பிராமண வெறுப்புணர்வு  (புனைவும் உண்மையும்) Part – 9

(தலித்துகளும் பிராமணர்களும்)

Ref :- தலித்துகளும் பிராமணர்களும் ( கே.சி.லட்சுமி நாராயணன் ) – thanjavooraan.blogspot.com &  tamilnaduthiyagigal.blogspot.com & Web Pages

திருநெல்வேலி மாவட்டம் ஆயக்குடி ச.வெ.இராமசந்திர ஐயர் ( 75 )

இராமசந்திர ஐயர் (1909 – 1962 ) – சமயபுரம் அம்பி என்றும் அழைக்கப்பட்டார். இவர் தாழ்த்தப்பட்டவர்களின் குடிசைகளுக்குச் சகஜமாகச் செல்வார் – அவர்கள் முன்னேறத் தடையாக இருப்பது மதுவே – அவர்கள் அந்த பழக்கத்தை இவரது முயற்சியால் கைவிட்டார்கள் – தாழ்த்தப்பட்டவர்கள் குடிசைகளுக்கு இவர் செல்லுவதால் ஜாதி விலக்கு செய்யப்பட்டார் – கோவிலிலும் அவரை தரிசனம் செய்யத் தடை விதித்தார்கள். – இவர் ஆரம்பத்தில் சாலை ஓரத்தில் ஒரு சிற்றுண்டியை ஆரம்பித்தார் (சமயபுரம் காஃபி கிளப்) படிப்படியாகத் திருச்சியில்  நான்கு உணவகங்களை நடத்தினார். S.V.R என்ற கதர் கடையையும் நடத்தினார். தேச பக்தர்களுக்கு இவரது உணவகங்களில் இலவச உணவு அளிக்கப்பட்டது – இவரும் தேச விடுதலையில் பங்கெடுத்து சிறை சென்றவர் – இவர் காந்திஜியின் ஹரிஜன நிதிக்கு காந்தி சமயபுரம் வந்தபொழுது ஒரு வெள்ளித்தட்டில் 1001 ரூபாய் வெள்ளி நாணயங்களைக் கொடுத்தார். காந்தி ராமசந்திரன் அருகிலிருந்த அவர் மனைவியைப் பார்த்து ஏன் இவ்வளவு நகைகளை அணிந்துள்ளீர்கள் என்வினவ அவரது மனைவி எல்லா நகைகளையும் கழட்டி காந்தியிடம் கொடுத்தார்..

சென்னை – ஆதம்பாக்கம் – என்.இராமகிருஷ்ண ஐயர் ( 76 )

ராமகிருஷ்ணன் தொண்டு – எளிமை என்ற சொற்களுக்கு உதாரணமாக வாழ்ந்தவர் – சுதந்திரப் போராட்ட தியாகி – சிறைவாசம் அனுபவித்தவர் – காமராஜரின் நம்பிக்கைக்கு உரிய நெருங்கிய நண்பராக இறுதிக்காலம் வரை இருந்தார் – இவர் ஐந்து ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும் – 15 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர் – தாழ்த்தப்பட்ட மக்களிடம் பெரிதும் அன்பு பாராட்டுபவர் – தன்வீட்டிற்கு அவர்களை அழைத்துவந்து – குளியல் செய்து – உணவு அருந்த சொல்லுவார் – அவர்கள் ஆலயங்களுக்குப் பலரது எதிர்ப்பையும் மீறி அழைத்துச் செல்வார் – அவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்புகளை தேடிப் பிடித்துக் கொடுப்பார் – இவ்வாறு பல ஆண்டுகள் செய்துவந்தார் – ஒரு மருத்துவ மனையையும் தொடங்கி அதில் ஏழைகளுக்கு இலவச வைத்தியம் செய்ய ஏற்பாடு செய்தவர்- சென்னை ஆதம்பாக்கத்தில் தனது தகப்பனார் வாங்கிய வீட்டில் பல காலம் வசித்தார் – அவரது வீட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பலர் வாழ்ந்தார்கள் – வளர்ந்தார்கள் – பின்பு அந்த வீட்டை விற்று விட்டு ஒரு வாடகை விட்டில் சில காலம் இருந்தார் – இவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் செய்த சேவையைப் பாராட்டி ”ஆதம்பாக்கத்தில் ஒரு காந்தி ” என்ற ஒரு கட்டுரையைக் குமுதம் இதழ் வெளியிட்டது

Though he was a freedom fighter, he refused to apply for government pension. However, he helped many illiterate freedom fighters to get pension. Even five days before his demise he helped a widow in getting pension.  He was member of the Gandhi Peace Foundation from 1978 and its chairman from 1980 to 1986. He was the chairman of the Khadi Gramodyog Bhavan till his death. He was also a scholar in Carnatic music and wrote music reviews for magazines.

Ramakrishnan actively participated in “Boodhan movement” also and walked along with Vinoba Bhave during his visit to Tamil Nadu.         He conduced “Sarvodaya Sammelan” in Kancheepuram in 1956 in which Jayaprakash Narayan and Congress leaders participated.

எஸ். சினிவாச ஐயங்கார் ( 77 )

( 1874 – 1941 ) இவர் தீண்டாமை கொடுமையைக் கடுமையாக எதிர்த்தவர் – பிரபலமாக வக்கீல் – பெரும் செல்வந்தராக இருந்தவர் – தனக்குக் கொடுக்கப்பட்ட பெரிய பதவியான அட்வகேட் ஜெனரல் பதவியை தூக்கி எறிந்துவிட்டு விடுதலை இயக்கத்தில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றினார் – முற்போக்கு சிந்தனை உடையவர் – சாதி பேதங்களைக் கடுமையாகச் சாடினார் – அவரது பெரிய மாளிகையில் பல ஊழியர்கள் பணி செய்தார்கள் – அவர்கள் எல்லோரும் தீண்டப்படாதவர் என்று சொல்லப்படும் ஜனங்கள் – அவர் வீட்டில் எப்பொழுதும் சமபந்தி போஜனம் நடக்கும் – சமுதாய முன்னேற்றத்திற்காகத் தனது சொந்த பணத்தை வாரி வழங்கினால் – ஹரிஜன பிள்ளைகள் கல்விக்கு ஒவ்வொருமாதமும் பண உதவி செய்தவர் – அவர்கள் படித்து முன்னேறிவிட்டால் அவர்களை தீண்டத்தகாதவர் என்று சொல் அஞ்சுவார்கள் என்ற நம்பிக்கை உடையவர் ஐயங்கார் – எனவே அவர்கள் கல்வி அவசியத்தை வலியுறுத்தினார். ” ஹரிஜன மக்களின் கல்விக்காகச் சினிவாச ஐயங்காரைப்போல் தமது சொந்த பணத்தைச் செலவிட்ட வேறு எவரையும் நான் கண்டதில்லை ” என்று பக்தவஸ்தலம் குறிப்பிட்டிருக்கிறார் – இவரது தலைமையில் உருவான இரு பெரும் தலைவர்கள் –  சத்தியமூர்த்தி மற்றும் காமராஜ் – தூத்துக்குடி எஸ்.என்.சோமயாஜுலு இவரது தயாரிப்புதான்.

தூத்துக்குடி எஸ்.என்.சோமயாஜுலு ( 78 )

சோமயாஜுலு வீரம் மிக்க பிராமணர் – விடுதலை போராட்டங்களில் பங்கு கொண்டு பல முறை சிறை சென்றவர் – சாதி கொள்கைக்குச் சாவு மணி அடிப்பது எனது கொள்கை என முழங்கியவர் – பிறப்பால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் இல்லை என்று தேசிய மேடை தோறும் பறைசாற்றினார் – ”சொற் சோர்வில்லாத சோமயாஜுலு” என்று அவரது பேச்சாற்றலை தமிழ் பேரறிஞர் திரு.வி்க. புகழ்ந்து கூறியுள்ளார்.

தீண்டத்தகாதவர்கள் என்று அக்கிரமமாக ஒதுக்கப்பட்டிருந்த மக்கள் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபட உரிமை வேண்டும் என்று வலியுறுத்தித் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலயப்பிரவேச இயக்கத்தை நடத்தி வெற்றி கண்டவர்.

1952 இல் திருநெல்வேலி சட்டமன்ற காங்கிரஸ் சார்பாக நின்று வெற்றி பெற்றார். தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபாடு உடையவர். ஆங்கிலேயன் ”நீலன்” சிலை அகற்றும் போராட்டத்திற்குத் தலைமை வகித்தார். சிலை மேல் ஏறி நின்று அதை உடைக்க முயன்றார்.  போலீஸ் அதற்குள் வந்துவிட்டது அவர் தைரியமாக என்னைச் சுடு என்று நெஞ்சைக் காட்டினார். ஆங்கில ஆட்சியில் இந்தியர்கள் 6 முதல் 8 அங்குல அளவே கத்தி தற்காப்பிற்கு வைத்திருக்க வேண்டும் என்பது சட்டம். இதை எதிர்த்து மதுரையில் சோமயாஜுலு அவரது நண்பர்கள் எட்டு பேர் பெரிய வாளுடன் கருப்பு சட்டை அணிந்து ஊர்வலம் சென்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இவர் சுதந்திர தியாகிகளுக்கு வழங்கிய 2 ஏக்கர் நிலத்தை வாங்கவில்லை (நாட்டிற்கு உழைக்கக் கூலி தேவை இல்லை என்றார்) ஆனால் பல தியாகிகள் பென்ஷன் பெற உதவியுள்ளார். ”இராஜ சுகுணா” என்ற நாடகத்தை எழுதி அதில் நடித்துள்ளார். சுப்பரமணியன் சிவாவின் ”இராஜா தேசிங்” நாடகத்தில் பெண் வேடத்தில் நடித்துள்ளார். 10 வது வரையில்தான் படித்த இவர் நல்ல ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டார்.  சங்கரன் கோவிலுக்கு நேரு ஒரு முறை வந்து பேசினார் – அவரது பேச்சை சோமியாஜுலு மொழிபெயர்த்து தமிழில் கூறினார். 

பாரதியாரின் சிறந்த நண்பர் – எல்லா கூட்டங்களிலும் பாரதி பாடல்களைப் பாடுவார். இவர் சிறந்த எழுத்தாளர் – மதுரை – நெல்லை மாவட்ட சுதந்திரப் போராட்ட வரலாறு மற்றும் விஸ்வாமித்திரா என்ற நூல்களை எழுதியுள்ளார் – பத்திரிகை ”விஜயா”- நெல்லை செய்தி” நடத்தினார்

என்.எஸ். வரதாசாரியார் ( 79 )

(1897 – 1987 ) – வரதாசாரியார் காந்தி சொற்படி பொதுவாழ்வில் எளிமையை கடைப்பிடித்து வாழ்ந்தவர். வருமான வரும் தனது வக்கீல் தொழிலைக் கைவிட்டார் – சட்டை போடுவதையும் – செருப்பு அணிவதையும் கைவிட்டார். நான்கு முழம் வேஷ்டி ஒரு கதர் துண்டு இதுவே அவரது தினசரி ஆடை. விடுதலை போராட்டங்களில் கலந்து கொண்டு பல முறை சிறை சென்றவர். ராஜாஜியின் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் பல ஆண்டுகள் தங்கித் தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்காகச் சேவை செய்தார். காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு – இங்கு வரதாசாரியார் 10 ஆண்டுகள் பணியில் இருந்து ஹரிஜன சேவை செய்தவர்.

கல்லிடைக்குறிச்சி கோமதி சங்கர தீட்சிதர் ( 80 )

(1889 – 1972 ) – ” Simple living high thinking ” எளிமையான வாழ்க்கை உயர்ந்த குறிக்கோள் என்று வாழ்ந்த சுதந்திர தியாகிகளில் இவரும் ஒருவர். முதலில் இவர் தீவிரவாதியாக இருந்தார் – தீரர் சுப்பரமணிய சிவாவின் நட்பால் வ.உ.சி.க்கு அறிமுகமானார். அவரது கப்பல் கம்பெனிக்கு பங்குதாரர்களை சேர்ப்பதற்குக் கோமதி பெரிதும் உதவியாக இருந்தார். அக்கால தீவிரவாத வந்தே மாந்திர அமைப்பை சேர்ந்த வாஞ்சிநாதன் போன்றவர்களுக்குக் கோமதியின் வீடுதான் தங்கும் இடமாக இருந்தது. விடுதலை இயக்கத்தில் காந்தி சகாப்தம் தொடங்கியதும் கோமதி அகிம்சை வழியைப் பின்பற்றி நடக்கலானார்.

தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றத்தில் பெரிதும் அக்கரை உள்ள இவர் – இவரது புதல்வர் மகாதேவன் இருவரும் சேரமான் தேவியில் ஹரிஜன விடுதியை நடத்தியவர்கள். விடுதியை தன் சொந்த செலவில் கோமதி கட்டினார் – அதன் செயலராக மகன் பணி செய்தார்.  அந்த விடுதி தற்போது ராமகிருஷ்ண தபோவனத்தால் ”பரத்வாஜ் ஆசிரமம்” என்ற பெயரில் இயங்குகிறது. எப்பொழுதும் கதர் வேட்டி – துண்டுடன் தான் இருப்பார் – பொது ஜனங்களுடன் சேர்ந்துதான் பஸ்சிலும் – ரயிலில் மூன்றாம் வகுப்பில்தான் பயணிப்பார். ஓய்வு நேரங்களில் காங்கிரஸ் அலுவலகத்தில் அமர்ந்து ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டிருப்பார்.

1957 – 1962 – 1967 நடந்த சட்ட மன்ற தேர்தல்களில் எல்லாம் அவர் வெற்றி பெற்றார்.  முக்கிய மாக 67 தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி கண்டது. ஆனால் தீட்சிதர் வெற்றி பெற்றார். அவர் அதிக படிப்போ – பேச்சுத் திறமையோ கொண்டவர் அல்ல எனினும் அவரது எளிய வாழ்க்கை முறை பொது தொண்டில் ஆர்வம் இவையே அவருக்குப் பக்கபலமாக இருந்தது. அவரைப் போல் சுயநலமில்லா பொது தொண்டு செய்பவரைப் பார்ப்பது அரிது என்று காமராஜர் பாராட்டியுள்ளார். இவர் பாரதமாதா பஜனை சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அங்கு பாரதி பாடல்களைப் பாடி தேச பக்தியை மக்களிடையே தூண்டிவிட்டவர்.

சிறு வயதில் ஒரு விபத்தில் ஒரு கண் பார்வை இழந்தவர். சட்ட மன்றத்தில் ஹரிஜனங்களுக்காக வாதாடி அவர்களது குறைகள் பல வற்றை நிவர்த்தி செய்துள்ளார். தனது 80 ஆவது சதாபிஷேக பிறந்த தினத்தைக் கொண்டாடவில்லை அன்றும் சட்ட மன்றத்திற்குச் சென்றார். இதை அறிந்த கலைஞர் சட்ட மன்றத்திலேயே. அவரது பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார்.

அம்மாபேட்டை வேங்கடராம ஐயர் ( 81 )

இவர் விடுதலை போராட்டங்களில் பல முறை பங்குகொண்டு சிறை சென்றவர் –  இருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் – இவர் தீண்டாமை ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டார் – தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி கற்கவும் அவர்கள் வாழ்கையில் முன்னேறவும் அவர்களுக்கு உதவியவர் – அவரது சீர்திருத்த பணிகளை ராஜாஜியும் – காமராஜரும் பாராட்டி உள்ளார்கள்.

சி.எஸ். ரங்க ஐயர் ( 82 )

(1892 – 1962 ) – தீண்டாமை  என்பது அறவே ஒழிக்கப்படவேண்டும் – அவர்களது முன்னேற்றத்திற்கு அவர்கள் வாக்குரிமையையும் தேர்தல்களில் போட்டியிடும் உரிமையையும் பெற்றே ஆகவேண்டும் என்று குரல் கொடுத்தவர்.  அவரது காலத்தில் தலித் வாக்குரிமை என்பதை யாரும் சிந்தித்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார்கள். அக்காலத்தில் இந்தியா முழுவதும் சிறுவர் திருமணம் நடந்தது. பால விவாகத்திற்கு வேதங்களில் அனுமதி கிடையாது என்று வாதாடியவர்.

எம்.சேஷாசாரியார் ( 83 )

சென்னை பூந்தமல்லியில் வக்கீல் தொழில் நடத்தி வந்தவர் – தலித் மக்களின் கல்விக்காகப் பலமுறை நன்கொடையை வாரி வழங்கியவர் – சாதி வேறுபாடு அறியாதவர் – தனது சொந்த பணத்தைச் செலவு செய்து காங்கிரஸ் திட்டங்களை நடத்திக் காட்டியவர். அவரது இல்லத்தில் தலித் ஜனங்கள் உரிமையோடு சென்று உணவு அருந்துவார்கள். அவர்களது குறைகளைக் கேட்டு தன்னால் முடிந்தவரை உதவிகளைச் செய்வதில் சளைக்காதவர்.

தலித் மக்களுக்கு வீடுகள் கட்டிதர திட்டங்களை வகுத்து அதற்கான செலவையும் தானே ஏற்றக் கொண்டவர். காமராஜர் பூந்தமல்லிக்கு வரும் பொழுதெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களைச் சேஷாத்திரியைப் பின்பற்றி நடங்கள் என்று அறிவுரை கூறுவார்.

க. சந்தானம் ( 84 )

விடுதலை போராட்ட தியாகி – சாதி வேறுபாடுகளை உறுதியாக எதிர்த்துப் போராடியவர் – ராஜாஜியின் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் தங்கி ஹரிஜன தொண்டு செய்து வந்தவர்.   ( War Against Untouchabililty  ) ” தீண்டாமைக்கு எதிரான போர் ” சந்தானத்தின் மிகச் சிறந்த ஆங்கில நூல்.  தீண்டாமை கொடுமையை அந்த நூலில்  கடுமையாகச் சாடியிருப்பார். தீண்டாமை எளிதில் வீழ்ந்துவிடாது அதை அறவழியில் மட்டுமே வெல்ல முடியும் என்பது இன்று வரை நிரூபணமாகி வருகிறது.

விடுதலை பெற்ற இந்தியாவில் அரசாங்கத்தில் சில பெரும் பொறுப்புக்களைச் சந்தானம் வகித்தார்.  1967 ஆம் ஆண்டு அண்ணாதுரை தலைமையில் அமைந்த அரசு இவரது நுண்ணறிவையும் – அனுபவத்தையும் நன்கு பயன்படுத்திக் கொண்டது. அண்ணாவும் அவருக்குப் பிறகு கருணாநிதியும் அவரது தலைமையில் அரசு குழுக்களை அமைத்து அதன் பரிந்துரைகளைப் பெற்றார்கள்.

சந்தானம் உடல் நலிவுற்றபொழுது அரசு அவரது மருத்துவச் செலவை ஏற்றுக்கொண்டது – இதற்காக ஒரு அரசாணையையே வெளியிட்டது.

பி.ராமமூர்த்தி ( 85 )

(1908 – 1987 ) 1908  ஆம் ஆண்டு பஞ்சாபிகேச சாஸ்திரியார் என்பவருக்கு மகனாகச் சென்னையில் பிறந்தார். சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபாடு கொண்டவர் – 1919 ஆண்டு ரௌலட் சட்டத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார் – 1932 இல் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு 6 மாதம் சிறையில் இருந்தார்.  தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரபந்தங்களைச் சொல்லி கொடுத்து அவர்களை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலை வலம் வரச் செய்தார். 200 சக்கிளிகளை (செருப்பு தைப்பவர்) தேர்ந்தெடுத்து  அவர்களுக்குச் சங்கும், சக்கரமும் பதித்து கோவில் உறுப்பினராக ஆக்க முயற்சி எடுத்தார். வழக்கு நடந்தது – கோர்டில் இவரை எதிர்த்த ஐயங்கார் வக்கீலிடம் ”பஞ்சராத்ரம்” எனும் ஆகம பிரிவு ஒரு வைஷ்ணவன் மற்றவரைப் பார்த்து நீ என்ன ஜாதி என கேட்கக்கூடாது அப்படிக் கேட்பது தன் தாயுடன் உடல் உறவு கொள்வதற்கு சமம் என்று வாதாடி அவர்களைக் கோவில் உறுப்பினர்களாக ஆக்கினார். பின்பு கம்யூனிஸ்ட்டாக மாறி தொழிலாளர் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். இரண்டாவது உலகப் போரின் போது அரசு கம்யூனிஸ்ட்டுகளை கைது செய்தது. அதில் இவரும் கைதாகி நான்கு வருடம் சிறைத் தண்டனை அனுபவித்தார். 1930 இல் ஜமின்தாரி , இனாம் முறைகளை எதிர்த்துப் போராடினர்.  இந்த நிலங்களில் பெரும்பாலும் தலித் தொழிலாளிகளே வேலையில் இருந்தார்கள். இவர் எழுதிய புத்தகம் ” விடுதலை போரும் திராவிட இயக்கமும் ” ( ஆரிய மாயையா – திராவிட மாயையா ) இன்றைய இளைஞர்கள் படிக்கவேண்டிய புத்தகம். சுருக்கமாக சில கருத்துக்கள் கீழே:-

 

  • விடுதலைப் போரின் போது தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகளையும், இதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பையும் பேசும் இந்நூல், பின்னர் அதனையும் கடந்து எம்.ஜி.ஆர். ஆட்சிவரை தொடர்கிறது.
  • இந்த நூலை நான் எழுதும்போது, பொதுவாழ்க்கையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கிருந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே எழுதியிருக்கிறேன். இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்து வந்த, இன்னும் வாழ்ந்து வருகிற தலைவர்களையும், அவர்களுடைய இயக்கங்களையும் நான் அனுபவப்பூர்வமாக அறிவேன். அவர்களுடன் நெருங்கிப் பழகியவன் நான். சுதந்திர இயக்கத்தில் பல உபநதிகளில் நானும் இரண்டறக் கலந்தவன்.
  • இந்த நூல் முற்றிலும் என் ஞாபகத்திலிருந்தே எழுதப்பட்டுள்ளது. அதனால் சிற்சில சம்பவங்களின் ஆண்டுகள் தவறாக இருக்கலாம். ஆனால் நிகழ்ச்சிகள் ஒன்றும் தவறானதல்ல. இந்த நூலை வருங்கால தலைமுறையினருக்கு சமர்ப்பணமாக அளிக்கிறேன்” எனும் நூலாசிரியரின் முன்னுரை முக்கியமானது. 
  • “ஜஸ்டிஸ் கட்சியின் கதை அனேகமாக 1937-ம் ஆண்டோடு முடிந்துபோன ஒன்றாகும். இந்தக் கட்சி இருந்துவந்த காலம் முழுவதிலும் இந்நாட்டின் தேசபக்தியும், சுதந்திர வாஞ்சையும் கொண்ட எந்தவொரு இந்தியனும் பெருமைப்படக் கூடியதாக இல்லை. மாறாக வெட்கித் தலைகுனிய வேண்டியதாக இருந்தது.” என ஜஸ்டிஸ் கட்சியை விமர்சிக்கும் நூலாசிரியர், இதற்கானக் காரணக் காரியங்களையும் விளக்கியிருக்கிறார்.
  • நாடே எதிர்த்த சைமன் கமிஷனுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு, மாண்டேகு செம்ஸ்போர்டுக்கு வரவேற்பு, ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு ஆதரவாக ஜஸ்டிஸ் கட்சியினர் கொடுத்த அறிக்கை, என விவரித்து செல்கிறார்.
  • பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டத்தை நீக்குவதற்கு, பதினாறரை ஆண்டுக்காலம் ஆட்சியில் இருந்த ஜஸ்டிஸ் கட்சி தனது சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை என்று குற்றம்சாட்டும் நூலாசிரியர், “இதுதான் பிராமணல்லாதாரின் நலன் காத்த லட்சணம்!” என்கிறார்.
  • “அரண்மனைக்காரர்கள், சீமான்கள், துரைமார்களின் செல்லப்பிள்ளைகள். சரிகைக் குல்லாக்காரர்கள்” என்று அண்ணா அவர்களால் விமர்சிக்கப்பட்டவர்களைத் தான் தங்களது மூதாதையர்கள், தாங்கள் அவர்களின் வழித்தோன்றல்கள் பரம்பரையினர் என்று இன்றைய திராவிட இயக்கத்தினர் மார்தட்டிக் கொள்வதுதான் வியப்பானது–விந்தையானது – வேடிக்கைக்கு உரியது” என எள்ளி நகைக்கிறார்.
  • திராவிடநாடு என்பது ஒரு கனவுதான் என்பதைத் திரு.அண்ணாதுரை உணர்ந்து அவரே 1962-ல் அதைக் கைவிட்டுவிட்டார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.  
  • தங்களைத் திராவிடர் என்று சொல்லிக் கொண்ட கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் மலையாளி – தெலுங்கன் என மோதிக்கொண்டதையும் உரிய இடத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • இறுதியாக, “பெரியார் செய்துவந்த நாத்திகப் பிரச்சாரத்துக்கு, கடவுள் மறுப்பு பிரச்சாரத்துக்கு என்ன கதி ஏற்பட்டது என்பதையும் பார்த்தோம். அவரைக் கடவுளாக்கி சூடம் கொளுத்தி சாம்பிராணி தூபம் போட்டு பூஜை செய்வார்கள். அவருடைய கொள்கைகளைச் சவக்குழியில் புதைப்பார்கள். இதுதான் திராவிட இயக்கத்திற்கு நேர்ந்துள்ள கதி” என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

அன்னதான சிவம் ( 86 )

சின்னஞ் சிறுவயதில் செயலதுவோ பெரியதுவாம்

செவியில் ஒலித்ததுமே சிலுசிலுத்துப் போகுதடா

அன்னதான சிவம் அறமேற் கொண்டதுவோ

அதுவல்லோ தேப்பெருமாள் நல்லூரின் அழியாப்புகழ்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தின் அருகில் உள்ள தேப்பெருமாள் நல்லூரில் 1852 ஆம் ஆண்டு அசுவதநாராண சாஸ்திரி – லஷ்மி அம்மாளுக்குப் பிறந்த ராமசாமி என்னும் சிவன். உள்ளூர் திருவிழாக்களின் போது தண்ணீர்ப் பந்தல் என்று ஆரம்பித்த இவரது தொண்டு – அன்னதான தொண்டாக மாறியது – தனது ஊரில் மட்டும் அல்லாமல் சுற்றியுள்ள ஊர்களிலெல்லாம் திருவிழாக்கள் பண்டிகை காலங்களில் அன்னதானம் செய்வது என்று வழக்கமாயிற்று. எவரையும் அணுகி இவர் பொருள் உதவி கேட்டதில்லை – இவர் செய்யும் தொண்டை பார்த்துச் செல்லும் இடங்களிலெல்லாம் அவ்வூர் மக்களே பொருள் உதவி செய்ய ஆரம்பித்தார்கள். இந்த தொண்டை அவர் 60 ஆண்டுகள் தொடர்ந்து செய்து வந்தார்.

எ.கிருஷ்ணசாமி ஐயரால் தேப்பெருமாள் நல்லூரில் அன்னதான சிவன் ஹரிஜன மாணவர் எலிமென்டரி பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது. அதில் 110 மாணவர்கள் படித்தார்கள் – அவர்களது மத்திய உணவுக்காக அறகூழ் சாலை அமைக்கப்பட்டது. மேலும் அன்னதான சிவன் ”சிசு  நல விடுதி ” – இலவச வாசகசாலை அமைக்கப்பட்டது. 1952 இல் பஞ்சத்தால் ஏற்பட்ட வறட்சியை நிவர்த்திக்க சிவன் அறக்கட்டளை நிதி உதவி செய்தது.

அன்னதான சிவன் நினைவாக விஸ்வநாத ஐயரால்      ஹரிஜன குழந்தைகளுக்கு 1952 இல் ஒரு பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது. அது அரசு உதவியுடன் பெரும் பள்ளியாக இன்றும் நடந்து வருகிறது. சென்னை பல்லாவரத்தில் அன்னதான சிவன் அறக்கட்டளை பள்ளிக்கூடம் உள்ளது.

காந்தி ஆசிரமம் அ.கிருஷ்ணன் ( 87 )

( 1908 – 1985 ) – பிறந்தது திருநெல்வேலி – 10 ஆம் வகுப்பு வரைப் படித்தார் – குடும்பச் சூழல் காரணமாக பம்பாய்க்கு வேலை செய்யச் சென்றார் – சுதந்திர போராட்டத்தில் ஈடுபாடு உள்ளவர் அதனால் கதர் ஆடைகளை மொத்தமாக வாங்கி மூட்டையைத் தோளில் சுமந்து தெரு தெருவாகச் சென்ற விற்ற வந்தார் – இவரது தொண்டை காந்தியடிகள் பாராட்டியுள்ளார். சில காலத்திற்குப் பின் ஊர் திரும்பி விளாத்திகுளம் என்ற ஊரில் பொதுபணித் துறையில் பணி செய்தார். இவர் கல்கியின் ” விமோசனம் ” பத்திரகைக்குச் சந்தாதாரர்களை சேரத்தார். கல்கியின் அழைப்பின் பேரில் திருச்செங்கோடு சென்றார். 1930 முதல் 1970 வரை இவர் காந்தி ஆஸ்திரமத்தில் ஹரிஜன சேவைப் பணியில் இருந்தார்.  சுதந்திர போராட்டங்களில் பங்கெடுத்து இரண்டு முறை சிறை சென்றவர்.  

காந்தி ஆசிரம அ.கிருஷ்ணன் அவரது மனைவி மங்களம் அம்மாள்

வ.ரா. (வ.ராமசாமி ஐயங்கார் ( 88 )

சுதந்தரப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தப் படைப்பாளியுமான ‘வ.ரா.’. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: (1889 – 1951 )

* தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த திங்களூரில் நடுத்தரக் குடும்பத்தில் (1889) பிறந்தார். தந்தை வைதீகத் தொழில் செய்துவந்தவர். உத்தமதானபுரம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வி தொடங்கியது. பிறகு தஞ்சை, திருச்சியில் பயின்றார்.

* விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டார். 1910-ல் அலகாபாத் காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். காந்தியடிகள் மீது அளவற்ற மதிப்பு கொண்டிருந்தார். மக்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பது மூடப் பழக்கவழக்கங்களே என்று கூறியவர், அவற்றை எதிர்த்து முழுமூச்சுடன் போராடினார்.

* ஆச்சார நியமங்களைக் கைவிட்டார். உறவுகளைத் துறந்தார். சமுதாய சீர்திருத்தப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார். தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், விதவைத் திருமணம், பெண் கல்விக்காகப் போராடினார். இதுபற்றி பல புதினங்களை எழுதினார்.

* படைப்புத் திறன் மிக்கவர். 1914-ல் ‘சுதந்திரன்’ பத்திரிகை ஆசிரியரானார். வர்த்தமித்திரன், பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு, சுயராஜ்யா, வீரகேசரி, பாரததேவி எனப் பல பத்திரிகைகளில் பணியாற்றினார். கல்கி, புதுமைப்பித்தன் போன்ற இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தார்.

* இவரது சிறுகதைகள் சமூக சீர்கேடுகளுக்குச் சாட்டையடி கொடுப்பதாக இருந்தன. சுந்தரி, சின்னச்சாம்பு, விஜயா, கோதைத் தீவு ஆகிய புதினங்கள், மகாகவி பாரதி பற்றிய நூல், மழையும் புயலும் என்ற கட்டுரைத் தொகுப்பு, கற்றது குற்றமா என்ற சிறுகதைத் தொகுப்பு ஆகியவை இவரது பிரசித்தமான படைப்புகள்.

* வ.வே.சு.ஐயர், அரவிந்தரின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். அரவிந்தர் ஆசிரமத்தில் சிறிது காலம் தங்கியிருந்தார். புதுவையில் அரவிந்தர், பாரதியுடன் வசித்தபோது, வங்காள மொழி கற்றார். பக்கிம்சந்திர சட்டர்ஜி எழுதிய வங்க மந்திரங்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். அதை வெகுவாகப் பாராட்டினார் பாரதி.

* வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு, கைதானார். அலிப்பூர் சிறையில் இருந்துகொண்டே ஆங்கில ஆட்சிக்கு எதிராகக் கட்டுரைகள் எழுதினார். அவை பின்னாளில் ‘ஜெயில் டைரி’ என்ற நூலாக வெளிவந்தது.

* இவர் ஆசிரியராக இருந்த ‘மணிக்கொடி’, தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. விடுதலைப் போராட்டம், சமூகம், இலக்கியம், கலை என அனைத்து தளங்களிலும் முத்திரை பதித்தது. தமிழ் இலக்கிய வரலாற்றில் அது ‘மணிக்கொடி காலம்’ என்றே போற்றப்பட்டது.

* மெட்ராஸ் வானொலி நிலையம் 1938-ல் தொடங்கப்பட்டபோது ‘மூட நம்பிக்கைகள்’ என்ற தலைப்பில் வ.ரா. ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது. வானொலியில் 12 ஆண்டுகளில் சுமார் 120 உரைகள் ஆற்றினார். உரைநடை வளர்ச்சியில் புதிய சகாப்தத்தைத் தொடங்கிவைத்தார்.

* புதுச்சேரியில் தலைமறைவாக வாழ்ந்த பாரதிக்கு உதவியாக இருந்தார். பாரதியின் வாழ்க்கை குறித்த முதல் புத்தகமே இவர் எழுதியதுதான். ‘பாரதியின் வாரிசு’ எனப் புகழப்படும் சமூக சீர்திருத்தப் படைப்பாளியான வ.ரா. 62-வது வயதில் (1951) மறைந்தார்.

சுத்தானந்த பாரதி ( 89 )

சிவகங்கையில்  காமாக்ஷி அம்மையாருக்கும், சிவிகுல ஜடாதர அய்யருக்கும் தெலுங்கு  பிராமண குலத்தில் பிறந்தவர்.உடன் பிறந்தோர்களில் மூத்த தமையனார் ஜெ. வேங்கடராமய்யர்.  இவர் போராட்ட வீரர்களுக்கு மட்டும் கோர்ட்டில் ஆஜராவார், தானே நெய்த கதர் ஆடை அணியும் தேச பக்த வக்கீல்!  இரண்டாவது தமையனார் ரங்கசாமி அய்யரே பின்னாளில் குடும்பம் முழுவதும் பார்த்துக் கொண்டவர். அண்ணன் தேசீயவாதி, தம்பி சுதந்திரப் போராட்டக்காரன் மட்டுமின்றி, ஒரு துறவியும் கூட! இவர்களது ஒரே தமக்கை ரங்கநாயகி. சுத்தானந்தரின் இயற்பெயர் வேங்கட சுப்ரமணியன்.  

காந்தியடிகளின் அறிவுரைப்படி கிராமப்பணி, கதர்ப் பணி,  மதுவிலக்கு ஒழிப்பு,  தீண்டாமை ஒழிப்பு,  உயிர்ப் பலி தடுத்தல்,  பெண்கள்  மறுவாழ்வு போன்ற சீர்திருத்த இயக்கங்களையும் மேற்கொண்டு நாட்டுப் பணியும் ஆற்றியுள்ளார். தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்கள் இப்பணியில் சுவாமிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

காட்டுப்புத்தூரிலும்  தேவகோட்டையிலும் ஆசிரியராகவும்,  சாரண ஆசிரியராகவும் பணியாற்றிய காலங்களில், தேசியச் சிந்தனைகளைத் தூண்டும் பாடல்களை இசையோடு இயற்றி அவற்றை மாணவரிடையே பரப்பினார். திலகர்,  காந்திஜி,  நேதாஜி,  வ.வே.சு ஐயர்,  சிதம்பரனார்,  சுப்ரமணிய சிவா,  மகாகவி  பாரதியார்,  செண்பகராமன்,  ராஜா மகேந்திர பிரதாப் போன்ற பெருந்தலைவர்களுடன் நெருக்கம் கொண்டிருந்தார் யோகியார். ஆயிரம் நூல்களை இயற்றினார். பெரும்பாலானவை தமிழ் நூல்களே. வடமொழி, இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளிலும் நூல்களை இயற்றியுள்ளார். கவிதைகள், உரைநடை,  பயணநூல்,  இலக்கணம்,  கீர்த்தனைகள்,  நாட்டியப் பாடல்கள்,  நாடகம்,  திறனாய்வு,  நவீனம், சிறுகதை,  அறிவியல்,  வாழ்க்கை வரலாறு போன்ற பலதுறைகளிலும் நூல்களை எழுதிக் குவித்தார்; எனினும் சுத்தானந்தர் தமது படைப்புகளில் பெரிதும் போற்றியவை ‘பாரத சக்தி மஹாகாவியம்’ என்னும் நூலும், ’யோகசித்தி’ என்னும் குறட்பாக்களாலான நூலுமாகும்.

தமிழகத்தில் பல பிராமணர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்து சாதிக்கொடுமை – தீண்டாமை இவற்றைத் தீவிரமாக எதிர்த்தார்கள்.  இவர்கள் பூணூல் அணிவது போன்ற சின்னங்களை துறந்தார்கள் -கலப்பு திருமணம் செய்தார்கள் – செய்யவைத்தார்கள்.( 90 )

(90 – 1) எம்.ஆர். வெங்கட்ராமன் (1906 – 1983)

(90 – 2) ஏ.பாலசுப்பிரமணியன் (1917 – 1981)

(90 – 3) பி.சீனிவாச ராவ் (1907 – 1961)

தாழ்த்தப்பட்ட – ஹரிஜன – தொழிலாளர்கள் நிறைந்த தொழிற்சங்க தலைவர்கள் ( 91 )

(91 – 1) கே.எஸ்.ஜானகிராமன்

(91 – 2) ஜி.ராமானுஜம் (1915 – 2001) ஐ.என்.டி.யூ.சி என்ற தொழிற்சங்கத்தை வளர்த்தவர்

(91 – 3) குருமூர்த்தி – சிம்சன் குழுமம் தொழிற்சங்கத்தை வளர்த்தவர்

(91 – 4) என்.குருசாமி (1904 – 1967 ) ரயில்வே தொழிற்சங்க தலைவர்

(91 – 5) கே.ஜகதீச ஐயர் (1901 – 1955) மாநில அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர்

(91 – 6) என்.ஜெயராம ஐயர் – தபால்-தந்தி இலாகா ஆர்.எம்.எஸ். ஊழியர் சங்கம்

(91 – 7) ஜி.கிருஷ்ணமூர்த்தி (1905 – 1970) ரயில்வே ஒர்ஷாப் சங்கத் தலைவர்

(91 – 8) கே.எஸ்.மார்கம் ஐயர் (1882 – 1967)  ரயில்வே தொழிலாளர் சங்கத் தலைவர்

(91 – 9) பி.ஆர்.கே.சர்மா (1903 – 1951) ஐ.என்.டி.யூ.சி தலைவர்களுள் ஒருவர்

(91 – 10) டி.எஸ்.ராமானுஜம் (1906 – 1967)  தொழிற் சங்கங்களின் முன்னோடி

(91 – 11) இ.எல்.ஐயர்

(91 – 12) எஸ்.கஸ்தூரிரங்க ஐயங்கார் (1859 -1923) ஆரம்பக்கால தொழிற்சங்க தலைவர்

இப்படிப் பல பிராமணர்கள் ஏழை எளிய – நடுத்தர வர்கம் – தாழத்தப்பட்ட – தீண்டப்படாதவர் என்று ஒட்டு மொத்த தொழிலாளர் வர்கங்கள் மேல் பரிதாப உணர்வு கொண்டு அவர்கள் வாழ்க்கைத் தரம் முன்னேறப் பாடுபட்டவர்கள் 

எழுத்து துறையில் பலர் தாழ்த்தப்பட்ட – தீண்டபப்டாதவர்கள் நிலைமையையும் அதை நிவர்த்திக்கும் வழிகளையும் – சமூக அநீதிகளையும் கடுமையாகச் சாடி பல பிராமண எழுத்தாளர்கள் இருந்தார்கள் – இருக்கிறார்கள் – ( 92 )

(92 – 1) ஜி.சுப்பரமணிய ஐயர் (1855 – 1923)  ஹிந்து – சுதேசமித்திரன் பத்திரிகைகளை ஆரம்பித்து நடத்தியவர். விடுதலை இயக்கமாகக் காங்கிரஸ் மஹாசபையை ஆரம்பித்தவர்களுள் ஒருவர்

(92 – 2) .அ.மாதவையா (1872 – 1925) தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தி 100 ஆண்டுகளுக்கு முன்பாக சிறந்த நாவல்களை எழுதியவர்.  ” பத்மாவதி சரித்திரம் ” – ”முத்து மீனாட்சி” ஆகிய நாவல்கள் மிகவும் புரட்சிகரமானவை.

(92 – 3) டி.வி.ராமசுப்ப ஐயர் (1908 – 1984) “தினமலர்” நாளிதழைத் தொடங்கியவர் – ” ஹரிஜனங்கள் முன்னேறவேண்டும் அது ஒன்றுதான் நாடு முன்னேற வழி” என்ற முழங்கியவர்.

(92 – 4) கல்கி ஆர்.கிருஷ்ணமூர்த்தி (1899 – 1954) – தனது எழுத்தின் மூலம் தீண்டாமை கொள்கையைத் தீவிரமாகத் தாக்கியவர்.

வை.மு.கோதைநாயகி ( 93 )

வை. மு. கோதைநாயகி (1901 – 1960), தமிழகத்தைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளர் ஆவார். துப்பறியும் புதினம் எழுதிய முதல் தமிழ்ப்பெண் எழுத்தாளராவார். மேடைப் பேச்சாளர், கவிஞர், சமூகநல ஊழியர், இதழாசிரியர், இந்திய விடுதலைக்காகப் போராடியவர் என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் வை.மு.கோதைநாயகி அம்மாள். இவரைச் சமகால எழுத்தாளர்கள், ‘‘நாவல்ராணி, கதா மோகினி, ஏக அரசி’’ என்று போற்றினர்.

 வெளிவந்துள்ள தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் இவரைச் சரியாக அடையாளம் காட்டவில்லை. 115 புதினங்களை எழுதியவர். தான் வாழ்ந்த 59 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் எழுத்தே உலகம் என்று இயங்கினார்.

பத்திரிகையாளராக, நாவலாசிரியராக மட்டும் இருந்த வை.மு.கோ.வுக்கு அன்னி பெசன்ட் அம்மையார் மூலமாக தேசபக்தர், சமூகத் தொண்டர் அம்புஜம் அம்மாளின் நட்பு ஏற்பட்டது. தந்தை சீனிவாச ஐயங்கார் இல்லத்துக்கு  1925ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வருகை தந்த போது வை.மு.கோதை நாயகி அம்மாள் காந்தியைச் சந்தித்தார். இந்நிகழ்வு வை.மு.கோவின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. காந்தியின் எளிமையான தோற்றமும், ஆராவாரமற்ற அவரது உறுதியான நாவன்மையும் அம்மையாரை மிகவும் கவர்ந்தது. பட்டாடையே உடுத்திப் பழக்கப்பட்ட வை.மு.கோ. அது முதல் கதர் புடவையையே அணியத்தொடங்கினார். மங்கல நாணைத் தவிர ஆடம்பரமான அணிகலன்களைத் தவிர்த்து, வேறு நகைகளை அணிவதில்லை என்று உறுதி பூண்டு அதையும் இறுதி வரையில் கடைப்பிடித்தார். பின்பு அம்புஜம் அம்மையார், ருக்மணி இலட்சுமிபதி, வசுமதி இராமசாமி ஆகியவர்களுடன் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டார்.

1931 இல் மகாத்மா காந்தி கள்ளுக்கடை மறியலில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தபோது அம்மையார் அதை ஏற்று  திருவல்லிக்கேணியில் தற்போதைய பெசண்ட் ரோட்டில் திருமலாச்சாரி பள்ளி இருக்குமிடத்தின் அருகே இருசப்ப கிராமணித் தெருவில் இருந்த கள்ளுக்கடை முன் மறியல் செய்தார். சென்னை சைனா பஜாரில் தடையை மீறி ஊர்வலம் சென்றதால், தலைவர்கள் பலருடன் கோதைநாயகியும் கைது செய்யப்பட்டார். ஆறு மாதச் சிறைத் தண்டனையும் நூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட மறுத்ததால் கூடுதலாக நான்கு வாரம் சிறைத் தண்டனை அம்மையாருக்கு விதிக்கப்பட்டது. 1932இல் ‘லோதியன் கமிஷனுக்கு’ எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டும், அன்னியத் துணி எதிர்ப்பு இயக்கத்தில் கலந்துகொண்டதற்காகவும் கோதையை வேலூர் சிறையில் அடைத்தார்கள். ஒரு எழுத்தாளர் என்ற முறையில் சிறையில் இருந்த காலத்தைப் பயனுள்ளதாகப் பயன்படுத்திக் கொண்டார். ஒவ்வொரு கைதியையும் தனித்தனியாகச் சந்தித்து அவர்கள் சிறைக்குள் தள்ளப்பட்ட காரணங்களைக் கேட்டு அவற்றை நாவலாக எழுதத் தொடங்கினார். சிறைக்கைதிகளை வன்முறை பாதையிலிருந்து திசை திருப்பி காந்திய பாதைக்குக் கொண்டு செல்ல முயன்றார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். சிறையில் இருந்தபோது “சோதனையின் கொடுமை”, “உத்தமசீலன்” ஆகிய புதினங்களை எழுதினார். இவர் சிறையில் இருந்த போது ஜகன்மோகினி இதழை இவரது கணவர் வை.மு.பார்த்த சாரதி தொடர்ந்து நடத்தினார்.

டி.சதாசிவ ஐயர் ( 94 )

(1861 – 1927) – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ”ஹிந்து சீர்திருத்தவாதியும் – அரசியல்வாதியும்” என்ற பொருள் கொண்ட ஓர் ஆங்கில வாரப்பத்திரிகையின் ஆசிரியராகச் சிறிது காலம் பணி செய்தவர்.

ஏ.எஸ்.பி.ஐயர் ( 95 )

(1899 – 1963) – ஐ.சி.எஸ் தேர்வில் வெற்றி பெற்றவரும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் – தாழ்த்தப்பட்டோர் ஆலயப்பிரவேச உரிமையை 1932 ஆம் ஆண்டிலேயே – மிகுந்த துணிவுடன் வெளியிட்டவர்.

அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் ( 96 )

(1883 – 1953) – வக்கீல் தொழிலில் ஈடுயிணையற்றவர் என்று திகழ்ந்தவர் – ஹரிஜன சேவா சங்கத்திற்கு பெரும் தொகையை நன்கொடையாக அளித்தவர்

டி.ஆர்.வேங்கடராம சாஸ்திரி ( 97 )

அக்காலத்தில் அதிகாரம் மிக்கது என்று கருதப்பட்ட அட்வகேட் ஜெனரல் பதவியை வகித்தவர்.  தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் நலனுக்காக ”கோகுலம் ” என்ற அமைப்பிற்கு பெரும் பண உதவி செய்தவர்.

டி.எம்.கிருஷ்ணசாமி ஐயர் ( 98 )

”திருப்புகழ் மணி” என்ற பெயருடன் பிரசித்தமாக இருந்த நீதிபதி – இவர் வள்ளிமலை சுவாமிகளுடன் சேர்ந்து திருத்தணி படி விழாவைத் தொடங்கினார். வருடம்தோறும் டிசம்பர் மாதத்தில் இவ்விழா நடக்கும் – இவர் பல கோவில்களுக்குச் சென்று பஜனை பாடல்களைப் பாடுவார் – ஹரிஜனங்கள் வாழும் குடிசைப் பகுதிகளுக்குச் சென்று பஜனை நடத்தி பக்தியை வளர்த்தார் – இதனால் ஹரிஜனங்கள் தெய்வநம்பிக்கை கொண்டு பஜனை பாடல்களை அவருடன் சேர்ந்து பாடினார்கள்.

எஸ்.ஜி.கிட்டப்பா – சுந்தராம்பாள் ( 99 )

( 1906 – 1933 ) இவர்கள் இருவரும் நாடகங்களில் தேசிய பாடல்களைப் பாடி மக்களிடையே தேச பக்தியையும் – விடுதலை உணர்வையும் வளர்த்தவர்கள். மிரண்டு போன பிரிட்டிஷ் அரசு அவர்களைப் பாடத் தடை செய்தது. அதை சட்டை செய்யாமல் அவர்கள் பாடினார்கள்.  கிட்டப்பா கொடையில் வள்ளலாக விளங்கினார்.  ஆதி திராவிடர் பள்ளிக்கூடத்திற்கும் – மற்ற பள்ளிகளுக்கும் பெரும் தொகையை நன்கொடையாக வழங்கியவர்.

அம்பேத்கருக்கு உதவி செய்த பிராமணர்கள் ( 100 )

” டாக்டர் அம்பேத்கர் மற்றும் பிராமணர்கள் ” என்ற எனது வலைத்தள கட்டுரையைப் படிக்கவும். 15 பிராமணர்களுக்கு மேல் அம்பேத்கர் வாழ்கையில் அவருக்கு உற்ற நண்பர்களா உதவியுள்ளார்கள். அதில் முக்கியமானவர்கள் அம்பேத்கர் என்ற பள்ளி ஆசிரியர் – கிருஷ்னாஜி அர்ஜுன் கேலுஸ்கர் என்ற பள்ளி ஆசிரியர் – மற்றும் அவரது அந்திமகாலத்தில் அவருக்கு உற்ற துணையாக இருந்த சாராதா என்ற இரண்டாவது மனைவி.

ஹரிஜன சேவையிலும், சமூகசேவையிலும் ஈடுபட்ட பல அந்தணர்கள் பற்றிய தகவல் முழுமையாக கிடைக்கவில்லை – உதாரணமாக என்.ஹாலாஸ்யம் ஐயர் – வை.சங்கரன் – வெ.சாமிநாத சர்மா – ஜி.ராமசந்திரன் (திருச்சி) – கே.ஆர்.வாசுதேவன் – டி.ஆர்.வெங்கடராம ஐயர் – திண்டுக்கல் டி.அமிர்தலிங்க ஐயர் – ஏ.வி,கங்காதர சாஸ்திரி – என்.சோமசுந்தர ஐயர் – ஏ.ரெங்கசாமி ஐயங்கார். இப்படி தமிழகத்திலும் மற்ற இந்திய மாநிலங்களிலும் ஹரிஜன சேவையில் ஈடுபட்டவர்கள் பிராமணர்கள்தான் எண்ணிக்கையில் அதிகம் !!!!!

Ambalachavadi’ — The meeting place of the various National Leaders in the Gandhi Ashram.

Objectives of the Gandhi Ashram

The object of the Ashram is to serve people of the rural India as envisaged by Mahatma Gandhi. It has been a centre of progressive nationalism following the triple ideas of “Truth”, “Service” and “Ahimsa”. The aims of the Ashram, which are unique in all respects, have been given below:

  • To provide employment opportunity for the landless labourers and backward classes of the society through Khadi and other village industries.
  • To attain full social emancipation of Harijans and other depressed classes.
  • The propagation of total prohibition and eradication of the evils of drinking from root.
  • To provide relief measure to the distressed at the time of famine, fire or other natural calamites.
  • To spread the simple methods of public health, personal hygiene and village sanitation.
  • To provide medical relief to the rural people.
  • To teach the illiterate adults through night schools.
  • To provide rural people drinking water through protected Wells.
  • To serve the people according to the principles for a social order free from all forms of exploitation based on truth and non —violence as laid down in the teachings of Mahatma Gandhi.
  • To make village self sufficient in the primary needs of life namely food, clothing and shelter and to promote total development of each village along with the neighbouring villages of the region.
  • To develop self —reliance in the individuals and take initiative in enabling the people to manage their affairs themselves for the realization of “Gram Swaraj”.

            In short the fundamental aim of the Ashram is to serve humanity.

Indeed, given the desperate manner in which the British vilified the Brahmin, it is worth examining what so annoyed them. As early as 1871-72, Sir John Campbell objected to Brahmins facilitating upward mobility: “…the Brahmans are always ready to receive all who will submit to them… The process of manufacturing Rajputs from ambitious aborigines (tribals) goes on before our eyes.”

உண்மையில், ஆங்கிலேயர்கள் பிராமணரை இழிவுபடுத்திய விதத்தில், அவர்களுக்கு மிகவும் எரிச்சலூட்டியது என்ன என்பதைப் பார்த்தால் – அது. 1871-72 ஆம் ஆண்டின் முற்பகுதியில், சர் ஜான் காம்ப்பெல் பிராமணர்கள் மேல்நோக்கி இயங்குவதை எதிர்த்தார்: “… தங்களுக்கு அடிபணியக்கூடிய அனைவரையும் பெறப் பிராமணர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்… லட்சிய பழங்குடியினரிடமிருந்து  ரஜபுத்திரர்களை உற்பத்தி செய்யும் செயல்முறை நம் கண் முன்னே செல்கிறது.

Sir Alfred Lyall (1796 – 1865) was unhappy and he wrote:

“…more persons in India become every year Brahmanists than all the converts to all the other religions in India put together… these teachers address themselves to every one without distinction of caste or of creed; they preach to low-caste men and to the aboriginal tribes… in fact, they succeed largely in those ranks of the population which would lean towards Christianity and Mohammedanism if they were not drawn into Brahmanism…”So much for the British public denunciation of the exclusion practiced by Brahmins!.

சர் ஆல்பிரட் லியால் (1796 – 1865) மனம் இல்லாமல் எழுதினார் –

இந்தியாவில் உள்ள மற்ற எல்லா மதங்களுக்கும் மாற்றப்பட்டவர்களை விட இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அதிகமான நபர்கள் பிராமணியர்களாக மாறுகிறார்கள் … இந்த ஆசிரியர்கள் சாதி அல்லது மத வேறுபாடு இல்லாமல் ஒவ்வொருவருக்கும் கல்வி போதிக்கிறார்கள்.- அவர்கள் தாழ்ந்த சாதியினருக்கும்,  பழங்குடியினருக்கும் கல்வி பயில்விக்கிறார்கள் – உண்மையில், அவர்கள் பெரும்பாலும் பிராமணியத்திற்குள் இழுக்கப்படாவிட்டால் கிறிஸ்தவம் மற்றும் முகமதிய மதத்தின் பக்கம் வெகுவாக இழுக்கப்பட்டு விடுவார்கள். இதுவும் பிராமணர்களை பிரிட்டிஷார் வெறுப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

“படித்த பிராமணர்கள் மீதான அவநம்பிக்கையில் ஆங்கிலேயர்கள் தவறாக இருக்கவில்லை, அவர்கள் இந்தியாவில் தங்கள் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதைக் கண்டார்கள். உதாரணமாக, 1879 ஆம் ஆண்டில் தஞ்சை கலெக்டர் பஞ்ச ஆணையத்தின் உறுப்பினர் சர் ஜேம்ஸ் கெயர்டு (James Caird ) அளித்த தகவல்தொடர்பு அறிக்கையில் கூறியது “ஆங்கிலேயர்களுக்கு மிகவும் விரோதமாக  (பிராமணர்களைத் தவிர) எந்த வர்க்கமும் இல்லை.” சுதந்திர இயக்கத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் மோசமான பிரிட்டிஷ் சந்தேகங்களை உறுதிப்படுத்தியது. அந்தக் காலத்தின் எண்ணற்ற சிஐடி அறிக்கைகள் அனைத்தும் தேசியவாத இயக்கங்களில் உள்ள எல்லா மட்டங்களிலும் பிராமணர் பங்கேற்பது குறித்து கருத்து தெரிவித்தன. பிரிட்டிஷாரை நாட்டிலிருந்து வெளியேற்றியதற்காக எந்த ஒரு சமூகம் பெருமை கொள்ள முடியும் என்றால் அது பிராமண சமூகம்தான். பிரிட்டிஷ் தோட்டாக்களால் கொல்லப்பட்டவர்களில் எழுபது சதவீதம் பேர் பிராமணர்கள்”.

Mr.Gandhi speech in the presence of non-brahmin gathering :- Do you think you will gain anything by becoming non-Hindus, he told them, do not think you will gain anything by abusing Brahmins or burning their homes. “Who were Tilak, Gokhale, Ranade and Agarkar?” he asked them. They were Brahmins, they were in the forefront of every nationalist struggle, they served the cause of non-Brahmins at the greatest cost to themselves, it is in many cases through the work of Brahmins that the non-Brahmins have been made aware of their rights, he told them.  It is the Brahmins who exert for the uplift of the depressed classes, more than anybody else. Lokmanya Tilak is revered by all classes for his services to the country. The late Mr. Gokhale, Mr. Ranade and the Hon’ble Mr. Sastri have all done splendid work for the regeneration of the backward classes. You complain of the Brahmin bureaucracy. But let us compare it with the British bureaucracy. The latter follow the ‘divide and rule policy’ and maintain its authority by the power of the sword, whereas, the Brahmins have never restored to the force of arms and they have established their superiority by sheer force of their intellect, self-sacrifice, and penance. I appeal to my non-Brahmins brethren not to hate the Brahmin and not to be victims of the snares of the bureaucracy…”

“By indulging in violent contempt of a community which has produced men like Ramdas, Tulsidas, Ranade, Tilak and others,” he told the non-Brahmins, “it is impossible that you can rise.” By looking to the British for help you will sink deeper into slavery. “I have not a shadow of doubts,” he declared, “that Hinduism owes its all to the great traditions that the Brahmins have left for Hinduism. They have left a legacy for India, for which every nation, no matter to what varna he may belong owes a deep gratitude. Having studied the history of almost every religion in the world it is my settled conviction that there is no class in the world that has accepted poverty and self-effacement as its lot. ” 

By indulging in violent contempt of a community which has produced men like Ramdas, Tulsidas, Ranade, Tilak, and others”, he told the non-Brahmins, it is impossible that you can rise.” (M.K.Gandhi)

பிராமணர் அல்லாதார் கூட்டத்தில் காந்தி பேசியது – இந்துக்கள் அல்லாதவர்களாக மாறுவதன் மூலம் நீங்கள் எதையும் பெறுவீர்கள் என்று நினைக்கிறீர்களா ? அவர் அவர்களிடம், துஷ்பிரயோகம் செய்வது, பிராமணர்களின் வீடுகளை எரிப்பதன் மூலம் நீங்கள் எதையும் பெறுவீர்கள் என்று நினைக்க வேண்டாம். “திலக், கோகலே, ரானடே மற்றும் அகர்கர் யார்?” என்று அவர் அவர்களிடம் கேட்டார். அவர்கள் பிராமணர்கள், அவர்கள் ஒவ்வொரு தேசியவாத போராட்டத்தில் முன்னணியில் இருந்தனர், அவர்கள் பிராமணர் அல்லாதவர்களுக்காகப் பல தியாகங்களையும் சேவைகளையும் செய்துள்ளார்கள்., அவர்களை நீங்கள் ஆதிக்கம் செய்வதாக குற்றம் சாட்டுகிறீர்கள். ஆனால் உண்மையில் கத்தியின் மூலமும் அதிகாரத்தின் மூலமும் பிரட்டிஷ்தான் மக்களை ஆதிக்கம் செலுத்துவதோடு அல்லாமல் மக்களிடையே பலத்த பிரிவினைகளை உருவாக்குகிறார்கள். ஆனால் பிராமணர்கள் தங்கள் அறிவாற்றலாலும் – தியாக மனப்பான்மையாலும் – தவ பயனாலும் தங்களை உயர்த்திக்கொள்வதை ஏன் எதிர்க்கவேண்டும்.. தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்காகப் பிராமணர்கள்தான் மற்றவர்களை விட அதிகமாக முயற்சி செய்கிறார்கள். லோக்மண்ய திலக் நாட்டிற்கான தனது சேவைகளுக்காக அனைத்து வகுப்பினராலும் போற்றப்படுகிறார். மறைந்த திரு. கோகலே, திரு. ரானடே மற்றும் மாண்புமிகு திரு. சாஸ்திரி அனைவரும் பின்தங்கிய வர்க்கங்களின் மீளுருவாக்கம் செய்வதற்கு அற்புதமான பணிகளைச் செய்துள்ளனர். எனவே பிராமணரை வெறுக்க வேண்டாம் என்றும்-  அதிகாரத்துவத்தின் வலையில் விழுந்து  பலியாகக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறேன்… ”

பிராமணரல்லாதவர்களிடம், காந்தி – “ராமதாஸ், துளசிதாஸ், ரானடே, திலக் மற்றும் பிறரை உருவாக்கிய ஒரு சமூகத்தை வன்முறையில் அவமதிப்பதன் மூலம்,” , “நீங்கள் உயர முடியும் என்பது சாத்தியமில்லை” என்றும் அது உங்களை. அடிமைத்தனத்தில் ஆழமாக மூழ்கடிக்கும். ” என்பது சிறிதளவுகூட சந்தேகமே  இல்லை,” என்று அவர் அறிவித்தார், ” இந்து மதத்திற்காகப் பிராமணர்கள் விட்டுச்சென்ற பெரிய  பண்பாட்டு மரபுகளுக்கு இந்து மதம் கடமைப்பட்டிருக்கிறது. அவர்கள் இந்தியாவுக்கு ஒரு பாரம்பரியத்தைக் கொடுத்துள்ளார்கள்., அதற்காக ஒவ்வொரு தேசமும், அவர் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, ஆழ்ந்த நன்றியுணர்வைக் கொண்டிருக்க வேண்டும். நான் உலகில் உள்ள ஒவ்வொரு மதத்தின் சரித்திர  வரலாற்றையும் ஆராய்ந்த பின்னர், சந்தேகத்திற்கு இடமின்றி கூறுகிறேன் – பிராமணர்களை தவிர வேறு எவரும் ஏழ்மையையும் – தவ வாழ்க்கையையும் ஏற்றுக்கொண்டவர்கள் யாரும் இல்லை என்பது எனது உறுதியான நம்பிக்கை. “

யூத எதிர்ப்பு மற்றும் பிராமண எதிர்ப்பு இரண்டுமே கிறிஸ்தவ இறையியலில் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளன. “பிராமணியத்திற்கு” எதிராக இருப்பது இருபத்தோராம் நூற்றாண்டு இந்தியாவில் முற்போக்கான அறிஞர்களின் அரசியல் சரியான தன்மையின் ஒரு பகுதியாகும். இந்தியக் கல்வி விவாதத்தில் ஏதோ தவறு இருப்பதை இது குறிக்கிறது. ஒரு மத பாரம்பரியம் அல்லது அதைப் பின்பற்றுபவர்களுக்கு எதிரான பகைமையை வளர்ப்பது இன்று ஏற்றுக் கொள்ளப்படவில்லை, ஆனால் புத்தி ஜீவிகள் அதை அங்கீகரிக்கும் போது அது உண்மையிலேயே விபரீதமாகிறது. ஐரோப்பாவில், ஊடகங்கள் மற்றும் புத்தி ஜீவிகள் ஊடுருவிய யூத-விரோத பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கொடூரமான நிகழ்வுகளை எடுத்தது. யூத எதிர்ப்பு புத்தி ஜீவி மற்றும் அரசியல் திவால் நிலைக்குத் தள்ளப்படுவதற்கு முன்னர் அதற்குப் பல தசாப்தங்களாக இடைவிடாத பிரச்சாரம் தேவைப்பட்டது. இந்தியாவில், பிராமண எதிர்ப்பு இன்னும் பல அரசியல் கட்சிகளின் பெருமை வாய்ந்த முழக்கமாகவும், தீவிர அறிவுஜீவியின் நற்சான்றிதழாகவும் உள்ளது.

பிராமணர்களைப் பற்றிய சமகால அடிப்படை சித்தாந்தம், பிராமணியத்தைப் பற்றிய கதையும், கிறிஸ்தவ இறையியலை ஒத்து உருவானதுதான்.. அவர்கள் பிராமணர்களை புராட்டஸ்டன்ட் பாதரியை போல் இருப்பவர்களான நம்பினார்கள்.. ஐரோப்பிய மிஷனரிகளும் வணிகர்களும் அதிக எண்ணிக்கையில் இந்தியாவுக்கு வந்த பொழுது அவர்கள் மனதில் இந்தியாவில் தவறான மதமும் அதை சுற்றி பிராமண பூசாரிகளும் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அப்பாவி விசுவாசிகளை அடிபணிய வைப்பதற்காக அனைத்து வகையான சட்டங்கள், கோட்பாடுகள் மற்றும் சடங்குகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பிராமணர்களைப் பூசாரிகளாகவும், பிராமணியத்தை இந்தியாவில் தவறான மதத்தின் அடித்தளமாகவும் அடையாளம் காட்டினர்.  இது இன்றுவரை தொடர்கிறது. சமூக விஞ்ஞானிகள் இன்னும் “பிராமணவாதம்” பற்றி மனிதக்குலத்திற்கு நடந்த மிக மோசமான விஷயம் என்று பேசுகிறார்கள்.

இந்தியாவில், காலனித்துவ அறிஞர்களால் புராட்டஸ்டன்ட் மிஷனரிகளிடமிருந்து பிராமண  எதிர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது, பின்னர் அவர்கள் அதை மதச்சார்பற்ற வாதிகள் மற்றும் தலித் புத்திஜீவிகளுக்கு வழங்கினர். இந்தியாவில் பிராமண எதிர்ப்பு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது, இது வெளிநாட்டு ஆட்சியின் நீண்ட காலத்தின் மேலாதிக்க கருப்பொருளாக உள்ளது. கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இந்தியா முதன்மையாக இந்துக்கள் அல்லாதவர்களால் நிர்வகிக்கப்பட்டது – முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் – அவர்களின் கொள்கைகளில் நிச்சயமாகப் பிராமண சார்பு என்று அழைக்க முடியாது. இந்தியா வெளிநாட்டுச் சக்திகளால் படையெடுக்கப்பட்டபோது, ​​பிராமணர்கள் ஒரு பெரிய தடையாக நிரூபிக்கப்பட்டனர், குறிப்பாக மத மாற்றத்திற்கு எதிராக.

முஸ்லீம் ஆட்சியாளர்கள் பிராமணர்களை மாற்றவோ அல்லது கொல்லவோ சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டனர். முக்கியமாகக் கோவில் பூசாரிகளாக இருந்த பிராமணர்களை அவர்களின் செல்வாக்கையும் வருமானத்தையும் பறிப்பதற்காக அவர்கள் இந்து கோவில்களை அழித்தனர். காலனித்துவ இந்தியாவின் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பிராமணர்களைக்  குறிவைத்து, பிராமணர்கள் ஆதரித்த பாரம்பரிய கல்வி முறையை அகற்றினர்.

400 ஆண்டுகளாக மேற்கத்திய கிருஸ்துவம் தான் உலகநாடுகளை ஆளுமைப் படத்திவருகிறது.  மேற்கத்திய கிருஸ்துவம் வாடிகன் துணையுடன் இதை ஒரு அறிவிக்கப்படாத பரம்ரைப் பிறப்புரிமையாக நிலைநிறுத்த எண்ணுகிறது.. கிருஸ்துவர்கள் தாங்கள்தான் உயர்வான நாகரிகம் படைத்தவர்கள் சமூக மனித உரிமை பாதுகாவலர்கள் என்றெல்லாம் பிரகடனப் படுத்துகிறார்கள். சரித்திரத்தைச் சற்று புரட்டினால் இவை எல்லாம் வடிகட்டின அண்ட புளுகு என்பதுதான் யதார்த்த உண்மை.

கிருஸ்துவம் மனித இனத்திற்கு அளித்த சிறந்த சேவைகள்

(dark ages)  –  இருண்டநாட்கள்

(crusades)   –   சிலுவையில் அரையும் காட்டுமிரான்டிக்கொடூரம்

(inquisition) –  பரம்பரை ஆதிக்க வெறியால் பலம்மற்றவர்களைத் தாக்கி சித்திரவதை      செய்தல். இவை நமது இந்து புராணங்களில் வர்ணிக்கும் எமலோக கொடுமைகளைவிட கொடூரமானது.

(witch haunt) – வயது முதிர்ந்தோரை பிசாசுகள் எனக் கூறி வேட்டையாடுதல். பெண்கள் சூனியக்காரிகள் என்று முத்திரை குத்தப்பட்டு தெருவுக்குத் தெரு, கிராமத்துக்கு கிராமம் எரிக்கப்பட்டார்கள்.. மூலிகை வைத்தியர்கள், விலங்குகள் மீது பரிவோடு இருந்தவர்கள், வான்வெளி நிபுணர்கள் என்று எல்லோரும் சூனியக்காரர்களாகக் கருதப்பட்டனர்.

(slavery) –  எளியோரை அடிமைப்படுத்துதல் –  அடிமை வியாபாரம் செய்து பொருள் ஈட்டுதல்

(colonization & imperialism) –  அடுத்தவர் நிலத்தை அத்துமீறி ஆக்கிரமித்து தன் அதிகாரத்திற்கு உட்படுத்துதல் உதாரணம் ஆப்பிரிக்கா ஆசியா அமெரிக்கா ஆஸ்திரேலியா, அவ்வாறு கைப்பற்றிய நாடுகளை  தன் காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருதல்.

(world wars) –  இரண்டு முறை இந்த பூமியை யுத்தகளமாக மாற்றியது

(holocaust)  – பிடித்த இடங்களையும் புராதானசின்னங்களையும் தீயிட்டுக் கொளுத்துதல்

( genocide/racism) –  இன அழிப்பைச் செய்தல் – நிறவெறியைத் தூண்டுதல்

(spreading harmful diseases ) வியாதிகளை வேண்டுமென்றே பரவவிட்டு குணப்படுத்துவதாக கூறி மதமாற்று செயல்களில் ஈடுபடுதல்

(atomic bombing) – அணு குண்டு வீசி பெரும் நகரங்களை உருதெரியாமல் அழித்தது மனித இனவிருத்தியைச் சிதைத்தது

(conversion & erosion of oldest cultures )  –  தீவிர மதமாற்றத்தால் பழமைவாய்ந்த நாகரீகங்களை உருதெரியாமல் சிதைத்தது

(drug addiction )  – போதை பொருள்களைப் பெருக்கி சுயநினைவற்ற மனிதர்களை உருவாக்கியது

(writing false history ) –  உலக சரித்திரத்தைத் தவறாக மாற்றி எழுதி தங்கள் சரித்திரத்தை முதன்மைப்படுத்துதல்

 (indenture labour)  – ஒப்பந்த அடிப்படையில் காலனி ஆதிக்க நாடுகளிலிருந்து அடிமைகளை ஏற்றுமதி செய்து அங்கு அவர்கள் அல்லல்பட்டு கேட்பார் அற்ற அனாதை பிணங்களாக ஆக்கிவிடுதல்

 ( clergy sex abuses )   – பாதரிமார்கள் நன்களுடன் தாகதமுறையில் உறவுகொள்ளுதல் விடுதியில் உள்ள சிறுவர்களை பால்லுணர்விற்காகப் பயன்படுத்துதல். இந்த கொடுமைகள் வெளியில் தெரியாமல் மறைப்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு கொடுப்பதும் சர்சின் முழுநேர வேலையாகும்

( Child trafficking ) – குழந்தை கடத்தல்

( Skeleton Trade )  – மனித எலும்புக்கூடு வியாபாரம்

( Inculturation ) –   கலாச்சார திருட்டு

பிராமணர்களின் இன்றைய பரிதாப நிலைமை

தொடரும்

பின்னூட்டமொன்றை இடுக