலெக்டர் அரசாங்கம் கொஞ்சம் போலக் கருணையுடனும் தாராள சிந்தையுடனும் நடந்துகொண்டால் இந்த அம்சத்தை நன்கு வளர்த்தெடுக்க முடியும் என்று வரையறை மீறாத தொனியில் தன் மேலதிகாரிக்குத் தெரிவித்தார்.

மதராஸ் மாகாணத்தின் தரவுகள் தொடர்ந்து வங்காளம், பஞ்சாப் மாகாணத்தின் ஆய்வுக்குறிப்புகளிலிருந்து தொகுத்த செய்திகளை தரம்பால் முன்வைக்கிறார். 1836 – 1838 ஆண்டுகளில் வெளியான வில்லியம் ஆடம்மின் அறிக்கைகளை தரம்பால் கடுமையாக விமர்சிக்கிறார். பிரிட்டிஷ் அரசின் தலையீடு வேண்டி, இந்தியாவில் பாரம்பரியக் கல்வி விளிம்பு நிலையிலிருப்பது போல் ஒரு பிம்பத்தை ஆடம் நிறுவியதாகக் கருதுகிறார். ஆனாலும் அவர் ஆடம்மின் கடின உழைப்பையும் அவரது ஆய்வின் பரந்துபட்ட தன்மையையும் அங்கீகரிக்கத் தவறுவதில்லை.

வங்காள, பாரசீக, அரபிய ஆரம்பக் கல்வி நிலையங்களின் அவல நிலையை விளக்கும் ஆடம்மின் கட்டுரையில் மாணவர்கள் எப்படி எழுதப்பழகுகிறார்கள், அடுத்த பாடத்திற்கு எவ்வாறு முன்னகர்கிறார்கள் போன்ற தகவல்கள் கவனம் ஈர்ப்பன. கல்வி கற்க ஆரம்பித்த பத்து நாட்களுக்குள் மணலில் எழுத்துகளை வரைந்து பழகிக்கொள்கின்றனர். பின்னர் பனை ஓலையில் மூங்கில் பேனாக் கொண்டு எண்களை எழுதுகின்றனர். பின்னர் கணிதத்தின் அடுத்த கட்டப் பாடங்களை வாழை இலையில் வண்டி மை கொண்டு எழுதக் கற்கின்றனர்.

7

அழகிய மரம்அளிக்கும் பாரம்பரிய கல்விக் குறித்த சித்திரம் தத்ரூபமாக .வே.சாவின் வாழ்க்கை சரிதையில் காணலாம். அவரது சுயசரிதையில் ஏட்டுச்சுவடிகள் திரட்டும் பகுதித் தவிர்த்து அனைத்து பகுதிகளும் அவர் கல்விக்காக மேற்கொண்ட மெனக்கெடல்கள் பற்றியவையே. 1855 இல் பிறக்கும் உ.வே.சாமிநாதையர் ஐந்து வயதில் திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரத்திலுள்ள ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தன் கல்விப்படலத்தைத் தொடங்குகிறார்.  அங்கே தன் வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டே மாணாக்கர்களை அரிச்சுவடி, எண் சுவடி மனனம் செய்ய வைக்கிறார் உபாத்தியார் . பின்னர் வேறொரு உபாத்தியாரிடம் எழுதக் கற்றுக்கொள்கிறார். முதலில் மணலில் எழுதப் பழகிய பின் எழுத்தாணிக் கொண்டு ஓலைச்சுவடியில் எழுதப் பயில்கிறார். உபாத்தியாரின் நண்பர் ஒருவர் மாணாக்கர்களுக்கு ஆங்கில எழுத்துகள் கற்றுத் தருகிறார்.

8

தனது ஏழாவது பிராயத்தில் அரியலூருக்கு வரும் உ.வே.சா காமாகூஷியம்மன் கோவிலில் செயல்படும் பள்ளியில் சங்கீத வித்துவானான தந்தையின் ஆசைக்கிணங்க தெலுங்கு கற்கத் தொடங்குகிறார். தெலுங்குப் பாடங்களில் மனம் செல்லாததால் பள்ளிக் கல்வியை நிறுத்திவிட்டு வீட்டிலேயே தந்தையாரிடம் சங்கீதம் பயில்கிறார்.  பின்னர் நடைமுறை வாழ்க்கைக்கு உதவும் என்றெண்ணி தில்லைக்கோவிந்தபிள்ளை என்பவரிடம் கிராமக்கணக்கும், சிதம்பரம்பிள்ளை என்னும் பண்ணையாரிடம் உதவிக்கணக்கும் பயில அனுப்பப்படுகிறார். தமிழின் மேல் உள்ள தீவிரப் பற்றால் வெவ்வேறு ஊர்களில் தங்கி வெவ்வேறு ஆசிரியர்களிடம் அவர்களுக்குத் தெரிந்த காவியங்களையும், இலக்கணங்களையும் கற்றறிகிறார். இறுதியாக மாயூரம் வந்தடைந்து மீனாட்சி பிள்ளையவர்களின் பிரதான சிஷ்யராகிறார். அவர் குருவின் மறைவுக்குப் பின் அவரே பிற மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிக்கத் தொடங்குகிறார். இருபது வயதுக்குள்ளாகவே பல காவியங்களைக் கற்றுத் தேர்ந்து தமிழ் பண்டிதராகிறார்.

அன்று இசை மற்றும் பிற கலைகள் பெரும்பாலும் மகன் வழி பேணப்பட்டதால் இளம் பிராயத்திலேயே உ.வே.சா சங்கீதத்தில் பயிற்சி பெற்றவரானார். பிராமணரான உ.வே.சா பிள்ளை, ரெட்டியார் எனப் பிற வகுப்பைச் சேர்ந்த ஆசிரியர்களையும் கொண்டிருந்தார்.  அவரும் அவர் பெற்றோரும் கல்வியின் பொருட்டு வந்து தங்கும் கிராமங்களிலெல்லாம் அங்குள்ள கிராமத்தினர் தங்குமிடம் உணவுப் பொருட்கள் என தம்மால் இயன்ற வசதிகள் தருவித்துக் குறை ஏதும் ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டனர். மீனாட்சி பிள்ளையவர்களிடம் படித்த மாணாக்கர்களில் சவேரிநாத பிள்ளை என்னும் கிறிஸ்தவரும் அடக்கம். அவர் மூத்த மாணவராக இருந்த வரையில் இளையவரான உ.வே.சா விற்கு பாடம் கற்பித்தார். உ.வே.சா மூத்த மாணவரானதும் இளைய மாணவர்களுக்குப் பாடம் சொல்ல ஆரம்பித்தார். இவ்வாறு உ.வே.சாவின் சரிதையில் இடம்பெற்ற பல தருணங்கள் ‘அழகிய மரம்’ நூலில் சித்தரிக்கப்பட்ட மாணாக்கர் வாழ்க்கையுடன் ஒப்பிடலாம்.

இவ்விருநூல்களும் 18-19 ஆம் நூற்றாண்டு கல்வி பற்றி நம் அறியாமையை அல்லது மேலோட்டமான அறிதலை நிவர்த்தி செய்யும் ஒப்பற்ற களஞ்சியங்கள் (காந்தியின் ‘அழகிய மரம்’ உரைக்கு மறுப்பு தெரிவித்த, எந்தவொரு விளக்கத்திற்கும் செவி மடுக்காத ஃபிலிப் ஹெர்டாக் போன்ற மேட்டிமை வாதிகளின் அறியாமையைத் தவிர).

இன்றைய இந்தியர்களின் வாழ்வு முறை, தொழில் தேர்வு மற்றும் சமூக அமைப்பு 19ஆம் நூற்றாண்டை விட மிகவும் வேறுபட்டிருப்பதால், இன்றைய பொதுக் கல்வி முறையை அன்றைய கல்வி முறையோடு ஒப்பிட்டு அவ்விதமே பின்பற்ற வேண்டும் என நான் பரிந்துரைக்கவில்லை. ஆனால் காந்தி மொழிந்த அழகிய மரத்தின் வேர்கள் சிதைக்கப்படாமல் நவீனக் கல்வி துணையுடன் பேணப்பட்டிருந்தால் இன்று ஒவ்வொரு தளிரும் அடர்ந்த நிறத்தில் முளைத்திருந்திருக்கும்.

(தொடரும்)

Ref : Jayashreesaranathan blog , swetha.art.blog & web pages

பின்னூட்டமொன்றை இடுக