பிராமண வெறுப்புணர்வு (புனைவும் உண்மையும்)- part -8 (தலித்துகளும் பிராமணர்களும்)

Ref :- தலித்துகளும் பிராமணர்களும் ( கே.சி.லட்சுமி நாராயணன் ) – thanjavooraan.blogspot.com &  tamilnaduthiyagigal.blogspot.com & Web Pages

எல்.என். கோபால்சாமி ஐயர் ( 21 ) *

a

இவர் லால்குடியில் பிரபல வக்கீல் குடும்பத்தில் பிறந்தவர். ஆங்கிலேய ஆட்சியில் வக்கீல்களை கண்டால் பயம் கொண்ட அரசு அவர்களை அந்த தொழில் செய்யவிடாமல் அவர்களது பட்டங்களை பறித்தது. போராட்டங்களிலும், அரசுக்கு எதிரான வழக்குகளிலும் தலையிடமாட்டேன் என்று உறுதிமொழி தந்தால் அவர்களைத் தொழில் செய்ய அனுமதித்தது. ஆனால் ஐயர் உறுதிமொழி அளிக்கவில்லை நேர்மாறக காந்தியின் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். சிறிது காலம் ஹரிஜன சேவா சங்கத்தின் செயலராகவும் பின்பு தலைவராகவும் பணி செய்தவர். இந்தியாவிலேயே ”தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கம்” திறம்பட நடக்கிறது என்று காந்திஜியின் பாராட்டைப் பெற்றவர். மேலும் இவர் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டவர். திருச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர். ஹரிஜன விடுதிகள் கட்ட நிதி பல திரட்டி தந்துள்ளார். ஹரிஜன நலதுறையில் செயலராகவும் பணியாற்றினார். சென்னை தக்கர் பாபா தொழிற்கல்வி பயிற்சிப் பள்ளிக்கூடத்தின் செயலாளராகவும் இவர் சேவை செய்துள்ளார்.

Shri L. N. Gopalaswami ( Recipient of Jamnalal Bajaj Award for ConstructivWork-1994)

Born on 12th November, 1902, Shri Gopalaswami is a veteran Gandhian, a very distinguished freedom fighter and a selfless constructive worker particularly in the field of removal of untouchability, Harijan welfare, khadi, prohibition, temple entry and village industries. A lawyer by profession, he plunged at the age of 30 into the freedom movement as a result of which he was debarred from practice as a lawyer. He never went back to that profession and completely devoted himself to Gandhiji’s constructive programme.

He came into contact with Gandhiji in 1921 and in 1927 he toured along with him for khadi collection in Trichy District. At the request of Rajaji and with the blessings of Mahatmaji, Gopalaswami took up fulltime Harijan work in 1934 under the auspices of the Harijan Sevak Sangh. From humble beginnings, the work of the Harijan Sevak Sangh progressed rapidly and in 1969 there were 30 hostels both for boys and girls with 2585 students. Nearly 200 schools in the remote villages run by the Sangh were merged with the common schools. All these activities were in the rural areas. He also developed a large number of rural centres for village industries like poultry, bee keeping, agriculture, weaving and mat making, tanning and production of leather goods.

Taking advantage of the State of Travancore having thrown open all the Temples to the Harijans in 1937, a similar movement was started by the Tamil Nadu Harijan Sevak Sangh of which Shri Gopalaswami was the Secretary. The Sangh campaigned for temple entry for Harijans into the Meenakshi Temple at Madurai and organised a Conference for this purpose which was presided over by Smt. Rameswari Nehru and inaugurated by Shri Rajaji. Shri A. Vaidyanathan Iyer, the President of the Harijan Sevak Sangh and Shri Gopalaswami along with a batch of Harijans and on~Nadar entered the Meenakshi Temple at Madurai on 8.7.1939. Gandhiji as soon as he heard of it wrote in the Harijan calling it a ‘miracle’. At Shri Gopalaswami’s persistent request, Gandhiji came down to Madurai in 1946 and worshipped at the Meenakshi Temple and also visited Palani and worshipped at the Hill Temple. Just at this time Shri Gopalaswami got into the Madras Legislative Assembly after being elected from a rural constituency in Trichy. He was made Secretary of a Committee appointed by the Madras Government to report on Harijan work and formulate programmes for their welfare.

He toured the entire province of the then Madras State which included the present Andhra and Kerala States and submitted a report which has been hailed as a basis for all Harijan Welfare work all over the country. Gandhiji during his first Harijan tour had founded the Kodambakkam Industrial School in 1933 in a suburb of Madras to give practical shape to his idea of learning craft during education. To start with, the institution had only 40-50 boys from the Harijan community who would otherwise  have been on the streets. So far over 3000 boys have been trained and every one of them has been employed on some remunerative basis.

In 1946, the foundation stone of the present Thakkar Bappa Vidyalaya was laid by Gandhiji. Shri Gopalaswami was appointed -as the Managing Trustee which post he has occupied uninterruptedly since 1953. The Thakkar Bappa Vidyalaya is one of the most outstanding monuments of Harijan work in the entire country. Even in his 80s and 90s Shri Gopalaswami continues to engage himself fully in constructive work, to keep up the memories and fulfil the desires of his masters viz. Mahatma Gandhi and Thakkar Bappa who enjoined upon him not to leave Harijan work for any reason whatsoever. Most of his preceptors and co-workers have left this world but Gopalaswami continues to serve the institution in the true spirit of Nishkamya Karma.

He is indeed a very rare example of a real Karmayogi. Prompted by the sole desire of contributing his mite to the restoration and upliftment of the most disadvantaged sections of the community and transforming them into dignified human beings managing their own lives and engaged in gainful occupations. Shri Gopalaswami is a person of infinite moral courage and of the highest rectitude from which he has never deviated throughout his life. In the Gandhian tradition, he is humility personified and has been “hiding his head” under the bushell, because of his incurable modesty and almost religious avoidance of the limelight.

சேலம் கே.வி.சுப்பா ராவ் ( 22 ) *

இவர் ராஜாஜியின் உற்ற நண்பர். தாழ்த்தப்பட்ட குழந்தைகள் கல்வியில் இவர் அதிக கவனம் செலுத்தினார்.  ஹரிஜனங்கள் வாழும் குடிசைகளில் தங்கி அவர்களுடன் நெருங்கிப் பழகி தீண்டாமையைப் போக்க வேண்டும் என்று சேலம் மக்கள் உணரும் வண்ணம் நடைமுறையில் அதை சாதித்து ஒரு முன் உதாரணமாக நடந்து கொண்டவர். இவர் ஹரிஜனங்களுடன் நெருங்கிப் பழகியதால் இவரை ”பர சுப்பாராவ்” என்றே அழைத்தார்கள். இவரது முயற்சியால் சுந்தரசாருலு என்ற கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி சேலத்தில் கட்டப்பட்டது.

வி.பாஷ்யம் ஐயங்கார் ( 23 ) *

உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணி செய்தவர்.  ஹிந்து தர்மத்தில் தீண்டாமைக்கு ஆதாரம் இல்லை என்று ஆணித்தரமாக நிரூபித்த நீதிபதி. இவர் சென்னை கோடம்பாக்கம் ஹரிஜன கைத்தொழில் பள்ளிக்கூடத்தின் தலைவராய் பணி செய்தவர். விடுதலை தியாகி அம்புஜத்தம்மாள் தாத்தா வி.பாஷ்யம் ஐயங்கார் என்பவர் ஆங்கில அரசில் முதல் அட்வகேட் ஜெனரலாக பணிபுரிந்தவர்  மேலே சொன்ன ஐயங்கார் வேறு ஒருவர்.

என்.எம்.ஆர்.சுப்பராமன் (மதுரை காந்தி) – ( 24 )

Subbaraman, otherwise called Madurai Gandhi, born in Sourastra community was a prominent person worked for dalit liberation. He learnt the art of sat yagraha from Gandhiji. He joined in Congress movement in his twentieth year of age. Though he born rich he moved affectionately and freely with poor and dalits. He was sent as a representative from Madurai District Congress party to participate All India Congress meet at Kakinada on 1923.

Subbaraman became one of the fore-runners in establishing a school for dalits in Madurai. When Harijan Welfare Association came into existence in 1923, it was he who happened to take up  leadership  in Madurai district and Vaithyanatha lyer for Tamil Nadu region.  Dalits should be made aware of their our existence before they achieved their socio-economic empowerment. The best tool available to achieve this awareness was education. Having this as his principle he with the help of Congress followers instituted school on the northern bank of Vaigai. Necessity drove him to change vicinity of this school as more and more dalits children sought admission in this school for their education. None came forward to offer him land. He was the Chairman of Madurai Municipality in 1935 and he joined in his fold as a Harijan member. Even this social gesture of him could not get him a rented building in Madurai to run the school. Thereby he wanted to have a separate building for this school for which he liberally donated rupees sixteen thousands from his own fund. He brought Rajaji, the Chief Minister of Madras province to lay  a foundation stone for this school in Mathichayam area, Madurai. He also constructed a hostel for dalits called Sevalayam that could accommodate hundred students. This was the first ever-constructed hostel for dalit students.

He thought of constructing many more schools and colleges in and around Madurai district. His dream had come true and the following  institutions bore testimony for his dream. They are: Thallakulam Primary School, Karuppaoorani Appar Nagar Primary School, Kokilapuram Subbraman High School,  Dindigal  Bharathi  School,  Melur  Kasthuriba Girls’ Hostel and Madurai Meenatchi Girls’ Hostel.

He was responsible in extending help for the depressed gypsy community by means of providing schools for their living. He gave many help and amelioration for scheduled tribes living in Kodai and Dandi areas. He believed untouchability was one of the chief factors for the fall of Hinduism and therefore he tried his best for social and economical equality among dalits and spent his entire life to achieve this goal.

மதுரை காந்தி என்று பிரபலமாக அறியப்பட்ட ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். விடுதலைக்காக தங்கள் பொருள், நிலம், உயிர் எனத் தியாகம் செய்த பலரது வரலாறு யாரும் அறியாத, காணாத சுவடுகளாய் மறைந்து கொண்டிருக்கின்றன. காந்தியின் வழியை பின்தொடர்ந்து விடுதலைக்காகப் போராடிய விடுதலை போராட்ட வீரர் தான் என்.எம்.ஆர். சுப்பராமன் என்கிற மதுரை காந்தி. இவர் மதுரை நாட்டாண்மை மல்லி குடும்பத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் இராயலு அய்யர் – காவேரி அம்மாள் ஆவர்.  இந்த தம்பதிக்கு சுப்பராமன் இரண்டாவது குழந்தை. மனைவி  பர்வதவர்தனி      தாகூர் கல்கத்தாவில் நடத்தி வந்த சாந்தி நிகேதனில் இரண்டு ஆண்டுகள் கல்வி பயின்றார் . இவரது குடும்பம் மிகுந்த செல்வாக்கும், செல்வமும் கொண்ட பணக்கார குடும்பம். ஆயினும், இவர் இந்திய விடுதலை போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டு கடுமையான சிறைத் தண்டனைகளை அனுபவித்தவர்.. காந்தியின் சர்வோதய திட்டங்களிலும் தனது பங்கை அளித்தார். சுப்பராமன், தனது சொந்த நிலங்களில் நூறு ஏக்கர் விளை நிலங்களை சர்வோதய சங்கத் தலைவர் வினோபா பாவே வகுத்த திட்டத்தின் படி, ஏழை மக்களுக்குப் பூதானமாக அளித்தார். .

காக்கிநாடாவில் 1923ம் ஆண்டு நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி மாநாட்டு மதுரையின் பிரதிநிதியாகப் பங்கெடுத்துக் கொண்டார். 1930ம் ஆண்டு இவரை மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தேர்வு செய்தனர். 1934ம் ஆண்டு தீண்டாமைக்கு எதிராக இந்தியா முழுவதும் காந்தி விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டார். காந்தியின் அந்த பயணத்தில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார் சுப்பராமன். இந்த பயணத்தின் போது காந்தி மதுரை வந்த போது, சுப்பராமன் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கிச் சென்றார் என்று கூறப்படுகிறது.

1935 – 1942 வரை சுப்பராமன் மதுரை நகராட்சி தலைவர் பதவி வகித்தார். அதுமட்டுமின்றி 1934 மற்றும் 1946ம் ஆண்டுகளில் சென்னை மாநில சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி வகித்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டு கடுமையான சிறை வாசமும் அனுபவித்தார் . இந்தியா விடுதலை பெற்ற பிறகு மதுரை காந்தி என்கிற சுப்பராமன் தொடர்ந்து மக்களுக்கு நிறைய நற்பணிகள் செய்து கொடுத்தார். 1962-67 வரை இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார்.   

சுப்பராமனின் பொதுநல தொண்டினை பாராட்டும் வகையில் இவரது நூற்றாண்டு பிறந்தநாளில் (2005ல்) சுப்பராமன் நினைவு தபால் தலையை இந்திய அரசின் அஞ்சல் துறை வெளியிட்டது. மதுரையில் சுப்பராமன் பெயரில் மதுரை மாநகராட்சி அமைத்துள்ளது. மேலும், தெற்கு வாசல் – வில்லாபுரத்தை இணைக்கும் மேம்பாலத்திற்கு என்.எம்.ஆர் சுப்பராமன் மேம்பாலம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஆணையை வெளியிட்டவர் அன்று தமிழக முதல்வராக இருந்த மறைந்த மு. கருணாநிதி. மதுரை மகப்பேறு மருத்துவமனை சுப்பராமன் நன்கொடையாக அளித்த இடத்தில் தான் கட்டப்பட்டுள்ளது. கட்டுமானத்திற்கும் உதவி செய்திருக்கிறார் சுப்பராமன். இவரது பொதுநல உதவியை போற்றி, அந்த மருத்துவ மனைக்கு சுப்பராமனின் தந்தை என்.எம். இராயலு அய்யர் மகப்பேறு மருத்துவமனை என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த மருத்துவமனை முன்பாக காந்தி சிலை நிறுவப்பட்டுள்ளது.

ஆன்மீகத்தில் மிகவும் பற்று கொண்ட இவர் கீதா பவனம் கட்டி பகவத்கீதை பாராயணம் நடத்த வழி வகுத்தார்.  சௌராட்டிர சமூக பெண்கள் கல்வி முன்னேற்றத்திற்காக, மதுரையில் சௌராட்டிர பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இவர் முயற்சியால் துவக்கப்பட்டது.  தன் இல்லத்திலிருந்து நூல்களை மதுரை சௌராட்டிரக் கல்லூரி நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். மதுரையில் பல கூட்டுறவுச் சங்கங்களை நிறுவி, கூட்டுறவு இயக்கத்தை வளர்த்தவர்களில் இவர் முக்கியமானவர். தாம் மதுரை சொக்கிக்குளத்தில் வாழ்ந்த மாளிகையை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் ”காந்தியியல்” (Gandhian Thought) துறைக்கு நன்கொடையாக வழங்கினார்.

காந்தீய கொள்கைகளில், அரிசன முன்னேற்றத்தை தேர்ந்தெடுத்து இதற்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். 1939ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்டவர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள்  நுழையும் போராட்டத்தில் மதுரை. அ.வைத்தியநாதய்யருடன் சுப்பராமன் துணையாகப் போராடியதுடன் கக்கன் போன்றவர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக உறைவிடப்பள்ளிகள் நிறுவினார். நரிக்குறவப் பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து திருமணம் செய்துவைத்தார். இவர் உருவாக்கிய தொண்டு நிறுவனங்கள் –

காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா ( 25 )

கிருஷ்ணசாமி சர்மா காஞ்சிபுரத்தில் பிறந்தவர் – காந்திய கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட விடுதலை போராட்ட வீரர். போராட்டங்களில் கலந்து கொண்டு இரண்டு முறை சிறை சென்றவர். பிராமண குலத்தில் பிறந்தாலும் ஜாதி ஏற்ற தாழ்வுகளை கடுமையாகக் கண்டித்துப் பேசியவர். திருமணம் ஆன பின்பும் இல்லறத்தில் ஈடுபடாது சுதந்திரம் கிடைத்தால்தான் தாம்பத்திய வாழ்கையை மேற்கொள்வேன் என்று உறுதியுடன் வாழ்ந்தவர். இவர் இறந்தபின் அவர் ஜாதீய கட்டமைப்புகளை எதிர்த்துப் பேசியதால் ஒருவரும் கொள்ளி வைக்க முன்வரவில்லை – கடைசியில் அவரது மனைவியே அவருக்குக் கொள்ளி வைத்தார். இவரது 91 பிறந்த தினம் குமரிஅனந்தன் தலைமையில் காந்தி பேரவை குழுவால் கொண்டாடப்பட்டது. அவரது படத்தைத் திறந்து வைத்து பலர் பேசினார்கள். அவருக்கு ஒர் சிலை அமைக்க காந்தி பேரவை சார்பில் ஒரு குழு உருவாக்கப்பட்டது.

கல்லிடைக்குறிச்சி வேதம் நிறைந்த ஊர் – 18 பிராமமிண அக்கிரஹாரங்கள் 1950 இல் இருந்தது -தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த இயற்கை வளமான ஊர் – வேத பண்டிதர்கள் – கனபாடிகள் – தீக்ஷதர்கள் என்று ஒவ்வொரு அக்கிரஹாரத்திலும் இருந்தார்கள் – பல விடுதலை தியாகிகள் பிறந்த ஊர் – சுதந்திரப் போராட்ட காலத்தில் தேச விடுதலைக்குப் பாடுபட்ட கோமதி சங்கர தீட்ஷிதர், லக்ஷ்மி அம்மாள், சங்கர ஐயர், யக்யேஸ்வர சர்மா , தியாகி சுப்ரமணிய ஐயர் போன்ற தீரர்களையும் பெற்றது இவ்வூர் – பல கர்நாடக சங்கீத வித்வான்கள் பிறந்த ஊர்  – பல இன்றைய தொழில் அதிபர்கள் பிறந்த ஊர் என்ற பல பெருமைகளைக் கொண்டது.

வேதம் நிறைந்த ஊர்

கல்லிடைக்குறிச்சி யக்ஞேசுவர சர்மா ( 26 ) *

விடுதலைப் போராட்ட வீரர். வ.வே.சு.ஐயரின் நிறுவிய ” பரத்துவாஜ ஆசிரமம் ” என்ற அரசியல் பயிற்சிக்கூடத்தை ஹரிஜன விடுதியாக மாற்றி ஹரிஜன குழந்தைகள் கல்வி கற்க ஏற்பாடு செய்தவர் யக்ஞேசுவர சர்மா. பின்னர் அந்த விடுதியை ஹரிஜன சேவா சங்கத்திடம் கொடுத்தார்.

கல்லிடைக்குறிச்சி சங்கர ஐயர் ( 27 ) *

தேச விடுதலைக்காகப் பாடுபட்ட கல்லிடகுறிச்சி சுதந்திரப் போராட்ட வீரர். தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பரிவும் பாசமும் கொண்டவர். இவர்தான் முதன் முதலில் கல்லிடகுறிச்சியில் ஹரிஜன மாணவர் விடுதியை நிறுவினார்.

கல்லிடைக்குறிச்சி லட்சுமி சங்கர ஐயர் ( 28 ) *

இவரும் விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்டவர். இவர் ஹரிஜனங்கள் மேல் கொண்ட பரிவால் தீண்டாமை கொடுமையைப் பற்றி தீவிர பிரசாரம் செய்து நெல்லை மக்களிடையே ஒர் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். ஹிந்து தர்மசாஸ்திரங்களில் தீண்டாமைக்கான எந்த முகாந்தரமும் இல்லை என்று எடுத்துரைத்தவர்.

கல்லிடைக்குறிச்சி ஜி.மஹாதேவ ஐயர் ( 29 ) *

தியாகி கோமதி சங்கர தீட்சிதரின் புதல்வர். தகப்பனார் அரசியல் தியாகி – மகன் ஹரிஜன சேவையை மேற்கொண்ட செயல்படுத்தியவர்.  ஹரிஜன விடுதி வார்டனாகவும் பணி செய்தவர்.

தேவகோட்டை எம்.ஜி.முகுந்தராஜ ஐயங்கார் ( 30 ) *

இராமநாதபுர மாவட்டம் தேவகோட்டையின் பிரபல வக்கீல்.  இவர் ஹரிஜன சேவையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். உதவி கலெக்டர் அலுவலகத்தை வாங்கி ஹரிஜன விடுதியாக மாற்றித் திறம்பட நடத்தினார். முகவை மாவட்டத்தில் நாட்டார் ஹரிஜனப் பிரச்சினைகளைச் சுமுகமாகத் தீர்த்து அவர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தியவர்.

எஸ். ராஜம் ஐயங்கார் ( 31 ) *

இவர் அரசுப் பணியில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.  திருவாடானை – முதுகுளத்தூர் தாலுக்காக்களில் இரு சமூகத்தாருக்குள் அடிக்கடி மோதல் வருவது உண்டு.  நாட்டார் டிரபிள் என்று இதற்குப் பெயர்.  ராஜம் ஐயங்கார் ஹரிஜனங்கள் அவதிப்பட்டதை ஆராய தேவகோட்டையில் இருந்துகொண்டு கிராமம் கிராமமாகச் சென்று அங்குச் சமரசத்தை ஏற்படுத்தி அவர்களது துயர் தீர்க்கும் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். மேலும் அவர் ஹரிஜனங்களுடன் பழகி அவர்களது குறைகளைக் கேட்டு பிராந்திய அதிகாரிகளை நேரில் சந்தித்து அவற்றைக் களைய ஆவன செய்து கொடுத்தார்.

மானாமதுரை என்.இராமசாமி ஐயர் ( 32 ) *

அக்கிரகாரத்தில் ஹரிஜனங்கள் நடமாடுவது தவறு இல்லை என்ற கொள்கையில், ஹரிஜன ஐயங்கார் என்று அழைக்கப்பட்ட பி.எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்காருக்கு எல்லாவிதத்திலும் கைகோர்த்து நடந்தவர் இராமசாமி ஐயர்.

தேவகோட்டை ரங்கண்ணா என்ற ரங்கசாமி ஐயங்கார் ( 33 ) *

இராமநாதபுர மாவட்டம் தேவகோட்டை ரங்கண்ணா என்ற ரங்கசாமி ஐயங்கார் ஹரிஜன ரங்கண்ணா என அழைக்கப்பட்டார். இவர் இராமநாதபுர ஹரிஜன சங்கத்தின் தலைவராக இருந்து தேவகோட்டையில் ஒர ஹரிஜன காலனியை நிறுவ ஏற்பாடு செய்தார் இவர் வெளிநாடு சென்று நிதி திரட்டி ஐம்பது ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தையும் அதிலிருந்த கலெக்டர் அலுவலகத்தையும் விலைக்கு வாங்கி அங்கு ஹாஸ்டல் நிறுவி ஒரு காலனியை ஏற்படுத்தத் திட்டம் வகுத்தார். தண்ணீர் வசதி இல்லாததால் அந்த திட்டம் நிறைவேறாமல் போயிற்று. இவர் ஹரிஜன தொண்டு காந்திய கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அப்பொழுது இன்றைய காங்கிரஸ் மூத்த தலைவர் சின்ன அண்ணாமலை தேவகோட்டை நகரத்தார் பள்ளியில் படித்து வந்தார். இவரது இல்லம் ரங்கண்ணா வீட்டின் எதிரில்தான் இருந்தது. இவர் அடிக்கடி ரங்கண்ணாவை சந்தித்து காந்திய கொள்கை விளக்கங்களை கேட்டுத் தெரிந்து கொண்டார். பள்ளியில் பேச்சு போட்டிகளில் கலந்து பேசுவதற்கு ரங்கண்ணா நிறையப் புத்தகங்களைத் தந்து உதவினார். ஒரு சமயம் ஆனந்த விகடனில் கல்கி எழுதிய கட்டுரையை மனப்பாடம் செய்து போட்டியில் பேசினார். அந்த கூட்டத்திற்கு கல்கியும் வந்திருந்தார். பேசி முடித்ததும் கல்கி யார் என்று தெரியாமல் அவர் அருகிலேயே அமர்ந்து கொண்டார். கல்கி அவரிடம் இந்த கட்டுரையை எங்குப் படித்தாய் என்று வினவ உண்மையைச் சொன்னார் அண்ணாமலை. கல்கியை பார்த்திருக்கிறாயா என்றார். இல்லை என்றதும் நான்  தான் கல்கி என்றார். ஆச்சரியத்தில் முழுகிய அண்ணாமலை அவரை வணங்கி ஆசி பெற்றார்.

மதுரை என்.சீனிவாச வரத ஐயங்கார் / பத்மாசினி அம்மாள் ( 34 – 35 ) *

பாரத புண்ணிய பூமியின் சுதந்திரத்துக்காக எவ்வித தியாகத்துக்கும் தயாராக இருந்த ஓர் இளைஞர் கூட்டம் சென்னை மாகாணத்தில் 1932ஆம் ஆண்டில் உருவாகியது. பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து நடந்த சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்த இளைஞர்கள் பல புரட்சிகரமான செயல்களில் ஈடுபட்டார்கள். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்களாக இருந்தவர்கள் பத்மாசினி அம்மாள், ஸ்ரீநிவாசவரதன், தஞ்சை பி.வி.ஹனுமந்த ராவ், பி.கே.நாராயணன், எஸ்.ரங்கராஜன் எனும் கல்லூரி மாணவர். இவர்கள் முன்னிலை வகித்துப் பல தீரச் சாகசங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அனல் கக்கும் பிரச்சாரம் செய்வது; பிரிட்டிஷாரால் தடைசெய்யப்பட்ட தேசபக்தி பிரசுரங்களை இரகசியமாக அச்சிட்டு விநியோகம் செய்வது இவர்களது வேலை.

ஸ்ரீநிவாச வரதன் மகாகவி பாரதியாரின் நண்பர். மானாமதுரை ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் பள்ளிக்கூட ஆசிரியர். இவர் மதுரையில் ஹரிஜன சேவையை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து வந்தவர். அவரது மனைவி பத்மாசினி அம்மாள் கணவருடன் சேர்ந்து தேசிய இயக்கத்திலும் – ஹரிஜன சேவையிலும் பணியாற்றினார். பத்மாசினி கதர் ஆடைகளை மதுரை வீதிகளில் கால்நடையாகச் சென்று விற்று வந்தார். தன் வீட்டில் தானே நூற்ற ஆடையைத்தான் அணிவார்கள் இருவரும். பத்மாசினி தனது நகைகளை அடகு வைத்து சென்னைக்கு சென்று சத்தியாகிரகத்தில்  கலந்து கொண்டவர். மதுரையில் 500 பெண்களைத் தேசிய காங்கிரசில் உறுப்பினராகச் சேர்த்தார். எட்டுமாத கர்ப்பத்துடன் 48 மைல் நடந்து சென்று தனது தேசிய உணர்வை வெளிப்படுத்தியவர். பெல்காமில் காந்தி தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பத்மாசினி அம்மாண் காந்தியால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேச அழைக்கப்பட்டார்.

தேசியக் கல்லூரி முதல்வர் வி.சாரநாத ஐயங்கார் ( 36 ) *

இவர் ஹரிஜன மாணவர்களுக்குக் கல்லூரியில் கல்வியளிக்க ஏற்பாடுகள் செய்தார். கல்லூரி முதல்வர் பொறுப்பிலிருந்து கொண்டு சில காலம் ஹரிஜன ஹாஸ்டல் நிர்வாகியாகவும் பணி செய்தார். 1936 ஆம் ஆண்டிலிருந்து தமது கல்லூரியில் கூடுமான வரையில் எவ்வளவு ஹரிஜன மாணவர்களைச் சேர்க்கமுடியுமோ அந்த அளவு மாணவர்களைச் சேர்த்தவர்.  தாழ்த்தப்பட்டவர்களின் ஏழ்மை நிலையை உணர்ந்த சொற்ப கல்விக் கட்டணமே பெற்றுக்கொண்டார்.

டாக்டர் ஆர்.காளமேகம் ஐயர் ( 37 ) *

ஹரிஜன விடுதியில் படித்த மாணவர்களுக்கு சிறிய நோய்கள் வந்தாலும் இவர் உடனடியாக கவனித்த இலவசமாகச் சிகிச்சை அளித்தார். 1962 ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் தேவர் வெற்றி பெற்றார். ஆனால் உடல் நிலை சரியாக இல்லாத காரணத்தால் பதவி ஏற்பு விழாவுக்குச் செல்ல முடியவில்லை. அவர் தனது நண்பர் காளமேகம் வீட்டில் சிறிது காலம் தங்கி  வைத்தியம் செய்து கொண்டார்.

லால்குடி டி.எஸ். அனந்தநாராயண ஐயர் ( 38 ) *

இவர் உயர்நிலை பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணிசெய்தவர். ஹரிஜன ஹாஸ்டல் வார்டன் பொறுப்பையும் வகித்தார். லால்குடி அக்கிரஹாரத்தில் ஹரிஜனங்கள் நுழைய எதிர்ப்பு ஏற்பட்டபோது அதை மீறி ஹரிஜன  மாணவர்களைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்ற சமூக ஊழியர்.

மாயனூர் கே.ஜி. சிவசாமி ஐயர் ( 39 ) *

இவர் இந்திய ஊழியர் சங்க உறுப்பினர். ஹரிஜன முன்னேற்றத்திற்குத் தொழிற் கல்வி அவசியம் என்பதை நன்கு உணர்ந்த அவர் ஹரிஜனங்களுக்காக ஒரு தொழிற்கூடத்தை ஆரம்பித்து நடத்தினார். இதில் படித்த பெரும்பாலானவர்கள் பிற்காலத்தில் நல்ல நிலையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.

மாயனூர் சாம்பசிவ ஐயர் ( 40 ) *

இவர் ஹரிஜன ஹாஸ்டல் வார்டனாக பல ஆண்டுகள் பணி செய்தார்.

பெரம்பலூர் ஆசிரியர் நரசிங்க ஐயங்கார் ( 41 ) *

இவர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக இருந்துகொண்டே ஹரிஜன மாணவர்களுக்கு மதியவுணவு தருதல் – புத்தகங்கள் வாங்கி தருதல் – உபகாரச் சம்பளம் பெற்றுத் தந்து படிப்பில் ஊக்கம் உண்டாக்குதல் ஆகிய பணிகளை அயராது செய்து வந்தார். அந்தச் சரகத்தில் ஏராளமாக ஹரிஜன மாணவர்கள் படித்து பின்னர் உயர்ந்த அரசுப் பணிகளிலே அமர்ந்தார்கள்.  இவர் சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்து மக்களுக்குத் தொண்டு செய்தார்.

அன்பில் இராஜகோபால ஐயங்கார் ( 42 ) *

இவர் ஒரு பொறியியல் பட்டதாரி – காந்தியின் கொள்கைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டவர். தனது சொந்த நிலத்தின் ஒரு பகுதியை ஹரிஜன விடுதிக்கு எழுதி வைத்தார். இந்த நிலத்தில் விளைந்த தானியங்களை மாணவர் விடுதிக்கு அளித்தார். ஒரு சென்ட் நிலத்திற்காக நீதி மன்றம் செல்லும் மக்கள் வாழும் இந்த நாளில் தன் நிலத்தின் ஒரு பாகத்தைக் கொடுத்து அதில் விளையும் உணவையும் கொடுக்கிறார் என்பதை பாராட்டாமல் இருக்க முடியாது.

டாக்டர் இராமச்சந்திர ஐயர் ( 43 ) *

திருச்சியை சேர்ந்த இவர் காந்திய கொள்கைகளில் பற்று கொண்டு ஏழைகளுக்கு குறிப்பாக ஹரிஜனங்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சை அளித்தவர். வேதாரண்ய உப்பு சத்தியாகிரகத்தில் பங்கு கொண்டு சிறை சென்றவர். இவரது தகப்பனார் சுப்பரமணிய ஐயர் பெயரால் தேசிய கல்லூரி உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் ஒர் ஹரிஜன ஸ்காலர்ஷிப் சேமிப்பு நிதி ஈட்டுத் தொகையை நிறுவினார். அப்பள்ளியில் சேரும் எல்லா ஹரிஜன மாணவர்களுக்கும் இந்த நிதியிலிருந்து உதவி பணம் வழங்கப்பட்டது.

ஒரு சமயம் காந்தி அவர்கள் திருச்சியில் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கையில் ராமசந்திரன் திடீர் என மேடை ஏறி தன் கையில் வைத்திருந்த ஒரு பண முடிப்பைக் காந்தியிடம் கொடுத்து விட்டுத் தான் யார் என்பதைச் சொல்லாமல் மேடை விட்டுச் சென்று விடுகிறார். இந்த பையில் ரூபாய் 6000/- இருந்தது அதை எண்ணி பார்த்த எல்.என் கோபால்சாமி ஐயரிடம் அந்த தொகையை ஒரு ஹரிஜன மாணவர் விடுதி கட்ட செலவு செய்யும் படி காந்தி உத்தரவிட்டார். இந்த தொகை பயன்படுத்தி லால்குடியில் ஒரு ஹரிஜன ஹாஸ்டல் கட்டப்பட்டது. 

ஜே. நடராஜ ஐயர் ( 44 ) *

இவர் கூட்டுறவு வங்கி ஊழியர் – ஹரிஜன மாணவர்கள் கல்விக்கு உதவியவர் – ஒவ்வொரு வருடமும் அரிசி சேகரித்து சுமார் 2000 ஆயிரம் ஏழைகளுக்கு ஸ்ரீரங்கத்தில் சமபந்தி போஜனம் செய்து வைத்தவர்.

தஞ்சை வி.வி.சடகோபாசாரியார் ( 45 ) *

தஞ்சை மாவட்டத்தின சிறந்த ஹரிஜன சேவகர் – மாவட்ட ஹரிஜன சேவா சங்கத் தலைவராகவும் பணி செய்தவர்.

மன்னார்குடி டாக்டர் பி.வி.முத்துகிருஷ்ண ஐயர் ( 46 ) *

இவர் மன்னார்குடி தாலுக்கா ஹரிஜன தலைவர் – தீண்டாமை கொடுமையை மக்களிடையே எடுத்துக்கூறி பிரசாரம் செய்தவர்.

தஞ்சை வி.பூவராக ஐயங்கார் ( 47 ) *

இவர் பிரபல வக்கீல் – காந்திய நெறிகளில் பற்று மிகுந்தவர் – ராஜாஜியுடன் சேர்ந்து ஹரிஜன பணியில் ஈடுபட்டவர் – இவர் தஞ்சை ஹரிஜன சேவா சங்கத்தை நிறுவியவர்..

கும்பகோணம் டாக்டர் எம்.கே.சாம்பசிவ ஐயர் ( 48 ) *

இவர் கும்பகோணத்தில் முதல் முதலாக ஹரிஜன சேவா சங்கதை ஆரம்பித்து நடத்தி – தாழ்த்தப்பட்ட மாணவர்கள் படிக்க உதவியவர்.  இவர் நகர சபை தலைவராகவும் இருந்தார். இவர் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். கும்பகோணத்தில் யானைக்கால் நோய் பரவலைத் தடுக்க வைத்தியம் செய்தவர். காந்தியின் ஆணைப்படி வெளிநாட்டுத் துணிகள் எரிப்பு போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தி சுதேசிய இயக்கத்திற்கு ஆதரவு அளித்தார். ஹரிஜன ஆலய நுழைவு போராட்டத்திலும் பங்கு கொண்டவர்.  இவரது  புதல்வர் தான் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் இந்தியாவின் தலை சிறந்த விவசாய விஞ்ஞானியாக இன்றைத் தினம் நம்மிடையே விளங்குகிறார். தனது தந்தை தனக்குச் சொன்ன அறிவுரையான ” எதையும் சாத்தியமற்றது ” என்ற எண்ணத்தை மனத்தில் வளர்த்தால் ” சாதனைகள் செய்ய முடியாது என்ற அறிவுரையைத் தான் பின்பற்றுவதாகச் சொன்னார்.

நாராயண ஐயர் ( 49 ) *

தென்னாற்காடு மாவட்டம் நாராயண ஐயர் என்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றவர். இவர் ஜே.கே.பிர்லா உதவியுடன் தென்னாற்காடு மாவட்டத்தில் கிராமங்களில் குடிநீர் கிணறுகளை வெட்டிதந்து ஹரிஜனங்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கப் பாடுபட்டவர்.

சின்ன சேலம் கே.வேங்கடேச ஐயர் ( 50 ) *

இவர் சுதந்திர போராட்ட தியாகி – ஹரிஜன சேவா சங்கத்தில் கணக்கராக பணியாற்றியவர். இவர் ஹரிஜன தொண்டை ஆண்டவன் தொண்டாக மதித்துச் சேவை செய்தவர்.

டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் ( 51 ) *

இவர் காஞ்சிபுரத்தில் பிரபல டாக்டராக விளங்கியவர்.  சிறந்த தேசபக்தர் – காஞ்சிபுரம் நகராட்சி தலைவராக 15 வருடங்கள் பணியாற்றினார் – இவர் செங்கல்பட்டு மாவட்ட ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக இருந்து ஹரிஜன மாணவர்களுக்குச் சேவை செய்தார்.  ஹரிஜன மாணவர்களுக்கு தொழிற் கல்வி அவசியத்தை உணர்த்தத் தொழிற்கல்வி பள்ளிக்கூடத்தையும் நடத்தினார். காஞ்சிபுரத்தில் ஒரு நகராட்சி மேல்நிலைப் பள்ளியும் உள்ளது. இப்பள்ளியில் தான் கர்நாடக பாடகி டி.கே. பட்டம்மாள் எட்டாவது வரையில் படித்தார். டாக்டர் சினிவாசனும் அப்பள்ளி தலைமை ஆசிரியர் அம்முகுட்டியும் பட்டம்மாளின் தந்தையை வற்புறுத்தி அவரது கர்நாடக சங்கீத ஞானத்தை மேலும் வளர்க்கத் தூண்டிவிட்டார்கள்.

இவர் தனது வருவாயில் பெரும் பகுதியை பொது தொண்டிற்குச் செலவு செய்தார். விடுதலை போராட்டங்களில் கலந்து கொண்டு நான்கு முறை சிறைவாசம் அனுபவித்துள்ளார். அவரது பிரம்மாண்டமான வீட்டிற்கு தாழ்த்தப்பட்டவர்கள் உட்பட பல விருந்தாளிகள் வந்தால் அவர்களுக்கு உணவு பரிமாறி உபசரிப்பதில் குடும்பமே ஈடுபடுத்திக் கொள்வார்கள். பெருந்தலைவர்கள் வந்தால் இவரது வீட்டில்தான் தங்குவார்கள். தீபாவளி – பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் உயர் ரக துணிமணிகளை ஏழை மக்களுக்கு வழங்குவார். ஒசைபடாடமல் பல கல்வி நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்தவர். ”பக்தவத்ஸலம் கல்வி அறக்கட்டளை மூலம் பல கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தினார். இவர் சட்ட மன்ற உறுப்பினராகவும் – சிறிது காலம் சட்ட மேல் அவை உறுப்பினராகவும் பணி செய்தவர்.

1957 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அண்ணாதுரையை எதிர்த்துப் போட்டியிட்டார். இவரை ஆதரித்து பெரியார் பொதுக்கூட்டத்தில் பேசினார் ” டாக்டர் மிகவும் நல்லவர் – பொதுப் பணத்தில் ஒரு காசுகூட தொடமாட்டார் – இப்படி ஒருவர் கிடைப்பது அபூர்வம் – இவரை எதிர்த்துப் போட்டியிடும் கண்ணீர்த்துளி கட்சி வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்றார். ஆனால் இந்த தேர்தலில் சினிவாசன் ஜெயிக்கவில்லை. 

காஞ்சிபுரம் டாக்டர் பி.எஸ்.ரகுராமன் ( 52 ) *

இவர் செங்கல்பட்டு மாவட்ட ஹரிஜன சேவா சங்கத்தின் செயலராக இருந்து ஹரிஜன மாணவர்களுக்கு உதவினார்.  இவர் ஹரிஜன முன்னேற்றத்திற்காக நிதி திரட்டி திருச்சியில் பிரபல பாடகி டி.கே.பட்டம்மாள் அவர்களின் கச்சேரியை நடத்தினார்.  திரட்டப்பட்ட நிதி தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பள்ளிக்கூடம் நடத்தப் பயன்படுத்தப் பெற்றது.

வேலூர் என். சோமசுந்திரம் ஐயர் ( 53 ) *

இவர் பிரபல வழக்கறிஞராக விளங்கியவர் – வேலூர் நகரசபை தலைவராக இருந்தார் – இவர் வேலூர் ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராகவும் இருந்து சேவை செய்தவர்.

சேலம் வாஞ்சிநாத ஐயர் ( 54 ) *

இவர் அரசுப் பணியை நாடாமல் ஹரிஜன சேவையை மேற்கொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு கண்டவர். இவர் சேரியிலேயே தங்கி சேவை செய்ததால் தாழ்த்தப்பட்ட மக்கள் வழிப்ர்ணர்வு பெற்றார்கள் என்று கூ.சம்பந்தம் தனது நூலில் சொல்லியுள்ளார். சேலத்தில் இவர் பெயரில் ஒரு தெரு உள்ளது (Vanchinathan Iyer Street, Swarnapuri, Salem – 636004. )

திருச்செங்கோடு தியாகராஜ ஐயர் ( 55 ) *

இவர் எம்.ஏ. பட்டம் பெற்றவர் – ராஜாஜி துவங்கிய திருச்செங்கோடு ஆசிரமத்தின் விடுதியைத் திறம்பட நிர்வகித்தார் – இவரது பணியால் திருச்செங்கோடு பகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டது.

நாமக்கல் ஏ.ரங்காசாரி ( 56 ) *

இவர் வக்கீல் தொழில் நடத்தியவர் – நாமக்கல் ஹரிஜன ஹாஸ்டலை நடத்தினார் – தாலுக்கா ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராகவும் தொண்டு செய்தார்.   

கோத்தகிரி ஜி.மகாதேவ ஐயர் ( 57 ) *

இவர் சிறந்த சமூகச் சீர்திருத்தவாதி – நீலகிரி மாவட்டம் ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவர் பொறுப்பை வகித்து பணியாற்றினார்.

சென்னை சங்கு எஸ்.கனேசன் ( 58 ) *

இவர் சென்னையில் ஹரிஜனத் தொழிற்கல்வி கூடத்தை நிறுவினார். இவர் ஒவ்வொரு மூச்சிலும் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் பற்றிப் பேசினார் – அதற்கான செயல்பாட்டிலும் இறங்கினார். தாழ்த்தப்பட்டோர் கல்வியுடன் பொருளாதார முன்னேற்றமும் அடைய வேண்டும் என்பதை உணர்ந்த இவர் நிறுவிய தொழிற்கூடமே இப்பொழுது தக்கர் பாபா கல்வி நிறுவனமாக விளங்குகிறது.

பி.என்.சங்கர நாராண ஐயர் ( 59 ) *

இவர் முதல் முதலில் கோகுலம் ஹரிஜனக் காலனியை நிறுவியவர்.  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒழுகாத வீடுகள் வேண்டும் என்ற காலனியை ஏற்படுத்தினார். தாழ்த்தப்பட்ட பிரிவனர்களைச் சேர்ந்த பலரது திருமணங்களை இவர் நடத்தினார்.

கோயம்பத்தூர் கே.சுப்ரி (சுப்பரமணியம்) ( 60 ) *

இவர் பிரபலமான தேசபக்தர் – மனைவி கமலம் – தாயார் – பாகீரதி. காந்தியடிகளின் சொற்பொழிவுகளை தமிழில் மொழி பெயர்த்து கூறுவார். காந்தி இவரை ”மை லைவுடு ஸ்பிகர்” என்று கூறுவார். விடுதலை இயக்கங்களில் குடும்பமே பங்கு கொண்டு பல முறை சிறை வாசம் அனுபவித்துள்ளார்கள். இவர் ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக இருந்து பணிகள் செய்தார். கோயமம்பத்தூரில் ”சுப்ரி ” என்று ஒரு தெருவின் பெயர் இவரது நினைவாக உள்ளது. நகரசபை தலைவராகப் பணி செய்தவர். காங்கிரசில் மாநில – மாவட்ட அளவில் பல பதவிகளை வகித்தவர்.  சட்டமன்ற உறுப்பினராகவும் பணி செய்தார். இவர் 90 வயது வரை வாழ்ந்த முருக பக்தர்..

கோபிசெட்டிப்பாளையம் ஸ்ரீகண்ட ஐயர் ( 61 ) *

இவர் தீவிர காந்தி பக்தர் – விடுதலை இயக்கங்களில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றுள்ளார். கோபிசெட்டிபாளையம் பொதுக் கிணறுகளிலிருந்து ஹரிஜனங்கள் தண்ணீர் எடுக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதைச் சாதித்துக் காட்டினார்.

கோபிசெட்டிப்பாளையம் வி.இராம ஐயங்கார் ( 62 ) *

இவர் பி.ஏ.பட்டம் படித்தவர் – தாழ்த்தப்பட்ட மக்கள் குடிநீர் கிடைக்காமல் சில இடங்களில் அவதிப்பட்டார்கள் – அவர்களுக்காக இவரே செலவு செய்து சில கிணறுகளை வெட்டிக்கொடுத்தார்.

திருவாரூர் டாக்டர் வி.வி.நாகநாத ஐயர் ( 63 ) *

இவர் சிறந்த காந்தியவாதி – ஹரிஜன ஊழியர் – ஹரிஜன மக்களிடையே மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

சமத்துவப் போராளி லட்சுமண ஐயர் ( 64 )

சுதந்திரப் போராட்ட வீரர். எத்தனையோ தலித் குழந்தைகளின் வாழ்க்கையில் ஒளியேற்றியவர். லட்சுமண ஐயரின் சிலையைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சமீபத்தில் திறந்துவைத்தார்.

கோபிச்செட்டிபாளையத்தில் 1917 பிப்ரவரி 22-ல் பெரும் நிலக்கிழாரான சீனிவாச ஐயரின் மகனாகப் பிறந்தவர் ஜி.எஸ். லட்சுமண ஐயர். தந்தை சீனிவாச ஐயர் சுதந்திரப் போராட்ட வீரர். கோபியைச் சுற்றி 650-க்கும் மேற்பட்ட ஏக்கர்கள் அவருக்குச் சொந்தமானவை. டி.எஸ். வங்கி எனும் வங்கியையே நடத்திவந்தவர். பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்குத் தனது நிலங்களை இலவசமாக வழங்கியவர்.  தலித் மக்களின் குடியிருப்புக்காக ஆறரை ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியவர். கோபி மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு 8 ஏக்கர் நிலம் – கோபி வேளாளர் விடுதிக்கு 2 ஏக்கர் நிலம் – கோபி குடிநீர் திட்டத்திற்கு ஒரு ஏக்கர் நிலம்.  சமூக அக்கறை மிக்க அவரது வாழ்க்கையைப் பின்பற்றிய லட்சுமண ஐயர் தந்தையைப் போலவே பல்வேறு சமூகப் புரட்சிகளைச் செய்தவர். ஊர்க் கிணறுகளில் தலித் மக்கள் நீரெடுப்பதற்குச் சாதியவாதிகள் அனுமதி மறுத்த நிலையில், அவர்களைத் தங்கள் வீட்டுக் கிணற்றிலேயே நீர் எடுக்க அனுமதித்தவர்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவச உணவு, தங்கும் வசதியுடன் கூடிய மாணவர் விடுதிகளை 1935-லேயே தொடங்கி நடத்திவந்தவர். மாணவர்களுக்காக டி.எஸ்.ராமன் விடுதியையும், மாணவிகளுக்காக சரோஜினி தேவி விடுதியையும் அவர் நடத்திவந்தார். மேலும் இவர் விவேகானந்தா ஐ.டி.ஐ. நிறுவனம் – பெண்களுக்காக விசுவேஸ்வரய்யா பெயரில் ஒரு ஐ.டி.ஐ நிறுவனம் – தக்கர் பாபா வித்தியாலயா பெயரில் ஒரு ஆரம்ப பள்ளியையும் தொடங்கினார்.

1942-ல், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதாகி, சிறையில் இருந்த லட்சுமண ஐயர், பிணையில் வெளிவந்திருந்தபோது போலீஸாரின் கண்காணிப்பையும் மீறி குஜராத்தின் வார்தா நகரில் இருந்த காந்தியைச் சந்தித்தது அவர் வாழ்வின் மிக முக்கியமான தருணம். போலீஸின் கண்காணிப்பை மீறி வந்தது தவறு என்று அறிவுறுத்திய காந்தி, வேலூர் சிறையில் சரணடையுமாறு கேட்டுக்கொண்டார். “சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சேவையிலிருந்து தொடங்கு” என்று காந்தி சொன்ன வார்த்தைகளை வேதவாக்காக எடுத்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் அதைச் செயல்படுத்தினார் லட்சுமண ஐயர். அரிஜன சேவா சங்கத்தின் அமைப்புச் செயலாளராக அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.

சத்தியமங்கலம், பவானி என்று கோபியைச் சுற்றியுள்ள ஊர்களில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தினார். ஆதிக்க சாதியினரிடம் கடன் வாங்கி வட்டியே கட்ட முடியாமல் தவித்த தலித் மக்களுக்கு உதவி செய்து அவர்களைக் கடன் சுமையிலிருந்து விடுவித்தார். தலித் குழந்தைகளின் கல்விக்கு உறுதுணையாக நின்றார். சமூக விடுதலைக்காக அவர் செய்த பணிகளின் காரணமாக, தன்னுடைய சொந்த சமூகத்தினரால் அவரது குடும்பம் விலக்கிவைக்கப்பட்டபோதும்கூட லட்சுமண ஐயர் தன்னுடைய பாதையைத் துளியும் மாற்றிக்கொள்ளவில்லை.

சமூகப் பணிகளுக்காகச் செலவிட்டதன் காரணமாக ஏற்பட்ட கடன்களை அடைக்க மேலும் மேலும் மேலும் சொத்துக்களை இழந்துகொண்டேயிருந்தார். ஆனால், விடுதலை என்பது சமூக விடுதலைதான் என்பதில் உறுதியாக நின்ற லட்சுமண ஐயருக்கு இவையெல்லாம் பொருட்டாகவே இருக்கவில்லை. சுதந்திரப் போராட்டத்தில் அவரது மனைவி லட்சுமி, மாமனார் சுந்தரம் ஐயர் ஆகியோரும் கலந்துகொண்டு சிறை சென்றவர்கள் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

சுதந்திரத்துக்குப் பிறகு, 1952-ல் கோபி நகர சபைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வென்ற லட்சுமண ஐயர், பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டுவந்தார். கோபிக்கு பவானி நதி நீரைக் கொண்டுவரும் திட்டம் அவற்றில் ஒன்று. கோபி பகுதியில் பொதுக் கிணறுகளில் தலித் மக்கள் நீரெடுப்பதற்கு ஆதிக்க சாதியினர் விதித்திருந்த சமூகத் தடைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதைத் தொடர்ந்தே கோபி பகுதியில் வசித்த தலித் மக்கள் பொதுக் கிணறுகளில் நீரெடுக்கும் உரிமையைப் பெற்றனர். தக்கர் பாபா வித்தியாலயம் என்ற தொடக்கப் பள்ளி, பால்வாடிகள், குழந்தைகள் காப்பு மையங்கள் என்று லட்சுமண ஐயர் நிறுவிய கல்வி மையங்கள் ஏராளமான குழந்தைகளின் எதிர்காலத்தைச் சிறக்கச்செய்தன. அவர் நடத்திய பள்ளி, விடுதியில் தங்கிப் படித்த குழந்தைகள் இன்றைக்கு நல்ல பணியில் சமூக மரியாதையுடன் வாழ்கிறார்கள்.

நாட்டிலேயே கையால் மலம் அள்ளும் வழக்கத்தை ஒழித்த முதல் நகராட்சி கோபிச்செட்டிபாளையம்தான். அந்தப் பெருமைக்கு வித்திட்டவர் லட்சுமண ஐயர். 1986-ல் நடந்த நகர சபைத் தேர்தலில் வென்று மீண்டும் தலைவரான அவர், நகரின் உலர்க் கழிப்பறைகளை ஒழித்துக்கட்டினார். இதன் மூலம் மனித மலத்தை மனிதரே கையால் அள்ளும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சமூகப் பிரச்சினைகளுக்கு எதிரான போராட்டங்களில் முதல் ஆளாகக் கலந்துகொள்ளும் பழக்கம் அவரிடம் இறுதிவரை இருந்தது. ‘ஓயா மாரி’ எனும் பெயரில் அவரது வாழ்க்கையை ஆவணப்படமாகப் பதிவுசெய்திருக்கிறார் எழுத்தாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான ச.பாலமுருகன். தியாக வாழ்க்கையின் உன்னதத்தை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச்சொல்லும் பதிவு அது.

சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து அரசியலில் இருந்தவர் என்றாலும் இன்றைய அரசியல் கலாச்சாரத்தின் நிழல் அவர் மீது விழுந்ததேயில்லை. ஒருகட்டத்தில் காங்கிரஸிலிருந்து விலகி, ஜனதா கட்சியில் சேர்ந்தார். அரசியல் என்பது சமூகப் பணிகளுக்கானது என்று நம்பிய தலைமுறையினரின் கடைசி மனிதராக, 2011-ல் மறைந்தார். இறக்கும்போது அவர் பெயரில் ஒரு சென்ட் நிலமில்லை. அவர் மறைந்தபோது ஊரிலேயே புதிய தலைமுறையினர் பலருக்கு அவரைத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், தியாக வாழ்க்கைக்கு மறைவு ஏது? அது சுடர் விட்டுக்கொண்டே இருக்கிறது.

மதுரை ஆர்.சுந்தரராஜ ஐயங்கார் ( 65 )

இவர் ஆரம்பநாட்களில் மதுரையில் தேசிய இயக்கத்தை வளர்த்த பெரியவர்களுள் ஒருவர்.  இவர் ஜாதிய கொள்கைகளைத் தகர்க்கும் பாரதியாரின் பாடல்களை ஒவ்வொரு கூட்டத்திலும் பாடி மக்களிடையே மன மாற்றத்தை உருவாக்க முயன்றார். மதுரை ஆலயப்பிரவேச போராட்டத்தில் வைத்தியநாத ஐயருக்கு உற்ற துணையாகக் கைகொடுத்து உதவியவர். அதனால் ஜாதி விலக்கு செய்யப்பட்டார். அதைப்பற்றி கவலை கொள்ளாது தீண்டாமை பணியைத் தீவிரமாகத் தொடர்ந்தார்.

மதுரை கே.ஆர்.சீனிவாச ஐயங்கார் ( 66 )

இவர் மதுரை கூடலழகப்பெருமாள் கோயிலில் மடப்பள்ளியில் சமையல் வேலை செய்தவர். குறைந்த வருவாய் – எளிய வாழ்க்கை எனினும் கொள்கை பற்று மிக்க இவர் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலயப்பிரவேசத்திற்காகப் பொருள் உதவி செய்தார்

பழனி சே.அ. சேஷ ஐயர் ( 67 )

பழனியில் வக்கீல் தொழில் செய்துவந்தவர் – இவர் விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்டு இருமுறை சிறை சென்றுள்ளார். மகாத்மா காந்தி மதுரை நகருக்கு வருகை தந்தபோது சேஷய்யர் ஹரிஜன நிதிக்குக் கணிசமான ஒரு தொகையை வழங்கினார். பிறரையும் அன்போடு கேட்டு நிதி திரட்டிக்கொடுத்தார். தாழ்த்தப்பட்டோர் உயர்வுக்காக இவர் ஆர்வத்துடன் தொண்டு செய்தார்.

பழனி கே.ஆர்.செல்லம் ஐயர் ( 68 )

பழனி தாலுக்கா காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகப் பணியாற்றியவர். இவர் பழனியில் ஒரு உணவு விடுதியை அமைத்தார். ஜாதி – மத வேறுபாடு பாராமல் அங்கு எல்லோருக்கும் இலவச உணவு வழங்கப்பட்டது. காந்திஜியின் ஹரிஜன நல நிதிக்கு இவரும் ஒரு கணிசமான தொகையைக் கொடுத்தார். பெண்கள் தங்கள் நகைகளைக் கொடுத்து உதவினர். கதர் ஆடை விற்பனை – வெளிநாட்டுத் துணிகள் பகிஷ்கரித்தல் – போராட்டங்களில் மக்களை வழிநடத்துதல் – சிறைவாசமும் அனுபவித்தவர் – பெரும் தலைவர்கள் பழனிக்கு வந்தால் இவர் விடுதியில் தங்கவைத்து உபசரிப்பார் – பழனி ஆண்டவர் கோவிலில் தாழ்த்தப்பட்டவர்கள் தரிசனம் செய்யப் போராடி வெற்றி கண்டார். இதனால் இவர் ஜாதிவிலக்கு செய்யப்பட்டார். – ராஜாஜி யாரையும் எளிதில் பாராட்டமாட்டார் – ஆனால் செல்லம் அவரிடமே பாராட்டுதலை பெற்றார்.

திண்டுக்கல் கே.கனேசன் ( 69 )

திண்டுக்கல் நகரில் வக்கீல் தொழில் நடத்தியவர் – இவர் ஏழைமக்களுக்கு இலவசமாக வழக்குகளை வாதாடிப் பெற்றுத் தந்தார் – வக்கீல் சாமி கேசுக்காக ஒரு பைசாகூட வாங்கமாட்டார் என்று பலரால் பாராட்டப்பட்டவர் – வீடுதலை போரில் இவரும் சிறை வாசம் அனுபவித்தவர் – திண்டுக்கல்லில் இவரது முயற்சியால் ஹரிஜன  மாணவர் விடுதி உருவாயிற்று.

தூத்துக்குடி வேங்கடகிருஷ்ணன் (கிட்டு) ( 70 )

விடுதலை போராட்ட தியாகி – சிறை சென்ற தேச பக்தர் – கதர் இயக்கத்திற்காக தம்மை ஒப்படைத்துக் கொண்டவர் – மகாத்மா காந்தி திறந்து வைத்த “ஹரிஜன விடுதியை”  1934 முதல் 1972 வரை இவர் திறம்பட நடத்தினார் – இவர் ஆரவாரம் இல்லாமல் அடக்கமாக பணிகளைச் செய்பவர் என்ற எல்லோராலும் பாராட்டப்பட்டவர்.

திருச்செந்தூர் திரிசுதந்திரர் கே.சுப்பையர் ( 71 )

1936 முதல் 1940 வரை மாவட்ட ஹரிஜன சேவா சங்கத்தின் செயலராக அரிய பணியாற்றினார் – 1941 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயப்பிரவேச வழக்கில் சுப்பையருக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ”ஹரிஜன ஆலயப்பிரவேசத்திற்கு” ஆதரவு தெரிவித்த குற்றத்திற்காக சிறை சென்று வரலாறு படைத்தவர் சுப்பையர் – இவரது தீண்டாமை ஒழிப்பு பணியைப் பாராட்டி 1958 ஆம் ஆண்டு தங்க பதக்கம் பரிசு அளிக்கப்பட்டது.

திருச்செந்தூர் மு.கிருஷ்ண சர்மா ( 72 )

ஆரம்பகால தேசபக்தர்களில் ஒருவர் – இவர் தேசிய உணர்வுகளைத் தூண்டும் பாடல்களைத் தானே இயற்றி மேடைகளில் பாடுவார் – இவர் தாழ்த்தப்பட்ட மக்களை தன் இல்லத்திற்கு அழைத்து வந்து உணவு – உடைகள் அளித்து உபசரிப்பார். இதனால் பல ஊர் மக்களைப் பகைத்துக் கொண்டார் – மனம் தளராமல் தன் பணிளை தொடர்ந்தார்.

வேலூர் மாவட்டம் – சோளிங்கபுரம் – தேவராஜ ஐயங்கார் ( 73 )

( 1902 – 1979 ) – விடுதலை போராட்ட தியாகி – பல முறை சிறை சென்றுள்ளார் – தீண்டாமை கொடுமையை அறவே ஒழிக்க வேண்டும் – ஹரிஜனங்களுக்கு சமுதாயத்தில் எல்லா உரிமைகளையும் அளிக்க வேண்டும் – அவர்களும் பிற ஏழை எளிய மக்களும் முன்னேற முடியாமல் தடுக்கும் ஒரு பெரிய தீங்கு மது – எனவே மதுவை ஒழிக்க வேண்டும் என்ற ராஜாஜியின் கொள்கையை ஏற்றுக்கொண்டு செயல்படலானார்.

ஐயங்கார் அக்கிரகாரத்தைவிட்டு வெளியேறித் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்த பகுதிகளுக்குச் சென்று – அவர்களுடன் சகஜமாக பழகினார் – அவர்களுக்குச் சேவை செய்தார். – அவர்களது இல்லத்தில் உணவு உண்டார் – சோளிங்கபுரம் அருகில் தலித் மக்கள் வாழ்ந்த சேரி சாதி மோதலின் விளைவாகத் தீக்கு இரையாயிற்று – அனைத்து வீடுகளும் தரைமட்டமாகின – ஐயங்கார் அவர்களுக்கு புதிய குடிசை வீடுகளைக் கட்டித்தந்தார் – இதற்காக அவரது மனைவியின் தங்க நகைகள் விற்கப்பட்டன – அவர் சேரி மக்களுடன் சேர்ந்து விட்டார் என பிரசாரம் செய்தார்கள் – ஜாதி விலக்கம் செய்தார்கள். தேவராஜ ஐயங்காரிடம் திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார்.  ஐயங்காரின் தீண்டாமை பணியைப் பாராட்டி தமிழக அரசு 1966 ஆம் ஆண்டு அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி சிறப்பித்தது.

மதுரை ஏ.எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் ( 74 )

மதுரை மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் அனுமந்தன் பட்டி கிராமத்தில் பிறந்தார் (1883 – 1956 ) 100 ஆண்டுகளுக்கு முன்னமே தீண்டாமை கொடுமையை விரட்டப் போராடியவர்.  இவரே சோளிங்கர் தேவராஜ ஐயங்காருக்கு முன்னோடியாக இருந்தவர் – கிருஷ்ணசாமி தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் குடிசைகளுக்குச் சென்று அவர்களுடன் பழகி உணவு அருந்துவார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலயப்பிரவேச இயக்கத்தின் ஆரம்பக் காலத்தில் கிருஷ்ணசாமி கடுமையான எதிர்ப்பைக் கண்டு அஞ்சாமல் தீவிரமாகவே பணியாற்றினார் இவரது பணியினை மெச்சி குன்றகுடி அடிகளார் பாராட்டியுள்ளார் – கிருஷ்ணசாமி விடுதலை போராட்டங்களில் பங்கு கொண்டு சிறைவாசம் அனுபவித்தவர் – சிறந்த கவிஞர் – பல தேசிய பாடல்களை எழுதியுள்ளார்.  ஈ.வெ.ரா கிருஷ்ணசாமியிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். – மதுரையில் ஆரம்ப நாட்களில் விடுதலை இயக்கம் இவர் தலைமையில்தான் நடந்தது – சிறந்த மேடைப் பேச்சாளர் – துணிவுடன் செயலாற்றுவார் – எப்படி இந்த சிங்கம் பிராமண குலத்தில் பிறந்தது என்று தேவர் மகனார் பாராட்டியுள்ளார். 

தொடரும்

பின்னூட்டமொன்றை இடுக