பார்பான் யார் ? – 2

(REF : Padmanabhan pudukkottai )

SUM BAN VETTI PACHU

பார்ப்பனன் என்ற சொல் மரியாதைக்குரிய சொல் இல்லை என்றும் பார்ப்பனர்கள் சங்க காலத்தில் மதிப்புக்குரியவர்களாகக் கருதப்படவில்லை என்றும் இந்தப் “பெரும்புலவர்” சுபவீயார் கூறுகிறார். இவருடைய இந்தக் கருத்து இவரது அடிவயிற்றில் எரிந்து கொண்டிருக்கும் பார்ப்பன வெறுப்புத் தீயின் வெளிப்பாடுதான்.

தொல்காப்பியத்தில் “ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” என்று சொல்லப்படுகிறது. அதாவது வேதம் ஓதுதலும் தூது செல்வதும் உயர்ந்தவர்களுக்கு உரியது என்று கூறி பார்ப்பனர்களே உயர்ந்தவர்கள் என்று கூறுகிறது.  தொல்காப்பியம் தூது செல்வது என்பது சாதாரண விஷயமன்று. நல்ல சொல்லாற்றல், விஷயங்களைச் சரியாக உள்வாங்கிக் கொள்ளும் புத்திக்கூர்மை. முடிந்தவரை காரியசித்தி ஏற்படுவதற்கான முயற்சி, நம்பகத்தன்மை இவைஎல்லாம் ஒரு தூதுவனுக்குரிய முக்கியமான இலக்கணங்கள்.

”அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.” என்ற குறட்பா தூதனின் இலக்கணத்தைச் சொல்கிறது. சங்க காலத்தில் அரசர்களுக்கிடையில் பார்ப்பனர்கள் தூது சென்ற விஷயம் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் சொல்லப்படுகிறது..பெருமை மிகுந்த காதலர்களுக்கிடையிலும் உயர்ந்த குடும்பக்களுக்கிடையில் திருமண உறவுக்காகவும் அந்தணர்கள் தூது சென்றிருக்கின்றனர், ருக்மணி பகவான் ஸ்ரீக்ருஷ்ணருக்குத் தன் காதலை ஒரு அந்தணர் மூலமாகவே தெரிவித்தாள் என்பதும் , நளனுக்கும் தமயந்திக்கும் இடையில் ஒரு அந்தணரே தூதுவராகச் சென்றார் என்பதும் இதிஹாசங்கள் மூலம் நாம் அறிகிறோம்.சங்க இலக்கியங்களிலும் இவ்வகையான தூதுவர்களாக அந்தணர்கள் செயல்பட்டதாகச் சொல்லப்படுகிறது.  இதற்குக் காரணம் என்னவென்ன்றால் அந்தணர்கள் நாவன்மை மிக்கவர்களாகவும் நம்பிக்கைக் குரியவர்களாகவும் சத்தியம் தவறாதவர்களுமாக இருந்ததால்தான்.

தொல்காப்பியம் மரபியல் சூத்திரம்- 83 “அந்தணாளர்க் கரசுவரை வின்றே” என்பதாகும். அதாவது, அரசர்க்குரிய மரியாதை அந்தணருக்கும் உண்டு என்று சொல்லப்படுகிறது.  மேற்படி மரபியல் சூத்திரம் -74-ல்  “நெடுந்தகை செம்மல் என்றிவை பிறவும் பொருந்தச் சொல்லுதல் அவர்க்குரித்தன்றே” என்று சொல்லப்பட்டிருக்கிறது.. அதாவது நெடுந்தகை, செம்மல் போன்ற மரியாதையைக் குறிக்கும் சொற்களும் அந்தணருக்கு உரியைவையே என்று அந்தணரின் உயர்ந்த நிலையைப்  பறைசாற்றுகின்றது தொல்காப்பியம். “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப” என்பது ஒரு தொல்காப்பிய சூத்திரம்  திருமணச் சடங்குகளை ஏற்படுத்தியவர்கள் அந்தணர்களே என்பது இந்த சூத்திரத்தில் சொல்லப்படுகிறது.  இங்கு ‘ஐயர்’ என்ற சொல் அந்தணரையே குறிக்கும்.

திருமணச் சடங்குகள் அடங்கிய தர்ம சூத்திரங்களைச் செய்த  போதாயனர், ஆபஸ்தம்பர், ஆஶ்வலாயனர்  என்ற பார்ப்பனர்களையே இந்த ‘ஐயர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.  இவ்விடத்தில் வரும் ஐயர் என்பதற்கு ஆன்றோர்,  சான்றோர், அறிவுடையோர் என்றெல்லால் யௌகிகமாகப் பொருள்கொள்ள இயலாது. ஏனெனில் வேதத்தோடு தொடர்புடைய அந்தணர்கள்தான் வைதிகச் சடங்குகளை வரையறை செய்யமுடியும். ஆகவே இவ்விடத்தில் வரும் ஐயர்’ என்பது அந்தணர்களைத்தான் குறிக்கும். ஆன்றோர், சான்றோர் என்றெல்லாம் இவ்விடத்துக்குப் பொருள் கொண்டாலும் அந்த ஆன்றோரும் சான்றோரும் அந்தணர்கள்தான் என்பதே இறுதியில் தேறி நிற்கும் பொருள்.

மேலும் “மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்காகிய காலமும் உண்டே” என்பது ஒரு சூத்திரம். அதாவது அந்தணர், அரசர், வணிகர் என்ற மேலோர்களான இம்மூவருக்கும் உரிய சடங்குகளுடன் கூடிய திருமணமுறையைக் கீழோரான நான்காமவர்களும் ஒரு காலத்தில் பின்பற்றினர் என்பது அச்சூத்திரத்தின் கருத்து. முதல் மூவரை மேலோர் என்று குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த மூவரிலும் “அறுவகைபட்ட பார்ப்பனப் பக்கமும் “ என்ற இடத்தில் அந்தணரை முதன்மைப் படுத்தியதால் அம்மூவருள்ளும் அந்தணர் முதன்மைச் சிறப்புடையவர் என்பது தெளிவாகிறது. ”மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட தீவலம் செய்வது” என்று கண்ணகியின் திருமணம் அந்தணரின் வைதிகச்சடங்குகளொடு நடை பெற்றது  என்கிறது சிலப்பதிகாரம். அதனால் ஸமூஹத்தின்  நன்மை கருதி  சடங்கு சம்ப்ரதாயங்களை உருவாக்கி அவற்றின் வழி மக்களை ஒழுகச்செய்த பெருமை பார்ப்பனர்களையே சாரும் என்பதை இவற்றால் அறியமுடிகிறது.

சங்க இலக்கியங்களும் பார்ப்பனரை பெருமைப்படுத்தியே பேசுகின்றன. பார்ப்பனர்களைக் கொண்டு பல வேள்விகள் செய்து கீர்த்திபெற்ற மன்னர்கள் பார்ப்பனர்களுக்கு பொன்னும் பொருளும் பூமியும் அணிகலங்களும் தானமாக வாரிவழங்கிய செய்திகள் சங்க இலக்கியத்தில் கொட்டிக்கிடக்கின்றன. பரிபாடல்-2-ல்  “வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த கெடு இல் கேள்வி”  என்ற இடத்தில் அந்தணர்களை “குற்றமற்ற கொள்கையுடைய உயர்ந்தவர்கள்” என்று சொல்வது குறிப்பிடத்தக்கது. மதுரைக்காஞ்சியில் “சிறந்த வேதம் விளங்கப்பாடி, விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து நிலம் அமர்வையத்து ஒருதாம் ஆகி உய்ர்நிலை உலகம் இவண்நின்றி எய்தும், அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின் பெரியோர் “  என்று அந்தணரின் ஒழுக்கத்தையும், பண்பு நலனையும், அன்புடைமையையும், உயர்வையும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

”அந்தணர் என்போர் அறவோர் “ என்ற திருக்குறளுக்கு விளக்கம்தான் இந்த மதுரைக்காஞ்சி வரிகள். பட்டினப்பாலையில் “அமரர்ப்பேணியும் ஆவுதி அருத்தியும் நல் ஆனொடு பகடு ஓம்பியும் நான்மறையோர் புகழ்பரப்பியும் பண்ணியம் அட்டியும் பசும்பதம் கொடுத்தும் புண்ணியம் முட்டாத தண்ணிழல் வாழ்க்கை” என்று அந்தணரின் புகழைப் பரப்பும்படியான வைதிக வாழ்க்கையையே பண்டைத் தமிழ்மக்கள் சிறந்த வாழ்க்கையாகக் கருதினார்கள் என்று சொல்வதிலிருந்து பண்டைத்தமிழகத்தில் மக்கள் மத்தியில் அந்தணர்களுக்கு இருந்த பெருமதிப்பைப் புரிந்துகொள்ள முடிகிறது.  

புறநானூறு-6ஆம் பாடலில் “இறைஞ்சுக பெரும நின் சென்னி நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே” என்று ஒரு புலவர் மன்னனை நோக்கிக் கூறுகிறார். அதாவது “அந்தணர் உன்னை ஆசீர்வதிக்கக் கையை உயர்த்துவதற்குமுன் அவர்களை வணங்குவதற்கு உன் தலை குனியட்டும்” என்பது இவ்வரிக்குப் பொருள்.இதனால் அந்தணர்களின் உயர்வு புலனாகிறது..பதிற்றுப்பத்து ஏழாம் பத்து மூன்றாம் பாடலில் “பார்ப்பார்க்கு அல்லது பணிபறியிலையே”  என்று சொல்லப்படுகிறது. அதாவது மன்னன் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை என்பது இவ்வரி சொல்லும் கருத்து. இதனால் மன்னரும் வணங்கும்படியான உயர்நிலையில் பார்ப்பனர்கள் இருந்தார்கள் என்பது புலப்படுகிறது.

ஒரு மன்னன் தான் செய்த தவறுக்காக ஒரு பார்ப்பானின் காலில் விழுந்து வணங்கிய செய்தி சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிறது, சிலப்பதிகாரம் கட்டுரைக்காதையில் “கார்த்திகைக் கணவன் வார்த்திகன் முன்னர், இருநில மடந்தைக்கு திருமார்பு நல்கியவள் தணியா வேட்கையும் சிறிது தணித்தனனே” என்று அந்த செய்தி கூறப்படுகிறது. அரசர்கள் யாரையும் தரையில் விழுந்து வணங்கமாட்டார்கள். அப்படி வணங்குவது அரசர்களின் மரபன்று. அதனால் அவர்களின் உடல் தன்மீது படவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்தாளாம் பூமிதேவி. அரசன் அந்தணனை வணங்கும் போது பூமியில் விழுந்து வணங்கியதால் நிலமகளின் நீண்டநாள் ஆசை அந்தணனால் நிறைவேறியது என்று அழகாகக் குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள்..

இன்னோரிடத்தில் (காடுகாண் காதை) கவுந்தியடிகள் ஒரு அந்தணனைப் பார்த்து “நலம்புரி கொள்கை நான் மறையாள” என்று விளிப்பதாக சிலப்பதிகாரத்தில் வருகிறது. அதாவது “அடுத்தவர்க்கு நன்மை செய்வதையே கொள்கையாக உடைய அந்தணனே” என்பது இவ்வரிக்குப்பொருள். கோவலன் கண்ணகியைப் பிரிந்து விட்டதால் கண்ணகியால் சில அறங்கள் செய்ய முடியாமற் போயிற்று என்பதைக் கூறுமிடத்து, ”அறவோர்க்களித்தலும் அந்தணர் ஓம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” என்றுகண்ணகி கூறுவதாக வருகிறது. இதனால் அந்தணரை அரவணைத்துப் பாதுகாப்பது தொன்மையான மரபு என்பதும் அதைப் பண்டைத்தமிழ் மக்கள் சிறப்பாகக் கடைப்பிடித்தனர் என்பதும் தெளிவாகிறது.

புறநாநூறு-பாடல்-9-ல் “ஆவு மானியற் பார்ப்பான மாக்களும் பெண்டிரும் பிணியுடையீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கடனிறுக்கும் பொன்போற் புதல்வர் பெறாஅதீரும்…” என்று சொல்லப்படுகிறது.அதாவது இரண்டு மன்னர்களுக்குஇடையில் போர்மூளும் சூழல் உருவாகிறது.அச்சமயத்தில் அவர்களிள் ஒரு மன்னன் தன் நாட்டில் வாழும் பசுக்கள், அந்தணர்கள், பெண்கள், நோயாளிகள்,  குழந்தையில்லாதவர்கள் இவர்களெல்லாம் போரால் பாதிக்கப்படக்கூடாது என்று கருதி இவர்களையெல்லாம் ஒரு பாதுகாப்பான இடத்தில் மாற்றிவைக்க நினைக்கிறான்.  இதுதான் அப்பாடல் வரிகள் சொல்லும் கருத்து. இங்கு பார்ப்பனர்களைக் குறிப்பிடும்போது “ஆனியற் பார்ப்பன மாக்கள்” என்று சொல்வது குறிப்பிடத்தக்கது. அதாவது பார்ப்பனர்கள் பசுவின் குணத்தைப்போன்ற ஸாத்விக குணமுடையவர்கள் என்பதோடு பசு பால்வழங்குவதுபோல அவர்கள் சமூஹத்துக்கு ஞானத்தையும் பல நன்மைகளையும் வழங்குகிறார்கள் என்பதால்தான் “ஆனியற் பார்ப்பன மாக்கள்” என்று சொல்லப்பட்டது.  பார்ப்பனர்களின் அவ்விதப்பண்பு கருதியே அரசன் அவர்களைப் பாதுகாக்கக் கருதினான் என்பது தெளிவாகிறது

கண்ணகி மதுரையை எரிக்க முற்படும்போது “பார்ப்பார் – அறவோர் – பசு – பத்தினிப்பெண்டிர் மூத்தோர் – குழவி எனுமிவரைக்கைவிட்டு தீத்திறத்தார் பக்கமே சேர்” என்று அக்னிபகவானுக்குக் கட்டளையிட்டாள் என்று சொல்லப்படுகிறது. அதாவது “பார்ப்பனர்கள். துறவிகள், பசு, கற்புள்ள பெண்கள், வயதானவர்கள். குழந்தைகள் இவர்களைத் தவிர தீயவர்களான மற்றவர்களை எரிப்பாயாக” என்பது இவ்வரிகள் சொல்லும் கருத்து. பார்ப்பனர்கள் பாதுகாக்கப்படவேண்டியவர்கள் என்பதை அக்காலத்தோர் உணர்ந்திருந்தனர் என்பதை இந்தச்செய்தி புலப்படுத்துவது குறிப்பிடத்தக்கது. சங்க காலத்தில் பார்ப்பனர் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்பட்டனர் என்பதற்கும் பார்ப்பனர்கள் சிறந்த பண்பாளர்களாகவும் , அன்புள்ளம் கொண்டவர்களாகவும் திகழ்ந்தார்கள் என்பதற்கும் இப்படி இன்னும் ஏராளமான உதாரணங்களை சங்க இலக்கியத்திலிருந்து என்னால் காட்டமுடியும்.

நாக்கூசாமல் பார்ப்பனர்கள் சங்க காலத்தில் மதிப்புக்குரியவர்களாகக் கருதப்படவில்லை என்று தி.க. “புலவர்” சுபவீயார் கூறுவது பச்சைத்தனமான பார்ப்பன வெறுப்பின் வெளிப்பாடுதான். “இந்த சுபவீயார் தன் வயிற்றெரிச்சலை தீர்த்துக்கொள்ள வழியில்லாமல் “பார்ப்பான் என்ன பெரிய யோக்கியனா?”என்று ஒரு கேள்வியை யோசிக்காமல் கேட்கிறார். சங்க இலக்கியம் முழுவதும் பார்ப்பனர்களை யோக்கியர்கள் என்று தான் கூறுகிறது. பார்ப்பான் சமூகத்தில் உயர்ந்தவனாகவும் பண்புள்ள யோக்கியனாகவும் பண்டுதொட்டு இருந்து வந்திருக்கிறான் என்பதற்குப் பல உதாரணங்களை சங்க இலக்கியங்களிலிருந்து எடுத்துக் காட்டியுள்ளேன்.இங்கு நான் காட்டிய உதாரணங்களைத் தவிர இன்னும் ஏராளமாக என்னால் காட்டமுடியும் என்பதை சுபவீயாருக்கு உணர்த்த விரும்புகிறேன்-

தி.க.காரர்கள் மட்டுமல்லாது ஆன்மிக வாதிகள் என்று அறியப்படும் சில தமிழ் “அறிஞர்களும்|” பார்ப்பானின் உயர்வைப் பொறுத்துக் கொள்ளமுடியாத, பார்ப்பன வெறுப்பாளார்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் காணப்படும் இந்த வெறுப்பு உணர்வு தமிழ் இலக்கியம் தொடர்பான அவர்களின் கருத்துக்களில் பிரதிபலிப்பதை நாம் தெளிவாகக் காணமுடியும். தொல்காப்பியம்-பொருளதிகாரம் கற்பியலில் “மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காகிய காலமும் உண்டே”என்று சூத்திரம். “உயர்ந்தவர்களான அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூவர்க்கும் உரிய திருமணச்சடங்குகள் பின்பு கீழ்ப்பட்டவர்களான  நான்காமவருக்கும் உரித்தான காலமும் இருந்தது” என்பதே இந்தச் சூத்திரத்துக்கு மரபு வழியிலான பொருள் .பார்ப்பன வெறுப்பாளர்களாக உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு இப்[பொருள் பிடிக்காது. அதற்குக் காரணம் என்னவெனில் அந்தணர், அரசர்., வணிகர் மூவரையும் உயர்ந்தோர் என்று குறிப்பிட்டிருப்பதும் அதிலும் அந்தணரை முதன்மைச் சிறப்புடையவர்களாக முதலில் சொல்லியிருப்பதும்தான்.

ஒரு பார்ப்பன வெறுப்பாளாரான ஒரு “தமிழறிஞர்” தொல்காப்பியத்துக்குத் தான் எழுதிய உரையில் இந்த சூத்திரத்துக்கு “சேர, சோழ, பாண்டியர் என்ற பேரரசர் மூவர்க்கும் உரிய வதுவைச் சடங்குகள் பின்பு மக்களுக்கும் ஆகிய காலமும் உண்டு” என்று உரை  எழுதியிருக்கிறார். அந்தணர், அரசர், வணிகர் என்பதற்கு பதிலாக இவர் சேர, சோழ, பாண்டியர் என்று உரை எழுதியிருப்பது இவரது பார்ப்பன வெறுப்புணர்வையே காட்டுகிறது. மேலும் மரபியலில் வரும் “பரிசில் பாடாண் திணைத்துறைக் கிழமைப் பெயர் நெடுந்தகை, செம்மல், என்றிவை பிறவும் பொருந்தச் சொல்லுதல் அவர்க்குரித்தன்றே.” என்ற சூத்திரத்திற்கு “நெடுந்தகை, செம்மல் முதலிய அரசர்க்குரிய மரியாதைச் சொற்கள் அந்தணருக்கும் உண்டு” என்பதே மரபுவழியான பொருள். இதற்கு உரைசெய்த மேற்படி “தமிழறிஞர்” மரபுவழிப் பொருளைக்கொண்டால் அப்பொருள் அந்தணருக்குப் பெருமையாகிவிடுமே என்ற எண்ணத்தில், மேற்படி “அரசர்க்குரிய மரியாதைச் சொற்களால் அந்தணரை அழைக்கக் கூடாது” என்று பொருள் எழுதியிருக்கிறார். “அன்றே” என்பது ஒரு அசைச்சொல் என்ற விஷயம்கூடத் தெரியாமல் அதற்கு “இல்லை” என்ற எதிர்மறைப் பொருள்கொண்டு உரை எழுதும் இவரது “தமிழறிவை” என்னென்றுரைப்பது!

அதேநேரத்தில் மற்ற இடங்களில் வரும் இந்த “அன்றே” என்பதை அசைச்சொல்லாகவே கொண்டு பொருள் எழுதியிருக்கிறார். இதெல்லாம் எதைக் காட்டுகிறதென்றால் இவரது மனதில் நன்றாக ஊறியிருக்கும் பார்ப்பன வெறுப்புணர்வையே காட்டுகிறது. இந்த உரையாசிரியர் தமிழ் இலக்கியத்தில் “முனைவர்” பட்டம் பெற்றவராம். இவரது மேற்பார்வையில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்களாம். இவரது மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றவர்களின் “ஆய்வறிவு” எந்த லட்சணத்தில் இருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும்

ஆன்முலை யறுத்த அறனிலோர்க்கும்

மாணிழை மகளிர் கருச்சிதைத்தோர்க்கும்

பார்ப்பார்த்தப்பிய கொடுமையோர்க்கும்

வழுவாய் மறுங்கிற் கழுவாயுமுளாவன

நிலம்புடைப் பெயர்வதாயினும் ஒருவன்

செய்தி கொன்றோர்க்குய்தி இல்லென

அறம்பாடிற்றே…

என்ற வரிகள் புறநாநூறு 34-ஆம் பாடலில் உள்ளவை.

“பசுவைக் கொல்லுதல். பெண்களின் கருச்சிதைத்தல், பார்ப்பனரைக் கொல்லுதல் முதலிய கொடிய பாவங்கள் செய்தவர்களுக்குக் கூட கழுவாய் (பிராயிச்சித்தம்) உண்டு. ஆனால் செய்நன்றி கொன்றவர்களுக்கு எப்போதும் கழுவாயே கிடையாது” என்பது மேற்படி வரிகளின் கருத்து. இப்பாடலில் வரும் “பார்ப்பார்த்தப்பிய” என்பதை சில வருடங்களுக்கு முன்தான் சில பதிப்பாசிரியர்கள் “குரவர்த்தப்பிய”என்று மாற்றியிருக்கிறார்கள். “பார்ப்பார்த்தப்பிய” என்பது ஒரு குறிப்பிட்ட சமூஹத்தை மட்டும் குறிக்கும் சொல்லாக இருப்பதால், “பார்ப்பாரைக் கொல்வது பெரிய பாவம்” என்பது பார்ப்பனருக்குப் பெருமையாகிவிடும் என்று கருதித்தான் அரசர், தந்தை, ஆசிரியர், முதியவர் என்ற பொருள்கொண்ட “குரவர்” என்ற பொதுச்சொல்லை அவ்விடத்தில் நுழைத்தார்கள். இதுவும் பார்ப்பன வெறுப்புணர்வால் செய்யப்பட்டவேலைதான்.

பரிமேலழகர் தனது திருக்குறள் உரையில் “எந்நன்றி கொன்றார்க்கும்” என்ற குறளுக்கு உரையிடும்போது மேற்படி புறநானூற்று வரியை மேற்கோள் காட்டுகிறார்.அவ்விடத்தில் அவர் “பார்ப்பார்த்தப்பிய”என்றே குறிப்பிட்டிருக்கிறார். சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் என்ற பெயரில் பதிப்பகம் ஒன்று நம் நாட்டில் இருப்பது அனைவரும் அறிந்ததே. இப்பதிப்பகத்தார்  தமிழ்நூல்களை எல்லாம் பதிப்பித்திருக்கிறார்கள். இப்பதிப்பகத்தார் பதிப்பித்த புறநாநூற்றுப் பதிப்பில் மேற்படி பாடலில் “குரவர்த்தப்பிய” என்றே காணப்படுகிறது. அவ்விடத்தில், அடிக்குறிப்பில் இது “பார்ப்பார்த்தப்பிய”என்று பரிமேலழகர் காலத்திலேயே திருத்தப்பட்டுவிட்டது”.என்ற குறிப்புக் காணப்படுகிறது. எவ்வளவு சாமர்த்யம் பாருங்கள்.! பரிமேலழகரின் காலத்தில்தான் திருத்தப்பட்டது என்று இவர்கள் சொல்வதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.

பல மூலச்சுவடிகளை ஒப்பீடு செய்து ஆராய்ந்து பதிப்பிக்கப்பட்ட உ.வே.சா அவர்களின் பதிப்புகளிலெல்லாம்  “பார்ப்பார்த்தப்பிய” என்றே காணப்படுகிறது. கா.நமச்சிவாய முதலியார் அவர்களின் தொல்காப்பியம்- இளம்பூரணர் உரை-பதிப்பில் உள்ள மேற்கோளில் ” பார்ப்பார்த்தப்பிய” என்றே காணப்படுகிறது..சை.சி,நூ.ப.க வெளியிட்ட தொல்காப்பியப் பதிப்பில் உள்ள மேற்கோளில் “குரவர்த்தப்பிய”என்பதே அசல் பாடமென்றும் “பார்ப்பாத்தப்பிய”என்பது பாடபேதம் என்றும் குறிப்பிட்டிருகிறார்கள். இதற்கிடையில் தி,க-வைச்சேர்ந்த “புலவர்கள்”, “குரவர்த்தப்பிய” என்பதை “பார்ப்பார்த்தப்பிய”என்று மாற்றியது பார்ப்பனரான உ.வே.சா தான் என்று கூறினார்கள். பரிமேலழகரே “பார்ப்பார்த்தப்பிய” என்று குறிப்பிடிருக்கும் போது ஊ.வே.சாதான் அப்படி மாற்றினார் என்று கூறும் இந்த தி.க. “புலவர்கள்”கூறுவதில் என்ன அர்த்தம் உள்ளது?

அதாவது ஓலைச்சுவடிகளின் ஆயுள் சுமார் 150-லிருந்து 200 வருடம் வரைதான்.அதனால் 150 வருடத்திற்கு ஒருமுறை பின் வருவோர் அவற்றை பிரதி எடுத்துவிடுவார்கள்..அந்த வகையில் பரிமேலழகர் காலம் வரை “பார்ப்பார்த்தப்பிய” என்ற பாடம் உள்ள சுவடிகளே இருந்திருக்கின்றன. அவருக்குப் பின்வந்த பார்ப்பான வெறுப்பாளர்கள் சிலர்தான் அவ்விடத்தில் “குரவர்த்தப்பிய”என்று மாற்றியிருக்கிறார்கள். இவர்களே இந்த ஈனத்தனமான வேலையைச் செய்துவிட்டு இவர்கள் புகுத்திய புதியபாடமான “குரவர்த்தப்பிய”என்பதுதான் தொன்மையான பாடமாகவும் “பார்ப்பார்த்தப்பிய” என்ற தொன்மையான பாடத்தை பரிமேலழகர் காலத்தில் மாற்றப்பட்ட புதியபாடமாகவும் காண்பிப்பது பச்சைத்தனமான அயோக்யத்தனமில்லையா? இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் பார்ப்பன வெறுப்புதான். பெரும்பாலும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தில் பதிப்பிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் பார்ப்பன வெறுப்புணர்வு கொண்டவர்கள்தான்.

அதனால்தான், தங்களின் எண்ணத்துக்குத்தக்கபடி மூலத்தில் உள்ள அசல் பாடங்களை மாற்றுவது, சில இடங்களுக்கு மரபு வழிப் பொருள்களைப் புறக்கணித்து விட்டுத் தங்கள் எண்ணப்படி பொருள்கொள்வது என்ற ஈனச்செயல்களை எல்லாம் செய்கிறார்கள். இங்கு நான் எடுத்துக்காட்டிய உதாரணங்கள் மிகக் குறைவு. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறே பதம் என்பது போல் இங்கு நான் எடுத்துக்காட்டிய உதாரணங்களைக் கொண்டே தமிழ் இலக்கியங்கள் மீதான பார்ப்பன வெறுப்பாளர்களின் பார்வை எப்படிப்பட்டது என்பதைத்தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்

இந்தத் தி.க.”புலவர்களும்” பார்ப்பன வெறுப்பாளர்களான தமிழ் ஆர்வலர்களும் தாங்கள் விரும்புகின்ற சமுதாய நிலைதான் சங்ககாலத்தில் இருந்தது என்று காட்டவேண்டும் என்பதற்காகவே தமிழ் இலக்கியங்களின் மீது தங்களின் எண்ணம் என்னும் வண்ணத்தைப் பூச நினைக்கிறார்கள்.அது என்றும் நடக்காத காரியம்.சங்க காலத்தில் ஜாதிவேறுபாடு, மனிதர்களுக்கிடையிலான உயர்வு, தாழ்வு இவையெல்லாம் இல்லை என்று இவர்கள் கூறுகிறார்கள். இவர்களின் கூற்றுக்குச் சங்க இலக்கியத்தில் ஆதாரம் இல்லை.மாறாக உயர்வு தாழ்வு மனிதர்களுக்கிடையில் இருந்ததற்கான ஆதாரங்கள்தான் சங்க இலக்கியத்தில் கிடைக்கின்றன.    தொல்காப்பியத்திலேயே மேலோர்,கீழோர் என்ற சொற்கள் இடம்பெறுகின்றன.  சமுதாயத்தில் மனிதர்களுக்கிடையில் ஒவ்வொரு படிநிலைகளுக்குத்தக்கபடி உயர்வு, தாழ்வு இருந்திருக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.

புறநாநூறு-363-ஆம் பாடலில் சுடுகாட்டில் பிணம் சுடும் புலையனைக் குறிப்பிடுமிடத்தில் “இழிபிறப்பினோன்” என்றே சொல்லப்பட்டுள்ளது. அதாவது “இழிவான பிறப்பை உடையவன்” என்று பொருள்.இதைவைத்துப் பார்க்கின்றபோது சங்ககாலத்தில் பிறப்பின் அடிப்படையிலான ஜாதி வேறுபாடு கடுமையாகப் பின்பற்றப்பட்டிருக்கிறது என்பதுதான் தெளிவாகத்தெரிகிறது. அதனால் இந்தத் தி.க மற்றும் பார்ப்பன வெறுப்பாளர்களின் எண்ணத்திற்கு சங்க இலக்கியங்களில் இடமில்லை.சங்ககாலத்தில் அந்தணர்கள் பூணூல் அணிந்தும் குடுமிவைத்துக்கொண்டும்தான் இருந்திருக்கிறார்கள்.     இவர்கள் இன்று செய்வதுபோல் பார்ப்பானின் பூணூலையும் குடுமியையும் சங்கத்தமிழர்கள் யாரும் அறுக்கவில்லை. ஒருமன்னனும் ஒரு அந்தணனும் சொக்கட்டான் விளையாடிகொண்டிருந்தபோது, விளையாட்டில் அவ்வந்தணன் தவறு செய்ததாக சந்தேகித்து சிறு கோபத்தால் அவ்வரசன் அந்த அந்தணனை சொக்கட்டான் காயால் அடித்துவிடுகிறான். அப்போது அந்த அந்தணர் நடந்ததை அவ்வரசனுக்குப் புரியவைத்து “நின் முன்னோரெல்லாம் பார்ப்பார் நோவன செய்யலர் மற்றிது” என்று சொன்னார்.அதாவது “உன் முன்னோரெல்லாம் பார்ப்பார் மனம் நோகும் படியான காரியத்தைச் செய்யமாட்டார்கள். உனக்கு இது ஏற்றசெயலா?”என்று அவ்வந்தணர் அவ்வரசனை நோக்கிக் கேட்கிறார்.உடனே அரசன் தன் தவறுக்கு வருந்தி நாணமுற்றான். இச்செய்தி புறநாநூறு-43-ஆம் பாடலில் சொல்லப்படுகிறது. பார்ப்பனர்கள் மனம் நோகும்படியாகச் சங்கத் தமிழர் நடந்துகொண்டதில்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.அதனால் பூணூல் அறுக்கும் கும்பலின் எண்ணங்களுக்கெல்லாம் சங்க இலக்கியத்தில் அணுவளவும் இடமில்லை.

பார்ப்பனர்களை சங்கத்தமிழர்கள் போற்றியிருக்கிறார்கள், நேசித்திருக்கிறார்கள். வணங்கியிருக்கிறார்கள். பார்ப்பனர்களின் சொல்கேட்டுத் தங்களின் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பார்ப்பான் சங்கத் தமிழரின் வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒரு உறவாக மக்களோடு இணைந்து வாழ்ந்திருக்கிறான். பார்ப்பான் சங்கத் தமிழகத்தின் தொல்குடியாவான். இவை எல்லாம் சங்க இலக்கியங்களின் மூலம் நாம் அறிந்து கொள்ளும் செய்திகள். அதனால் பார்ப்பானை வெறுப்பவர்களோ பார்ப்பானுக்குத் தொந்தரவு கொடுப்பவர்களோ பார்ப்பனை மதிக்காதவர்களோ பண்டைய சங்கத் தமிழனின் வாரிசுகள் அல்லர். அவர்கள் எல்லாம் சங்கத் தமிழின விரோதிகள்தான்.

சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட பார்ப்பானின் இவ்வளவு பெருமைகளையும் ஏற்றத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாமால், சொற்களுக்கு மரபு வழியை விலக்கித் தவறாகப் பொருள் கொள்வது, மூலத்தில் உள்ள அசல் பாடங்களை மாற்றுவது, தங்கள் எண்ணத்துக்கு இடையூறாக உள்ள இடங்களை இடைச்செறுகல் என்பது இம்மாதிரி ஈனத்தன்னமான காரியங்களை “ஆய்வு” என்ற பெயரில் செய்து உண்மையை மறைக்கப் பார்க்கிறார்கள் இவர்கள். இவர்களின் இந்த ஈனத்தனமான இவ்வித ஆராய்ச்சிகளால் உண்மையை மறைக்கப் பார்ப்பது சூரியனை கைகொண்டு மறைப்பதற்கு ஒப்பாக்கும்.

ஆகவே தி.க.”புலவரான” சுபவீரபாண்டியனாருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் :- உங்கள் கொள்கைகளான கடவுள் மறுப்பு, ஜாதி மறுப்பு, பார்ப்பன வெறுப்பு இவற்றுக்கெல்லாம் சங்க இலக்கியங்களில் அணுவளவும் இடம் இல்லை. அதனால்தான் உங்கள் ஆசான் ஈ.வே.ரா தமிழ் இலகியங்கள் அனைத்தையும் தலைமுழுகினார். அதனால் நீங்களும் தேவையில்லாமால் சங்க இலக்கியங்கள் பற்றி ஆய்வு என்ற பெயரில் அபத்தக் கருத்துக்களை உதிர்த்துக் கொண்டிருக்காமல் உங்களின் தலைவர் வழியைப் பின்பற்றி சங்கத்தமிழ் இலக்கியங்களைத் தலை முழுகுவதுதான் உங்களுக்கு நல்லது. ”பார்ப்பான் என்ன பெரிய யோக்கியனா” ? என்று கேட்கிறீர்கள். பார்ப்பான் யோக்கியன்தான் என்பதை சங்க இலக்கியத்தின் மூலம் நிரூபித்திருக்கிறேன். நீங்கள் பிறந்த நகரத்தார் குலம் அறச்செயல்கள் செய்தும் அந்தணரைப் போற்றியும் வாழ்ந்த பெருமை மிக்க குலம். அக்குலத்தில் பிறந்த உங்களை இந்தக் கீழ்த்தரமான கொள்கை எப்படிப் பற்றிக்கொண்டது என்பதுதான் புரியவில்லை.

நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் –  காட்டும் குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல் ”   என்ற குறள் உங்கள் விஷயத்தில் நினைவுக்கு வருகிறது

தொடரும்……..

பின்னூட்டமொன்றை இடுக