பிராமண வெறுப்புணர்வு (புனைவும் உண்மையும்) Part – 5

அழகிய மரம் – பி.ஆர்.மஹாதேவன் புத்தகம் பற்றிய சிறிய விளக்கம் சுவாமி அபவர்கானந்தர் எழுதியது – ராமகிருஷ்ண விஜம் புத்தகத்தில் செப்டம்பர் 2017 இல்  வந்தது.

R1

r2.png

 

R3

பிராமணர்களின் தமிழ் மொழித் தொண்டு –

தமிழ்த் தொண்டு செய்த பிராமணர்களை பற்றி திராவிட சித்தாந்தம் கொண்டவர்களால் எழுதப்பட்ட சிறிய குறிப்பு –

1997 ஆம் ஆண்டில் கோட்டாற்றான் எழுதிய ”திராவிட மாயை” என்ற, தமிழகத்தின் பொற்கால உரைப்பாட்டு நூல் வெளியிடப்பட்டது.  அந்த நூல் திராவிட இயக்கங்களை மிரளவைத்துப் பல கேள்விகளை எழுப்பியது.  பன்மொழிபுலவர் கா.அப்பாதுரையார்த் திராவிட வட்டாரத்தைச் சேர்ந்தவர்.  அவரே கனகசபையார் நூல் மொழிபெயர்ப்பில் ”பிராமணர் தமிழர் ” என்று கூறியுள்ளதை அது சுட்டிக்காட்டுகின்றது. சங்ககாலம், இக்காலத்தில் தமிழுக்குத் தொண்டாற்றிய பல பிராமண புலவர்கள் இருந்தார்கள் என்பதை குறிப்பிடுகிறது.

நாம் அறிந்த சங்கப் புலவர்

நானூற்று நாற்ப்பத் தொன்பதிலே (449) – இனமறிந்த இருநூற்றில் (200)

அந்தணர் இருபத்தொன்பதுபேர்  – அதன்படி பார்த்தால்

அவர் பதினைந்து விழுக் காடவர் ! (15 %)

  • தொன்மை மிக வாய்ந்த தொல்காப்பியம் செய்த காப்பியனோர் அந்தணன் !
  • அந்தக் காப்பியனுக்கே கல்வி கற்பித்தானே அதங்கோட்டாசான் அவனும் மோர் அந்தணன்
  • ஆரியவரசன் யாழ் பிரம்ம தத்தனுக்குத் தமிழின் பெருமை சாற்றக் குறிஞ்சிப் பாட்டிசைத்த கபிலனும்தான் அந்தணன் !
  • ”யாதும் ஊரே ! யாவரும் கேளிர் எனும் ஒரே பறப் பாட்டால் ஒரு கோடிப் பாடல் செய்த உயர்வை அடைந்தானே ஒரு கனியன் பூங்குன்றன் அவனும் மோர் அந்தணனே !
  • அந்த நாள் தமிழரெல்லாம் அவனுரைப் படியே பூசல், போட்டி, பொல்லாங்கு, ஏசல் எய்த்தல் இல்லாமல் காய்தல், உவத்தல் இல்லாமல் அவரவர் வழியில் அவரவர் தொழிலை அனைவரும் செய்தார் அக்காலம் ! அதனாலன்றோ அதுவே தமிழர் பொற்காலம் !

தமிழகத்தில் சைவமும்  வைணவமும் தழைக்க உழைத்த சில அந்தணர்கள் பற்றியும் அந்த நூல் குறிப்பிடுகிறது.

  • சந்து பொந்தெல்லாம் சுற்றிச் செந்தமிழ்ப் பாடிப் போற்றி சைவ வைணவந் தழைக்கச் சலியாது உழைத்த சுந்தரர் சம்பந்தர் அந்தணர் !
  • மாணிக்கவாசகர் அந்தணர் !
  • மதுரகவியாழ்வார் பெரியாழ்வார்
  • தொண்டரடிப் பொடியும் அந்தணர் !
  • அந்தத் தமிழ் அந்தணரும் நத் தமிழரல்ல ரென்றால் – அவர் வழிவந்து தமிழ் தமிழ் என்று வாழ்த்து தம் மூச்செல்லாம் தமிழெனவிட்டும் புலவரும் அறியாதிருந்த புறநானூறும், ஐங்குறு நூறும், பற்பல நூலும் பாடு பல பட்டுத் தேடிப் பிடித்துத் தமிழ ரெல்லாம் படிக்கும் படியாகப் படியெடுத்துக் கொடுத்த தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யரும்
  • ஒல்காப்பேரறிஞர்
  • இராகவய்யங்காரும்
  • தமிழ் வெறியர் பரிதிமாற் கலைஞருங் கூடத் தமிழர் அல்ல என்றால் வேறு யார்தான் தமிழரிங்கே ?

மேலும்

  • மாமூலனார் வரலாற்றுப் புகழ் வாய்ந்த சங்க கால பிராமண புலவர்.
  • உருத்திரம் கண்ணனார் என்ற பிராமண புலவர் எழுதிய பெரும்பாணற்றுப் படையும் – பட்டினப்பாலை ஆகும் – இது ஒரு வான சாஸ்திர நூலாக கருதப்படுகிறது.
  • நான்காம் திருமுறையில் உள்ள திருவிசைப்பா – திரு பல்லாக்கு இவற்றைப் பாடியவர்கள் திருமாளிகைத் தேவர் – புருடோத்தமன் நம்பி – பூந்துருந்திகாடவை நம்பி என்ற பிராமணர்கள்.
  • திருத்தொண்ட திருவந்தாதி பாடிய நம்பியான்டார் நம்பிகள் தமிழ் வியாசர் என்பார்கள் ­- 10 ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம்கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி பதினொரு திருமுறைகளாகத் தொகுத்தார். ,இவரும் ஒர் பிராமணர்.
  • சோழிய கோத்திர பிராமணரான புலியூர்நம்பி முதல் திருவிளையாடல் புராணத்தை எழுதியவர். இவை இல்லை என்றால் மதுரையைப் பற்றிய பல அரிய செய்திகள் நமக்குக் கிடைத்திருக்காது. பின்பு பரஞ்ஜோதி புலவர் திருவிளையாடல் புராணத்தை எழுதினார். இவரும் ஒரு பிராமணர்.
  • காளமேகப் புலவரும் ஒரு் பிராமணர். வைணவராகப் பிறந்த இவர் திருவானைக்கா கோவிலைச் சார்ந்த மோகனாங்கி என்ற சைவ பெண்ணை காதலித்த மணந்துகொண்டார். அதனால் சைவத்திற்கு மாறினார். இவர் சிலேடை பாடல்களையும் – நகைச்சுவைப் பாடல்களையும் பாடியுள்ளார். மேலும் திருவாகா உலா – சரஸ்வதி மாலை – பரபிரம்ம விளக்கம் – சித்திர மடல் போன்ற நூல்களை இயற்றியவர்.
  • நாதமுனி – ஆளவந்தார் இவர்கள் வைணவ பிராமணர்கள்.
  • பெரும் செல்வந்தரான கூரத்து ஆழ்வார் செல்வத்தைத் துறந்து யாசித்து வாழ்ந்தவர். இவரும் ஒர் பிராமணர். அவரது பிள்ளைகள் பராசர பட்டர் மற்றும் வியாச பட்டர் ஆவார்கள்.
  • கச்சியப்ப சிவாச்சாரியார் – கந்த புராணம் பாடியவர் – பிராமணர்
  • அருள் நந்தி சிவாச்சாரியார் – இருப்பா இருபது என்ற சைவசித்தாந்த நூலை எழுதியவர் – இவரும் ஒர் பிராமணர்.
  • கச்சியப்ப முனிவரின் மாணவனான கந்தப்ப தேசிகர் தணிகை ஆற்றுப்படை – உலா – கலம்பகம் – அந்தாதி – பிள்ளைத் தமிழ் போன்ற நூல்களை எழுதியவர் – பிராமணர்.
  • எட்டு சைவ சித்தாந்தங்களை இயற்றிய உமாபதி சிவாச்சாரியாரும் பிராமணரே
  • சரவண பெருமாள் என்ற பிராமணர் நன்னூல் – ஆத்திசூடி – கொன்றை வேந்தன் – நன்னெறி – திருவள்ளுவர் மாலை ஆகிய நூல்களுக்கு உரை எழுதியவர். திருவள்ளுவமாலை இவர் செய்த உரைதான் இன்றும் இருக்கிறது.
  • யாழ்ப்பாணம் விஸ்வநாத சாஸ்திரி என்ற பிராமணர் குறவஞ்சி – நகுமலை குறவஞ்சி என்ற நூல்களை இயற்றியவர்.
  • மாஹாலிங்க ஐயர் சிறுவர்களுக்கு வசன நடையில் இலக்கணம் எழுதினார். இது மாஹாலிங்கய்யர் இலக்கணம்” என்றே சொல்லப்படுகிறது.

 

1

யான் பெற்ற இன்பம் பெருகஇவ் வையகம்

வான்பற்றி நின்றமறை பொருள் சொல்லிடின்

ஊன்பற்றி நின்ற உயர்வுறு மந்திரந்

தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே

ஒன்றே குலமும் – ஒருவனே தேவனும்

அன்பே சிவம்

  • திருமூலர் கைலை மலையிலிருந்த வந்த தென்நாட்டுப் பிராமணன் என்று சிலர் நம்புகிறார்கள் – நந்தி பெருமானின் சீடர் – அகத்தியனின் அருள் பெற்றவர் – சிவயோக சித்தர் – வடமொழி நன்கு அறிந்தவர் – அவர் நந்தி பெருமானிடம் உபதேசம் பெற்ற பொழுது அவருடன் பதஞ்சலி – வியாக்கிர பாதர் இருந்தார்கள் – இயற் பெயர் சுந்தரநாதன் – அவர் மூலன் என்ற இடையனின் உடலில் புகுந்து (இதற்கு ஒரு கதை உண்டு) திருமந்திரத்தைப் படைத்தார். அவரது நட்சத்திரம் மூலம் அதனால் அவர் திருமூலர் என்று அறியப்பட்டார் என்பர் சிலர். வேறு சில கதைகளும் உண்டு. அவர் பிராமணர்கள் வாழ்ந்த சாத்தனூரில் பிறந்தவர் என்றும் சொல்கிறார்கள். இந்த திருமந்திரத்தில் பிராமணன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் அப்படி இல்லாதவர்கள் பிராமணர் ஆகமாட்டார்கள் என்ற சில இடங்களில் சொல்லியுள்ளார். ஆனால் திராவிடவாதிகள் அவர் பிறப்பால் யார் என்பது தெரியாது. அவர் திரு மந்திரத்தில் பிராமணன் என்பவன் எப்படி இருக்கவேண்டும் என்பதைத் திரித்து அவர் பிராமணனைக் கடுமையாகச் சாடியுள்ளார் என்பார்கள். இதுவும் தொல்காப்பியரையும் – – திருவள்ளுவரையும் சைன சமயத்தைச் சேர்ந்தவர் என்று வாதிடுவதுபோல்தான்.

[ ஆரிய-திராவிட போராட்டத்தில் சிக்கிக் கொண்ட சித்தர்கள்: ஜே. எம். நல்லசுவாமி பிள்ளை (1864-1920) சைவராகயிருந்து, ஆரிய-திராவிட சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர். அதனால், திராவிடம்-சைவ சித்தாந்தம், ஆரியத்தை-வேத-உபநிடதங்களைவிடச் சிறந்தது என்று வாதிட்டார். அத்தகைய சைவம், பிராமணர்-அல்லாத இயக்கமாக மாறி, பிராமணர்-எதிர்ப்பு இயக்கமாக உருமாறி, திராவிட மாயைக்குள் சிக்குண்டது. இதனால் சித்தர்-எழுத்தாளர்களும் உருமாற வேண்டியிருந்தது. பகுத்தறிவில் இந்துமதத்தைப் பழிக்க வேண்டிருந்தது; நாத்திகத்தில் சிவனை மறக்கவேண்டியிருந்தது. திராவிட சித்தாந்தத்தில் திருமூலர் மரபையே மறைக்க வேண்டி வந்தது.  பதிணென்கீழ் சித்தர்கள் 6 பட்டியல் வெவ்வேறாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

“கடவுளை எதிர்க்கும், மறுக்கும் நாத்திகவாதிகள் சித்தர்கள்” என்பது பொய்யான வாதமாகிறது. திருமூலரே ஆத்திகவாதியாக இருந்து, வேத-புராணங்களை ஏற்றுக் கொண்டு, சிவபக்தராக இருந்தும், மும்மூர்த்திகளின் தத்துவங்களை ஏற்றுக் கொண்டு, மந்திரம்-யந்திரம்-தந்திரம் முறைகளை தகவமைத்துக் கொண்டுதான் சித்தராக இருந்தார். அப்பொழுது, திருமூலரின் சித்தாந்தத்தை மறுத்து, சைவ சித்தாந்தத்தையும் வெறுத்து “சித்தர்கள்” இருக்க முடியுமா? அவர்கள் “சித்தர்கள்” ஆவார்களா? ( tamilsiddhar.wordpress.com) ]

திருமந்திரத்தில் வேதசிறப்பு – ஆகமசிறப்பு – அந்தணர் ஒழுக்கம் பற்றிச்  சொல்லப்பட்டிருக்கிறது. திருமந்திரம் திருமுறைகளில் 10 வதாக கொள்ளப்படுகிறது. மொத்தமாக பத்து பிரிவுகளாய் பிரிக்கப் பட்டுள்ள இந்த நூலின் முதல் பகுதியை “பாயிரம்” என்கின்றனர்.  மற்ற ஒன்பது பிரிவுகளும் “தந்திரங்கள்” என்று அழைக்கப் படுகின்றன. பாயிரம் ————- இதில் மொத்தம் நூற்று ஐம்பத்தாறு பாடல்கள் உள்ளது. இந்த பாடல்கள் பதின்மூன்று தலைப்புகளில் பிரிக்கப் பட்டிருக்கிறது. அவை முறையே,.. கடவுள் வாழ்த்து, அந்தணர் ஒழுக்கம், அரசாட்சி முறை, அவையடக்கம், அறச் செய்வான் திறன், அறஞ்செய்யான் திறன், ஆகமச் சிறப்பு, ஆகுதி வேட்டல், மும்மூர்த்திகளின் முறைமை, வானச் சிறப்பு, வேதச்சிறப்பு, குருபரம்பரை, திருமூலர் தன் வரலாறு கூறுதல் எனப் பிரிக்கப் பட்டிருக்கிறது. பாயிரம் என்ற முதல் பிரிவில் பதின்மூன்று தலைப்புகளின் கீழ் சொல்லப்படுகிறது

தமிழ் மொழிக்குச் சைவக் கோவில்களில் முதல் இடம் தர வேண்டும் என்று சொல்லுபவர்கள் ”திருமுறைகளை” சைவ வேதமாய் கருதுகின்றனர். ஆனால் அந்த திருமுறைகள் வேதங்கட்டாய் – ஆரியம் கண்டாய் – சாம வேதமாகி நின்றாய் – ஆகமமாகி நின்றாய் –  வேதத்தின் வடிவமே சிவன்தான் என்று வடமொழி வேதங்களையே போற்றுகின்றன. திருமந்திரத்திலோ அல்லது மற்ற எந்த திருமுறைகளிலோ ஆகம மந்திரங்கள் யாராலும் எழுதப்படவில்லை. தமிழில் இருப்பதெல்லாம் பாடல்களும் – தோத்திரங்களும் தான். அதனால் தான் இன்று வரை யாகங்கள் – கும்பாபிஷேகங்கள் சமஸ்க்கிருத வேத மந்திரம் சொல்லித் தான் செய்யப்பட்டு வருகிறது. யாகத்தின் முடிவில் பூரண ஆகுதியை அக்கினியில் போடும் பொழுது தமிழ் தோத்திரங்களைச் சொல்லித்தான் தீயில் இடுவார்கள். வேதம் பசு – திருமுறைகள் சைவ பால் என்பதே சைவசித்தாந்தமாகும்.

திரு மந்திரத்தில்

வேதசிறப்பு ( 6 பாடல்கள் ) உதாரணமாக –

வேதத்தை  விட்ட  அறமில்லை  வேதத்தின்

ஓதத் தகும்   அறம்  எல்லாம்    உளதர்க்க

வாதத்தை    விட்டு   மதிஞர்    வளமுற்ற

வேதத்தை   ஓதியே     வீடுபெற்     றார்களே.

 

வேதம்   உரைத்தானும்   வேதியன்   ஆகிலன்

வேதம்    உரைத்தானும்   வேதா    விளங்கிட

வேதம்  உரைத்தானும்  வேதியர்  வேள்விக்காய்

வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.

 

ஆகமச் சிறப்பு (10 பாடல்கள்) உதாரணமாக –

அஞ்சன  மேனி    அரிவை  ஒர்பாகத்தன்

அஞ்சொ  டிருப்பது   மூன்றுள    ஆகமம்

அஞ்சலி    கூப்பி    அறுபத்    தருவரும்

அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே

 

அண்ணல் அருளால்  அருளும் சிவாகமம்

எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்

விண்ணவர்  ஈசன் விழுப்பம் உரைத்தனர்

எண்ணிநின் றன்பொருள் ஏத்துவன் யானே

 

அந்தணர் ஒழுக்கம் – சிறப்பு ( 14 பாடல்கள்) உதாரணமாக –

 

அந்தன்மை  பூண்ட   அருமறை அந்தத்துச்

சிந்தனைசெய் அந்தணர் சேருஞ் செழும்புவி

நந்துதல்    இல்லை    நரபதி   நன்றாகும்

அந்தியும்   சந்தியும்   ஆகுதி   பண்ணுமே

பொருள் – அந்தணர் என்பவர் காலையிலும் மாலையிலும் வேள்வி செய்து அனைத்து உயிரினங்களையும் அன்போடு இறைவனாக பார்க்கின்ற தன்மை கொண்டு – வேதத்தையும்- வேதாந்தங்களையும் எப்பொழுதும் சிந்தையில் வைத்துத் தியானிப்பர்.

சத்தியம்  இன்றித்  தனிஞானந்  தானின்றி

ஒத்த விடையம் விட்டோரும் உயர்வின்றிப்

பக்தியும்  இன்றிப்  பரனுண்மை இன்றிஊன்

பித்தேறும்   மூடர்   பிராமணர்தா  மன்றே

பொருள் – சத்தியம் – ஞானம் இவை இல்லாமலும் – உடலோடு உள்ள இந்திரியங்களின் மோகத்தை விடாமலும் – உண்மையான மெய்ஞான உணர்வு இல்லாமலும் பிராமணன் என்று கூறுபவர் பித்தேறிய மூடர்கள் ஆவார்கள்.

  • அக்கனி – யாகம் முக்கியத்துவத்தைப் பற்றிய பாடல்கள் ( 10 பாடல்கள் )
  • குரு மட வரலாறு ஒரு உதாரணம் –

வந்த மடம்ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின்

முந்தி   உதிக்கின்ற   மூலன்  மடம்வரை

தந்திரம்   ஒன்பது   சார்வுமூ     வாயிரம்

சுந்தர   ஆகமச்   சொல்மொழிந்    தானே

திருமந்திரம் அந்தணர் – பிராமணர் – வேதியர் – வேதம் – வேதாந்தம் – ஆகமம் – பூணூல் – குடுமி – அக்கனி – யாகம் போன்ற சொற்களை நிறைய உபயோகித்துள்ளார். இவைகளின் முக்கியத்துவத்தைப் புகழ்ந்தும் அவைகளைப் பின்பற்றாதவரைச் சாடியும் சொல்லியுள்ளார். எனவே திருமந்திரம் பிராமணர்களுக்கு எதிரான நூலாகச் சிலர் சித்தரிப்பது நகைப்பிற்குறியதே

2

இந்த சிலையை அகற்ற வழக்குகள் பல தொடுத்து தீர்ப்பு நிலுவையில்  பல வருடங்களாக உள்ளது

மனுஸ்மிருதி : –

க்ருதேது மனவா:  ப்ரோக்தாஸ் த்ரேதாயம் யாக்ஞவல்க்யஜா:

த்வாபரே    சங்கலிகிதா:    கலெள    பராசர:    ஸ்ம்ருதா:

அதாவது கிருதா யுகத்திற்கு மனு ஸ்மிருதியும்

த்ரேதா யுகத்திற்கு யாக்ஞவல்கிய ஸ்மிருதியும்

த்வாபர யுகத்திற்கு சங்கலிகித ஸ்மிருதியும்

கலி யுகத்திற்கு பராசர ஸ்மிருதியும் –

கலி யுகத்திற்குப் பராசர ஸ்மிருதிதான் சட்ட புத்தகம் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது. பின்பு ஏன் மனு ஸ்மிருதி சொற்ப நடைமுறையில் கலியுகத்தில் இருந்தது என்பதற்குச் சரியான விளக்கங்கள் எதுவும் இல்லை. இது எப்பொழுது எழுதப்பட்டது என்பதற்கும் சரியான விளக்கங்கள் இல்லை. இதில் பிற்சேர்கைகள் நிறைய உண்டு என்பதைப் பலரும் ஒத்துக்கொள்கிறார்கள்.     நிறைய சுலோகங்கள்   முன்னுக்கு பின் முரணாகக் காணப்படுகிறது

ஸ்மிருதிகள் கால, நேர, சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள தர்மசாஸ்திரம் அனுமதிக்கிறது. வேதங்களை ஸ்ருதி என்பார்கள் இதை மாற்றும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. மனுவில் ஜாதியைப் பற்றி எதுவும் கிடையாது. அது குணத்தினால் அமைந்த வர்ண தர்மத்தை பற்றித்தான் சொல்லுகிறதே அன்றி பிறப்பினால் சொல்லப்படும் ஜாதியைப் பற்றி அல்ல. இந்த கலப்படமான மனுஸ்மிருதி பல அரசியல் தலைவர்களுக்கு சமூகத்தைப் பிரித்தாள ஒரு கருவியாக மாறிவிட்டது. இதற்கு வித்திட்டவன் வெள்ளை கிருஸ்துவன் வில்லியம் ஜோன்ஸ். சமஸ்க்கிருதத்தில் இருந்த சுலோகங்களை நாம்தாம் ஆங்கிலத்தில் எழுத உதவினோம்.  அந்த ஆங்கில பிரதி பல உள்நோக்கத்துடன் எழுதப்பட்டது. இதைத்தான் ஆதார புத்தகமாக்கி மற்றவர்கள் அவர் அவர் பிரதேச சூழலுக்கு ஏற்ப எல்லா மொழிகளிலும் வெளியிட்டார்கள்.. இவற்றைச் செய்தவர்கள் பெரும்பாலோர் ஜாதி ஹிந்துக்களே. ஆரிய சமாஜ்தான் தயானந்த சரஸ்வதி அவர்களின் முயற்சியால் உண்மையான மனுஸ்மிருதி மொழி பெயர்ப்பை வெளியிட்டது. மொத்தம் கிடைத்த 2685 சுலோகங்களில் 1471 சுலோகங்கள் இடைச் செருகல்களாகக் கருதி 1214 சுலோகங்களுடன் ”விசூதா மனுஸ்மிருதி” என்ற பெயரில் வெளிவந்தது.

3

கடவுளால் படைக்கப்பட்ட நான்கு வகை உயிரினங்களுக்குத்தான் ஜாதி என்று பெயர் –

  1. சுவேதஜம் – புழுக்கத்திலிருந்து பிறக்கக்கூடியன – புழுக்கள் – பூச்சிகள் – கிருமிகள்
  2. உத்பிஜம் – பூமியைப் பிளந்து விதைகளிலிருந்து வெளிவருவன – மரம் – செடி – கொடி
  3. அண்டஜம் – முட்டையிலிருந்து வெளிவருவன – பறவைகள் – நீர் வாழ்வன
  4. ஜராயுதம் – கருப்பையிலிருந்து வெளிவருவன – மனிதன் – விலங்குகள் சில

மற்ற மதங்களைப் போல் ஆரம்ப நாட்களிலிருந்தே பாரதியர்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹிந்து மத தலைமையோ அல்லது பொதுவான மதநூலோ இன்று வரைகூட கிடையாது. மனுவில் இப்பொழுது நாம் சொல்லும் ஜாதியைப் பற்றியோ – தீண்ட தகாதவர்கள் பற்றியோ எந்த குறிப்பும் கிடையாது.

ஆங்கிலேயர்கள் வந்த பின்புதான் மனுவைப் பற்றிய விவாதங்கள் தொடங்கின. அதற்கு முன் 90 சதவிகித ஜனங்களுக்கு மனுஸ்மிருதி என்றால் என்ன என்றே தெரியாது.  மிதம் உள்ளவர்களில் அதைச் சரியா படித்துப் புரிந்து கொண்டவர்கள் சொற்ப சிலரே. ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியால் ஆங்கில மோகம் கொண்ட மெக்காலே படிப்பு படித்தவர்களைக் கொண்டு பல தவறான உள்நோக்கத்தோடு ஆங்கிலத்தில் எழுதி வில்லியம் ஜோன்ஸ் என்பவர் 1974 வெளியிட்டார். ஆங்கில பிரதியை ஆதாரமாகக் கொண்டு மற்ற மொழிகளில் வெளியிடப்பட்டு ஹிந்து மதத்தைப் பற்றிப் பல தவறான கருத்துகள் பரப்பப்பட்டன.

பாரதத்தில் மத்திய சரித்திர காலம் வரைதான் மனுவின் அரசாட்சி முறை – நீதி வழங்குதல் போன்ற சட்டங்கள் மட்டும்தான் சில ஹிந்து அரசர்களால் பின்பற்றப்பட்டு வந்தன. வர்ணபிரினை (குணத்தைக் கொண்டு வர்ணம் பிரித்தல் நடைமுறை) கலியின் ஆரம்ப நாட்களிலேயே பின்பற்றப் படவில்லை. அது பிறப்பினால் உண்டானதாகத்தான் கொள்ளப்பட்டு வந்தது. பிராமணர்களும் – ஷத்திரியர்களும் மட்டும்தான் இதைப் பின்பற்றி நடப்பதாகச் சொல்லிக் கொண்டார்கள். உலகின் முதல் சட்ட நூல் மனுஸ்மிருதி தான் என்று பலர் புகழ்ந்து கூறியுள்ளார்கள். ஒரு இனிப்பான பழத்தின் சாரை எடுத்துக் கொண்டு சக்கையை உமிழ்வது போல் இதில் உள்ள பிற்சேர்கைகளை நீக்கினால் இன்றும் இது  முதல்தரமான சட்ட புத்தகம்தான்.

நேருவும் – டாக்டர் வெங்கட்ராமனும் சட்ட புத்தக வெளியிட்டு விழாவில் அம்பேத்கரை

” நவீன மனு ” என்று புகழ்ந்து கூறினார்கள்.

என்சைகிளோபிடியா பிரிட்டிஷ் – ஜெர்மன் – அமெரிக்கன் மனுவை முதன்மை சட்ட வல்லுநர் -நீதிமான் என்றும் சமூக அமைப்பு சித்தாந்த வல்லுநர் ) என்றும் புகழ்ந்து கூறியிருக்கிறது. மாக்ஸ்முல்லர் – எ.எ.மெக்டோனல் – எ.பி.கீத் – பி.தாமஸ் – லுயிஸ் ரெனாய் போன்ற பேராசிரியர்கள் மனுஸ்மிருதியை மதபுத்தகம் அல்லாமல் அது ஒரு அற்புத சட்ட புத்தகம் என்று புகழ்ந்து கூறியுள்ளார்கள். ஜெர்மனிய தத்துவ ஞானி பெடரிக் நெட்சே மனுஸ்மிருதி பைபிளைவிட மேன்மையானது என்றும் அவ்வாறு ஒப்பிடுவது பாவம் என்றும் சொன்னார்.

4

Manu’s Image in National Assembly Hall of Phillippine – Also written – The first, the greatest and wisest Law giver of mankind

மனுவின் புகழ் மற்ற ஆசிய நாடுகளான பாலி – பர்மா  பலிபைன்ஸ் – நேபாளம் – வியட்நாம் – கம்போடியா – இந்தோனேசியா – மலேசியா போன்ற நாடுகளிலும் வர்ண முறையைப் பின்பற்றி வந்தனர்.  அதற்கான பல கல்வெட்டு சான்றுகள் இன்றும் உள்ளன. வியட்நாமின் ராஜா ஜெய் இந்திரதேவ வர்மா தான் மனுவை பின்பற்றி நடப்பவன் என்று அறிவித்துக் கொண்டார்.  பாலியில் இன்றும் வர்ண முறை பின்பற்றப்படுகிறது.

மனு மனிதக் குலத்தின் முதல்வர் ஆவார் எனவேதான் தமிழில் மனிதன் – ஆங்கிலத்தில் ம்மான் ( MAN ) மற்றும்  Manushy – Manuj – Manuss என்றும் பல மொழிகளில் அதே உச்சரிப்பைக் கொண்டு சொல்லப்படுகிறது. Minos in Greek & Latin – Mann in German – Manna in Spanish. இரானியர்கள் இன்றுகூட தங்களை ஆரியர்கள் என்றும் அவர்களது பழைய தேசம் சப்தசிந்து என்றும் நம்புகிறார்கள். கம்போடியர்கள் தங்களை மனுவின் பரம்பரையில் வந்தவர்களாகத்தான் சொல்கிறார்கள். தாய்லாந்து மக்கள் தங்களை ராமரின் வழி வந்தவர்கள் என்று நம்புகிறார்கள் – ராமர் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர் – ராமனும் கிருஷ்ணனும் மனுவின் வழித்தோன்றல்கள்தான். மொத்தமாக 14 மனுக்கள் உள்ளார்கள். இவர்கள் பிரம்மாவின் புதல்வர்கள். சுயம்புவ – சுவரோசிசா – உத்தமா – தமாசா – ரெய்வதா – சக்ஃசூசா – வைவஸ்சுதா (தற்போதைய மனு) – தக்ஷா சவர்னி – பிரம்ம சவர்னி – தர்ம சவர்னி – ருத்திர சவர்னி – தேவ சவர்னி – இந்திர சவர்னி. ) தற்போது நடப்பது வைவஸ்சுத மனுவின் காலம்.

ஜெய்ன நூல்களின் படி வர்ண முறையானது முதலாவது தீர்தங்கரான ரிஷபதேவரால்தான் ஏற்பட்டது. முதலில் பிராமணரைத் தவிர மற்ற மூன்று வர்ணங்கள் தான் இருந்தது. அவரது பிள்ளை சக்ரவர்தின் பாரத நாட்டில் தர்மம் குறைந்து வந்ததால் பிராமண வர்ணத்தை ஏற்படுத்தினார். அம்பேத்கர் கூற்றின் படி சூத்திர வர்ணம் முதலில் கிடையாது மற்ற மூன்று வர்ணங்கள்தான் இருந்தன.

மனுவின் மீது நவீன குழப்பவாதிகளான கிருஸ்துவ சார்புடைய – கம்யூனிச சரித்திர ஆசிரியர்களாலும் – தலித் எழுத்தாளர்களாலும் பிராமணனை மனனுவாடி என்றும் – மனுவின் மீதும் மூன்று குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள்.

1. மனுதான் பிறப்பின் அடிப்படையில் ஜாதிகளை உருவாக்கினார்.

2 .மனு தன் சமூகநீதியில் மனிதநேயம் இல்லாமல் சூத்திரர்களை

தாழ்வாகவும்  பிராமணர்களை உயர்வாகவும் காட்டியுள்ளார்.

3. மனு பெண்கள் சுதந்திரத்திற்கு எதிரானவர்

1). வர்ணம் என்பது குணம் – தொழிலின் அடிப்படை என்பதற்கு மூன்று வேதங்களிலும் சான்றுகள் உள்ளன. ஆனால்  ஜாதி என்பது தந்தைமூலம் பிறப்பினால் வருவது.  இவை இருண்டும் சந்தேகத்திற்கு இடம் இன்றி எதிர்மறையானது. நவீனக் காலத்து ஜாதிகள் பற்றி எந்த குறிப்பும் மனுவில் கிடையாது. குணத்தின் அடிப்படையில் தான் வர்ணம் பிரிக்கப்பட்டது. எனவே எல்லோரும் பிராமணன் – ஷத்திரியன் – வைசியன் – சூத்திரன் என்பவர்கள் தங்கள் மேலான குணங்களின் அடிப்படையில் மேல் வர்ணத்திற்குச் செல்லவும் – கீழான குணங்களின் அடிப்படையில் கீழே தள்ளப்படுவதற்கும் வர்ண விதி உள்ளது.  அவ்வாறான நிகழ்வுகள் ரிக் வேத காலத்திலிருந்து மஹாபாரத காலம் வரை நடைமுறையிலிருந்தது. அதற்குச் சான்றுகள் –

  1. கவாஷ் அலுசா அடிமை பெண்ணின் மகன் மற்றும் வாட்சா சூத்திரர் இவர்கள் இருவரும் ரிக் வேத ரிஷிகளாக மாறினார்கள்.
  2. விஸ்வாமித்திரர் ஷத்திரியர் பிராமணனாக மாறினார்
  3. சத்யகாம சபாலா வர்ணம் தெரியாதவர் பிராமணனாக ஆனார்
  4. மாதங்கினி சண்டாளனுக்குப் பிறந்தவள் ரிஷியாக மாறினாள்.
  5. திரிசெங்கு ஷத்திரியர் சண்டாளன் ஆனார்
  6. விஸ்வாமித்திரரின் புதல்வர்கள் சூத்திரர் ஆனார்கள்

2) மனுவின் படி ஷத்திரியனான அரசன் தான் உயர்வானவன். அவன் மேலே அமர மற்றவர்கள் கீழே அமர வேண்டும். அவன் சந்திரன் – வாயு – அக்கனி -சூரியன் – இந்திரன் – குபேரன் – வருணன் – எமன் இவர்களின் அம்சங்களைக் கொண்டவர். அவனுக்கு அசுத்தம் கி்டையாது. பிராமணனுக்கு ஒரு மரியாதை என்பது மட்டும் தான் இருந்தது. ஒரேமாதிரியான குற்றத்திற்குப் பிராமணனுக்கு அதிக தண்டனையும் சூத்திரனுக்கு குறைந்த தண்டனையும் தான் விதிக்கப்பட்டிருந்தது. வேதம் கற்காத பிராமணனுக்கு தானம் தர தடை இருந்தது. ஷத்ரியர் – வைசியர் வேதம் கற்கவில்லை என்றாலும் தண்டனை கிடையாது. நியமனங்களை கடைப்பிடிக்காத பிராமணன் சூத்திரனாகக் கருதப்படுவான். சூத்திரன் கல்விமானாக .இருந்தால் அவனை பிராமணன் வணங்க வேண்டும். சூத்திரன் வேதம் கற்பது தேவை இல்லை அதற்கு அவனுக்கு நேரமும் இல்லை என்பதால்தான். ஆனால் வேதம் ஒழித்த கல்வி கற்பதில் தடையில்லை. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றவர் தொழுதுண்டு அவன் பின் செல்பவர். இந்த ஒன்று போதாதா அவன் உயர்வைச் சொல்ல. வயது முதிர்ந்த சூத்திரருக்கு மற்ற வர்ணத்தவர்கள் மரியாதை செய்ய வேண்டும். இது மற்ற வர்ண முதியவர்களுக்குக் கட்டாயம் இல்லை. யாசித்து வாழும் பிராமணன் சூத்திரன் விளைவித்த உணவைத்தான் உண்ணுகிறான் மேலே குறிப்பிட்டவாறு பல சூத்திரர்கள் பிராமணர்களாக மாறியுள்ளார்கள். சாந்தோக்கிய உபநிஷத்தில் ரைக்வர் என்ற பிராமணர் ஜனச்ருதி என்ற சூத்திரனுக்கு வேதம் கற்பித்ததாக குறிப்பு உள்ளது. பிருகு பரத்வாஜரிடம் நான்கு வர்ணத்தவருமே யாகம் செய்ய உரிமை உண்டு என்கிறார். புருஷசூத்தகத்தில் பிரம்மாவின் உறுப்புகளைச் சொல்லி இந்த இந்த வர்ணத்தவர்கள் பிறக்கிறார்கள் என்பது பிற்சேர்க்கைதான். இது சரி என்றால் மனுவின் படி குணத்தின் அடிப்படையில் வர்ணம் என்பது தவறாகிவிடும். பல பிற்சேர்கைகள் சூத்திரர்களைத் தாழ்வாகச் சொல்லியுள்ளதில் இதையும் நாம் சேர்க்க வேண்டும்.

3) பெண்களை மிக உயர்வாக போற்றும் பல செய்யுள்களை மனுஸ்மிருதியில் காணலாம். மூன்றாவது சருக்கத்தின் அறுபத்திரண்டாவது செய்யுள் மனைவியைக் கணவன் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என விதிக்கிறது. மகிழ்ச்சியில்லாத மனைவி இருக்கிற குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்காது என்று மனு ஸ்மிருதி எச்சரிக்கிறது. பெண்களைத் தந்தைமாரும் சகோதரர்களும், ஏன் கணவனுங்கூட வணங்க கடமைப் பட்டிருப்பதாக அது கூறுகிறது. பெண்களுக்குக் குடும்பங்களில் நல்ல உணவு, சிறந்த ஆடையாபரணங்கள் ஆகியவற்றை அளித்து மகிழ்விக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதி விதிக்கிறது. பெண்கள் மதிக்கப் படுகின்ற குடும்பங்களிலும் சமுதாயத்திலும்தான் சிறந்த மனிதர்கள் தோன்றுவார்கள் என்று மனு ஸ்மிருதி அறிவுறுத்துகிறது. பெண்கள் துன்புறும் நிலை இருக்கின்ற குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது என்று அது சொல்கிறது. பெண்களை மதிக்காத சமுதாயத்தில் எத்தனை நல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றால் பயன் விளையாது என்கிறது, மனு ஸ்மிருதி. அதன் மூன்றாவது சருக்கத்தில் ஐம்பத்தைந்திலிருந்து, ஐம்பத்தொன்பது வரையிலான செய்யுள்கள் பெண்கள் நலனையே பிரதானமாக வலியுறுத்துகின்றன.

1000 வருடங்களுக்கு மேல் சமூகத்தில் கட்டாயமாகத் திணிக்கப்படாத ஒரு வர்ணசட்டத்தை இன்று தேவையில்லாமல் பேசி அரசியல் நடத்துவது சரிதானா ? மனஸ்மிருதியை எரிப்பதும் அதற்காகப் போராட்டங்கள் நடத்துவதும் தேவைதானா ?

56

//  one thing I want to impress upon is that Manu did not give the law of caste and that he could not do so, caste existed long before Manu (Cast in India P.16) //

 எனக்கு மனுவிடம் பிடித்த ஒன்று மனு சாதி சட்டங்களை இயற்றவில்லை  – அதை அவர் செய்யவும் முடியாது – ஏன் என்றால் மனுவின் காலத்திற்கு முன்னமே ஜாதி ஏற்பட்டுள்ளது.

// It is indisputable that the Vedas lay down the theory of Chaturvarnya in what is known as the Purushsukta (Philosophy of Hinduism P.25) //

பேச்சுக்கே இடம் இல்லாமல் வேதம்தான் சதுர்வர்ண முறையை புருஷசூத்தகத்தின் மூலம் எடுத்துரைக்கிறது

// Manu may not be responsible for the creation of caste.  Manu preached the sanctity of the varna and as I have shown varna is the parent of caste.  In that sense Manu can be charged with being the progenitor if not the author of cast system (Philosophy of Hindusim p.25) //  

மனு ஜாதிமுறையை ஏற்படுத்தியதற்குக் காரணமானவர் அல்ல. மனு வர்ணத்தின் புனிதத்தை எடுத்துரைக்கிறார் மற்றும் நான் சொன்னது போல் வர்ணத்தின் அப்பா ஜாதிதான். அப்படிப்பார்த்தால் மனு ஜாதியை ஏற்படுத்தியவர் இல்லாவிட்டாலும் அதன் முன்னோடி என்று அழைக்கலாம் அல்லவா..

//  I must admit that the vedic theory of varna as interpreted by Swami Dayanand and some others is sensible and an inoffensive thing.  It did not admit birth as a determining factor in fixing the place of an individual in society, it recognized worth //   (Annihilation of cast P 92-93)

வேதத்தின் வர்ண முறையை தயானந்த சரஸ்வதி மற்றும் அவர் போன்றவர்கள் தரும் விளக்கங்கள் அறிவுக்கு ஏற்றதாய் தற்காப்பான ஒன்றுதான். இது ஒருவருடைய பிறப்பின் அடிப்படையில் சமூகத்தில் அவரது நிலையை நிச்சப்படுத்துவது அல்ல.- இதை ஆதரிக்கலாம்

 //  The essence of the vedic conception of varna is the pursuit of a calling which is appropriate to one’s natural aptitude //   (Annihilaltion of caste P 92 )

 வேதத்தின் வர்ண  அணுகு முறையின் சாரம் ஒருவருடைய குணங்கள் செயல்பாடுகளைக் கொண்டு தீர்வு செய்வது இயற்கையான ஒன்றே.

 // The principle underlying caste is fundamentally different from the principle underlying varna. Not only they are fundamentallly different but they are also fundamentallly opposed //  (Annihilation of caste p 92)

 ஜாதி – வர்ணம் இவற்றின் அடிப்படை கொள்கைகள் வேறானவை. அடிப்படை கருத்து மட்டுமல்லாமல் அவை இரண்டும் அடிப்படையில் எதிர் எதிர் ஆனது.

அம்பேத்கர் சமஸ்க்கிருதத்தை முழுமையாகப் படித்தவர் அல்ல. உலகின் முதல் சட்ட புத்தகம் என்று சொல்லும் ஒன்றை இந்தியச் சட்டங்களை உருவாக்கியவர் அதில் உள்ள நல்லனவற்றை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார் – முன்னுக்குப் பின் முரண்பட்டு மனு தகன தினத்தைக் கொண்டாடும் அளவுக்கு வெறுப்பில் தள்ளியது ஏன் ? அம்பேத்கர் எழுதிய சட்ட புத்தகத்தைப் பெரியார் ஏன் எரித்தார் ? அம்பேத்கர் இயற்றிய சட்ட சாசனம் இதுவரை 140 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன இந்த உரிமை ஸ்மிருதிக்கு தாராளமாக உண்டு என்பதை மறுக்கமுடியுமா?

மனுஸ்மிருதியில் இடைச்செருகல்களை பிராமணர்கள்தான் செய்தார்கள் என்று கண்மூடித்தனமாகக் குற்றம்சாட்டுவது சரி அல்ல. சூத்திரர்களின் உதவி மற்ற ஜாதி ஹிந்துக்களுக்கு (ஷத்திரய – வைசிய ) – ஒரு அரசனின் படை பலத்திற்கும் – வைசிய நில உடைமையாளர்களுக்கும் முக்கியமான தேவை.  சூத்திரர்கள் தான் அவர்கள் வாழ் வாதாரத்தின் மூலம். அவர்கள் படித்து முன்னேற விட்டால் கூலிக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள் என்ற திடமான கவலைதான் அவர்கள் முன்னேற்றத்தை மறைமுகமாக தடுத்து வந்தது. இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. ஆனால் பழியைச் சுமப்பது என்றும் பிராமணன்தான்.  – கிருஸ்துவனுக்கும் முதல் எதிரி பிராமணன்தான் என்பது சரித்திர உண்மை. இவர்களும் ஏன் இந்த இடைசெருகல்களுக்குக் காரணமாக இருக்கக்கூடாது.

தமிழகத்தில் மனுஸ்மிருதியையும் ஜாதியத்தையும் அதிகமாக போற்றி வளர்த்தவர்கள் இந்தியாவிலேயே ஜாதி ஹிந்துக்கள்தான். இதில் பழம் தமிழகம்தான் முதல் இடம் என்பதைப் பின்வரும் செய்திகளைக் கொண்டு நன்கு உணரலாம்.

தொல்காப்பியத்திலும் வர்ணமுறை சொல்லப்பட்டிருக்கிறது – ஆனால் அவர் அதை   அந்தணர் – அரசர் – வணிகர் – வேளாளர் என்று சொல்கிறார்.

திருமந்திரத்தில் – ஏழுாவது தந்திரம் – பாடல் – 1721 – நான்கு வர்ணங்கள் உண்டு என்பதைச் சொல்லியுள்ளார்

மறையவர்  அர்ச்சனை  வண்படி   கந்தான்

இறையவர் அர்ச்சனை யேய  பொன்னாகும்

குறைவிலா  வசியர்க்குக்  கோமளம் ஆகும்

துறையுடைச் சூத்திரர் தொல் வாணலிங்கமே

பொருள் – பிராமணர்கள் ஸ்படிகத்தினால் செய்த லிங்கத்திற்கு அர்சனை செய்ய வேண்டும். அரசர்கள் தங்கத்தினால் செய்த லிங்கத்திற்கு அர்சனை செய்ய வேண்டும்.  வைசியர்கள் மரகதத்தினால் செய்த லிங்கத்திற்கு அர்சனை செய்ய வேண்டும்.  சூத்திரர்கள் கல்லில் செய்த லிங்கத்திற்கு அர்சனை செய்ய வேண்டும்

  • 15 ஆம் நூற்றாண்டில் கமலை ஞானப்பிரகாசம் என்ற சூத்திரர் எழுதிய ஜாதி நூல்
  • 17 ஆம் நூற்றாண்டில் ”வருண சந்திரிகை ” என்ற நூல் வெளிவந்தது.
  • 20 ஆம் நூற்றாண்டில கடலூர் கனகசபை பிள்ளை எழுதிய ”வருண சிந்தாமணி”
  • சோழ மெய்க்கீர்திகளில் காணப்படும் வாக்கியங்கள் – மனுநீதி அரச நீதியாக இருந்தது.
  • ” தரும நெறி நிற்ப மனுநெறி நடாத்திய ”
  • ” மேவரு மனுநெறி விளக்கிய ” ” மனுநெறி தழைத்தோங்க ”
  • ” மாப்புகழ் மனுவுடன் வளர்ந்த கோப்பரகேசரி ”
  • ” மனுவாறு பெருக கலியாறு வறப்ப ”
  • ” மண் முழுதுங்களிப்ப மனுநெறி வளர்ந்து ”
  • ” மேதினி சாதி ஒழுக்கம் நீதி அறமும் பிறழாது திகழ ”
  • ” செயல் வாய்ந்த மனுநூலும் செங்கோலும் திறை நடப்ப ”
  • ” பாண்டியர் – சோழர் செப்பேடுகளில் காணப்படும் – ” தங்களை மனுநீதி காப்பவர்கள் – நால் வர்ண நெறியை நிலை நிறுத்துவதே தங்கள் தர்மம் ” என்று எழுதியுள்ளது.
  • ஜெயம் கொண்டார் பாடிய கலிங்கத்து பரணி ” மறையவர் வேள்வி குன்றி மனுநெறி அனைத்தும் மாறி – துறைகள் ஓர் ஆறும் மாறிச் சுருதியு முழக்கம் ஒய்ந்தே (தாழ் இசை 258)
  • பாண்டிய நெடுஞ்செழியன் பராந்தகன் – சீவரமங்கல செப்பேட்டில் ” மனுநீதிப்படி ஆட்சி நடத்தினார் ” என்று உள்ளது.
  • மூன்றாம் குலோத்துங்க சோழனின் 11 ஆம் ஆண்டு கல்வெட்டில் மனுநீதி முறை வளர – மனுநீதி தரழத்தோங்க ” என்ற வாசகங்கள் உள்ளன.
  • மனுநீதி சோழனின்  சிற்பங்களும் நிறையக் காணப்படுகின்றன.

வட சொல் – வேத வேள்விகளைப் பற்றிப் பல சான்றுகள் கொட்டி கிடக்கின்றன – உதாரணமாக

  • தமிழ்ச் சொல்லும் வட சொல்லும் தானிழற் சேர (சம்பந்தர் தேவாரம் 77-4)
  • மந்தி போற்றிரிந்து ஆரியத்தோடு செந்தமிழ் பயனறிகிலா அந்தகர் ( ச.தே. 297-4)
  • வடமொழியும் செந்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன்காண் (அ.தே.301-1)
  • ஆரியந் தமிழோ டிசையானவன் ( அ.தே.132-3 )
  • மறை வழக்கமில்லா மாபாவிகள் (ச.தே. 363 – 3 )
  • வேத வேள்வியை நித்தனைச் செய்து உழல் ஆதமில் அமணொடு ( ச.தே. 366 – 1 )
  • வைதிகத்தின் வழி ஒழுகாத அக்கை தவமுடை அமண்தேரர் (ச.தே. 366 – 2 )

மனுஸ்மிருதியை பல உயர் ஜாதி ஹிந்துக்கள் தமிழில் வெளியிட்டுள்ளார்கள். இதன் தேவை அவர்களுக்கு வேண்டும் என்பதினால்தான்.

  • புதுவை முத்து செட்டியார் – ராமானுச ஆச்சாரியார் – குருசாமி முதலியார் – பி.க. சுப்பராய முதலியார் – ராகவலு நாயுடு – திருலோக சீதாராமன்.

7

இந்த சிலைக்கும் பல எதிர்புகள் தோன்றவே மனுநீதி சோழன் என்பதற்கு பதிலாக சமநீதி கண்ட சோழன் என்று மாற்றம் கொண்டது – சிலர் தற்போது இலங்கையில் அனுராதபுரத்தை ஆண்டு தமிழ் மன்ணன் எள்ளாளன் என்பவன் தான் தேரில் மகனை கொன்றான் எனவே அப்பெயரைத்தான் எழுத வேண்டும் என சிலர் போராடுகிறார்கள்.

தொடரும் – ( Ref : கோவில் – நிலம் – சாதி – பொ.வேல்சாமி –  Aryamantavya blog & Web Pages )

 

 

 

 

 

 

 

 

“பிராமண வெறுப்புணர்வு (புனைவும் உண்மையும்) Part – 5” இல் 3 கருத்துகள் உள்ளன

  1. சித்தர் திருமூலர் தன் திருமந்திரத்தில் ஆரியம் என்ற சம்ஸ்க்ருதம்,தமிழ் இரண்டு மொழிகளையும் சிவ பெருமான் உமைக்கு போதித்தார் என்று பின் வரும் பாட்டில் சொல்லி உள்ளார்.

    மாரியும் கோடையும் வார் பனி தூங்க நின்று
    ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து
    ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்
    காரிகையார்க்கு கருணை செய்தானே –திருமூலர் மேலும் சித்தர் திருமூலர்

    https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/309/thirumoolar-nayanar-thirumandiram-payiram-agama-sirappu

    பண்டிதர் ஆவார் பதினெட்டு பாடையும்
    கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க
    பண்டிதர் தங்கள் பதினெட்டு பாடையும்
    அண்ட முதலான் அறம் சொன்னவாறே-திருமூலர்

    https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/309/thirumoolar-nayanar-thirumandiram-payiram-agama-sirappu

    இந்தியாவின் பதினெட்டு மொழிகளும்(சம்ஸ்க்ருதம் உட்பட) அறிந்தவர் தான் பண்டிதர் என்று சொல்லி அந்த பதினெட்டு மொழிகளும் சிவபெருமான் சொல்லிய அறம் விதிகளுக்கு உட்பட்டு உள்ளது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.

    ஆதி தமிழ் எழுத்து உயிர் எழுத்து 15 + மெய் எழுத்து 35 + 1 ஓம் பிரணவம்=51 எழுத்து வடிவம் கொண்டு இருந்தது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.இந்த ஆதி எழுத்துகள் பற்றி பல இடங்களில் சித்தர் திருமூலர் மீண்டும் மீண்டும் திருமந்திரத்தில் சொல்லி உள்ளார். இந்த ஆதி எழுத்துகளில் இருந்து தான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் தோன்றின என்று சொல்லி அதனால் தென்னிந்தியா உலகில் சுத்தமான இடம் என்றும் சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.

    ஓதும் எழுத்தோடு உயிர்க் கலை மூவைந்தும்
    ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்று என்பர்
    சோதி எழுத்தினில் ஐயிரு மூன்று உள
    நாத எழுத்திட்டு நாடிக் கொள்ளீரே- திருமூலர்

    https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/411/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-4-thiruambala-chakkaram

    ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்
    ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்
    ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின்
    ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத்தாமே-திருமூலர்
    https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/411/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-4-thiruambala-chakkaram
    ஈறான கன்னி குமரியே காவிரி
    வேறாம் நவ தீர்த்தம் மிக்குள்ள வெற்பு ஏழுள்
    பேறான வேத ஆகமமே பிறத்தலால்
    மாறாத தென் திசை வையகம் சுத்தமே-திருமூலர்
    https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/1355/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-9-potrillaik-kootthu
    இந்த தமிழ் ஆதி எழுத்துகள் பற்றிய குறிப்புகள் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று அழுகணி சித்தர்,அகப்பேய் சித்தர்,கொங்கண சித்தர்,போகர்,சிவவாக்கியர்,பட்டினத்து சித்தர் போன்ற எல்லா சித்தர் பாட்டுகளில் உள்ளன. அருணகிரி நாதர் திருப்புகழில் தமிழில் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று சொல்லப்பட்டு உள்ளது.பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் தமிழ் எழுத்துகள் 51 என சொல்லி உள்ளது
    .
    சம்ஸ்க்ருத சொல்களின் வேர்கள் எல்லாம் தென் இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளத்தில் உள்ளன.நல்ல தமிழ் அறிவு மற்றும் மலையாள அறிவு உள்ளவர்களுக்கு சம்ஸ்க்ருதம் என்பது சிதைந்த, உருத்திரிந்த பழங்கால தமிழ் என்று அதாவது தென் இந்திய மொழி போல குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளம் போல உள்ளது என்று விளங்கும். அதாவது தற்போது உள்ள 31 எழுத்து கொண்டு உள்ள செந்தமிழ் என்ற தமிழுக்கு முன்பு இருந்த கருந்தமிழ் என்ற 51 எழுத்து கொண்டு இருந்த ஆதித்தமிழ்.
    தொல்காப்பியரும் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் பிறப்பியல் கடைசி இரண்டு சூத்திரங்களில் தான் சொல்லிய இலக்கண விதிகள் வெளிப்படையாக பொருள் உணர்த்தும் சொல்களின் எழுத்துகளுக்கு மட்டுமே என்றும் வேதங்களில் உள்ள மந்திர எழுத்துகளுக்கு தான் இலக்கண விதி சொல்லவில்லை என்று சொல்லி உள்ளார்.அதாவது உணர்வுகளை வெளிப்படுத்தும் விகாரம் என்ற வைகரி ஒலி சொல்களின் எழுத்துகளுக்கு மட்டுமே தான் இலக்கணவிதி சொல்லி உள்ளதாக தொல்காப்பியர் கூறுகிறார். இதில் இருந்து தமிழில் 31 எழுத்துகள் தவிர மற்ற பல எழுத்துகள் உண்டு என்று தெளிவாகிறது.

    http://www.kamakoti.org/tamil/Kural51.htm http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=1040

    http://www.saivasamayam.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

    சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்ட முடிவில் நூல் கட்டுரை என்ற பகுதியில் செந்தமிழ் கொடுந்தமிழ் என்ற இரண்டு தமிழ் பகுதிகள் உள்ள தமிழகம் என்று இளங்கோ அடிகள் சொல்லி உள்ளார்.செந்தமிழ் என்பது தற்பொழுது உள்ள தமிழ் நாடு,கொடுந்தமிழ் என்பது கொடுந்தமிழ் சேர நாடான தற்பொழுது உள்ள கேரளா.சேர நாடான கேரளாவில் இருந்து தான் இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம் எழுதி உள்ளார்.

    தமிழ் சம்ஸ்க்ருதம் உட்பட இந்திய மொழிகளில் 12 மொழிகளுக்கு மேல் அதிகம் அறிந்த மகாகவி பாரதியும் தான் பகவத் கீதைக்கு எழுதிய உரையின் முன்னுரையில் சம்ஸ்க்ருத வேதங்களின் மொழி நடை மதுரை சங்கத்துக்கு முந்தைய தமிழ் போல உள்ளது என்றும், உபநிடதங்கள் மொழி நடை மதுரை சங்கத்துக்கு பிந்தைய தமிழ் போல உள்ளது என்றும் சொல்லி உள்ளார்.

    நன்னூல் தமிழ் இலக்கணம் எழுதி உள்ள பவணந்தி முனிவர் தன் நூல் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்திலே உலகின் இருள் மறைய சூரியன் தன் ஒளிக்கதிர்களை பரப்புதல் போல் மனிதர்களின் மன இருள் மறைய இறைவன் அறம் பொருள் இன்பம் வீடு என்பதை மூவாறு (3×6=18) மொழிகளில் கொடுத்தான்… அவைகளில் தான் தமிழ் மொழிக்கு இலக்கணம் எழுதுகிறேன் என்று சொல்லி உள்ளார்.தமிழ் இலக்கணங்களுக்கு உரை எழுதி உள்ள உரை ஆசிரியர்கள் பதினெண்(18) மொழி பூமி என்று இந்தியாவை குறிப்பிட்டு உள்ளனர்……..

    தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம் இரண்டு மொழிகளையும் நன்கு அறிந்த பெரும் சித்தராக இருந்த வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகள் தமிழ் தொல்காப்பிய இலக்கணம், சம்ம்ஸ்க்ருத பாணிணிய இலக்கணம் இவைகளில் நிறைய தவறுகள் உள்ளன என சொல்லி உள்ளார்.

    சம்ஸ்க்ருதம் என்ற சொல்லுக்கு நன்கு செய்யப்பட்டது என பொருள் சொல்லப்படுகிறது. இது சம்+க்ருதம் என பிரிக்கப்படுகிறது. சம் என்பது நல்ல எனவும் க்ருதம் எனபது செய்யப்பட்டது எனவும் சொல்லப்படுகிறது.

    இது செம்மை+கரிதம்=செம்கரிதம் அல்லது சன்+கரிதம்=சன்கரிதம் அல்லது சல்கரிதம் அல்லது சற்கரிதம் என்ற தமிழ் சொல்லின் உருத்திரிபு மற்றும் சிதைவு.
    மலையாளத்தில் க்ருத என்றால் செய்யப்பட்டது என்று பொருள்,க்ருதி என்றால் செய்தல் அல்லது உண்டாக்குதல்.அதிக்ருதன் என்றால் அதிகம் செய்பவன் அல்லது அதிகாரம் பெற்றவன். இது அதிகம் செய்பவன் அதிகாரிதன் என்பதன் உருத்திரிபு.அதிகம் செய்பவன் அதிகாரி. பெரும்பாலான க்ரு என்று தொடங்கும் சொல்கள் கரி என்ற சொல்லின் உருத்திரிபு.

    தமிழில் கரி என்பது செய் என்ற வினைச் சொல்லைக் குறிக்கும்.

    அதிகரி என்றால் அதிகம் செய் அல்லது அதிகம் ஆக்கு.
    சுத்திகரி என்றால் சுத்தம் செய் அல்லது சுத்தம் ஆக்கு.
    வசிகரி என்றால் வசியம் செய் அல்லது வசியம் ஆக்கு
    சேகரி என்றால் சேர்ப்பு செய் அல்லது சேர்ப்பு ஆக்கு

    கரி என்ற இந்த வினைச் சொல்லின் பெயர்ச்சொல் கரணம் அல்லது கரித்தல்..கரித்தல் என்றால் செய்தல்.கரிதம் என்றால் செய்யப்பட்டது.எனவே செம்கரிதம் என்பது நன்கு செய்யப்பட்டது.

    சம்ஸ்க்ருதம் என்பது சன்கரிதம் என்பதன் உருத்திரிபு என்றும் கூட சொல்லலாம்.காரணம் சன் அல்லது சல் என்ற ஒரு பகுதி தமிழில் மற்றும் மலையாளத்தில் நல்ல என்பதை குறிக்கும் ஒரு பகுதி. இந்த பகுதிச்சொல்(prefix) சம்ஸ்க்ருததில் சத் என்ற உபசர்கமாக அதாவது பகுதியாக ஆகி உள்ளது. சத் என்ற பகுதிக்கு உண்மை,தூய்மை,நல்ல என்று சம்ஸ்க்ருதம் பொருள் சொல்லுகிறது.

    தமிழில் சன்மார்க்கம்,சன்குரு என்பன போன்ற சொல்களுக்கு நல்ல மார்க்கம்,நல்லகுரு என்று தான் பொருள்.சம்ஸ்க்ருதத்திலும் சன்மார்கா என்ற சொல்லுக்கு நல்ல மார்க்கம் என தான் பொருள் சொல்லுகிறது.

    மலையாளத்தில் நல்ல மனம் என்பதை சன்மனசு என சொல்லும் வழக்கம் உண்டு. நல்ல குணம் என்பதை சல்ஸ்வபாவம் என சொல்லும் வழ்க்கம் உண்டு.

    எனவே சம்ஸ்க்ருதம் என்பது சன்கரிதம் அல்லது சல்கரிதம் அல்லது சற்கரிதம் என்பதன உருத்திரிபு என சொல்லமுடியும்.

    சத்யம் என்பது சம்ஸ்க்ருதம் என்று சொல்லப்படுகிறது.ஆனால் உண்மை என்பதை குறிக்கும் சத்யம் என்ற சம்ஸ்க்ருத சொல் இலக்கணவிதிக்கு உட்பட்ட சிதைந்த தமிழ் சொல். சத்யம் என்பது சத் என்ற சொல்லில் இருந்து வந்தது என்று சொல்லப்படுகிறது. சத் என்றால் உள்ளது அல்லது இருப்பு என்று சம்ஸ்க்ருதத்தில் பொருள் சொல்லப்படுகிறது.

    சத்யம் என்ற சம்ஸ்க்ருத சொல் தமிழில் எழுதப்படும் போது சத்தியம் என்று தான் எழுதப்படுகிறது.காரணம் சத்யம் என்ற சம்ஸ்க்ருத சொல் சத்தியம் என்ற தமிழ் சொல்லின் சிதைந்த வடிவம்.

    சத்தியம் என்ற சொல்லை சத்து+இயம்=சத்தியம் என்று தான் பிரிக்க முடியும்.சத்து என்றால் தமிழில் உள்ளது என்று ஒரு பொருள் உண்டு.சத்தியம் என்றால் உள்ள தன்மை என்று பொருள்.தமிழில் ஒரு சொல் இயம் என்ற விகுதியில்(suffix) முடிந்தால் உறைப்பாக அது குணத்தை தான் குறிக்கும் என சொல்ல முடியும்.சத்தியம் என்ற சொல் இயம் என்ற விகுதியில்(suffix) முடிவதால் சத்தியம் என்பது குணத்தை குறிக்கும் தூய தமிழ் சொல் என்று உறைப்பாக சொல்ல முடியும்.

    தமிழில் இறந்து போகுவது செத்து போகுதல் என தவறாக சொல்லப்படுகிறது. உண்மையில் அது சத்து போகுதல் என தான் சொல்லப்பட வேண்டும். செத்து அல்லது செற்று என்ற சொல்லுக்கு செதுக்கு அல்லது கொல் என்று தான் பொருள்.
    ஆண்டாள் தன் திருப்பாவை 14 வது பாசுரத்தில்
    “சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற” என்று தென் இலங்கை இராவணனை கொன்ற திருமால் என்று பாடி உள்ளார். செற்ற என்றால் கொன்ற என்று பொருள்.
    சத்து போகுதல் என்றால் இருப்பு போகுதல். மலையாளத்தில் சத்து போயி என்று தான் சொல்லப்படுகிறது.மலையாளத்திலும் செத்து என்றால் வெட்டு என்று தான் பொருள்.தெலுங்கில் கூட “சச்சி போசி” என்று தான் சொல்லப்படுகிறது.சச்சி போசி என்றால் இருப்பு போகுதல்.

    தமிழில் உண்மை என்ற சொல்லுக்கு உள்ள தன்மை என்று தான் பொருள்.உண்மை என்ற சொல் பண்பு குறித்த பகாப்பதம் ஆகும்.

    செம்மை சிறுமை சேய்மை தீமை
    வெம்மை புதுமை மென்மை மேன்மை
    திண்மை உண்மை நுண்மை இவற்றெதிர்
    இன்னவும் பண்பின் பகாநிலைப் பதமே. –நன்னூல் நூல்பா-135

    எனவே உண்மை = சத்தியம். இரண்டு சொல்களும் உள்ள தன்மை அல்லது இருப்பு தன்மையை தான் குறிக்கின்றன. தமிழ் மற்றும் சமஸ்க்ருதம் இவற்றுக்கு இடையில் இவ்வளவு ஒற்றுமை உள்ளது.

    Like

பின்னூட்டமொன்றை இடுக